கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

பருவநிலைப் பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் ஓடும் பிள்ளையாய் இந்தியா

இந்தப் புவிப்பந்தைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான உலக நாடுகளின் முயற்சியை வடஅமெரிக்க வல்லரசு தனது ஏகாதிபத்தியக் கொள்ளைக்காக சீர்குலைக்கிறது. பருவநிலை மாற்றம் குறித்த கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிவதற்கான எல்லா அறிகுறிகளும் உள்ளன. வட அமெரிக்காவின் இந்த வல்லாதிக்க சூழ்ச்சிக்கு இந்திய அரசு துணை போகிறது. புவிவெப்பமாதல் ஏற்படுத்தும் கொடிய விளைவுகள் அறிவியலாளர்கள் கணக்கிட்டதை விடவும் உண்மையில் தீவிரமாக உள்ளன என்பதை இப்போதைய ஆய்வுகள் மெய்ப்பித்து வருகின்றன.

புவிவெப்பமாதல், அதன் விளைவான பருவநிலை மாற்றம் ஆகியவை நவீனத் தொழில் வளர்ச்சி, நாகரிகம் என்ற பெயரால் கண்மண் தெரியாமல் நிலக்கரி, எரி எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எரித்ததால் விளைந்ததாகும். முதலாளியத்தின் இலாப வேட்டையும், முதலாளியம் உருவாக்கும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு வெறியும் சேர்ந்து இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதி அதனை அளவுக்கதிகமாக உறிஞ்சித் துப்பியதால் ஏற்பட்ட விளைவு இது.

ஐ.நா. நியமித்த பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களிடை ஆய்வுக்குழு (Inter Governmental Panel on Climatic Changes – IPCC) அளித்த அறிக்கைகள் இப்போதுள்ள நிலைமை தொடருமானால் 2035 ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1990ஆம் ஆண்டை ஒப்பிட 2கு செல்சியஸ் உயரும் என்று எச்சரித்தன. இவ்வாறு வெப்ப உயர்வு ஏற்பட்டால் வடதுருவ அலாஸ்காவின் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான பன்னடுக்குப் பனிப்பாறைகளில் கணிசமான பகுதி உருகிக் கடல் மட்டத்தை அதிகரித்துவிடும். தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதியிலுள்ள சிறுசிறுத் தீவுகளும், நாகப்பட்டினம் நகரத்தின் பெரும் பகுதியும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் நீண்ட கடற்பகுதியும் குறிப்பாக, மாமல்லபுரம், வேளாங்கண்ணி, திருச்செந்தூர் கடற்பகுதிகளும் கடல் அரிப்புக்கு தீனியாகி விடும்.

புவிவெப்பமாதல் கணிக்க முடியாத தாறுமாறான பருவநிலை மாற்றங்களை உருவாக்கி பேரழிவைக் கொண்டு வரும். (விரிவிற்கு காண்க: தமிழர் கண்ணோட்டம், மே 2007). இந்தப் பேரழிவிற்கு வட அமெரிக்க வல்லரசும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஜப்பானும் தான் முக்கியப் பொறுப்பு - அதிலும் அமெரிக்க வல்லரசின் பொறுப்பு தான் முதன்மையானது என்று அரசாங்கங்களிடை ஆய்வுக்குழு புள்ளி விவரங்களோடு எடுத்துக் கூறியது.

இவ்வாறான புவி வெப்பமாதல் தொடராமல் தடுப்பதற்கான மாற்று வழிகளையும், மாற்று பொருளியல் வளர்ச்சிப் பாதையையும் தனது வரம்புக்குட்பட்டு இந்த ஆய்வுக்குழு எடுத்துக் கூறியது. அது மட்டுமின்றி புவிவெப்பமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடாத ஏழை நாடுகளும் உலகம் முழுவதுமுள்ள ஏழைகளும் தான் அதிகம் இதற்கு பலியாகிறார்கள் எனவும் சுட்டிக் காட்டியது.

எனவே, பாதிப்பை உருவாக்கியவர்கள் தான் அதற்கான மாற்றைக் கொணர்வதிலும் அதிகம் பொறுப்பேற்க வேண்டும். மாசு படுத்திய நாடுகளே மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு வளர்முக நாடுகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என ஆய்வுக்குழு பரிந்துரைத்தது. புவிவெப்பமாதல் உயராமல் நிலைப்படுத்தப்பட வேண்டுமென்றால் 2050ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 1990ஆம் ஆண்டை ஒப்பிட 80 விழுக்காடாவது குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுவரையறுத்தது.

இதனடிப்படையில் 1997 டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ நகரில் கூடிய உலக நாடுகள் இதற்கான முதற்கட்ட செயல்திட்டத்தை விவாதித்து முடிவெடுத்தன. 1997 டிசம்பர் 11-இல் வெளியிடப்பட்ட ‘கியோட்டோ அறிக்கை’ உலக நாடுகள் குறைக்க வேண்டிய பசுமை இல்ல வாயுக்களின் அளவை வரையறுத்தது. 1990 ஆம் ஆண்டில் புவியைச் சுற்றி வளிமண்டலத்தில் இருந்த பசுமை இல்ல வாயுக்களின் அளவிலிருந்து 5.2 விழுக்காடு 2012ஆம் ஆண்டுக்குள் குறைத்துக் கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு சராசரி வரம்பு விதிக்கப்பட்டது.

ஆயினும், இதில் ஒவ்வொரு நாடும் குறைத்துக் கொள்ள வேண்டிய அளவுகள் வெவ்வேறாக அறிவிக்கப்பட்டன. வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற மாசுபடுத்துவதில் முன்னணிப் பங்கு வகிக்கும் நாடுகளுக்குக் குறைக்க வேண்டிய அளவு அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது தான் திட்டமிட்டபடி 2012ஆம் ஆண்டுக்குள் 5.2 விழுக்காட்டு அளவிற்கு பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முடியும்.

கியோட்டோ முடிவை அமெரிக்க வல்லரசு கட்டுப்படுத்தும் விதியாக(Binding Clause) ஏற்க மறுத்தது. அதன் வற்புறுத்தலுக்கு இணங்க கியோட்டோ முடிவு வெறும் அறிக்கை(Protocol) வடிவில் ஏற்கப்பட்டது. வரம்பு ஆண்டு (2012) முடிவதற்கு முன்பாகவே அடுத்தக் கட்டம் நிறைவேற்ற வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து உரிய கால அவகாசத்தோடு பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.

அதனடிப்படையில் இந்தோனேசியா பாலித் தீவில் 2007 டிசம்பரில் உயர்மட்ட உலக மாநாடு நடைபெற்று அடுத்தக் கட்ட செயல்திட்டத்தை இறுதி செய்வதற்கான கால அட்டவணை முடிவு செய்யப்பட்டது. 2013 தொடங்கி 2020 வரை நிறைவேற்ற வேண்டிய அடுத்தத் தவணை பசுமை இல்ல வாயுக் குறைப்பு குறித்து 2009க்குள் முடிவு செய்ய வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கேற்ப 2009 டிசம்பர் 7 முதல் 18 வரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு பலமாதங்களுக்கு முன்பாகவே தனது வரைவுத் திட்டத்தை முன் வைத்து விட்டது. சுமார் 180 பக்க இந்த வரைவின் மீது பல்வேறு கட்டங்களாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் முதன்மை நாடுகளின் பேராளர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன.

இந்த வரிசையில் கடைசிக் கட்டமாக 2009 அக்டோபர் 9-இல் பேங்காக்கில் முடிவடைந்த கலந்தாய்வு கூட்ட நடவடிக்கை கோபன்ஹேகனில் உருப்படியான முடிவு ஒன்றும் எட்டப்பட வாய்ப்பில்லை என்பதை எடுத்துக் காட்டியது. கியோட்டோ அறிக்கையை அடிப்படை அளவீடாகக் கொண்டு அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என்று அமெரிக்க பேராளர் குழுவின் தலைவர் ஜொனாதன் பெர்சிங் பிடிவாதமாகக் கூறினார்.

கியோட்டோ அறிக்கை புவியின் காற்று மண்டலத்தில் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமஅளவு உரிமையுண்டு என்று அறிவித்திருந்தது. எனவே, தனிநபர் மாசுபாட்டு அளவு(Per Capita Pollution) என்பதை மாசுபாட்டு குறைப்பைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை அலகாக எடுத்துக் கொண்டது.

இந்தக் கோட்பாட்டை இப்போது அமெரிக்க வல்லரசு ஏற்க மறுக்கிறது. உலகில் மக்கள் தொகை மிகுந்த சீனாவையும் இந்தியாவையும் விட காற்று மண்டலத்தை அதிகம் மாசுபடுத்தியது ஒப்பீட்டளவில் மக்கள் தொகைக் குறைவான அமெரிக்கா தான். எனவே, அதன் தனிநபர் மாசுபாட்டு அளவு இந்நாடுகளை விட பன்மடங்கு அதிகம். அதற்கு ஏற்ப மாசுபாட்டு அளவை 1990ஆம் ஆண்டை ஒப்பிட குறைந்தது 40 விழுக்காடு அளவுக்கு 2020க்குள் அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
இது அமெரிக்க பகாசுர முதலாளிகளின் கொள்ளை இலாபத்தில் சிராய்ப்பை ஏற்படுத்தும். வெறித்தனமான அமெரிக்கர்களின் நுகர்வில் சற்று குறைவை ஏற்படுத்தும். இதனால் தான் அமெரிக்க அரசு இதனை ஏற்க மறுக்கிறது.

இன்னொன்று, மாசுபாட்டைக் குறைப்பதில் “பொது நோக்கு - வேறுபட்ட பொறுப்பு” (Common but differential responsibilities) என்ற கோட்பாட்டை கியோட்டோ வரையறுத்திருந்தது. இப்போது இந்த பொறுப்பையும் அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. உலகு தழுவிய பலதரப்பு ஒப்பந்தம்(Multilateral Agreement) பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினையில் சாத்தியமில்லை என்று பேங்காக்கில் இறுதி நாளன்று அமெரிக்கத் தரப்பு அறிவித்தவுடன் ஜி- 77 என்ற வளர்முக நாடுகளின் அணிப் பேராளர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

ஆனால் இதே வல்லரசு தான் வணிகம் என்று வருகிற போது உலக வர்த்தக அமைப்பில் ஒரே சந்தை, ஒரே இடத்தில் பலதரப்பு ஒப்பந்தம் என்று வலியுறுத்துகிறது. கொள் என்றால் வாய்ப் பிளக்கும்; கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் குதிரை இது.

“அந்தந்த நாடுகளும் தங்களால் எந்தளவு பசுமை இல்ல வாயுக்களை தங்கள் சொந்த முயற்சியில் குறைத்துக் கொள்ள முடியும் என்று முடிவு செய்துவிட்டு, அவற்றின் தொகுப்பாக பசுமை இல்ல வாயுக் குறைப்பு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்” என்று அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் பெர்சிங் அறிவித்தார். சென்ற ஆண்டு வரை பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதில், பசுமை மின்னாற்றல் பயன்பாட்டில்(அனல் மின்சாரம் அல்லாத காற்றாலை மின்சாரம், கடலலை மின்சாரம், கதிரவன் மின்சாரம் போன்றவற்றில்) முன்னோடியாக இருக்கப் போவதாக அறிவித்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பேங்காக் பேச்சுவார்த்தையில் பின்வாங்கத் தொடங்கின.

உண்மையில் அமெரிக்க - ஐரோப்பிய சதி முன்னமேயே தயாராகிவிட்டது. கடந்த மே மாதம் பருவநிலை பேச்சு வார்த்தைக்கான மாற்று ஆலோசனை என்ற பெயரால் ஆஸ்திரேலிய அரசு முன் வைத்த அறிக்கையிலேயே அக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவிட்டன. ஆஸ்திரேலிய அறிக்கை அதாவது அமெரிக்க - ஐரோப்பிய சதித்திட்டம் கியோட்டோ கோட்பாட்டையே கொல்கிறது.

ஒன்று: பொது நோக்கு - வேறுபட்டப் பொறுப்பு என்ற கோட்பாட்டையே அது கைவிடுகிறது. இவ்வளவு காலம் வரலாற்று வழியில் அதிகம் மாசுபடுத்தியவர்கள் அதிகம் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாயத்தை அது காலில் போட்டு மிதிக்கிறது. மாறாக ஒத்த தன்மையுள்ள உறுதிமொழி (Similar Commitments) எல்லா நாடுகளும் வழங்க வேண்டும் எனக் கோருகிறது. தனிநபர் மாசுபாட்டு அளவு என்பதற்கு பதிலாக இப்போது வெளியாகும் மாசுபாட்டின் அளவு (Actual Emission) என்பதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. அண்மைக் காலமாக தொழில் வளர்ச்சியில் முன்னிற்கும் சீனாவையும் இந்தியாவையும் பிரேசிலையும் குறி வைத்தே இந்த நிபந்தனையை இத்திட்டம் முன் வைக்கிறது.

