கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

இந்திய அரசின் படை உதவிக்கு கண்டனம் - கி.வெங்கட்ராமன்

புலிகள் தாக்குதலில் இலங்கையில் இந்திய அதிகாரிகள் காயம்
இந்திய அரசின் படை உதவிக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதலில் கடந்த 09.09.08 அன்று இரவு வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் கூறுகிறது. சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாக்கூர் ஆகிய அவ்விருவரும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் பொறியாளர்கள் ஆவர்.
இந்திய அரசு தரும் படைவகை உதவியோடு, நேரடியான படையாட்கள் துணைக் கொண்;டு தான் சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துகிறது என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் சிறீலங்கா அரசு நடத்துவது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலைப் போராகும். சிங்களப் படை தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக புலம் பெயர்ந்து உணவும், மருந்தும் இன்றி மரத்தடி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட மனித நேய அமைப்புகள் பலவும் கண்டித்து வருகின்றன.
இந்த உள்நாட்டு போரில் தாம் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே இந்திய அரசு இலங்கைக்குப் போர்ப் படகுகளையும், ரேடார், எக்ஸ்ரே பைனாகுலர் உள்ளிட்ட கருவிகளையும் அளித்து வருகிறது. ஆயினும் நேரடி இராணுவத் தலையீடு செய்யவில்லை என்பதாகவே இந்திய பிரதமரும் உயர்மட்ட அதிகாரிகளும் கூறி வந்தனர்.
ஆனால் இது உண்மைக்கு மாறான தகவல் என்பதை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் காயம்பட்டுள்ள செய்தி தெளிவாக்குகிறது.
இந்தியாவின் இவ்வாறான படை வகை உதவிகளைக் கொண்டு தான் ஈழத் தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் அன்றாடம் சிங்களப் படை கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய அரசு தமது இராணுவத் துறை வல்லுநர்களையும் ஆட்களையும் அனுப்பி, ஆயுத உதவிகள் வழங்கி தமிழினப் படுகொலைக்குத் துணை போவதைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியப் படையாட்களைத் திரும்ப அழைத்து கொள்ளுமாறும், கருவி உதவிகளை நிறுத்துமாறும் வலியுறுத்துகிறேன்
 
இப்படிக்கு.
கி.வெங்கட்ராமன்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்

0 கருத்துகள்:

விலை உயர்வு : தாராளமயத்தின் பரிசு - கி.வெங்கட்ராமன்

தாராளமயப் பொருளியல் கொள்கையின் கொடும் விளைவாய் விலைவாசி விண்ணை முட்டுகிறது. அனைத்துச் சிக்கல்களுக்கும் சந்தை நாயகமே தீர்வு என்று மந்திரம்போல் உச்சரித்து வந்த பிரதமர் மன்மோகன்சிங் ""விலைவாசிச் சிக்கலை தீர்ப்பதற்கு என்னிடம் ஒன்றும் மந்திரக்கோல் இல்லை. இது உலகுதழுவிய ஒரு பிரச்சினை'' என்று கைவிரிக்கிறார்.""உலக நாடுகள் ஒன்றுபட்டு முயன்று ஏதாவது செய்யுங்கள் அப்போதுதான் உணவுக் கலவரம் உலகமயமாக மாறாமல் தடுக்கமுடியும்'' என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் யாருக்கோ வேண்டுகோள் விடுக்கிறார். ""கையில் காசு இருந்தால் விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினையே அல்ல'' என்று தத்துவம் தருகிறார் முதலமைச்சர் கருணாநிதி.

டிசம்பர் 2007 வøர ஆண்டு விலைவாசி உயர்வு 4 விழுக்காடு என்று இருந்தது, 2008 மார்ச் இறுதியில் 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்திய சேமவங்கி கூறுகிற அபாய அளவான 5 விழுக்காட்டையும் தாண்டி மிக அபாய அளவை நோக்கி விலை உயர்வு விøரந்து செல்கிறது. இந்தக் கணக்குக்கூட மொத்த விலைவாசிக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கூறப்
படுவதாகும். உண்மையில் மக்கள் சந்திக்கிற சில்லøர விலை உயர்வு இதைவிடப் பன்மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக, 2008 மார்ச்சுடன் முடிந்த கடந்த 12 மாதங்களில் வனஸ்பதியின் (டால்டா) விலை மொத்த வணிகத்தில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சில்லøர வணிகத்தில் 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. அரிசி விலை மொத்த சந்தையில் 8 விழுக்காடு உயர்ந்துள்ளது. சில்லøரச் சந்தையில் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் மொத்த வணிகத்தில் 9 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சில்லøரச் சந்தையில் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. கோதுமை மாவு 0.5 விழுக்காடு மொத்த
வணிகத்தில் விலை உயர்ந்துள்ள போது சில்லøரச் சந்தையில் 5  விழுக்காடு உயர்ந்துள்ளது. இரும்புக்கம்பிகளின் விலை 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை ஒவ்வொரு நாளும் கணிக்க முடியாத வகையில் உயர்ந்தும் மாறியும் வருகிறது. உயிர்காக்கும் மருந்துகள் சில்லøரச் சந்தையில் 300 விழுக்காடு உயர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட 1960களின் இறுதியில் சந்தித்த விலைவாசி உயர்வை இன்று இந்தியா சந்தித்து வருகிறது. அன்றைக்கு ஏற்பட்ட உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தார்கள். ஆனால் இன்று அந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த உணவுப் பஞ்சம் உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. செனிகல், கேமரூண், கென்யா, வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலவரம் நடந்துவருகிறது. காசு கொடுத்தாலும் உணவு கிடைக்காதவர்களும், உயர்ந்துள்ள உணவுப் பொருள் விலையை எதிர்கொள்ள முடியாதவர்
களும் இந்நாடுகளில் மோதிக் கொள்கிறார்கள். உணவு உற்பத்தியும், கொள்முதலும் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டில் கூட நெருக்கடி கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 1கோடியே 97 இலட்சம் உணவு வழங்கல் அட்டைகள் (÷ரஷன் கார்டு) வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அரிசி உள்ளிட்டு அனைத்துப்  பொருள்களும் வாங்குகிற வறுமைக் கோட்டு மக்களின் பச்சை அட்டை சுமார் 1கோடியே 86 இலட்சம் ஆகும். அரிசி தவிர பிற இன்றியமையாப் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வெள்ளை அட்டைக்காரர்கள் சுமார் 10 இலட்சம் பேர். மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கிக் கொள்ளும் பழுப்பு அட்டைக்காரர்கள் 42 ஆயிரம் பேர். மீதமுள்ளவர்கள் ÷ரசன் கடைகளில் ஒரு பொருளும் வாங்காத உயர்வருமானப் பிரிவினர். பச்சை அட்டைக்காரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 2 வீதம் மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்குவதாக ஏற்பாடு. ஆனால் இது நடைமுறையில் 10 கிலோவாகக் குறைக்கப்பட்டு விட்டது என்ற கூக்குரல் பரவலாக எழுந்து வருகிறது. இதற்குக் காரணம் இந்திய அரசு மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருவதேயாகும். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இந்திய அரசு உணவு மானியத்தை வெகுவாக வெட்டி வருவதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசிக்கு கிலோவுக்கு 2ரூபாய் 70 காசு மானியமாக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. ரூபாய் 11 விலையுள்ள 1கிலோ மத்திய தொகுப்பு அரிசியை ரூ.8.30 கொடுத்து தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. அதனை ரூ.2க்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.6.30 தமிழக அரசு அளிக்கிற மானியம். தமிழ்நாட்டு நியாயவிலைக் கடைகள், அரசு மருத்துவ மனைகள், சிறைச்சாலைகள், முதியோர் உதவித்திட்டங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் அரிசியில் 40 விழுக்காடுதான் தமிழ் நாட்டில் கொள்முதல் செய்யப் படுகிறது. தமிழ்நாட்டில் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்வது ஆண்டுக் காண்டு குறைந்தும் வருகிறது. எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு 15.38 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 10.38
இலட்சமாக அது குறைந்துள்ளது. தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருப்பிலுள்ள அரிசி மற்றும் நெல் இவற்றின் மொத்த அளவே 6.83 இலட்சம் டன்தான். இது செப்டம்பர் மாதம் வøரயிலும் தான் வழங்கலுக்கு போதுமானது. அதன் பிறகு உள்ள தேவைகளுக்கு என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்திய அரசு அண்மையில் டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் பெட்÷ரால் விலையை 2 ரூபாயும் உயர்த்தியது. இந்த விலைஉயர்வு அனைத்துப் பொருள்களின் விலையையும் ஏற்றிவிட்டது. பெட்÷ரால்,  டீசல் மீது அரசு வரிவிதிப்பைச் சற்றே  குறைத்திருந்தால் கூட அரசின் வரி வருமானத்தைப் பாதிக்காமலேயே இந்த விலையுயர்வைத் தவிர்த்திருக்க முடியும். அவ்வாறான மக்கள் நலப் பார்வை இந்திய அரசுக்கு இல்லை. இது விலை உயர்வை தீவிரப் படுத்துவதில் போய் முடிந்தது. சிமெண்ட் முதலாளிகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயற்கையாக விலையை உயர்த்துவது ஊரறிந்த ரகசியமாகும்.
அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு எதையும் இந்திய அரசு செய்வதில்லை. அதேபோல் இரும்பு ஏற்றுமதியாளர்கள் தங்கள் கொள்ளை இலாபத்திற்காக உள்நாட்டுச்  சந்தையிலும் இரும்பு விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள்.