கிட்டத்தட்ட அமெரிக்காவின் அளவிற்கே பிற நாடுகளின் மாசுபாட்டுக் குறைப்புக் கடமையும் வரையறுக்கப்படும் அல்லது பிற நாடுகளின் அளவிற்கே அமெரிக்காவின் பொறுப்பும் குறைவாக இருக்கும்.

இரண்டாவதாக, அந்தந்த நாடுகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அந்த செயல் திட்டத்தை பேச்சு வார்த்தையில் தமது தரப்பு முயற்சியாக முன் வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அறிக்கைக் கூறுகிறது. வளர்முக நாடுகள் மாசுபாட்டுக் குறைப்பு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்க வேண்டுமென்று கியோட்டோ கோட்பாடு கூறியது. ஏனெனில், திறந்த பொருளாதாரச் சூழலில் மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கையில் வளர்முக நாடுகள் ஈடுபடும் பொழுது, அவற்றின் உற்பத்திச் செலவு கூடி சந்தைப் போட்டியில் நசுக்கப்படும் ஆபத்து உண்டு.

எனவே தான் பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் மாசு நீக்கல் நடவடிக்கையில் ஏழை நாடுகளுக்கு தொடக்கத்தில் ஆகும் கூடுதல் செலவை தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் நோக்கம். ஆஸ்திரேலியா அறிக்கை இந்த நிதிப் பொறுப்பிலிருந்து அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் விடுவித்து விடுகிறது. அந்தந்த நாடுகளும் சொந்த செலவிலேயே இம்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதற்கேற்ப அமெரிக்க அரசு கெர்ரி - பாக்ஸர் மசோதா என்ற ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் கெர்ரி - பார்பரா பாக்ஸர் ஆகியோர் பெயரால் முன் மொழியப்படுவதால் இம்மசோதா விற்கு இந்தப் பெயர்.

இதன்படி அமெரிக்கா 2020ஆம் ஆண்டுக்குள் ஏழு விழுக்காடு அளவிற்கே பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை குறைத்துக் கொண்டால் போதுமானது. கோபன்ஹேகன் மாநாட்டுக்கான பேங்காக் வரைவு அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு 40 விழுக்காடு என்று கோரியது. இதனுடன் கெர்ரி - பாக்ஸர் குறிப்பிடும் அளவை ஒப்பிட்டால் அமெரிக்கா எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது என்பது தெளிவாகும்.

மூன்றாவது, இவ்வாறு மனம் போன போக்கில் ஒவ்வொரு நாடும் பசுமை இல்ல வாயுக்களின் குறைப்பை முடிவு செய்து விட்டு, அவற்றின் கூட்டுத் தொகையாக ஒரு பொது முடிவை வரையறுப்பது என்பது வெறும் சந்தைக் கூச்சலுக்கே இட்டுச் செல்லும். அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ள அபாய அறிவிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு இடையூறில்லாத தன்னிச்சையான அளவுகள் முடிவு செய்யப்படுவது புவிவெப்பமாதலைக் குறைப்பதற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

ஏகாதிபத்திய நாடுகளின் தன்னலத் திட்டத்திற்கு பேங்காக் பேச்சுவார்த்தையின் போது திடீரென்று இந்திய அரசு ஆதரவளித்தது. அதுவரை ஜி-77 என்ற வளர்முக - ஏழை நாடுகளின் அணிக்கு தலைமைப் பாத்திரம் வகித்த இந்தியா பேங்காக்கில் அக்டோபர் 9-ஆம் நாள் தலைக்குப்புற விழுந்தது வளர்முக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் பவர்களுக்கு இது வியப்பளிக்காது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசு இப்பேச்சு வார்த்தையில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய உத்தி குறித்து பிரதமருக்கு முன் வைத்த குறிப்பில் இதனை விளக்குகிறார். “இந்தியாவின் நலன்கள் ஜி-20 என்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு பின்னப்பட்டுள்ளதே தவிர ஜி-77 அணியிலுள்ள ஏழை நாடுகளோடு அல்ல. பருவநிலை பேச்சுவார்த்தையில் அமெரிக்கா எந்த அளவு வருகிறதோ அந்தளவில் ஒத்துப் போவதே நமக்கு நல்லது. அமெரிக்காவோடு ஒத்துப் போவது தான் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம் பெறுவதற்கு ஏற்ற உத்தி. கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையில் அதிகம் பேசாமல் அமைதி காப்பதே நல்லது” என்று ஜெய்ராம் ரமேசு கூறுகிறார்.

“புவிவெப்பமாதலைக் குறைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நம் நாட்டுக்குரிய சட்டதிட்டங்களை, வெளி உதவி ஏதுமின்றி நாமே மேற்கொள்வோம். அத்திட்டங்கள் நாம் ஏற்றுக் கொண்ட பசுமை இல்ல வாயுக் குறைப்பை நிறைவேற்றுகிறதா என்பதை உலக நாடுகள் கண்காணித்துக் கொள்ளட்டும்” என்பது ஜெய்ராம் ரமேசு முன்வைத்துள்ளத் திட்டம்.

அமெரிக்க - ஐரோப்பிய சதி அடிப்படையிலான ஆஸ்திரேலிய அறிக்கைக் கூறுவதும் இது தான். பருவநிலை பேச்சு வார்த்தை யை இயற்கை அறிவியல் என்ற அடிப்படையிலிருந்து மாற்றி அரசியல் ஆதிக்கப் பகிர்வு என்பதோடு முடிச்சுப் போடுகிறார் ரமேசு.

அணு ஒப்பந்தத்தை போலவே பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தையும் அமெரிக்காவின் கண்காணிப்புக்கும், கட்டுத் திட்டங்களுக்கும் உட்பட்ட இளைய பங்காளியாக இந்தியாவை நிலை நிறுத்த இந்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. உண்மையில் ஜி-77 நாடுகளின் எதிர்ப்பை மீறி ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவால் வர முடியாது.
இது ஜெய்ராம் ரமேசுக்கோ மன்மோகன் சிங்கிற்கோ தெரியாததல்ல. இந்திய மக்களில் சிலரிடம் குடிகொண்டுள்ள வல்லரசுக் கனவைப் பயன்படுத்திக் கொண்டு எல்லா நிலையிலும் இந்தியாவை அமெரிக்காவின் ஓடும் பிள்ளையாக மாற்றுவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே இது.

தனது இத்திட்டத்தை கோபன் ஹேகனில் நவம்பர் 6, 7 நாட்களில் நடைபெற்ற அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பு கருத்தாக வெளிப்படையாக ஜெய்ராம் ரமேசு அறிவித்தார். அவ்வாறு அறிவிப்பதற்கு முன்னால் இந்தியத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவிடம் அவர் கலந்து கொள்ள இல்லை. அதிர்ச்சியடைந்த சிலர் இந்தியாவின் இம்முடிவு வளர்முக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி விடாதா என்று கேட்ட போது “தனிமைப்படுவதைப் பற்றிக் கவலையில்லை. இன்றுள்ள சூழலில் யாருடன் அணி சேர வேண்டுமோ அவர்களோடு இருந்தால் போதும்” என்று தடித்தனமாக பதிலுரைத்தார் ஜெய்ராம் ரமேசு.

இந்திய அரசின் இம்முடிவு கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையை பயனற்றதாக மாற்றிவிடும். புவிவெப்பமாதல் - அதனால் உருவாகும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை உலகு தழுவி எளிய மக்களுக்கு பேரழிவை உண்டாக்கவல்லவை. நீண்ட கடற்கரையும், பருவமழையை நம்பியிருக்கும் பாசன முறையும் உள்ள தமிழ்நாட்டிற்கு பெரும் கேட்டை உருவாக்கக் கூடியவை.

இந்தியாவை தெற்காசியாவின் இராணுவ வல்லரசாக மாற்றுவதற்கு தமிழ்நாட்டையும், இந்தியா முழுவதுமுள்ள எளிய மக்களையும் பலியிடுவதற்கு இந்திய அரசு அணியமாக இருக்கிறது என்பதற்கு கோபன்ஹேகனில் இந்திய அரசின் அணுகும் முறை மேலும் ஒரு எடுத்துக்காட்டு. அறிவியலாளர்களும், படித்த இளைஞர்களும் முக்கியமான இச்சிக்கல் குறித்து விழிப்படைந்து அமெரிக்க - இந்திய வல்லாதிக்க கூட்டணியின் சதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

(தமிழ்த் தேசத் தமிழர் கண்னோட்டம் டிசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்:

குற்றவாளிக்கூண்டில் நீதிபதிகள்

கடைசியில் பொதுமக்களின் கருத்துக்கு தலைமை நீதிபதி பணிந்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தானும் பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் சொத்துக் கணக்குகளை மக்கள் அறியும்படி வெளிப்படுத்த முன்வருவதாக 26.08.09 அன்று அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் அறியும்படி வெளியிட வேண்டும் என அறிவித்தது. கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையிலும் நீதித்துறையில் ஊழல் பெருத்து வருவதை மக்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய கே.என்.சிங், ஏ.எஸ்.ஆனந்த், எம்.எம்.பூஞ்சி, ஒய்.கே.சபர்வால் ஆகியோர் மீது வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, வினாயகா மிசன் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஒரு வழக்கில் முன் பிணை வழங்குமாறு தில்லி அமைச்சர் ஒருவர் நிர்பந்தம் செய்வதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். நீதிபதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான உறவு இல்லாமல் இது நடக்க முடியாது. ஏதோ காரணத்துக்காக அவர்களுக்குள் விரிசல் வரும் போது அது வெளிப்படுகிறது.

நீதிபதி பி.டி.தினகரன் ஏழை தலித்துகளுக்கு சேர வேண்டிய அரசுப் புறம்போக்கை வளைத்துப் போட்டது அம்பலமாகியுள்ளது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதோ, குற்றவியல் வழக்குத் தொடுப்பதோ மிக மிக அரிதாகவே நடக்க முடியும். இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ள தடுப்புச் சுவர் அத்தகையது.

எனவே, தகவல் அறியும் உரிமை சட்டப்படி உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக வலுவாக எழுந்துள்ளது. இதற்கேற்ப நடுவண் தகவல் ஆணையம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சொத்துக் கணக்குகளை வெளியிடுமாறு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

அவ்வழக்கில் தான் நாம் தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உயர்நிலை நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகின்றார்.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சைலேந்திரக் குமார் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் கடந்த 20, 21.08.09 நாட்களில் விரிவான கட்டுரை எழுதினார். உயர்நிலை நீதிபதிகள் ஐயத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தங்களது சொத்து விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் இணையத்தளங்களில் வெளியிட வேண்டும் என்ற வாதங்களை எடுத்துரைத்தார்.

இச்சிக்கலில் அனைத்து நீதிபதிகள் சார்பில் கருத்துக் கூற தலைமை நீதிபதிக்கு உரிமை இல்லை என அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார். இதற்கடுத்த நாள், பஞ்சாப், அலீஜீயானா உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன், தமது குடும்ப சொத்து விவரங்களை “நீதித்துறையின் கடமைப்பாடு மற்றும் சீர்திருத்தம் குறித்த மன்றம்” என்ற அமைப்புக்கு அனுப்பிவிட்டு, அதன் நகலை இணையதளங்களிலும் வெளியிட்டார்.

முதலில் சைலேந்திர குமாரின் கட்டுரையை எரிச்சலோடு விமர்சித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இது கீழ்த்தரமான விளம்பர உத்தி என்று சாடினார். நீதிபதி கண்ணன் சொத்துக் கணக்குகளை வெளியிட்டதால் தங்களுக்கு தர்ம சங்கடம் ஏதுமில்லை என்று மழுப்பினார். ஆயினும், சைலேந்திரக் குமாரின் கருத்துக்கும் கண்ணனின் செயலுக்கும் மக்களிடையே பெருத்த ஆதரவு எழுந்தது. கே.ஜி.பாலகிருஷ்ணன் நீதித்துறை ஊழலை மறைக்க விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டு வலுத்தது.

இந்த மக்கள் கருத்துகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, “உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்குகளை உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடுவதென ஒருமித்து முடிவு செய்திருக்கிறோம்” என்று வேறு வழியின்றி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவிக்க வேண்டியதாயிற்று.

ஆயினும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படுவதும், இவர்கள் அரசு ஊழியர்கள் என்ற வரையறுப்பின் கீழ் கொணரப்படுவதும் அவசியமானது. அதே போல், நீதிபதிகளின் நியமனம், குற்ற விசாரணை, நீக்கம் ஆகியவற்றில் அதிகாரம் கொண்ட நீதித்துறை ஆணையம் நிறுவப்படுவதும் தேவையானது. இது முன்னாள் நீதிபதிகள் மற்றும் நாடாளுமன்றத்தாலும், மனித உரிமை அமைப்புகளாலும், நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட நிரந்தர அமைப்பாக அமைய வேண்டும். இது தேர்தல் ஆணையம் போல் அரசமைப்பு சட்டத்தால் நிறுவப்படும் அமைப்பாகத் திகழ வேண்டும். (இச்சிக்கல் குறித்த விரிவான விவாதத்திற்கு காண்க: புதிய தமிழர் கண்ணோட்டம் சனவரி 2009.)

0 கருத்துகள்:

காவிரி உரிமையைக் கைவிட திரைமறைவு சதி


தமிழகத்தின் காவிரி உரிமையைக் காவு கொடுப்பதற்குத் திரைமறைவு சதி வேலைகள் நடக்கின்றன. அண்மையில் நடைபெற்ற மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்தால் இந்த ஐயத்திற்கான வலுவான அடிப்படை தெளிவாகும்.

1. கடந்த 28.7.09 அன்று தஞ்சையில் நடைபெற்ற ‘காவிரிக்குடும்பம்” கூட்டம்.

2. திருவள்ளுவர் சிலை திறப்பு, சர்வக்ஞர் சிலை திறப்பு

3. 17.8.09 அன்று சென்னையில் நடந்த காவிரி மாநிலங்கள் மின் திட்டப் பேச்சு வார்த்தை ஆகிய மூன்று நிகழ்வுகளே அவை.

காவிரிக் குடும்பம் கூட்டம்

தமிழின உரிமைகளுக்கு எதிராகவே சிந்தித்து, செயல்பட்டுப் பழகிப்போன ‘இந்து” என்.ராம் ஏற்பாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது தான் “காவிரிக்குடும்பம்” என்ற அமைப்பு. இதன் ஒருங்கிணைப்பாளர் ஜனகராஜ் என்ற ஆய்வாளர். இவர் “சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்”தில் பணியாற்றுகிறவர். இதில் மன்னார்குடி ரெங்கநாதன் தலைமையில் அவர் கருத்துக்கு இசைவான சில “விவசாயிகள் சங்கங்கள்” தமிழகப் பேராளர்கள் என்ற பெயரில் இடம் பெற்றன. புட்டண்ணய்யா என்பவர் தலைமையில் ‘கர்நாடகத் தரப்பு” என்ற பெயரால் சில ‘விவசாயிகள் சங்கங்கள்” இடம்பெற்றன.

இது கர்நாடகத்திற்குச் சார்பாக நடந்து கொண்டு காவிரி நீர் உரிமையைப் கைவிடவும், கிடைத்ததைக் கையேந்திப் பெற்றுக் கொள்ளவும் தமிழ்நாட்டு உழவர்கள் ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்ற தோற்றம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சர் கருணாநிதி எப்போதெல்லாம் காவிரி உரிமையைப் பலியிட விரும்புகிறாரோ அப்போதெல்லாம், அதற்கு காவிரிப் பாசன விவசாயிகள் ஒப்புதல் தந்துவிட்டதாகக் காட்டுவதற்கு இந்தக் காவிரிக்குடும்பத்தையும், மன்னார்குடி ரெங்கநாதனையும் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை.

ஒவ்வொரு முறையும் இவ்வாறான முயற்சி நடக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தக்க முறையில் தலையிட்டு, எதிர்ப்பைக் காட்டி முடிந்தவரை இந்தத் துரோகத்தைத் தடுத்து வருகிறது. இந்த முறை 28.7.09 அன்று தஞ்சையில் நடைபெற்றது

“காவிரிக்குடும்பத்”தின் பன்னி ரெண்டாவது கூட்டம். இக்கூட்டத்தின் அடிப்படை நோக்கமே காவிரித் தீர்ப்பாயத்தின் (நடுவர் மன்றத்தின்) இறுதித் தீர்ப்புக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கைத் தமிழக அரசுத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான். இது மிகவும் ஆபத்தானது.

ஏனெனில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் படுபாதகமானது; சட்ட விரோதமானது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது சரியானது. காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பதை விடவும் (389 டி.எம்.சி.), 1972ஆம் ஆண்டு நடுவண் அரசு நியமித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை விடவும் (378 டி.எம்.சி.), நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை விடவும் (215 டி.எம்.சி.) காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. என்பது மிகமிகக் குறைவானது.

இதிலும் சுற்றுச்சூழல் சேதத்துக்கு 10 டி.எம்.சி., கடலில் கலப்பதற்கு 4 டி.எம்.சி., கழிக்கப்பட்டு 178 டி.எம்.சி;. தான் தமிழகத்தின் பங்கு என அத்தீர்ப்பு அறிவித்தது. இது காரைக்காலுக்குத் தர வேண்டிய 7 டி.எம்.சியையும் உள்ளடக்கியது ஆகும். தவிரவும், நடுவர் மன்றம் தனக்கு விதிக்கப்பட்ட விசாரணை வரம்பை மீறி தீர்ப்புரைத்துள்ளதால் இறுதித்தீர்ப்பு சட்ட விரோதமானதாகும்.

இந்திய அரசு 1990ஆம் ஆண்டு காவிரித் தீர்ப்பாயத்தை அமைத்த போது அதன்முன் இரண்டு கேள்விகளை விசாரணைக்கு வைத்தது.

1. கர்நாடக அரசு ஹேமாவதி, இலட்சுமண தீர்த்தம், சுவர்ணவதி, கபினி ஆகிய காவிரியின் துணை ஆறுகளில் அணை கட்டியிருப்பது 1892 மற்றும் 1924ஆம் ஆண்டுகளின் காவிரி ஒப்பந்தத்தை மீறிய செயலா? இவ்வணைகள் கட்டியதால் தமிழகத்தின் காவிரிப் பாசன ஆயக்கட்டுதாரர்களின் பாசன உரிமை பாதிக்கப்பட்டுள்ளதா?

2. காவிரி நீரைப் பயன்படுத்துவது, பங்கிட்டுக் கொள்வது, கட்டுப்படுத்துவது தொடர்பானவற்றில் இந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளனவா? இது தான் காவிரி நடுவர் மன்றத்தின்(தீர்ப்பாயத்தின்) விசாரணை வரம்பு.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை காவிரி இறுதித் தீர்ப்பு தெளிவாகத் தெரிவிக்கவில்லை. மாறாக, விசாரணை வரம்பை மீறி, 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் இந்த இறுதித் தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்படுகின்றன(Supersede) என அறிவித்தது. காவிரி ஒப்பந்தங்கள் செல்லுமா செல்லாதா என்பதோ அவை நீடிக்கலாமா, கூடாதா என்பதோ இம்மன்றத்தின் விசாரணைக்கு வைக்கப்படவில்லை. இந்நடுவர் மன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது அது.

எனவே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு சட்ட விரோதமானது. இத்தீர்ப்பை எதிர்த்து த.தே.பொ.க.வும், தமிழக உழவர் முன்னணியும் போராட்டங்கள் நடத்தின. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இத்தீர்ப்பை சட்ட விரோதமானது என அறிவிக்கச் செய்து, புதிய நடுவர் மன்றம் அமைக்க ஆணை கோர வேண்டும் என வலியுறுத்தின. அதுவரை இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி. தண்ணீர் பெற அதிகாரிகள் மட்டத்திலான, அதிகாரமுள்ள ஆணையம் அமைக்கப் பெற வேண்டும் எனக் கோரின. முதலில் தீர்ப்பை வரவேற்று, விழா கொண்டாடிய தமிழக அரசு, பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழகத்திற்கு மிகப் பாதிப்பான, கர்நாடகத்திற்கு மிகமிகச் சாதகமான இத்தீர்ப்பிலும் கர்நாடகம் நிறைவு அடையவில்லை. அம்மாநில அரசும் உச்சநீதிமன்றத்தை அணுகியது.

இந்நிலையில் கர்நாடகத்தின் அழுத்தத்திற்கேற்ப இன்னும் குறைத்துக் கொண்டு, எப்படியோ ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு வழியேற்படுத்துவது, அதற்கு வாய்ப்பாக உச்சநீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெற வைப்பது என்பதே காவிரிக் குடும்பத்தின் முயற்சி. தஞ்சைக் கூட்டத்திற்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற காவிரிக் குடும்பக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜனகராஜ் முன் வைத்த யோசனை இதனை உறுதி செய்கிறது.

இதன்படி தமிழகம் தனது பங்கை இறுதித் தீர்ப்பின் அளவிலிருந்து இன்னும் 19 டி.எம்.சி. குறைத்துக் கொண்டு 173 டி.எம்.சி. பெற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டும். இது காரைக்காலுக்கு கொடுக்க வேண்டிய பங்கீட்டையும் சேர்த்தது. கர்நாடகத்திற்கு ஏற்கெனவே இறுதித் தீர்ப்பு அள்ளிக் கொடுத்த 270 டி.எம்.சி.க்கு மேல் இன்னும் 19 டி.எம்.சி. கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதும் ஜனகராஜ் யோசனை. வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே மையமான கோரிக்கை.

ஆயினும் இக்கூட்டம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக காவிரிக் குடும்பத்தில் தமிழகத்திலிருந்து இடம் பெற்றிருந்த சில சங்கங்கள் அவ்வமைப்பிலிருந்து வெளியேறின. வழக்கைத் திரும்பப் பெற வைப்பதே இக்கூட்டங்களின் மைய நோக்கமாக உள்ளது. காவிரியில் தமிழக உரிமையைப் பலியிட புதிய புதிய கணக்குகள் முன் வைக்கப்படுகின்றன என்று இந்த விவசாயிகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. இக்குடும்பத்தில் இடம்பெற்றுள்ள கர்நாடகத் தரப்புத்
தலைவர் புட்டண்ணய்யா தமிழகத்திற்கு ஒரு சொட்டுக் காவிரி நீரும் தரமாட்டோம் என்று அறிக்கை கொடுத்துவிட்டு இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதன் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பின.

இந்நிலையில் தஞ்சையில் ஒரு தனியார் விடுதியில் சூலை 28 அன்று காவிரிக் குடும்பக் கூட்டம் நடைபெற்ற போது, அவ்விடுதிக்கு வெளியே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமையை பலியிட நடக்கும் சதிக்கூட்டம் என்பதை விளக்கி நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கூட்டத்தின் உள்ளே புகுந்து தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். மீண்டும் கர்நாடகத்தில் பேசுவதாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

சிலை திறப்பு விழாக்கள்

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய நிகழ்வு சிலை திறப்பு விழாக்கள். பெங்களூரில் அல்சூர் எரிக்கரையில் கடந்த 13 ஆண்டுகளாகக் கோணிப்பையில் மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை 9.8.09 அன்று திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் தமிழ்ச் சங்கம் அம்மாநில அரசின் இசைவோடு கட்டிய அச்சிலை, திறப்பு விழாவுக்கு நாள் எல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னட வெறி அமைப்புகளின் எதிர்ப்பால் கடைசி நேரத்தில் விழா நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு வந்துள்ள எடியூரப்பா சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து இது குறித்துப் பேசினார்.

இதற்கு முன்பே சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடகத்திலிருந்து ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் என்பவரது சிலையை சென்னையில் திறப்பதற்கு ஏற்றுக் கொண்டால், பெங்களூர் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளும் என்பதே அந்த ஏற்பாடு.

பிணைக் கைதி விடுதலைக்கு சில நிபந்தனையை ஏற்பது போல, இதுவரை இல்லாத ஒருவர் சிலையை சென்னையில் நிறுவ தமிழக அரசு ஒத்துக் கொண்டது. ஆசான் திருவள்ளுவரையும், தமிழினத்தையும் இழிவுபடுத்தும் செயல் இது. இழிவுபடுத்தும் இந்நிபந்தனையை ஏற்று, பெங்களூர் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதைவிட, அச்சிலை கோணிப்பைக்குள் முடங்கிக் கிடப்பதே மேல் என தமிழின உணர்வாளர்கள் கூறியதைத் தி.மு.க. அரசு ஏற்கவில்லை.

மாறாக இந்த இனஇழிவையே சாதனையாகப் பறைசாற்றியது. இதன்படி 9.8.09 அன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. 13.8.09 அன்று சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா நடந்தது. இரு விழாக்களிலும் இரண்டு முதலமைச்சர்களும் பங்கு பெற்றனர்.