ஏனெனில் சீனச் சந்தை மிகப்பெரும் வாய்ப்பை இரும்பு ஏற்றுமதி யாளர்களுக்கு திறந்துவிட்டுள்ளது. அதேபோல் அய்÷ராப்பிய நாடுகளிலும் இரும்புச் சந்தை விரிவடைந்து வருகிறது. அங்கு நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தியாவிலுள்ள இரும்பு ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரும் இலாப விலை கிடைக்கிறது. இந்த உலகச் சந்தை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டிலும் இரும்பு
உற்பத்தியாளர்கள் செயற்கையாக விலையை உயர்த்துகிறார்கள்.  இது சிறுபட்டறை உற்பத்தியில் பெரும்பங்காற்றி வரும் தமிழ்நாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. இரும்பு விலையும், நிலக்கரி விலையும் சேர்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவையைச் சுற்றியுள்ள இரும்புப் பட்டறை உற்பத்தியாளர்கள் ஏறத்தாழ 5000 பேர் தங்கள்
நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

விலைவுயர்வுப் பிரச்சினைக்கு இந்திய அரசிடம் எந்த உருப்படியான தீர்வும் கிடையாது. ஆனால் இந்த சிக்கலையும் உழவர்களுக்கும் உழைப்பாளர் களுக்கும் எதிராகத் திருப்பிவிடுவதில் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு வேளாண் விலை நிர்ணயக் குழு பரிந்துøரத்தபடி குவிண்டால் நெல்லுக்கு ரூ.1000 வழங்க முடியாது என்று தில்லி உணவு அமைச்சர் சரத்பவார் கைவிரித்துவிட்டார். அரிசி விலை உயர்வை இதற்குக் காரணம் காட்டுகிறார்.

சந்தையில் அரிசி விலை உயர்வது நெல் உழவர்களுக்கு இலாபகரமான விலை வழங்கியதால் அல்ல. அதேபோல் எள், நிலக்கடலை, தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் விலை உயராத போதும் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சோப்பு, வனஸ்பதி போன்ற பொருள்களின் விலை மட்டும் கடுமையாக உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.இதற்கு முதன்மையான காரணம் உழவர்கள் அல்லர். சில்லøர வணிகர்களும் அல்லர். இணைய தள (ஆன் லைன்) வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மிகப்பெரும் வணிக நிறுவனங்களும் சில்லøர வணிகத்தை கைப்பற்றி வரும் பன்னாட்டு வடநாட்டு பெருமுதலாளிகளுமே ஆவர். இந்தப் பெருவர்த்தக நிறுவனங்கள் ஒப்பந்த வேளாண்மையின் மூலமாகவும், தமது முகவர்களின் வழியாகவும் குறைந்த விலைக்கு உழவர்களிடமிருந்து வேளாண் விலை பொருள்களை கொள்முதல் செய் கிறார்கள். இவற்றை இந்திய அரசுக்குச் சொந்தமான கிட்டங்கிக் கழகம், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், சிறு நகரங்களிலுள்ள கோயில்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற பொது இடங்கள் ஆகிய வற்றில் சேமித்து வைக்கிறார்கள். உண்மையில் இது
சேமிப்பு அல்ல. பதுக்கலே ஆகும். இவ்வாறு இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் வைக்கப் பட்டுள்ள பொருள்களுக்கு இணைய தளத்தின் மூலம் விலை கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒரு பெரு வணிகர் தன்னிடம் 1 இலட்சம் மூட்டை எள் இருப்பதாக அறிவித்து அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை இணைய தளத்தில் அறிவிக்கிறார். இதைப் பார்க்கிற இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இன்னொரு வணிகர் இதில் 10ஆயிரம் மூட்டையை "வாங்குவதற்கு' முன்வருவதாக அறிவிக் கிறார். இப்படி "வாங்குகிறவர்' உடனடியாக முழுப்
பணத்தையும் செலுத்தி விடுவதில்லை. 10 விழுக்காடு தொகையை பெருவணிகரின் கணக்கில் செலுத்திவிட்டால் போதும். அந்தப் 10ஆயிரம் மூட்டை இவருக்கு உரியதாகக் குறிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை அவர் எப்போது செலுத்துகிறா÷ரா அப்போது தனது சரக்கை கிட்டங்கியி லிருந்து எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இவர் உடனடியாக மீதத் தொகையைச்
செலுத்தி சரக்கை எடுக்கமாட்டார். அதற்கு பதிலாக இந்த 10ஆயிரம் மூட்டையை தனக்குத் தேவையான இலாபத்தையும் சேர்த்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனது இணையதள முகவரியில் அறிவிப்பார். அதைப் பார்க்கிற சிறுவணிகர் அந்தத் தொகையைக் கொடுத்தால் இவரிடமிருந்து சரக்கை எடுத்துச் செல்லலாம். இவ்வாறுதான் ஆன் லைன் வர்த்தகம் நடைபெறுகிறது.

உண்மையில் சரக்கு கைமாறாமலேயே கைமாறியதுபோல் கணக்கிடப்பட்டு விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறது. தங்கள் கண்களால் பார்த்திராத, தாங்கள் கையாளாத சரக்குகளை வெறும் ஊக வணிகத்தில் கைமாற்றிவிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறார்கள் பெரும் வணிகர்கள். இவர்களுடைய ஊக இலாபமெல்லாம் கடைசியில் நுகர்வோர் தலையில் சில்லøர விலையாக உயர்த்தி வைக்கப்படுகிறது.உற்பத்தி செய்த உழவர்களுக்கு இந்தச் சந்தை விலையேற்றத்தால் பயன் ஏதும் இல்லை. நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இப்போது வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் ரிலையன்ஸ், பிர்லா, ரகேஜா போன்ற வடநாட்டு நிறுவனங்களும் சில்லøர வணிகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டன. இந்நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் பல்லாயிரக் கணக்கான டன் இன்றியமையாப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையாக விலை உயர்வை ஏற்படுத்திக் கொள்ளையடிக்கின்றனர். இப்பெருநிறுவனங்களிடமிருந்து பதுக்கலை எடுத்து விலையைக் குறைக்க இந்திய அரசு முன்வருமா என்ற கேள்வி நேருக்கு நேர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது ""இது மத்திய அரசின் பணி அல்ல மாநில
அரசாங்கங்களின் வேலை'' என்று கூறி ப.சிதம்பரம் நழுவினார்.