சிலை திறப்புகள் மூலம் இரு மாநிலங்களுக்குமிடையே நல்லிணக்கம் மலர்ந்து விட்டதாக இரண்டு முதலமைச்சர்களும் அறிவித்தனர். சென்னை விழாவில் பேசிய எடியூரப்பா தன்னை ‘தம்பி’ என்றும், கலைஞரை ‘அண்ணன்’ என்றும் வர்ணித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒகேனக்கல் சிக்கலை ஒட்டி எடியூரப்பாவை ‘இடையூறப்பா’ எனக் கேலி பேசிய கருணாநிதி, அவ்விழாவில் ‘இணைக்கம் ஏற்படுத்திய தம்பி’ எனப் புகழ்ந்து பேசினார்.

இனிக்க இனிக்கப் பேசினாலும் எடியூரப்பா காரியத்தில் மட்டும் கண்ணாக இருந்தார். காவிரி, ஒகேனக்கல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார். இதில் தான் அவரது நயவஞ்சகம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் கர்நாடகத்துடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒகேனக்கல் இருப்பது கர்நாடகத்திலிருந்து 17 கிலோ மீட்டர் இப்பால் தமிழக எல்லைக்குள். அங்கு ஓடுகிற தண்ணீர் தமிழகத்திற்கு உரியது. அதில் குடிநீர்த்திட்டம் செயல்படுத்துவதற்கு கர்நாடகத்தின் ஒப்புதல் பெறத் தேவையில்லை.

எனவே இது குறித்து கர்நாடகத்துடன் பேசுவதற்கு எதுவும் இல்லை. ‘ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் குறித்துப் பேசலாம்’ என்று சொல்வதன் மூலம் இத்திட்டத்தைத் தகராறுக்குரிய ஒன்றாக (Disputed Project) நிலைநிறுத்துகிறார் எடியூரப்பா.

ஏற்கெனவே இவரது அரசு ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்குக் கடன்நிதி வழங்கும் ஜப்பான் வங்கியிடம் அதிகாரப்பூர்வமான எதிர்ப்புக் கடிதம் கொடுத்து விட்டது. இதே எடியூரப்பா தான் ஒகேனக்கல் “மாரி கொட்டாய்” பகுதி வரை அத்துமீறி வந்து “ஒகேனக்கல் மலையும், மண்ணும், அங்கு ஓடிவரும் காவிரி நீரும் எங்களதே” என்று கன்னட வெறிக் கூச்சல் போட்டவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

அதே போல் ‘காவிரி குறித்துப் பேசலாம்’ என்று கூறுவதும் கர்நாடகத்தின் வழக்கமான நயவஞ்சக உத்தி என்பதை வரலாறு மெய்ப்பிக்கிறது. புதிய புதிய நீர் நிலைகளை உருவாக்கி, அவற்றில் மொத்தக் காவிரி நீரையும் தேக்கி வைக்கும் சட்ட விரோதச் செயலுக்கு கால அவகாசம் பெற்றுக் கொள்ளும் உத்தியே அது. விழாவுக்கு முன்பு எடியூரப்பா சென்ற இடம் சென்னை ‘இந்து’ ஏட்டு அலுவலகம். அங்கு ‘காவிரிக்குடும்ப’ சூத்திரதாரி என்.ராமைச் சந்தித்து விட்டுதான் எடியூரப்பா வந்தார்.

“இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் காவிரி நீர்ப் பங்கீடு குறித்து பேச வேண்டும் என்கிறீர்களே” எனச் செய்தியாளர்கள் கேட்டனர். “இத்தீர்ப்பு குறித்து கர்நாடகத்தின் நிலைப்பாடு நீங்கள் அறிந்தது தான். எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொள்வது தான் சிறந்த வழி. அதற்கான இணைக்க சூழலை ஏற்படுத்தவே விரும்புகிறோம்” என்றார் எடியூரப்பா.

இதன் பொருள் என்ன? இறுதித் தீர்ப்புக்கும் குறைவாக ஏதேனும் பேச வேண்டும் என்பது தானே! எடியூரப்பாவின் இந்த விருப்பத்தை செயல்படுத்தும் முயற்சிதான் காவிரிக்குடும்பத்தின் கூட்டம்.

தமிழகத்திற்கு எதிரான எடியூரப்பாவின் இந்த நயவஞ்சக நச்சுரைக்கு தமிழக முதலமைச்சர் மறுப்பேதும் சொல்லவில்லை. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான சுமூக நிலை ஏற்பட்டுள்ளது என்பதாகவே வளைத்து வளைத்து கருணாநிதியும் பேசினார். ஆட்டக்களத்தில் எதிரெதிராக நிற்கும் இரண்டு அணிகளும் ஒரே இடத்தில் ‘கோல்’ போடும் விசித்திரமான கால்பந்தாட்டமாக காவிரிச் சிக்கல் உள்ளது. தமிழ்நாட்டு உரிமைக்காகப் பேச எந்த அரசும் இல்லை. ‘இணக்கம்’ பற்றி எடியூரப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது அரசின் பாசன அமைச்சரும், அதிகாரிகளும் கர்நாடக அணைகள் நிரம்பினால் தான் உபரிநீரைத் தமிழகத்திற்கு விட முடியும் என்று அறிக்கை விடுகின்றார்கள். வழிந்து வரும் நீரை ஏந்திக் கொள்ளும் வடிகாலாகவே தமிழகம் திகழ்கிறது. மின்திட்டப் பேச்சுவார்த்தை சென்னை செய்தியாளர்களிடம் இன்னொன்றையும் சொன்னார் எடியூரப்பா.

“கர்நாடகத்தில் மேற்கொள்ள வேண்டிய சிவசமுத்திரம் நீர் மின்சாரத் திட்டத்திற்கு தமிழக அரசு எழுப்பியுள்ள ஆட்சேபணையை விலக்கிக் கொள்ள வேண்டும். அத்திட்டத்தை உச்சநீதிமன்றக் காவிரி வழக்கிலிருந்து வெளியே எடுத்து விட அனுமதிக்க வேண்டும்” என்பதே அது. இதையே கருணாநிதியிடமும் வலியுறுத்தினார். இந்த சூழ்நிலையில் காவிரி மாநில மின்திட்டப் பேச்சுவார்த்தை 17.8.09 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்திய அரசின் தேசிய நீர்மின் கழகம் காவிரி நீரைக் கொண்டு கர்நாடகத்தில் சிவ சமுத்திரம் மின் திட்டம் மூலம் 270 மெகாவாட், மேகதாது மின்திட்டம் மூலம் 400 மெ.வா., தமிழ்நாட்டில் ராதிமணல் திட்டம் மூலம் 360 மெ.வா., ஒகேனக்கல் திட்டம் மூலம் 120 மெ.வா., மின்சாரம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றுள் சிவசமுத்திரம் மின்திட்ட வரைவு மட்டும் கிட்டத்தட்ட நிறைவு நிலையில் உள்ளது.

இத்திட்டத்திற்கு இந்திய அரசு தொடர்பான அனைத்துத் துறைகளின் இசைவும் வழங்கப்பட்டுவிட்டது. பிற திட்டங்களின் வரைவெல்லாம் தொடக்க நிலையில் உள்ளன. சிவசமுத்திரம் திட்டத்தைத் தம் பொறுப்பில் நிறைவேற்ற விரும்பும் கர்நாடக அரசு, இது குறித்து எதிர்ப்பைத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 17இல் நடைபெற்ற இந்தக் கூட்டத்திலும் கர்நாடகத்தின் எரிசக்தித்துறைச் செயலாளர் கே.ஜெய்ராஜ் இதனையே வலியுறுத்தினார். கர்நாடக அரசின் இந்நிலைப்பாட்டுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இந்திய அரசின் மின்கழகக் கட்டுப்பாட்டில் இந்நீர்மின் உற்பத்தி நடந்தால், அதில் பிற தென் மாநிலங்களுக்கு பங்கு போகும். தம் பொறுப்பில் அத்திட்டம் விடப்படுமானால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் கர்நாடகத்திற்கே கிடைக்கும். இரண்டாவதாக, கர்நாடகத்தின் பொறுப்பில் இது போய்விட்டால் அதில் கிருஷ்ணராஜ சாகருக்குக் கீழே, மேட்டூருக்கு மேலே நீர் தேக்கிக் கொள்ள இன்னொரு வாய்ப்பு கர்நாடகத்திற்குக் கிடைக்கிறது. அது முழுவதும் கர்நாடக மாநிலக் கட்டுப்பாட்டில் இருந்தால், நாளை நீர்க் கொள்ளளவைக் கூட்டிக் கொண்டே போகலாம்.

ஏற்கெனவே ஒப்பந்தத்தை மீறி ஹேமாவதி, ஹேரங்கி, சுவர்ணாவதி, லெட்சுமணதீர்த்தம், கபினி அணைகளைச் சட்ட விரோதமாக கட்டிய மாநிலம் தானே கர்நாடகம்? சிவசமுத்திரம் மின் திட்டத்திற்காக காவிரி நீரைத் தேக்கிக் கொள்ள அனுமதித்தால் தமிழகத்திற்கு வழிந்து வரும் உபரி நீர் கிடைப்பதும் குறையும்.

நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக சிவசமுத்திரத்தில் கூடுதல் தண்ணீர் எடுக்க மாட்டோம் என்று கர்நாடக அதிகாரி ஜெய்ராஜ் உறுதியெல்லாம் கூறினார். அதே நேரம், அத்திட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கர்நாடகத்தின் வழக்கமான சூழ்ச்சிப் பேச்சுதான் இது. நடுவண் அரசின் தேசிய நீர்மின் கழகம் சார்பில் 4 திட்டங்களும் நிறைவேற்றப்படுமானால் தமிழகத்திற்கு மறுப்பேதும் இல்லை என்று தமிழ்நாட்டின் சார்பில் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறைச் செயலாளர் இராமசுந்தரம் கூறினார்.

இந்த நிலையைத் தெளிவுபடுத்தி தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். சட்ட நிலைமை எதுவாக இருப்பினும், கர்நாடகத் திட்டங்களும், தமிழகத் திட்டங்ளும் சமநிலையில் வைத்துப் பார்க்கத் தக்கன அல்ல. ஏனெனில் ராசிமணலில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதோ, ஒகேனக்கலில் உற்பத்தி செய்வதோ தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் காவிரி நீரிலிருந்துதான். இது கடைமடை மாநிலம். ஆனால், சிவசமுத்திரம், மேகதாதுவில் மின்சாரம் உற்பத்தி செய்வது தமிழகத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்னால் நடப்பதாகும். அங்கு தேக்குவது தான் சிக்கலுக்கு உரியதாகும்.

இந்நிலையில் ராசிமணல், ஒகேனக்கல் நீர் மின்திட்டங்களுக்கு கர்நாடகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது நியாயத்தின் பாற்பட்டதல்ல. இந்திய அரசு கட்டுப்பாட்டில் சார்பில் சிவசமுத்திரம், மேகதாது இருந்தால் தமிழகத்திற்குப் பாதிப்பு வராது என்பது உறுதி இல்லை. ஏனெனில் இந்திய அரசு காவிரிச்சிக்கலில் நடுவு நிலையில் நடந்து கொள்ளவில்லை என்பது தான் வரலாறு.

தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, முதலமைச்சரின் நிலைபாட்டை நியாயப்படுத்தி விட முடியாது. இப்போது சொல்லப்படுகிற நீர்மின் திட்டங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகே செயலுக்கு வர முடியும். அதற்குள் புதிய காவிரி நடுவர் மன்றம் அமைத்து, இறுதித் தீர்ப்பு பெற வழிகாண வேண்டும். அதுவரை முன்னுரிமை என்ற அடிப்படையிலாவது நெய்வேலி மின்சாரத்தை முழுவதுமாகத் தமிழகத்திற்குப் பெற வேண்டும்.

காவிரிச் சிக்கல் தீர்வதற்கு முன்பாக கர்நாடக நீர் மின் திட்டங்களுக்கு இசைவு அளித்தால், காவிரி நீர் கிடைப்பது குறையும். உச்சநீதிமன்ற வழக்கு சீர்குலையும். தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதிப்பை அது ஏற்படுத்தி விடும். காவிரியைக் காக்க விழிப்புணர்வு தேவை தமிழக நீர் மின்திட்டங்களைத் துருப்புச் சீட்டாக வைத்து சிவசமுத்திரம், மேகதாதுத் திட்டங்களுக்கு இசைவு பெறுவது, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, பெங்க;ருக்குக் கூடுதல் குடிநீர் பெற இசைவைப் பெறுவது, திருவள்ளுவர் சிலை மூடப்பட்டுக் கிடப்பதைத் துருப்பாக பயன்படு்த்தி, தொடர்பேதுமற்ற சர்வக்ஞர் சிலையை சென்னையில் திறக்க வைப்பது என்ற கர்நாடகத்தின் திட்டங்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி இணங்கிக் கொண்டே போகிறார்.

இறுதியில் பார்த்தால் இது தமிழகத்தின் காவிரி உரிமையைப் பலியிடும் முயற்சி. இதற்கு காவிரிப் பாசன உழவர்களும் ஒப்புதல் தந்து விட்டார்கள் என்று நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் காட்டுவதற்குக் காவிரிக் குடும்பம். காவிரிப்பாசனப் பகுதியில் விழிப்புணர்வுள்ள, வலுமிக்க உழவர் இயக்கம் இல்லாததும், தமிழகத் தேர்தல் கட்சிகளிடையே காவிரி உரிமை பற்றி அக்கறையோ, தன்னம்பிக்கையோ இல்லாத நிலையும் அரசின் முயற்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழின உணர்வாளர்களும், உரிமை உணர்ச்சி உள்ள உழவரியக்க முன்னோடிகளும் இதில் தீவிர கவனம் செலுத்தினால் இந்த நிலையை விரைவில் மாற்ற முடியும். காவிரி உரிமையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய முன்னணி நடத்திய கல்லணை-நெய்வேலி நடைப்பயணம் கட்சிகடந்து உழவர்களின் -தமிழர்களின் ஆதரவைப் பெற்றது, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தையொட்டி எழுந்த எழுச்சி ஆகியவை நமது நம்பிக்கைக்கு சான்று கூறும் ஆதாரங்கள் ஆகும்.

எனவே காவிரி உரிமையைக் கைவிட மீண்டும் ஒரு முயற்சி, திரைமறைவுச் சதி வேலை நடக்கிறது என்பதை உணர்ந்து உணர்வாளர்களும், உழவர்களும் அணி திரள வேண்டும். இச்சதிச் செயல்களை முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

வேளாண்மையை நசுக்கும் வேளாண்மன்றச் சட்டம்


விளம்பரம் இல்லாமல். விவாதம் இல்லாமல் தமிழக வேளாண்மையை. தமிழ்நாட்டு உழவர்களைக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போவதற்கான சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம். 2009 (Tamil Nadu State Agricultural Council act, 2009) என்பதே அது. தமிழக சட்டமன்றத்தில். 2009 சூன் 23 ஆம் நாள் முன்வைக்கப்பட்டு எந்த விவாதமும் இன்றி இந்தச் சட்ட முன் வழவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு மாநிலத்தில் வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்துவதற்கு வகைசெய்வதற்கான சட்டம் எதுவும் தற்போது இல்லை. எனவே வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்துவதும். இம்மாநிலத்தின் வேளாண்மைத் தொழிலாளர்களை பதிவுசெய்வதும். தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் என அழைக்கப்படும் மன்றம் ஒன்றை அமைத்து உருவாக்குவதும் தேவையானதெனக் கருதப்பட்டுள்ளது. அரசானது இந்நோக்கத்திற்காக சட்டமொன்றை இயற்றுவதென முழவு செய்துள்ளது” என்று இந்த சட்டத்தின் நோக்க காரண விளக்கவுரை கூறுகிறது.

வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்துவது என்ற பெயரால் ”தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்” என்ற அமைப்பை தமிழக அரசு நிறுவுகிறது. (சட்ட விதி 3(1)) இந்த மன்றத்தின் பதிவுச் சான்றிதழ் பெற்றவர் தான் வேளாண்மைத் தொழிலாளற்றுநர்களாக இருக்கலாம் என்று இச்சட்டத்தின் விதி 29 கூறுகிறது.

இவ்வாறு பதிவு பெற்றவர்கள் தாம் வேளாண்மை ஆலோசனையோ. வேளாண்மைப் பணியோ செய்யலாம் என இது நிபந்தனை விதிக்கிறது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வேளாண்மையில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் தாம். அதாவது பி.எஸ்.சி. (அகிரி).(BSc., Agri) போன்ற பட்டம் பெற்றவர்கள் தாம். இவ்வாறு பதிவு பெறத் தகுதியுடையவர்கள் என இச்சட்டம் வரையறுக்கிறது. (விதி 2(4)) பதிவு பெற்றவர்களைத் தவிர பிற யாரும் ”பயிர் வளர்ப்பு,. அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழில்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, செடி வளர்ச்சி முறைப்படுத்தி, களைக்கொல்லிகள், பயிர்காக்கும் பொருள்கள், ஆகியவற்றைப் பொருத்தவரையிலான பரிந்துரை, வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், விதை நேர்த்தி செய்தல், விதை உற்பத்தித் தொழில்நுட்பம், வேளாண்மை உயிரியல் தொழில்நுட்பம்” ஆகிய எதிலும் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிக்கிறது (விதி 29).

மீறி மேற்கண்டவற்றில் ஆலோசனை அல்லது பரிந்துரை வழங்கினால் அது தண்டனைக் குரிய குற்றமாகும். இந்தக் “குற்றத்தை” முதல் முறை செய்தால் ஐந்தாயிரம் ரு:பாய் அபராதம் கட்ட வேண்டும். மீண்டும் அவ்வாறு செய்பவர்களுக்கு ரு.10000 தண்டம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும் (விதி 31).

குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுப்பதற்கு வேளாண்மை மன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. மன்றத்தில் பதிவு பெற்ற வேளாண் பட்டதாரிகளைத் தவிர வேறு யாரும் வேளாண்மை குறித்த ஆலோசனை வழங்கக்கூடாது எனத் தடை விதிப்பதன் உள்நோக்கம் இயற்கை வேளாண்மையைத் தடை செய்வதுதான்.

பசுமைப் புரட்சி என்ற பெயரால் நிலம், நீர், காற்று என எல்லாம் மாசு அடைந்துவிட்டது. பெரு நிறுவனங்களின் இரசாயன உரங்கள். புச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி பயிரிட்டு அந்த செலவுகளுக்கு ஏற்ப விளைபொருள்களுக்கு இலாப விலை கிடைக்காமல் உழவர்கள் கடனாளியாகி வருகின்றனர்.

இது போதாதென்று பன்னாட்டுப் பெருநிறுவனங்கள், மரபீனி மாற்று விதைகளை பரவலாக்கி விதை ஆதிக்கத்தில் கோலொச்சி வருகின்றன. இவற்றிலெல்லாம் சிக்கிச் சீரழிந்த உழவர்களில் பலர் சிக்கனமான ஆரோக்கியமான சுற்றுச் சூழலுக்கு இயைந்த இயற்கை வேளாண்மைக்குத் திரும்பி வருகின்றனர். உரக்கம்பெனிகள், புச்சிக் கொல்லி நிறுவனங்கள், விதை பகாசுரர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திலிருந்து வேளாண்மையைத் தற்காத்துக் கொள்வதற்கு மரவழி நுட்பங்கள் சார்ந்த நீடித்த வேளாண்மை முறை பெரிதும் பயன்படுகிறது மக்களுக்கு நச்சில்லா உணவை இந்தத் தற்கார்பு வேளாண்மை வழங்குகிறது. சுற்றுச் சூழலைக் காக்கிறது.

பல்கலைக் கழகங்களில் இந்த மரபுசார் வேளாண்மை முறை சொல்லித்தரப்படுவதில்லை. வேளாண் பட்டதாரிகள் படிப்பதில் 98 விழுக்காடு இரசாயன வேளாண்மையும், மரபீனி மாற்ற வேளாண்மையும்தான். மேலும் இயற்கை வேளாண்மை நுட்பம் என்பது எல்லா மாநிலத்திற்கும் ஒரே மாதிரியானதல்ல. மாவட்டத்திற்கு மாவட்டம், பகுதிக்குப் பகுதி வேறுபடும். அதன் தனிச் சிறப்பே மண்ணிற்கேற்ற வேளாண்மை என்பதுதான். இவ்வாறான மண்ணின் வேளாண் முறை தெரியாத வேளாண் பட்டதாரிகள் மட்டும் தான் வேளாண் ஆலோசனை வழங்கலாம் என்று வரம்பு கட்டுவதன் வழி தற்சார்பு வேளாண்மையைத் தடை செய்கிறது தமிழக அரசின் வேளாண்மன்றச் சட்டம்.

இந்த மண்ணையும், மண்ணின் உழவர்களையும் நேசிக்கிற மாற்றுத் தொழில்நுட்ப வல்லுனர்களையும். அவர்களது கருத்தை பரப்புகிற ஏடுகளையும், அதற்கு ஏற்பாடு செய்கிற அமைப்புகளையும் குற்றவாளி களாக்குகிறது இச்சட்டம். கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக அமைதியாக ஏற்பட்டு வரும் கருத்தியல் மாற்றத்தை இச்சட்டம் தடை செய்ய முயல்கிறது.

நிரந்தரமாக பெரு முதலாளிகளின் பிடியில் தமிழக உழவர்களைச் சிறை பிடித்து வைப்பதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றைக்கு அரசே ஏற்றுப் பரப்பி வரும் ஒன்றை நாற்று நடவு முறையோ, மண்புழு உரமோ பல்கலைக்கழகங்களின் கண்டு பிடிப்பல்ல. எல்லாம் உழவர்களின் அனுபவ அறிவின் விளைச்சல். ஆடு:ட்டம். அமிர்தக்கரைசல், தேமோர் கரைசல். முலிகைப் புச்சி விரட்டி, நன்மை தரும் புச்சிவளர்ப்பு முதலான தொழில்நுட்பங்கள் எதுவும் ஆராய்ச்சிக் கூட கண்டுபிடிப்பல்ல.

காடுகளை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகளிடமிருந்து விளைநிலங்களைப் பாதுகாப்பதற்கு மின்சாரவேலி அமைக்கச் சொல்வதுதான் பட்டதாரிகளின் பரிந்துரை. தேனி வளர்த்தால் யானைகளும் அண்டாது. கூடுதல் வருமானத்திற்கும் வழி ஏற்படும் என்ற மாற்று யோசனை உழவர்களின் அனுபவக் கண்டுபிடிப்பு. இவ்வாறான மண்ணிற்கேற்ற மாற்று வேளாண் தொழில்நுட்ப அறிவுப் பரப்பலைத் தமிழக அரசு தடைசெய்கிறது. கருத்து உரிமையைப் பறிக்கிறது.

வழக்குரைஞர் தொழில்செய்வதற்கு சட்டப்படிப்புப் படித்து வழக்குரைஞர் மன்றத்தில் (பார் கவுன்சில்) பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்று சொல்வதுபோல் மருத்துவப்பட்டதாரிகள் மருத்துவ மன்றத்தில் (மெடிக்கல் கவுன்சிலில்) பதிவு பெற்றால்தான் மருத்துவத் தொழிலில் ஈடுபடலாம் என்று சட்டம் இருப்பதுபோல் இதுவும் முறைப்படுத்தல் சட்டம்தான் என வாதிடுகிறது தமிழக அரசு.

இது தவறானது. ஏனெனில் இங்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் செய்கின்றனர். சட்டம் படித்தவர் மட்டுமே வழக்குரைஞர் ஆகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்கள் பெரும்பாலோர் வேளாண்மை செய்வதில்லை. உழவர்கள்தான் வேளாண்மை செய்கின்றனர். இந்த உழவர்கள் தமக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தை அடுத்த உழவருக்குச் சொல்லித்தருவது இயல்பாக நடக்கிறசெயல். இதனை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரால் தடை செய்கிறது இச்சட்டம்.

வேளாண்மைப் பரவலைத் தடுப்பது மட்டுமல்ல. ஒட்டு மொத்தத் தமிழக வேளாண்மையையே கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும். ஆளுங்கட்சியின் ஆதிக்கத்திற்குள்ளும் வைப்பதை நுட்பமாகச் செய்கிறது இந்த வேளாண்மை மன்றச் சட்டம். மன்றத்தின் அமைப்பு முறை, அதிகாரங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால் தான் இது புரியும்.

வேளாண்மை மன்றத்தின் உறுப்பினர்கள் பற்றி இச்சட்டத்தின் பிரிவு 3 பேசுகிறது. இதன்படி இம்மன்றத்தில் மொத்தம் 30 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களில் 20 பேர் பதிவு பெற்ற வேளாண் பட்டதாரிகளிடமிருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், வேளாண்மைப் பொறியியல், மனையியல் ஆகிய பிரிவுகளிலிருந்து பிரிவுக்கு ஒருவராக முதுநிலை பிரிவு உறுப்பினர்கள் ஐந்துபேர். அரசின் வேளாண்மைத் துறையிலிருந்து இரண்டு பேர். தோட்டக் கலைத் துறையிலிருந்து ஒருவர். வேளாண் பொறியியல் துறையிலிருந்து ஒருவர். முன்னணி வேளாண் தொழில்முனைவர் ஒருவர். இந்த பத்துபேரும் அரசால் நியமிக்கப் படுபவர்கள். இம்மன்றத்தில் வேளாண் தொழில்நிறுவனத்திற்கு இடம் உண்டு. ஆனால் உர்வர்களுக்கோ உழவர் சங்கப் பிரதிநிதிகளுக்கோ இதில் இடமில்லை.