ஒரு பக்கம் விலை உயர்வுக்குக் உலக நாடுகள் காரணம் என்று சொல்லியும். மறுபுறம் பதுக்கலை எடுப்பது மாநில அரசாங்கங்களின் கடமை என்று சொல்லியும் தமது கடமையை தட்டிக் கழிப்பதில் ப.சிதம்பரம் குறியாய் இருக்கிறார். இந்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமயகொள்கைதான் இச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

தாராளமயப் பொருளியல் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கிய 1990களுக்குப் பிறகு வேளாண்மை குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுவøரஉணவு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு 1.7 விழுக்காடு என்று இருந்தது. 2000ஆம் ஆண்டில் 0.5 விழுக்காடாக வீழ்ந்தது. 2006இல் முழுவதும் தேக்கநிலையை அடைந்தது. இதன் காரணமாக ""1991இல் உணவுதானிய உற்பத்தி தலா 510 கிராம் என்று இருந்தது, 2005இல் தலா 422 கிராம் என்று குறைந்து 2006இல் 412 கிராம் என்று மேலும் வீழ்ந்தது'' என்று பொருளியல் அறிஞர் உட்சா பட்நாயக் அம்மையார் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய எச்சரிக்கையாகும். (Frontline  ஏப்ரல்,25,2008) மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தனிநபர் உணவு வழங்கல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் உற்பத்திக்கும் தேவைக்கும் இடைவெளி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது வெளிப்படை. வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்து இதனை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்பதே அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. உணவு உற்பத்தியை விட பணப் பயிர் வேளாண் மையில் இறங்கினால் தான் உழவர்கள் வாழ்வு செழிக்கும் என்பதையே மன்மோகன் சிங் மீண்டும் மீண்டும் அறிவித்தார். அயல்செலாவணிக் கையிருப்பு ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்வது திட்டமிட்ட வகையில் செயல் படுத்தப்பட்டது. இதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் கொள்கை என மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்தது.

அயல்செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பதை தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி என்று இந்தக் கூட்டணி பறைசாற்றியது. 1980களின் இறுதியில் சந்திரசேகர் பிரதமராக இருந்தபொழுது அயல்செலாவணி கையிருப்பு கøரந்துபோய் கையிலிருந்த தங்கத்தை அடகு வைத்து காலத்தைக் கடத்த வேண்டிய நிலமையிலிருந்து இன்று 30,000 கோடி டாலர் அயல் செலாவணி கையிருப்பு இருப்பதை தங்கள் கொள்கையின் வெற்றி என்று இந்தக் கூட்டணி அறிவித்தது. ஆனால் இது இரண்டு முனையில் சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒன்று, உணவுதானிய வேளாண்மையானது குறைக் கப்பட்டு பணப் பயிøர நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்
பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிøர நோக்கி விரட்டப்பட்டார்கள். இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப் பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன.

உலகச் சந்தையில் இந்திய பணப்பயிர்கள் மட்டுமின்றி பல பின்தங்கிய நாடுகளின் பணப் பயிர்களும் போட்டியிட்டன. எனவே ஏற்றுமதிக்கு மானியம் அளித்து செயற்கையாக விலையைக் குறைத்து உலகச் சந்தையில் விற்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த மானியமும் ஏற்றுமதியில் ஈடுபட்ட வணிகர்களுக்கே கிட்டியது. உழவர்களுக்கு கொள்முதல் விலை குறைக்கப்பட்டது.
எனவே பருத்தி உள்ளிட்ட பணப்பயிர் சாகுபடி செய்த உழவர்கள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு கடனை இறக்குமதி செய்து கொண்டார்கள். ஆந்திரா, விதர்ப்பா உள்ளிட்ட பருத்தி சாகுபடிப் பகுதிகளில் உழவர்கள் தற்கொலை அதிகரித்ததின் பின்னணி இதுதான்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் எரிஎண்ணெய் தேவைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் எரி எண்ணெய் விலையோ கடந்த இரண்டாண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துவிட்டது. பெட்÷ராலியப் பொருள்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டால் புவிவெப்பமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அபாய அளவை எட்டின. இந்நிலையில் பெருகிவரும் எண்ணெய்த் தேவையை ஈடுசெய்யவும், சுற்றுச்சூழல் சீர்கேடு தீவிரமடையாமல் தடுக்கவும் எத்தனால் (ஞுtடச்ணணிடூ) போன்ற உயிரி எரிபொருள்களைப் பயன்படுத்துவதை வளர்ச்சி யடைந்த நாடுகள் அதிகரித்தன. இச்சிக்கலை உலக மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று முதன் முதலில் எச்சரிக்கை விடுத்தவர் பிடல்காஸ்ட்÷ரா தான். (விரிவிற்கு காண்க@ தமிழர் கண்ணோட்டம், மே 2007)
வடஅமெரிக்கா, அய்÷ராப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவற்றில் சோளம், கோதுமை, கரும்பு முதலியவை இந்த உயிரி எரிபொருள் தேவைக்காக திருப்பி விடப்பட்டன. இதனால் இந்நாடுகளிலிருந்து ஏற்றுமதிக்கு கிடைக்கும் உணவுதானியங்கள் குறையத் தொடங்கின. மறுபுறம் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வளர்ந்துவரும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் உணவில் இறைச்சியையும் கால்நடை சார்ந்த பொருள் களையும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர். இது சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை தீவனத் தேவைக்கு எடுத்துச் செல்லும் போக்கை அதிகரித்தன. இவையெல்லாம் சேர்ந்து உலகச் சந்தையில் உணவுதானிய வழங்கலை வெகுவாகக் குறைத்தன. இந்திய அரசு உணவுதானிய வேளாண்மையைப் புறக்கணித்து வெளிநாடுகளிலிருந்து உணவு தானியத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற அணுகுமுறையும் தோல்வியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாவதாக, அதிகரித்து வரும் அயல் நாணயக் கையிருப்பு பெரும்பாலும் டாலர் நாணயத்திலேயே இருப்பதால் இன்னொரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க டாலரின் வரத்து கடந்தாண்டில் மட்டும் 10ஆயிரம் கோடி ஆகும். அதேநேரம் டாலரின் மதிப்புவீழ்ந்துவருகிறது. இதன் காரணமாக ரூபாய் நாணயப் புழக்கம் அதிகரித்து எதிர்பாராத அளவில் பணவீக்கத்தை அதிகரித்தது. இந்த டாலøர வாங்கி சேமித்து வைப்பதன் மூலமாக இந்திய சேமவங்கி பணப்புழக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு படாதபாடுபட்டு வருகிறது. இதுவும் அதன்
உயர் வரம்பை எட்டிவிட்டது. இதற்கு மேல் டாலøர வாங்குவதன் மூலம் பணம் வீக்கத்தை கட்டுப் படுத்துவது முடியாத காரியம். வளர்ச்சியடைந்த நாடுகள் உணவுதானியங்களை எத்தனால் உற்பத்தியை நோக்கி திருப்பி விட்டிருப்பதால் உணவுதானிய விலை உலகச் சந்தையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. எனவே 1960களில் செய்தது போல இறக்குமதியின் மூலம் உணவுப் பொருள் தட்டுப்பாட்டை ஈடுகட்டவும் முடியாது. தாங்கள் இதுகாறும் கடைபிடித்து வந்த தாராளமயக் கொள்கையின் தோல்விதான் இப்போது ஏற்பட்டுள்ள
விலையேற்றம் என்பதை ஏற்றுக் கொண்டு அதனைச் சரிசெய்ய வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக இதையும் உழவர் களுக்கு எதிராகத் திருப்பி விடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். உணவு எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப் படுத்துவது என்ற பெயரில் 10 இலட்சம் டன் உணவு எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதாக
அறிவித்திருக் கிறார்கள். இது தற்காலிகமாக சந்தையில் உணவு எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தக் கூடும். ஆனால் எண்ணெய் வித்து உழவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த இறக்குமதியால் உள்நாட்டு உழவர்களின் எண்ணெய் வித்துச் சந்தை பறிக்கப்படுகிறது. இன்றைக்கு உள்ள அயல்நாணயக் கையிருப்பை காரணங்காட்டி இதைத் தவிர வேறுவாய்ப்பில்லை என்று அரசு வாதிடுகிறது. ஆனால் உண்மையில் இறக்குமதிச் சந்தையில் கோலோச்சுகிற பன்னாட்டு நிறுவனங்களையும் வடநாட்டு நிறுவனங்களையும் பாதுகாத்து உள்நாட்டு உழவர்களை சந்தையை விட்டுத் துரத்துவதில்தான் இது முடியும். தமிழகத்திற்கு இதில் முன்அனுபவம் உண்டு. 1970களில் உணவுதானிய உற்பத்தியில் குறிப்பாக நெல் உற்பத்தியில் தேவைக்கும் வழங்கலுக்கும் பெரிய இடைவெளி இருந்ததை காரணம்காட்டி தமிழகச் சந்தையை ஆட்சியாளர்கள் திறந்துவிட்டார்கள். ஆந்திரா அரிசியும் கர்நாடக அரிசியும் மத்திய தொகுப்பு என்ற பெயரால் பஞ்சாப்  அரியானா அரிசியும் தமிழ்நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்தன. இன்று தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி கிட்டத்தட்ட தன்னிறைவை எட்டும் அளவுக்கு இருந்தபோதிலும் தமிழகச் சந்தை தமிழ்நாட்டு
உழவர்களுக்குக் கிடைக்கவில்லை. அயல் மாநில அரிசிகளை தமிழகச் சந்தையிலிருந்து விரட்ட முடியவில்லை.