ஏற்கெனவெ ஆசிரியர்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமிழக சட்டமேலவையில் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களுக்குத் தொழிற்சங்கங்கள் இருந்ததால் அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மேலவையில் இடம் பெறவாவது முடிந்தது. ஆனால் வேளாண் பட்டதாரிகளுக்கு சங்கம் ஏதுமில்லை. எனவே அரசியல் கட்சிகளின் குறிப்பாக ஆளுங்கட்சியின் செல்வாக்கிற்கு உட்பட்ட வேளாண் பட்டதாரிகள்தான் வேளாண்மை மன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட பெரிதும் வாய்ப்பிருக்கிறது. நியமன உறுப்பினர்களைப் பற்றி கேட்கவெ வேண்டாம்.

ஏற்கெனவெ உயர் கல்விக்கு பல்கலைக் கழகங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. அங்கு நடக்கும் வேளாண் ஆராய்ச்சிகள் மான்சான்டொ, பாயர், ராக்பெல்லர் பவுண்டெசன், டாடா போன்ற பன்னாட்டுப் பெரு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றெ நடக்கின்றன. எடுத்துக்காட்டாக. இந்தியாவிலேயெ அதிகம் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு ஆராய்ச்சி நடை பெறும் இடம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் தான். இங்கு 30 மரபீனி மாற்றுப் பயிர் ஆய்வுகள் நடக்கின்றன. அவற்றுக்கான பண்ணைகள் உள்ளன.

இவற்றில் கிட்டதட்ட அனைத்துமே அமெரிக்கப் பன்னாட்டு பகாசுர விதை நிறுவனமான மான்சான்டொ நிதி உதவியில் இயங்குபவை. சிதம்பரம். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் மான்சான்டொ நிதி உதவி பெற்று ஆராய்ச்சிகள் பலவும் நடக்கின்றன.

இந்நிலையில் இவற்றிலிருந்து உருவாகும் பட்டதாரிகளும். முதுநிலை பிரிவு உறுப்பினர்களும் இந்நிறுவனங்களின் செல்வாக்கிற்கு உட்படுவது இயல்பானதே. இவர்களிடமிருந்து உருவாக்கப்படும் தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் இந்தக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிலும். ஆளுங்கட்சியின் ஆதிக்கத்திலும் இருக்கும் என்பது தெளிவு. தொடக்கத்தில் மேற்சொன்ன மூன்று பல்கலைக்கழகப் பட்டதாரிகள்தான் பதிவு பெறத் தகுதிப்பாடு உடையவர்களாக அமைக்கப் பட்டாலும். பின்னாளில் அரசு சாராத. பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் ஆராய்ச்சிக் கூடங்களில் பட்டம் பெறுபவர்களும் பதிவு பெற தகுதிப்பாடு வழங்கப்படலாம்.

அதற்கு இம்மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப் பெற்றுள்ளது (பிரிவு 16(1)) இந்த வேளாண் மன்றத்தின் ஆலோசனை அடிப்படையில் அரசு அதற்கான ஆணையை வழங்க வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு. அவ்வாறு தகுதிப்பாடு வழங்கப் பெற்றவர்கள் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆயினும் அவ்வாறான உறுப்பினர்கள் அந்த ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுகிறவரைதான் பதிவும், பதவியும் நீடிக்கும் என சட்டப்பிரிவு 16(2)(பி) கூறுகிறது.

இதன் பொருள் என்ன, பன்னாட்டு நிறுவன ஆய்வு மையத்தின் பிரதிநிதிகளாக மட்டுமே அவர்கள் இயங்க வேண்டும். கம்பெனிகளின் கட்டுப்பாட்டை மன்றத்தில் உறுதி செய்வதற்கு இது ஒரு சட்ட ஏற்பாடு. இது மட்டுமல்ல, வேளாண் பல்கலைக்கழகம், பல்கலைக் கழகங்களின் வேளாண் புலங்கள், வேளாண் ஆராய்ச்சிக் கல்வி நிலையங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒருவகை அதிகாரத்தை வேளாண்மை மன்றத்திற்கு இச்சட்டம் வழங்குகிறது.

இச்சட்டத்தின் பிரிவு 17 தமிழகத்தில் வழங்கப்படும் வேளாண் பாடப்பிரிவு. தேர்வு முறை ஆகியவை குறித்து தலையிடும் அதிகாரத்தை வேளாண்மை மன்றத்திற்கு வழங்குகிறது. தேர்வு நடக்கும் மையங்களை நேரடி ஆய்வு செய்யும் உரிமையையும் வழங்குகிறது. வேளாண்மை தொடர்பான கல்வி இந்த மன்றத்தின் வழியாக மான்சான்டொ. சின்டிகூன்டா. பாயர் போன்ற வேளாண் பெருந்தொழில்நிறுவனங்களின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றது.

ஒரு பல்கலைக்கழகம். அல்லது ஆராய்ச்சிக் கல்வி மையம் வழங்ககும் பட்டம் அல்லது அங்கு நடத்தும் பாடப் பிரிவு அல்லது அங்குள்ள ஆராய்ச்சிக் கூடத்தின் கருவிகள், கட்டடங்களின் தரம் ஆகியவை குறித்து இந்த வேளாண் மன்றம் அரசுக்கு அறிக்கை அளிக்கலாம். அந்த அறிக்கைக்கு இணங்க அப்பல்கலைக் கழகம் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அரசு கோரலாம். பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்படும் ஏற்பிசைவை நிறுத்த முடிவெடுக்கலாம். இச்சட்டத்தின் பிரிவு 19 இதனை விரிவாகக் கூறுகிறது.

கம்பெனிகளின் தேவைக்கு ஏற்ப கல்வியை வளைக்கிற ஏற்பாடு இது. இந்தச்சட்டம் ஏதோ திடீரன்று உருவாகிவிட்ட ஒன்றல்ல. இது உலகமய முதலாளியத்தின் பிடியில் இந்நாட்டு வேளாண்மையை சிக்க வைக்கும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு கட்டம். அவ்வளவே. இதற்கான வரையறைப்படி 2005ஆம் ஆண்டே உருவாகிவிட்டது.

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் 2005 ஜூலை 25 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கருவாகி 2006 மார்ச் 2 அன்று தில்லியில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் இது இறுதி செய்யப்பட்டது. அப்போது ஒரே நாளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அவற்றில் அணு ஒப்பந்தம் பற்றிதான் பலரும் பேசினர். அதைவிட மோசமான வேளாண்மை குறித்த அறிவுசார் முன்முயற்சி என்ற ஒப்பந்தத்தை பலரும் கவனிக்கத் தவறினர். இந்த ஒப்பந்தத்தின் முபுப்பெயர் வேளாண் கல்வி ஆராய்ச்சி சேவை மற்றும் வணிகப் பயன்பாடுகள் குறித்த அமெரிக்க இந்திய அறிவுசார் முன்முயற்சி (US-India Knowledge initiative on Agricultural Education, Research, service and commercial linkages) என்பதாகும்.

இரு நாட்டு பல்கலைக் கழகங்கள். தொழில்நுட்பக் கல்வியகங்கள். வேளாண் தொழில்நிறுவனங்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த வேளாண்மை குறித்த அறிவுசார் முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் கல்வி, கூட்டுஆய்வு, உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்முனைப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது துணைபுரியும் என்று அந்த ஒப்பந்தம் அறிவித்தது. இதற்கென்று இரு நாட்டு அறிவியல் தொழில்நுட்ப ஆணையம் உருவாக்கப்பட்டது.

அந்த ஆணையத்தில் ஆறுபேர் உறுப்பினர்கள். அதில் மூன்றுபெர் பன்னாட்டு நிறுவனங்களான மான்சான்டொ. சின்டிகூன்டா. வால்மார்ட் ஆகியவற்றின் பிரதிநிதிகள். நான்காமவர் உழவர்களின் எதிரி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்ற இருவர் இந்திய வேளாண் துறை அதிகாரிகள். இவர்கள் கூடி இந்தியாவின் வேளாண்மைக் கல்வித்திட்டம், ஆராய்ச்சியின் திசைவழி போன்றவற்றை முடிவு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது (விரிவிற்கு காண்க ஆகஸ்ட் 2005 ஏப்ரல், 2006 தமிழர் கண்ணோட்டம் இதழ்கள்).

இந்த வேளாண்மை குறித்த அறிவுசார் முன் முயற்சியை நிறைவேற்றும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கைமாறும் வாய்ப்பு இதில் உள்ளபோது முன்னோடாமல் என்ன செய்வார்கள் ஆட்சியாளர்கள், இவ்வாறான சட்டமியற்றும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அடிமரிக்க - இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வேளாண்மை மன்ற சட்டத்தின் மூலம் இரு நாட்டு நிறுவனங்களுக்கும் ‘இணைப்பை’ ஏற்படுத்திவிட்டது தமிழக அரசு. இந்த சட்டம் இயற்கை சாகுபடி சார்ந்த தற்சார்பு வேளாண்மையைத் தடுப்பதோடு ஒட்டுமொத்தமாகத் தமிழக வேளாண்மையை, வேளாண்மைக் கல்வியை கம்பெனிகள் காலடியில் வைப்பதாக இருக்கிறது.

கருத்துரிமையைப் பறிக்கிற சர்வாதிகார சட்டமாகவும் இது உள்ளது. எனவே தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்கு தமிழ்நாட்டு உழவர்களும், அறிவாளர்களும், நுகர்வோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்; போராட வேண்டும்.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்:

இந்தியா திவாலாகிறது ‍- நிதி அறிக்கையே நிலைக் கண்ணாடி

(கோவை பி.எஸ்.ஜி. கலை - அறிவியல் கல்லூரி பொருளியல் துறை மாணவர்களிடையே 9.7.09 அன்று தோழர் கி.வெ. ஆற்ற்றிய உரையைத் தழுவியது இக்கட்டு்ரை. இந்நிகழ்ச்சிக்கு அக்க்கல்லூரியின் பொருளியல் துறை தலைவர் முனைவர் செல்வ்வராஜ் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்).
ஆகாற ளவிட்டி தாயினும் கேடில்லை

போகா றகலாக் கடை

என்றார் ஆசான் திருவள்ளுவர். வருவாய் குறைவாக இருப்பது தாழ்வில்லை. அதைவிட செலவு குறைவாக இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்பதே இதன் சாரம். ஆனால் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 06.07.2009 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள வரவு- செலவுத் திட்டம் (பட்ஜெட்) சென்ற நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் திட்டம்போலவே எதிர்காலத்தை எரித்து நிகழ்காலத்தைத் தக்க வைக்கும் முயற்சியாகும். மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி (inclusive growth) என்ற அவரது முன்னுரைக்கு முரணாக அவரது வரவு - செலவுத் திட்டம் உள்ளது.

வழக்கமாக பிப்ரவரி இறுதி வேலைநாளில் வரவுசெலவுத் திட்டம் முன் வைக்கப்படும். ஆனால் தேர்தல் காரணமாக தாமதமாக 2009 -2010-க்கான வரவு செலவு சூலை 6 அன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று காலகட்டங்களாக வரவு- செலவு திட்டத்தின் தன்மையை வகைப்படுத்தி பேரா. செல்வராஜ் இங்கே பேசினார். முதல்கட்டம் 1951 முதல் 1977 வரை. தற்சார்பை வலுப்படுத்தும் வகையில் பொதுத்துறையை நோக்கிய திட்டமிடலுக்கு வரவு செலவுத் திட்டம் துணை செய்தது. இரண்டாவது காலகட்டம் 1977 முதல் 1990 வரை. இதில் தனியார்மயம் வேகம் பெறத் தொடங்கியது. 1991-க்குப் பிறகான தாராளமயம்- தனியார்மயம் - உலகமயம் (LPG) காலகட்டம். இதில் நிதிநிலையறிக்கையில் வெளியார் நலன் பேணப்படுவது முதன்மைப் போக்கானது என்று பேரா. செல்வராஜ் குறிப்பிட்டது பொதுவில் சரியான ஆய்வுதான்.

உலகமயப் பொருளியல் 1991-ல் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகமானது. அறிமுகமானபோது நாட்டில் ஏடுகளும், பல்கலைக்கழகங்களும் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதன் கொடிய விளைவுகளைப் பலர் உணர்ந்தனர்.

இதன் காரணமாக ‘வளர்ச்சி’ (Growth) என்றால் என்ன என்னும் விவாதம் எழுந்தது. ஒரு சிலர் பயன்பெறும் செங்குத்துப் பெருக்கம் (Vertical Development) வளர்ச்சி ஆகாது் மாறாக அனைவரும் பயன்பெறும் கிடைநிலை வளர்ச்சிதான் (Horizontal Development) தேவையான வளர்ச்சிமுறை என்ற கருத்து வலுப்பெற்றது. நீடித்த வளர்ச்சி (Sustainable Development), மக்களை இணைத்துக் கொண்ட வளர்ச்சி (Inclusive Growth) என்பது ஏற்கப்பட்டது.