இதே நிலை உணவு எண்ணெய் இறக்குமதியின் காரணமாக எண்ணெய் வித்து உழவர்களுக்கும் ஏற்பட இருக்கிறது. இதற்கு முன்னர் வாஜ்பாய் ஆட்சியில் மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் (பாமாயில்) ஏராளமாக இறக்குமதியானதால் உள்நாட்டில் எண்ணெய் வித்து விளைவித்த உழவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். ஏற்கெனவே உலகச் சந்தை நிலவரத்தின் காரணமாக பருத்தி உழவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டினோம். உணவுதானிய உற்பத்தியும் செய்ய முடியாது, பணப்பயிர் சாகுபடியும் பயன்தராது என்ற நிலையில் உழவர்கள் வேளாண்மையை விட்டு விரட்டப்படுவது தீவிரம் பெறும். விலையேற்றப் பிரச்சினையை உழவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் அரசாங்கமும் வலது சாரி, இடது சாரி அரசியல் கட்சிகளும் ஒன்றுபோல் செயல்
படுகின்றன. சி.பி.எம். கட்சியோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ அல்லது ம.தி.மு.க.வோ எந்தக் கட்சி விலைவாசிப் பிரச்சினைக்கு போராட்டம் நடத்தினாலும் அவர்கள் எடுத்துக் காட்டுவது காய்கறி விலையைத்தான். ஆர்ப்பாட்டம் செய்கிற இளைஞர் அமைப்பின÷ரா மகளிர் அமைப்பின÷ரா காய்கறிகளை மாலையாகப் போட்டுக் கொண்டு கையில் அரிசி, பருப்பு போன்றவற்றை ஏந்திக் கொண்டு விலை உயர்வு எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தை நடத்துவது வழக்கமாகிவிட்டது. இவர்கள் யாரும் கையில் ஒரு சிமெண்ட் பொட்டலத் தையோ, உயிர் காக்கும் மருந்து பாட்டிலையோ, வேறு
பொருள்களையோ வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை. இன்றியமையாப் பொருள் என்ற பெயரால் உழவர்கள் விளைவிக்கும் பொருள்களைத்தான் இவர்கள் குறிவைத்துத் தாக்குகிறார்கள். ஒரு கொப்பøர தேங்காய் கொள்முதல் விலை குறைந்தது 5ரூபாய் வேண்டும் என்று உழவர்கள் கோரினால் அதனை எதிர்ப்பதில் பா.ஜ.க.வும் தேர்தல் கம்யூனிஸ்ட்டுகளும் ஒ÷ர
நிலையில் இருப்பதைப் பார்க்கமுடியும். சிமெண்ட், இரும்பு, மருந்து போன்றவை பெரும் பாலும் பெருமுதலாளிய நிறுவனங்களால் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் காய்கறி, அரிசி, பருப்பு
முதலியவற்றை உற்பத்தி செய்பவர்கள் கோடிக்கணக்கான உழவர்கள். இவர்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பது கிராமப் பொருளாதாரத்தை பாதுகாக்கும். நிலத்திலிருந்து அவர்கள்  வெளியேறாமல் பாதுகாக்கும். தமிழர்களின் தாயக நிலம் வேற்றாருக்கு கைமாறாமல் பாதுக்கப்படும்.  ஒரு தேநீர் விலையை விடக் குறைவான விலைக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதை காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலை கொடுக்காமல் ஆட்சியாளர்கள் மறுப்பது இந்த அணுகுமுறையின் காரணமாகத்தான். அரசு தனது மானியச் செலவை உயர்த்திக் கொள்வதற்குமுன்வராமல், வாக்கு வாங்குவதற்காக தாங்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோடிக் கணக்கான உழவர்களைப் பழிவாங்குகிறார்கள்.

இந்த அணுகுமுறை கிராமப்புறத்தில் பணச் சுழற்சியே இல்லாமல் மட்டுப்படுத்தி, உழவர்களை நகரங்களை நோக்கி விரட்டுகிறது. நகரங்களில் பல்வேறு சமூக பதட்டங்களும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் இதன் காரணமாக தீவிரப்படுகின்றன. "வருமானத்தை அதிகரித்தால் விலையேற்றம் ஒரு பிரச்சினையே அல்ல' என்ற முதலமைச்சர் கருணாநிதியின் அணுகுமுறைதான் ஒட்டுமொத்த இந்திய ஆட்சி யாளர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. அதற்காக எல்லா மக்களின் வருமானத்தையும் இவர்கள் உயர்த்தி விடுவதில்லை. குரல்கொடுக்கும் வலுவுள்ள நடுத்தர
வர்க்கத்தை சரிக்கட்டிக் கொண்டு தங்கள் மக்கள் வி÷ராத, பொருளியல் கொள்கையை ஆட்சியாளர்கள் தங்கு தடையின்றிச் செயல்படுத்திக் கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துøர இந்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக இடைமட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு இரண்டு மடங்கிலிருந்து மூன்று மடங்குவøர ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அரசு ஊழியர்களும் சில ஒழுங்கமைக் கப்பட்ட தொழிலக ஊழியர்களும் விலைவாசிக்கேற்ற அகவிலைப்படி பெறுகிற வாய்ப்பில் வைக்கப் பட்டுள்ளார்கள். இப்போது ஏற்படும் விலை உயர்வு
இவர்களைப் பெருமளவு பாதிப்பதில்லை. இந்த வாய்ப்பில்லாத உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத தற்காலிகத் தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் போன்ற
பிரிவினர் விலை உயர்வுத் தாக்குதலை எந்தப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் எதிர்கொள்ளுகிறார்கள். இந்தத் தாராளமய பொருளியல் கொள்கை மாறினாலே தவிர இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுச் சிக்கலிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாது. தாராளமய  தனியார்மயக் கொள்கை தோல்வி யடைந்து வருவதை உலக பொருளியல் நிலைமை எடுத்துக்காட்டுகிறது.