பல்வேறு மொழி இனங்களும், மதங்களும், சாதிகளும் அரசியல் சக்திகளாக வலுப்பெற்றுள்ள இந்தியாவில், தேர்தல் சனநாயகத்தின் காரணமாக ‘மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி’ என்ற வாதத்தை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அதைத்தான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் அவர் முன் வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம் அதற்கு நேர்மாறாக உள்ளது. அதுமட்டுமின்றி, தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் உள்ளது.

மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி என்பதில் இடம் பெற வேண்டியவை யாவை? தொழில் - வேளாண்மை உற்பத்திப் பெருக்கம், வேலைவாய்ப்புப் பெருக்கம், விலைவாசி நிலைநிறுத்தம், பல்வேறு மாநிலங்களுக்கிடையே நியாயமான வருமானப் பகிர்வு போன்றவை அதில் முக்கியமானவை. இவை எதுவும் பிரணாப் பட்ஜெட்டில் இல்லை.

இந்த வரவு - செலவுத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை இந்திய அரசு உயர்த்தியது. இந்த எரி எண்ணெய் விலையில் 58 விழுக்காடு வரி இனங்களால் வருவதாகும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் விலை இந்த உயர்வுக்குப்பிறகு லிட்டருக்கு ரூ.49.13 என்றால் இதில் ரூ.28.51 என்பது உற்பத்திவரி, சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, விற்பனைவரி முதலான வரி இனங்களால் வருவதாகும். இவ்வாறு எரி எண்ணெய் மீதுள்ள வரிமூலம் தில்லி அரசு இந்த நிதியாண்டில் 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிற எல்லா பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பது வெளிப்படை. அரசின் கணக்கீட்டு முறையில் உள்ள குளறுபடி காரணமாக பணவீக்கம் - விலையேற்றம் குறித்த உண்மை நிலவரமே தெளிவுப்படுத்தப்படுவதில்லை. பட்ஜெட் உரையில் பிரணாப் முகர்ஜி பணவீக்கம் சுழியத்துக்கும் குறைந்து எதிர் நிலையில் (Negative Inflation) இருப்பதாகக் கூறுகிறார். மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் (Negative Inflation) கணக்கிடப்படும். பணவீக்க விகிதம் இது.உண்மையில் நுகர்வோர்விலைக்குறியீட்டு எண். உயர்வு (Wholsale Price Index) 10 விழுக்காட்டைத் தாண்டி செல்கிறது. இதுதான் மக்கள் சந்திக்கிற விலைவாசிக்கு நெருக்கமானது. இன்றியமையாப் பொருள்களின் விலை தாறுமாறாக இருக்கிறது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் (Food Security Act) அறிவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். இதன்படி வறுமைக்கோட்டிற்குக் கீ்ழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி கிலோ 3 ரூபாய் விலையில் வழங்கப்படும். இங்கு வறுமைக்கோடு என்ற வரையறை முக்கியமானது. ஊரகப் பகுதிகளில் உள்ள ஒருவர் நாள் வருமானம் ரூ.11.80 க்கு கீழ் பெற்றால் அவர் வறுமையில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறார். இந்த ரூ.11.80 என்ற வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டால் அவர் சலுகை பெறத் தகுதியில்லை. அதேபோல் நகர்ப்புற வறுமைக் கோடு என்பது ரூ.17.80 ஆகும். அதாவது கிராமப்புறத்தில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ரூ.1417 மாத வருமானம் பெற்றாலோ, நகர்ப்புறத்தில் 4 பேர் உள்ள குடும்பம் ரூ.2137 மாத வருமானம் பெற்றாலோ இந்த மூன்று ரூபாய் அரிசி வாங்க முடியாது. பிச்சைக்கார நிலைக்கும் கீழான நிலைமையைத்தான் மன்மோகன்சிங் அரசு வறுமை என்பதாக ஏற்றுக்கொள்கிறது.

இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழ்நாட்டுக்குப் பெரிய நன்மை ஏதுமில்லை. ஏனெனில் இங்கு ஏற்கெனவே ‘ஒரு ரூபாய் அரிசித்திட்டம்’ செயலில் உள்ளது. அதுவும் ரேசன் அட்டை உள்ள அனைவருக்கும் இதைப் பெறத் தகுதி உள்ளது. மறுபக்கம் பார்த்தால் இந்த ஒரு ரூபாய் அரிசி, மூன்று ரூபாய் அரிசித் திட்டங்கள் வேளாண்மையை நசுக்கி விடும் தன்மையன. ஏனெனில், ஏற்கெனவே பொருளியல் ஆய்வறிக்கையும் சரி, பிரணாப் முகர்ஜியின் வரவு - செலவுத் திட்ட உரையும் சரி வேளாண் மானியத்தை வெட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. உணவு மானியத்தைக் கட்டுக்குள் வைக்கக் கோருகின்றன. இந்த நிலையில் ஒரு ரூபாய் அரிசி, மூன்று ரூபாய் அரிசித் திட்டங்களால் நெல்லுக்கு உரிய இலாபவிலை கிடைக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இது உழவர்களை இக்கட்டில் வைத்துவிடும்.

இன்னொரு புறம் உரமானியத்தை நேரடியாக உழவர்களுக்கே வழங்குவது என்ற திட்டத்தை இந்த பட்ஜெட் அறிவிக்கிறது. மாலைபோட்டு கழுத்தறுக்கும் சூழ்ச்சி இதில் உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக உழவர்கள் இந்த முறையைச் சந்தித்திருக்கிறார்கள். உழவர்கள் மின் கட்டணம் செலுத்தவேண்டும். அந்த தொகையை உழவர்களுக்கு அரசு நேரடியாகத் தந்துவிடும். தொடக்கத்தில் என்னக் கட்டணம் உண்டோ அது அப்படியே கிடைக்கும். பிறகு மின்கட்டணம் உயரும்போது பழைய தொகையே வரும் அபாயம் - அதன்வழி இலவச மின்சாரத்தைக் கைவிடும் அபாயம் அதில் இருந்தது. உழவர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

அதுபோல் உரமானியத்தை நேரடியாகத் தருவது எனத் தொடங்கி, உரவிலை உயர்வு ஏற்படும்போது அதற்கு ஈடாக மானியத்தொகை வழங்கப்படாமல் விழிபிதுங்கும் நிலை ஏற்படும். உரவிலையின் மீதுள்ள அரசின் கட்டுப்பாடு நீக்கப்படும் என்று இதே பட்ஜெட் குறிப்பிடுவது, இந்த ஆபத்தை உறுதிப்படுத்துகிறது.

வேளாண் கடன் சென்ற ஆண்டு இருந்த 2 இலட்சத்து 87 ஆயிரம் கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் 3 இலட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் அறிவித்தவுடனேயே இது ‘உழவர்களுக்கு நட்பான வரவு - செலவு அறிக்கை’ என ஏடுகள் பலவும் பாராட்டின. உண்மையில் இது ஒரு மோசடியான அறிவிப்பு. ஏனெனில் 3.25 இலட்சம் கோடி ரூபாய் அல்ல, ஒரு ரூபாய்கூட இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது அரசுடைமை வங்கிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டலே தவிர, அரசின் வரவு - செலவுத் திட்டத்திற்கும் அதற்கும் நேரடித்தொடர்பு ஏதுமில்லை.

இன்னொன்று, ஏற்கெனவே "வேளாண்மை" என்பதற்குள் வேளாண் சார் தொழில்கள் பலவும் சேர்க்கப்பட்டுவிட்டன. எனவே வேளாண் கடன் என்ற வகைப்பாட்டில் வறுவல், மிளகாய்த்தூள், ஜாம் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டுத்தொழிலகங்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் கடன் பெற்றுச் சென்றுவிடுகின்றன. உழவர்களுக்குக் கடன் வழங்க அரசு வங்கிகள் பெருமளவு தயக்கம் காட்டுகின்றன என்பதே உண்மை நிலை. பிரணாப்பின் அறிவிப்பு இதில் எந்த மாறுதலையும் கொண்டு வரப்போவதில்லை.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 144% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக மண் வேலைக்கு என்று ஒதுக்குவது பயன்தராது. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கிராமப்புற மண் வேலைக்கு தொழிலாளிகள் கிடைப்பது அரிது. இங்குள்ள நிலைமைக்கு ஏற்றவாறு இங்கு கிராமம் சார்ந்த வேறு தொழில் முயற்சிகளுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் என்ற பணிக்கே இத்திட்டத்தை ஒதுக்குவதால் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு வழி ஏற்படுகிறது. வேலை செய்யாமல், பெயர் கொடுத்து குறைப்பணம் பெறுவோரே இதில் அதிகம். எந்திரம் மூலம் நிறைவேற்றியோ, எந்த வேலையும் செய்யாமலோ, அல்லது மேலாக மண்ணைக் கீறிவிட்டோ உள்ளாட்சி நிர்வாகிகள் ‘பணம் பார்க்க’ இது ஒரு ‘நல்ல’ வழியாகக் கிடைத்துள்ளது.

வேளாண்மைப் பணி இல்லாத கோடை காலங்களுக்கு எனத் தொடங்கி, இன்று ஆண்டு முழுவதும் என விரிவாக்கப்பட்டுவிட்டது இத்திட்டம். இதன் காரணமாக வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் உழவர்கள் திண்டாடுகின்றனர். இதற்கு ஈடாக எந்திரமயமாக்கலுக்கு ஈடு கொடுக்கும் பண வலுவும் பெரும்பாலான உழவர்களுக்கு இல்லை. இந்த வரவு - செலவுத்திட்டம் உள்ளிட்டு, அரசின் திட்டங்கள் அனைத்தும் உழவர்களை வேளாண்மையிலிருந்து பிதுக்கி வெளியேற்றும் முயற்சியாகவே உள்ளன.

இயற்கை வேளாண்மை சார்ந்த நீடித்த வேளாண் முயற்சிகளுக்கு சிறப்பு மானியம், சந்தை வாய்ப்பு ஆகியவற்றை செய்து கொடுத்து மாற்று வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்தால் தவிர உழவர்களைக் கிராமங்களில் இருக்க வைப்பது கடினம். இவ்வாறு வெளியேறும் உழவர்கள் அனைவரையும் உள்வாங்கும் அளவுக்குத் தொழில் வளர்ச்சியும் இல்லை.

கடந்த ஆண்டு தொழில் வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட 8.5% என்பதிலிருந்து 2.4% ஆக சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பின்னலாடைத்தொழில், செயற்கை வைரம், தானியங்கி முதலான தொழில்களில் இதன் பாதிப்பு மிக அதிகம்.

இன்னொருபுறம் ஒழுங்கமைக்கப்படாத சிறு தொழில்களில் ஆள் பற்றாக்குறையால் அவதி. வேலையின்மை என்பது குறை வேலை வாய்ப்பு (Under-Employment) என்ற வடிவத்தில் மறைந்துள்ளதை இது காட்டுகிறது.

மிக முக்கியமான இச்சிக்கல் குறித்து தில்லி அரசின் வரவு- செலவுத் திட்டம் உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை. மாறாக சிறு தொழில்களையும் , சில்லரை வணிகத்தையும் சீரழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக தங்கம் தாராள இறக்குமதியாவதை கட்டுப்படுத்த சுங்க வரியை உயர்த்தி உள்ள அதே நேரத்தில் நிறுவன முத்திரை பெற்ற தங்க நகைகளுக்கு (Branded Jewellery) 2% உற்பத்திவரி குறைக்கப்படுகிறது

இது டாடா, ஆலுக்காஸ் போன்ற பிரண்டட் நகைத் தொழிலகங்களுக்குச் சாதகமானது. ஏற்கெனவே செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கடல்போல் கடை என்று பளபளப்பாக கடை விரித்துள்ள பெரு நிறுவனங்களால் நகைத் தொழிலில் உள்ள சிறு உற்பத்தியாளர்களும், நகைத் தொழிலாளர்களும் கடுமையாக நசிந்து வருகின்றனர். இந்நிலையில் நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு இவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும்.

சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக வருவதற்கு இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டத்தில் திருப்பிவிட இந்த பட்ஜெட் ஊக்கம் வழங்குகிறது. ஓய்வூதிய நிதியை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தினால் அதற்கு பங்குப்பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமாம்.

பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி உரிய இலாபம் சம்பாதிக்காமல், ஓய்வூதியர்கள் ஓட்டாண்டிகளாகி , உழைத்துச் சேர்த்த சேமிப்பை இழந்து நின்றதைப் பார்த்திருக்கிறோம். இந்த ஆபத்து இங்கேயும் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறையை இந்த வரவு- செலவுத் திட்டம் அறிவித்திருக்கிறது. 4 இலட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை! இது மிகப் பெரிய ஆபத்தின் அறிகுறி. கிட்டத்தட்ட இதே அளவுக்கு அதாவது 4இலட்சம் ரூபாய் கடன் வருவாய் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் மொத்த வருவாயில் சுமார் 40% இதன் மூலமே எழுப்பப்படுகிறது.

இந்த கடன் தொகை புதிய முதலீடுகளாக மாறி, இலாபம் சம்பாதித்தால் இந்தக் கடனை அடைப்பது எளிது. ஆனால் செலவு வழி அவ்வாறி்ல்லை. 3 இலட்சம் கோடி ரூபாய் பழைய கடனுக்கு வட்டி செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறாவது சம்பள ஆணையப் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்குவதால் இந்த நிதியாண்டில் ரூ.40000 கோடி செலவு. மானியச்செலவுகள் ஏறத்தாழ ரூ.50000 கோடி. இவைபோக மீதி 10000 கோடி ரூபாய்தான் முதலீட்டுச்செலவு. திறமையான நிதியமைச்சர்!

வரிச்சலுகையால் தொழில் உற்பத்திப் பெருகி, வரிவருமானம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இழப்பு அச்சத்தை (Risk) துணிந்து மேற்கொண்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் நடப்பு நிலை வேறாக உள்ளது. சென்ற நிதியாண்டில் வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டைவிட 46 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதே நிலை தொடரும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து. அரசின் பொருளியல் ஆய்வறிக்கையும் (Economic Survey 2008-2009) இதனையே சூசகமாகத் தெரிவிக்கிறது. அரசுத்துறை நிறுவனப்பங்குகளை விற்பது, 3ஜி ஸ்பெக்டரம் விற்பனை ஆகியவையே பெருமளவு நிதிதிரட்டுவதற்கு பிரணாப் வைத்துள்ள மாற்றுவழி. பாட்டன் சேர்த்து வைத்ததை விற்று வாழ்க்கையை ஓட்டும் நாட்டு சோக்காளியின் செயல் போல் இந்திய நிதியமைச்சரின் வரவு - செலவுத் திட்டம் உள்ளது. இதற்குமேல் பற்றாக்குறையை ஈடுகட்ட இந்திய அரசுக்கு இருக்கும் இன்னொரு வழி பணநோட்டு அச்சடிப்பதுதான். அது பணவீக்கத்தை அதிகரிக்கும் கண்மண் தெரியாத விலையேற்றத்திற்கு வழி வகுக்கும்.

தற்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற தெம்பில் இந்த மக்கள் விரோத வழிமுறைகளை அரசு செயல்படுத்த இருக்கிறது. இன்னொருபுறம், மாநிலங்களை நசுக்கும் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி சுங்கவரி, உற்பத்திவரி போன்ற வரிவருமானங்கள் குறைந்துள்ளன. இவைதாம் மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கக் கூடிய வருமான வழிகள். இந்த வரிவருமானங்கள் குறைவதால் மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரிப் பங்கு வெகுவாகக் குறைகிறது. இந்திய அரசின் வருவாயில் வரி அல்லாத வருவாய் (Non – Tax Revenue) 46% அதிகரித்துள்ளது. வரி அல்லாத வருமானத்தில் ஒரு ரூபாய்கூட மாநிலங்களுக்குக் கிடைக்காது. பிரித்துத்தர வேண்டும் என்ற சட்டக்கட்டாயம் ஏதும் தில்லி அரசுக்கு இல்லை. அதேபோல் கடன் வருவாய் 4 இலட்சம் கோடியிலோ, பொதுத்துறை நிறுவனப்பங்கு விற்பனைத் தொகை 25000 கோடியிலோ, 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைத்தொகை ரூ.35000 கோடியிலோ மாநிலங்களுக்கு பங்கு ஏதும் தரவேண்டியதில்லை.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்களை இந்த வரவு - செலவுத் திட்டம் மேலும் கசக்குகிறது. இதிலும் நிதி ஆணையத்தின் நிதிப்பங்கீட்டு முறை குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திலும், வரி வசூல் திறனிலும் முன்னேறியுள்ள தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக உள்ளது. ‘வாட்’ போதாதென்று சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax –GST) என்று புதிதாக ஒன்றை பிரணாப் முகர்ஜி முன் வைத்துள்ளார். இது மாநிலங்களின் வரிவருவாயை பெருமளவு குறைத்துவிடும். ஆக மொத்தத்தில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன் வைத்துள்ள 2009 -10 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் மக்கள் வளச்சிக்கு உதவாத, உலகமய நிறுவனங்களுக்குச் சாதகமான திட்டம். இது உழவர்களுக்கு எதிரானது் சிறு தொழில்களுக்கு எதிரானது.

வேலைவாய்ப்பை உருவாக்கவோ, விலை உயர்வை நிலை நிறுத்தவோ பயன்படாதது. இந்த வரவுசெலவுத் திட்டம் கூட்டாட்சி முறைமைக்கு எதிரானது. மாநிலங்கள் மீது நிதிவகை தாக்குதலைத் தொடுப்பது . இந்த வரவுசெலவுத் திட்டம் தொலைநோக்கு இல்லாதது. சிக்கல்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிப்போடும் உத்தி மட்டுமே இதில் உள்ளது. இது எதிர்க்கப்பட வேண்டிய வரவுசெலவுத் திட்டம் ஆகும்.


0 கருத்துகள்:

ஓரினச்சேர்க்கை: தீர்ப்பும் - கருத்தும்


"ஓரினப் பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல" என்று தில்லி மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதித்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்கத் தீர்ப்பாகும் இது. ‘நாஸ் அறக்கட்டளை - எதிர்- தில்லி தேசியத் தலைநகர் ஆட்சிப்பகுதி அரசு மற்றும் பிறர்’ என்ற வழக்கில் அஜிஸ் பிரகாஷ் எஸ் முரளிதர் ஆகியோர் கொண்ட தில்லி உயர்நீதிமன்ற ஆயம் 2009, சூலை 2 அன்று இத்தீர்ப்பை வழங்கியது. ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குரியக் குற்றச்செயலாக வரையறுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என விளக்கம் அளித்த நீதிபதிகள் அப்பிரிவு செல்லாது என ஆணை பிறப்பித்தனர்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 "இயற்கைக்கு மாறானக் குற்றங்கள்" என்ற வகையினத்தின் கீழ் ஓரினச் சேர்க்கையை வகைப்படுத்தி உள்ளது. ஆண் -ஆண் (Gay) பெண்- பெண் (Lesbian) பால் உறவுகள் பத்தாண்டுவரை தண்டனை பெறும் குற்றங்களாக இப்பிரிவில் குறிக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள்(அரவாணிகள்) பாலுறவும்இவ்வாறு குற்றமாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றின் எல்லா காலத்திலும், எல்லா சமூகங்களிலும் ஓரினப் பாலுறவாளர்கள் சிறு எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் சனநாயகக் காலகட்டத்தில் சட்டங்கள் எழுதப்பட்டபோது இவர்களது பாலுறவு நடவடிக்கைகள் குற்றச் செயலாக வரையறுக்கப்பட்டன. எழுதப்பட்டச் சட்டம் கோலோச்சும் முதன்மையான சனநாயக நாடான அமெரிக்காவிலும் ஓரினப் பாலுறவு தண்டனைக்குரிய குற்றமாகவே வரையறுக்கப்பட்டது இதனை எதிர்த்து நியூயார்க்குக்கு அருகில் கிரீன்வீச் கிராமம் (Greenwich Village) எனும் ஊரில் 1969, ஜுன் 28 அன்று ஓரினச் சேர்க்கையாளர்களின் போராட்டம் நடைபெற்றது. ஓரினப் பாலுறவாளர்கள் சட்டத்தாலும், சமூகத்தாலும் விரட்டப்பட்டவர்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான கமுக்கப் புகலிடமாக கிரீன்விச் கிராமத்திலிருந்த ஸ்டோன்வால் என்ற விடுதி திகழ்ந்தது. ஆயினும் 1969, ஜுன் 28 அன்று இரவு அந்த விடுதியில் காவல்துறை தேடுதல்வேட்டை நடத்தி, ஓரினப் பாலுறவாளர்களைத் தாக்கிக் கைது செய்ய முயன்றது.

அதனை எதிர்த்து ஓரினப் பாலுறவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எதிர்தாக்குதல் நடத்தினர். அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் இதனை "ஸ்டோன்வால் எழுச்சி" என்று குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின பல்வேறு மாகாணங்களில் ஓரினச் சேர்க்கையைத் தண்டிக்கும் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. உலகம் முழுதும் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

பாலின ஒடுக்குமுறையில் இதுவும் ஒன்று என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பின. இதன் ஒரு வளர்ச்சிப் போக்காக 2007, மார்ச்சு 26 அன்று "பாலுறவு விருப்பங்கள் மற்றும் பாலின அடையாளங்கள் குறித்த சட்டங்கள் மீதான யோக்கியகர்த்தா கோட்பாடுகள் (Yogyakarta Principles on application to laws in relation to sexual orientation and Gender identity) என்ற பெயரில் 22 நாட்டு வல்லுனர்கள்அறிக்கை வெளியானது.பாலுறவு விருப்பங்கள் , பாலின அடையாளங்கள் ஆகியவற்றில் உள்ள சில வேறுபட்ட தன்மைகளுக்காக யாருக்கும் மனித உரிமைகளை மறுக்கக் கூடாது என்பதே யோக்கியகர்த்தா கோட்பாட்டின் சாரம்.

இக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட 66 நாடுகளின் முன்மொழிவு ஐ.நா.பொதுப் பேரவையில் 2008, டிசம்பர் 26 அன்று வைக்கப்பட்டது. அது விவாதத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் திருநங்கைகள், ஓரினப் பாலுறவாளர்களிடையே பணியாற்றி வரும் சில தொண்டு நிறுவனங்கள் இச்சிக்கலை விவாதத்திற்குக் கொணர்ந்தன. ஓரினப் பாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகள் (அரவாணிகள்) ஆகியோர்தான் எய்ட்ஸ் நோய்க்கு அதிகம் உள்ளாகிறார்கள். ஆயினும் இவர்கள் தண்டனைக்குப் பயந்து தங்கள் நோய் பற்றி வெளிப்படுத்தாமலும், மருத்துவம் செய்து கொள்ளாமலும் இருந்து விடுகிறார்கள் என இத்தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. இவர்கள் காவல்துறையின் மோசமான அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பது கண்கூடு. இ.த.ச.377 இதற்கு வாய்ப்பளிக்கிறது.

நாஸ் அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு 2004- ஆம் ஆண்டு 377-க்கு எதிராக தில்லி மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் தான் 2009 ஜுலை 2 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. "வயது வந்த இருவர் எந்த நிர்ப்பந்தமும் இன்றி, தனிப்பட்ட இடத்தில், சொந்த விருப்பத்தின்பேரில் ஓரினப் பாலுறவில் ஈடுபட்டால் அது குற்றச் செயல் ஆகாது. இவ்வாறான உறவு தண்டனைக்குரிய குற்றம் என வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்திய அரசமைப்பு விதி 21 வழங்கும் உயிர் வாழும் உரிமை, விதி 15 குறிக்கும்பாலினம் காரணமாக புறக்கணிக்கக்கூடாது என்ற கொள்கை, விதி 14 வழங்கும் சம உரிமை ஆகியவற்றை இ.த.ச.377 மீறுகிறது" என்று தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இ.த.ச.பிரிவு 377 பிற்போக்கானது. மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற திறனாய்வு சரியானது. இப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மதத்தின் பெயராலோ, மரபின் பெயராலோ இத்தீர்ப்பை எதிர்த்துக் குரலெழுப்புவது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் இவ்வழக்கு இப்போது உள்ளது. இந்திய அரசு இதில் தடுமாற்றம் ஏதுமின்றி 377 நீக்கத்திற்கு முன்வரவேண்டும்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு திருநங்கைகள் இப்போதுதான் சில உரிமைகளை பெறத் தொடங்கியிருக்கிறார்கள். கடவுச் சீட்டுகளில் "ஆண்/பெண்/பிறர்" என்று இப்போது குறிக்கப்படுகிறது. ‘பிறர்’ என்ற வகையினத்தில் அவர்கள் தங்களைக் குறிப்பிட்டுக்கொள்ள முடியும். தமிழக அரசு திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துள்ளது. ஆயினும் திருநங்கைகள் மூன்றாம் பாலினம் என்பதோ, ஓரினச் சேர்க்கையும் இயல்பான பாலுறவுதான் என்பதோ ஏற்க முடியாதது. இவை உடலியல், உளவியல் பிறழ்ச்சிகள்தாம். இந்த பிறழ்