இங்கிலாந்தில் திவாலாகிவிட்ட  நாதர்ன்ராக்(Northern Rock Bank வங்கியை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டதும் அமெரிக்காவின் பேர்ஸ்டேன்ஸ் (Bear Stearns Bank) வங்கியை அமெரிக்க அரசு
ஏற்றுள்ளதும் இந்தத் தாராளமயக் கொள்கை தோல்வியடைந்ததற்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்திய பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்ட போது ஒ÷ர நாளில் இந்திய சேம வங்கி 1700 கோடி
ரூபாயை பங்குச் சந்தையில் ஈடுபடுத்தி சந்தை சரியாமல் முட்டுக்கொடுக்க முனைந்ததும், ரூபாய்க்கு எதிரான டாலர் நாணய மதிப்பு சரியும்போது இந்திய சேமவங்கி டாலøர வாங்கிக் குவித்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க முனைந்ததும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. இதனைப் படிப்பினையாகக் கொண்டு இந்திய அரசு சந்தை நாயகத்திற்கு அடிபணியாமல் மக்கள் சார்பில் சந்தையில் தலையிட வேண்டும்.

* இணையதள வர்த்தகச் சூதாட்டத்தை (ஆன்லைன் வர்த்தகம்) தடைசெய்ய வேண்டும்.

* உணவு தானியங்கள் மற்றும் வேளாண்மை விளைபொருள்களுக்கு இலாபகரமான விலை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

* உணவுதானிய வர்த்தகத்திலும், இன்றி யமையாப் பொருள் வணிகத்திலும் கார்கில், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ், பிர்லா, பாரதிமிட்டல், öரகேஜா போன்ற வடநாட்டு பெருநிறுவனங்களும் ஈடுபடுவதைத் தடைசெய்ய வேண்டும்.

* செலவுக்குறைவான, நீர், நிலவளங்களைப் பாதுகாக்கும் இயற்கை சார்ந்த நீடித்த சாகுபடிகளுக்கு வேளாண் மானியத்தை அதிகமாக அளித்து அவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

* வேளாண்மை சார்ந்த மக்கள் தொகையை குறைப்பதுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற மேற்கத்திய அணுகுமுறையைக் கைவிட்டு சிறு நிலவுடைமையாளர்களை அடிப்படையாகக் கொண்ட
வேளாண் உற்பத்தியைச் சார்ந்திருக்கும் அணுகு முறைக்கு திரும்பவேண்டும்.

* புன்செய் தானிய உற்பத்தியைத் தீவிரப் படுத்துவது, பழம், காய்கறி ஆகியவற்றைச் சேமிக்க உற்பத்தி இடங்களுக்கு அருகே குளிர்பதன கிட்டங்கிகள் அமைப்பது போன்ற வேளாண் சார்ந்த
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அரிசி உணவு மட்டுமே சாப்பிடும் ஒற்றை உணவு முறையிலிருந்து கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட கலப்பு உணவுப் பழக்கத்திற்குத் தமிழர்கள் திரும்ப வேண்டும். அரசு இவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

* வேளாண்மைத் துறையில் அரசின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

*சிறுதொழில் முனைவோருக்கு மானிய விலையில் இரும்பு உள்ளிட்ட இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

*விலைவாசியோடு இணையாத ஊதிய முறையே எந்த பிரிவு உழைப்பாளர்களுக்கும் இருக்கக் கூடாது.
 
இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு நெருக்கடி தாராளமய உலகமய பொருளியலால் விளைந்த ஒன்று; இக் கொள்கைக் கைவிடப்பட வேண்டும் என்ற விழிப் புணர்வுபடித்த இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும்.

0 கருத்துகள்:

ப.சிதம்பரத்தின் பொய்முகம் - தோழர் கி.வெங்கட்ராமன்

எதிர்காலத்தை எரித்து, நிகழ்காலத்தைநிலைநிறுத்தும் முயற்சி - இது தான்இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம்2008-09.உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி, நடுத்தரவர்க்கத்திற்கு வருமானவரிச் சலுகை ஆகியஇரண்டை மட்டும் மையப்படுத்தியே இந்த வரவு –செலவுத் திட்டம் விவாதிக்கப்படுகிறது.இலட்சத்திற்கும் மேற்பட்ட உழவர்களின்தற்கொலைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உழவர்அமைப்புகளின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி திட்டத்தைப.சிதம்பரம் அறிவித்திருக்கிறார்.இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல.அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு,குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடிசெய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு,எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும்.தமிழ்நாட்டில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில்கடன் வாங்கியிருக்கிற உழவர்களில் பெரும்பாலோர்5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் தான்.ஏனெனில் வங்கி மேலாளர்கள் சிறு விவசாயிகளைநம்பி கடன் தருவதில்லை. எனவே தமிழ்நாட்டைப்பொறுத்த அளவில் ப.சிதம்பரம் அறிவித்துள்ள கடன்தள்ளுபடி பெரும்பாலோருக்கு பயன் தராது.மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிகஎண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள்.விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின்தலைவர் கிN~hர் திவாரி, உழவர் தற்கொலைமிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன்தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறுஅல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்குமிகுதி என்கிறார்.இரண்டு எக்டேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல்வட்டி இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள் வழங்கி வருகின்றன. கண்துடைப்பான இந்தக் கடன் தள்ளுபடி திட்டத்தின் போலித்தனத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் கூக்குரல்கள் எழுந்தன. ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த இராகுல் காந்தியை வைத்து  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தானே இப்பிரச்சினையை
எழுப்பியது. பதிலளித்த ப.சிதம்பரம் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நில அளவுகள் குறித்தும், நிவாரணம் பெறுவதற்கு
உள்ள தகுதிக் கால வரையறைகள் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று பொத்தாம் பொதுவில் அறிவித்தார். துல்லியமான அறிவிப்பு இனி வந்தால் தான் அது எந்த நிலையில் உள்ளது என்பது தெரியும்.
 
இதற்கான நிதி ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தில் முன் வைக்கப்படவில்லை. இது பற்றி கடுமையான விவாதங்கள் எழுந்ததற்குப் பிறகு இந்த நிதியாண்டிலிருந்து நான்கு ஆண்டுத் தவணையில் வங்கி களுக்கு ரூ.60,000 கோடி கொடுத்து ஈடு செய்யப்படும் என அறிவித்தார். இது சட்டவலுவில்லாத அறிவிப்பு. ஏனெனில் வரும் நான்கு நிதியாண்டு களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைப்பதற்கு ப.சிதம்பரத்திற்கும் அதிகாரம் கிடையாது; இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்திற்கும் உரிமை கிடையாது. சேம வங்கியின் (ரிசர்வ் வங்கி) மூலமாக உறுதியான நிதி ஏற்பாடு அளிக்கப்பட்டாலே தவிர இதற்கு  உத்தரவாதம் கிடையாது.
 
உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டன. மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி
ஆக்கிவிட்டன. இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக்
கூட அசைக்கவில்லை சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து,
கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை.
நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப்  போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்-ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத் தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14
விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம்
கோடி கடன் வாங்க உள்ளார்கள்.
 
அரசின் வரவு – செலவுத் திட்ட ஆவணத்தில் சென்ற ஆண்டு
வரை கடன் வரவை முழுமையாக காட்டினார்கள். ஆனால் இந்த
வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அது முழுமையாகக் காட்டப்பட
வில்லை. மாறாக இந்த ஆவணத்தின் இணைப்பில்
வௌ;வேறு வகை கடன் ஏற்பாடுகள் காட்டப்படுகின்றன.
"சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" என்ற வழியில் திரட்டப்படும் கடன்
இந்த ஆண்டு ரூ.13,958 கோடி. இது சென்ற ஆண்டை விட மூன்று
மடங்கு அதிகம். இது தவிர எண்ணெய் நிறுவனக்கடன்
பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன்
பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு.
இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை.
ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை
இதைவிடக் கூடுதலாகும். வேளாண் கடன் தள்ளுபடிக்கு
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.25,000 கோடி, அதே போல்
நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி
தரவேண்டிய ஊதிய உயர்வான ரூ.20,000 கோடி ஆகியவையும்
சேர்த்தால் பற்றாக்குறை இன்னும் அதிகமாகும்.
இவ்வளவு பற்றாக் குறையையும் எப்படி ஈடுகட்டப்
போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப்
பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக்
கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும், கணக்கை மீறி ரூபாய்த்
தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை
உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான்
இதனால் உண்டாகும். வரவு – செலவுத் திட்டம் முன்
வைக்கப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்னால் பெட்ரோல்,
டீசல் விலை உயர்த்தபட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பொருளாதாரத்தை முன்னேற்றுவது  என்பதற்கு பதிலாக தனியார் நுகர்வின் மூலமாகவும், கடன் வாங்கி கட்டடங்கள் எழுப்பப் படுவதன் மூலமாகவும் ஏற்படும் வளாச்சியையே வளர்ச்சி முறையாக மன்மோகன் சிங் அரசு கொண்டுள்ளது. வருமானவரி சலுகைகள் ஆண்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப் படுவதன் நோக்கம் சேமிப்பை  அதிகப்படுத்துவதற்காக அல்ல. மாறாக நுகர்வை து}ண்டி அதன் மூலம் தொழில் உற்பத்தியை பெருக்குவது என்பது தான் தனது நோக்கம் என்பதை பட்ஜெட் உரையிலேயே ப.சிதம்பரம்
குறிப்பிட்டார்.
 
இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள் மற்றும் பிற மின்னனு நுகர்வுப் பொருட்கள் மீதான வரி ஏற்கெனவே இருந்ததை விட 4%குறைக்கப் பட்டுள்ளதன் நோக்கம் இது தான். ஆனால் ஏழை எளிய
மக்கள் பயன்பெறும் பொது வழங்கல் திட்டத்திற்கு தேவைப்படும் உணவு மானியத்தை உரிய அளவு உயர்த்தவில்லை. சென்ற ஆண்டை விட 1,100 கோடி ரூபாய் தான் உயர்த்தப் பட்டுள்ளது. பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் உண்மை அளவில் உணவு மானியம் உயர்த்தப்படவில்லை என்பது புலனாகும். வேளாண் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் முன் வைக்காத இந்த வரவு – செலவுத் திட்டம் இந்த நிதியாண்டில் கோதுமை, அரிசி போன்றவை வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும் என கூறுகிறது. இந்த உணவு இறக்குமதிக்கு மட்டும் நிதி ஒதுக்கிட போதுமான உபரி உள்ளதாக ப.சிதம்பரம் கூறுகிறார்.
மறுபுறம் இராணுவச் செலவிற்கு சென்ற ஆண்டை விட
10 விழுக்காடு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,05,600 கோடி ரூபாய் படைச்செலவிற்கு என்று சொல்லப்பட்டாலும் எல்லைப் பாதுகாப்புப் படை, வேறு சில சிறப்பு படை செலவு களையும் சேர்த்தால் இது 1,40,000 கோடியாகும். கடந்த பத்தாண்டுகளில் இராணுவத் திற்கான ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் இராணுவமயமாகி வருவதன் அடையாளம் இது.
 
சேவைத்துறையைச் சார்ந்ததாக இந்தியப் பொருளியல் மாற்றப்பட்டு வருவதை பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். சேவைத்துறையைச் சார்ந்த பொருளியல் என்பது பெரிதும் அமெரிக்கச் சந்தையை சார்ந்
திருக்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரமோ நிலைகுலைந்து
கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 300 கோடி டாலர் (ரூ.12,000
கோடி) கடன் வாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது
அமெரிக்க வல்லரசு. அந்நாட்டின் மிகப்பெரிய வங்கியான பேர்ஸ்
ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns Bank) வங்கி திவாலாகும் நிலைக்கு வந்து 'ஜேபி மார்கன்' நிறுவனத்தால் 93 விழுக்காடு கழிவில் ஜப்தி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் தீராத நோயில் வீழ்ந்து கிடப்பதன் அடையாளம் இது. இந்தத் தொற்று நோய்
இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. சேவைத்துறை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் டாலர் மதிப்பு வீழ்ந்ததன் விளைவாக அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி பாதிப்படைந்தது.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக
ஏற்றுமதி சார்ந்த இந்தியத் தொழில்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2 இலட்சம் வேலை இழக்கப்பட்டுள்ளது
என்றும், திருப்பூரில் மட்டும் 80,000 வேலை இழப்பு நேர்ந்துள்ளது
என்றும் இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் 2008 மார்ச் 4-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அறிவித்தது கவனங்கொள்ளத் தக்கது. ப.சிதம்பரத்தின் வரவு - செலவுத் திட்டம் இந்த வேலை
இழப்பை சரி செய்வதற்குக் கூட எந்த உருப்படியான முயற்சி
யையும் முன் வைக்கவில்லை. மருத்துவ நலத் திட்டங்களுக்குக் கடந்த ஆண்டை விட 15 விழுக்காடு நிதி அதிகமாக  துக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார்.
 
தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Multispeaciality hospitals) ஐந்தாண்டு களுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக் கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை நிறுவிக் கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கெனவே நோயாளிகளைக் கொள்ளை யடிப்பது நாடறிந்த உண்மை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திர விடுதிகள் கட்டும் முதலாளிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார்.
 
கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate}ற்றுக்கு நுறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5 விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006- 2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத் தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன. (ASSOCHAM அறிக்கை -2007) வருமானவரி, மதிப்புக் கூட்டுவரி, உற்பத்திவரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக் குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமான வரியைக் குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை.
 
கம்பெனி வருமானவரி, அதற்கான துணை வரி ஆகியவற்றில் மாநிலங்களுக்கு எந்தப் பங்குத் தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும் மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத் திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே. பொருளியல் வளர்ச்சி (புனுP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று கூறிக்கொண்டிரந்தனர். மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத உலகமய வரவு செலவுத் திட்டம் ஆகும்

0 கருத்துகள்:

தில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்

கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தமக்கு ஆதரவான துணை சக்திகளைத் திரட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எடுத்துக்காட்டு. சிதம்பரம் நடராசர் ஆலய சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட கடந்த 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி பிற பக்தர்களும் அங்கு தமிழில் பாடி வழிபட வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வு.

சிதம்பரம் வட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சார்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி இந்தியாவெங்கும் சைவத் தலங்களுக்குச் சென்று தமிழில் வழிபட்டு வந்தார். சிதம்பரத்தில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் 1999 ஆம் ஆண்டு
தனது முயற்சியைத் தொடங்கினார். 9-9-1999 அன்று இரவு பூசை நேரம் முடிந்த பிறகு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் சிற்றம்பல மேடையில் நின்று
சிவபுராணம் பாட முயன்ற போது ஆறுமுகசாமியை அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து அவமானப் படுத்தி வெளியேற்றினர். இதன் மீது அவர் மேற்கொண்ட சட்ட முயற்சியினால் 28-10-1999 காலை 9.30  மணியளவில் கடலு}ர் சட்டப்
பணிகள் ஆணைய நிர்வாக அலுவலர், சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாக செயலர்
ஆகியோர் முன்னிலையில் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடி நடராசரை வழிபட்டார். அன்று இரவே சிதம்பரம் நகர காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமரசத்தில் ஆறுமுகசாமி தொடர்ந்து இதேபோல் பாடி
வழிபடலாம் என சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதி மீண்டும் மீண்டும் மீறப்பட்டது. ஒவ்வொரு முறை ஆறுமுகசாமி
முயலும் போதும் அவரை அடித்துத் துன்புறுத்தி வெளி  யேற்றுவது என்பதைத் தீட்சிதர்கள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டனர். இச்சிக்கல் தொடர்பாக ஆறுமுகசாமி தமது சொந்த முயற்சியில் சில தமிழ் அன்பர்களின் துணையோடு துண்டறிக்கைள் அச்சடித்து மக்களிடம் பரப்பி வந்தார். ஒரு  கட்டத்தில் நம்மையும் அணுகினார். சிதம்பரம் தமிழ் காப்பணி இப்பிரச்சினை தொடர்பாக 7-12-1999-இல் துண்டறிக்கை வெளியிட்டு பரப்புரை செய்தது.தீட்சிதர்களின் தமிழ் விரோத சாதிவெறிப் பார்ப்பனியச்
செயல்பாட்டை அந்த அறிக்கை விளக்கமாக அம்பலப்படுத்திக் கண்டித்தது. ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை
மக்களிடையே தமிழ் காப்பணி முதன்முதலாக எடுத்துச் சென்றது.
ஆறுமுகசாமி தேவாரம் பாட அனுமதிக்கப்படாததை கண்டித்தும் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை எந்த தடையும் இன்றி தமிழக ஆலயங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் காப்பணி சார்பில் அதன் தலைவர் (மறைந்த) முனைவர்
ச.மெய்யப்பனார் அவர்கள் தலைமையில் உண்ணாநிலைப்
போராட்;டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.


மெய்யப்பனாரும் தமிழ்  காப்பணியின் வேறு சில நிர்வாகிகளும் இதற்கு   முன்னமேயே சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் பாடப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர்
வ.சுப.மாணிக்கனார் அவர்கள்  தலைமையில் உலகறிந்த பல்வேறு
தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் உள்ள தமிழ்
உணர்வாளர்கள் துணையோடு இதற்கான முயற்சியை
மேற்கொண்டனர். சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிப்பதை
தீட்சிதர்கள் ஏற்க மறுத்தனர். வ.சுப.மாணிக்கனார் உண்ணா
நிலைப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நடராசர்
ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடியாக தமிழை தடுத்துக்
கொண்டிருக்க, தமிழக அரசோ இது பற்றி பாராமுகமாக இருந்தது.
குடமுழுக்கை ஒட்டி ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த "வேள்வித்
தீயில் வீழ்ந்து மாய்வோம்" என்று வ.சுப.மா. இறுதி எச்சரிக்கை
விடுத்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம.வீரப்பன் தலையீட்டில் சமரசம் நடந்தது. வேறு வழியின்றி
"காலப்பூசையின்" முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்ப
மிட்டனர். ஆயினும் நம்முடையதமிழறிஞர்கள் கவனக்
குறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடு;;த்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின்
காரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல்
விட்டுவிட்டார்கள். ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகு தான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில்
ஒருவர் சிற்றம்பல மேடையில் 'நடராசர் திருமுன்' பக்தர்கள்
அனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் கடவுள் சிலைநிறுவப்பட்டுள்ள கருவறைக்கு அடுத்து இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள்
அனுமதிக்கப்படும் இடத்தில் நின்று மனமுருகி தமிழில் பாடி வழிபாடு நடத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் மட்டும் இந்த உரிமையை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வந்தனர்.
அர்த்த மண்டபத்திற்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் தான் பக்தர்கள் நின்று தமிழில் பாடி வழிபாடு நடத்தலாம் என்று அடாவடி
செய்தனர். இது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகம் என்று காரணம்
கூறி தமிழுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு
எதிராகவும் தீண்டாமை கடைபிடித்தனர்.
இக்கொடுமைக்கு எதிராக ஆறுமுகசாமி செய்த முயற்சிக்கு
தமிழ் அன்பர்களும் சில தனிப்பட்ட வழக்குரைஞர்களும் துணை
புரிந்தார்கள். சிதம்பரத்திலும் கடலு}ர் மாவட்ட நீதிமன்றத்திலும்
வழக்குகள் நடந்தன. அவை யெல்லாம் உரிய வெற்றிபெறாத
நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற
வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் வழக்குரைஞர்
தோழர் ராஜுவிடம் ஆறுமுக சாமியை அறிமுகம் செய்து
வைத்து இவ்வழக்கை தொடர்ந்து நடத்த துணை செய்யுமாறு
இக்கட்டுரையாளர் கேட்டுக்கொண்டார்.
ராஜு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை இதனை தங்களது இயக்க
போராட்டமாகவே முனைப்போடு முன்னெடுத்தன. பாட்டாளி மக்கள்
கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட
கட்சிகளின் உறுதுணையோடு தொடர் போராட்டங்களை
ம.உ.பா.மை. நடத்தியது. ம.க.இ.க. வுடன் இணைந்து செயல்பட
முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில்
இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன. இந்த வகையில் கடந்த
12-08-2006 அன்று தமிழ் காப்பணி நடத்திய எழுச்சி மிக்கக் கூட்டம்
குறிப்பிடத்தக்கது(விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).

ம.உ.பா.மை. துணையோடு ஆறுமுகசாமி அளித்த மனுவின்
மீது தமிழக இந்துசமய அறநிலையத்துறை மயிலாடுதுறை
இணை ஆணையர் 2004 திசம்பரில் அளித்த உத்தரவு
தீட்சிதர்களுக்கு ஆதரவாகஅமைந்தது. தொன்றுதொட்டு வந்த
வழக்கம் என்ற பெயரால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடுவதை அந்த ஆணை தடை செய்தது. இதன் மீது ஆறுமுகசாமி
முன்வைத்த சீராய்வு மனு மீது அறநிலையத்துறை ஆணையர் 30-
4-2007-இல் அளித்த உத்தரவு தெளிவானது. சிறப்பானது.
தீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்கள் அனைத்தையும் தக்க முறையில் எதிர்கொண்டு அளிக்கப்பட்ட
ஆணையாகும் இது. தீட்சிதர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற
"வகையறாக் கோயில்"- Dinominational temple  என்ற  வாதத்தை இவ்வாணை தெளிவாக
மறுத்தது. 1888-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
வழங்கிய ஒரு தீர்ப்பை இதற்கு ஆதாரமாக காட்டியது "ஏ.எஸ்.103
மற்றும் 159ஃ1888" என்ற வழக்கில் நீதிபதிகள் n~ப்பர்டு, முத்துசாமி
ஐயர் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஆயம்
அளித்தத் தீர்ப்பு "சிதம்பரம் நடராசர் கோயில் பன்னெடுங்
காலமாக ஒரு பொதுக் கோயிலாக இருந்து வருகிறது என்பதை
மறுக்க முடியாது. இக்கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து
என்பதற்கு ஆதாரமே கிடையாது" எனக் கூறியது(தீர்ப்பு நாள் :
17.03.1890). அதுமட்டுமின்றி 23.01.1940-ஆம் நாள் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ், நிஜாம்
ஆகியோர் அடங்கிய ஆயமும் "இக்கோயில் தீட்சிதர்களின்
சொந்தக் கோயில் அல்ல என்பதிலும், அது அரசு சட்டத்தின்
கீழ் வருகிற ஒரு பொதுக் கோயில் என்பதிலும் எவ்வித ஐயமும்
இல்லை" என்று உறுதி செய்தது. ஆயினும் இவ்வாறான
தீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் ஆணைகளுக்கும் எதிராக உச்ச
நீதிமன்றம் சென்று தடை வாங்கியதை வைத்துக் கொண்டு
நடராசர் ஆலயத்தை தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது நிர்வாகத்தின்
கீழ் வைத்திருக்கிறார்கள்.
சைவ சமயத்தில் தனிப்பிரிவு அல்லது வகையறா என்பதற்கு
இடமில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை(ஆதிவிசுவேசுவரர்
காசி விசுவநாதர் திருக்கோயில் எதிர் உ.பி. அரசு - 1997(4)SCC606) எடுத்துக்காட்டி தீட்சிதர்கள் வாதத்தை அறநிலையத்துறை ஆணை
மறுத்தது. அதுமட்டுமின்றி தொன்று தொட்டு நிலவும் பழக்கம்
என்பதற்கான வரையறையை இந்த அரசாணை எடுத்துக்காட்டியது.
ஒரு திருக்கோயிலில் கடை பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள்
தொன்மையானவையாகவும் நினைவிற்கு எட்டாதவையாகவும்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வழக்கம் தொடங்கிய நாளில்
இருந்து தடையின்றி நடந்திருக்க வேண்டும். அதற்கான
திட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்.
சுந்தரர், நடராசர் கோயில் 'திருக்களிற்றுப் படிமருங்கு' நின்று
அதாவது பஞ்சாட்சரப் படியிலிருந்து தேவாரம் பாடினார்
என்பதைப் பெரிய புராணம் பதிவு செய்கிறது. சுந்தரர் தீட்சிதர்
அல்லாதவர். மேலும் கி.பி. 14, 15, 18 ஆகிய நு}ற்றாண்டுகளில்
படையெடுப்புகள் காரணமாகவும் சைவ வைணவ மோதல்
காரணமாகவும் நடராசர் ஆலய பூசைகள் அவ்வப்போது பல
ஆண்டுகள் தொடர்ச்சியாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகே
தீட்சிதர்களின் சூழ்ச்சியால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணை 'இந்திய அரசமைப்புச் சட்டம்
வழங்கும் சம உரிமையை சாதி அல்லது வேறு காரணங்களை
காட்டி, பழக்கவழக்கங்கள் என்ற பெயரால் யாரும் மறுக்க
முடியாது' என்ற சட்டநிலையை எடுத்துக்காட்டி ஆறுமுகசாமியோ
அல்லது வேறு பக்தர்களோ சிற்றம்பல மேடையில் தமிழில்
பாடி வழிபடுவதை தீ;ட்சிதர்கள் தடுக்க முடியாது என
வலியுறுத்தியது.


ஆயினும் தீட்சிதர்கள் இந்த ஆணைக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார்கள். அதன்பிறகு உயர்
நீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க தமிழ்நாடு இந்துசமய
அறநிலையத்துறை செயலரிடம் முறையீடு செய்தார் ஆறுமுகசாமி.
29-02-2008 அன்று வழங்கிய ஆணையில் பக்தர்கள் காலப்
ப10சை முடிவில் அதன் ஒர் பகுதியாக கருதத்தக்க அளவிற்கு
அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட வழிபாட்டு
பாடல்களை தமிழில் பாடி வழிபடலாம் என்றும் அவ்வாறு
செல்பவர்கள் தீட்சிதர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
என்றும் கூறியது. இதனடிப்படையில் ம.க.இ.க., விடுதலை சிறுத்தைகள் துணையோடு 02.03.2008 அன்று காலை தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் திமிரோடு வழிமறித்துத் தாக்கினர். காவலுக்கு சென்ற கடலு}ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கினர். கடும் போராட்டத்திற்கு
இடையில் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடைக்கு து}க்கிச் சென்று காவல்துறையினர் நிறுத்திய போதும் நடராசர் சிலையை பூணு}ல் அணிந்த மாமிச மலைகளாக குறுக்கே
நின்று மறித்தார்கள் தீட்சிதர்கள். நடராசர் திருமுன் தேவாரம்
பாடுவது என்ற அரசாணையை செயல்படுத்த விடாமல் தீட்சிதர்கள்
செய்த அராஜகம் உலகெங்கும் உள்ள தமிழர்களையும், சனநாயக
சக்திகளையும் விழித்தெழச் செய்தது. பார்ப்பனியத்தின்
கொடுங்கொன்மை விளங்காதவர் களுக்கும் விளங்க வைக்கப்பட்டது.
மாலையில் மீண்டும் தேவாரம் பாட முயன்றவர்கள் மீது
காவல்துறை தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 34
பேரை கைது செய்தது. அடுத்த நாள் தீட்சிதர்கள் சிலரும் கைது
செய்யப்பட்டார்கள். ஆறுமுகசாமியும் கைதானார். தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 04- 03-08 அன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத்
தொடர்ந்து 05-03-2008 அன்று காலை ம.க.இ.க. தோழர்கள் ஐந்து
பேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலை
நாட்டினர். இதற்கிடையில் கைதான அனைவரும் 05-03-08 அன்று மாலை விடுதலையாயினர்.
06-03-2008 அன்று சிற்றம்பல மேடையில் நின்று மனமுருகி தேவாரம் பாடி நீண்ட கால தன்னுடைய போராட்டத்தை வெற்றிகரமாக ஆறுமுகசாமி நிறைவு செய்தார்.
ஆயினும் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் தேவை எழுந்தது. அதற்கான முயற்சியை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொண்டது. 11-03-2008 அன்று
சிதம்பரம் நகர காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான சந்திப்பு நடந்தது. 12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம்  எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்
படிக்கையானது. த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் மற்றும் பட்டு தீட்சிதர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 12-03-2008 முதல் 15-03-2008 வரை காவல்துறை பாதுகாப்போடு தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம், திருவாசகம் பாடினர். 15-03-2008 அன்று தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நா.இரா.சென்னியப்பனார் எழுத்துப் பூர்வமாக தெரிவித்ததைத்
தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து நாள்தோறும் காலையில்
சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம்
பாடி வழிபட்டு வருகின்றனர். ஆயினும் சிதம்பரம் நடராசர்
ஆலயம் தொடர்ந்து தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருப்பது எந்த
வகையிலும் ஞாயமற்றது. தீட்சிதர்கள் தனித்த சமய வகைப்
பிரிவினர் என்பதற்கோ, இது அவர்களது வகையறாக் கோயில் என்பதற்கோ எந்த சட்ட ஆதாரமும் இல்லை. தவிரவும் வகையறாக்
கோயில்களின் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்று
உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்திருக்கின்றது(காண்க :
தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).
அரசு நிர்வாகத்தின் கீழ் வராமல் பார்ப்பனர்கள் வசமே கோயில் ஒப்படைக்கப்பட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன
நேரும் என்பதற்கு தில்லை தீட்சிதர்களின் அடாவடியே
எடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாட்டில் வந்தால் பூசை,
சடங்குகள் நின்றுவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பூசை
சடங்குகள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களைக் கொண்ட நிர்வாகக்
குழுவை ஏற்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. நடராசர்
கோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் கோவிந்தராச பெருமாள்
கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அங்கு வழிபாட்டுச் சடங்குகள் எந்த இடைய10றும் இன்றி நடந்து தான் வருகின்றன. அதே போல் ஏற்பாடு நடராசர் ஆலயத்திலும் செய்து கொள்ள முடியும். கோயில் நகைகளைத்; திருடுவது, கோயில் வளாகத்திற் குள்ளேயே குடித்து விட்டு கும்மாளமிடுவது, பிற குற்றச்
செயல்கள் போன்றவற்றில் தீட்சிதர்கள் ஈடுபடுவது யாரும்
அறியாத ஒன்றல்ல. ஏதோ அரசு நிர்வாகத்தில் போனால் தான்
எல்லாம் கெட்டுவிடும் என்று ஐயுறுவதிலும் பொருளில்லை.
அரசு நிர்வாகத்தில் இருந்தால் பொதுமக்கள் தட்டிக்
கேட்டுத் தலையிட சட்ட வாய்ப்பு உண்டு. தீட்சிதர்களின் தனிக்
கோயில் என்றால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே இனியும்
தாமதிக்காமல் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்து சிதம்பரம் நடராசர் ஆலயத்தைத் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு  வரவேண்டும். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் அதுவரை தொடர வேண்டும்.

0 கருத்துகள்: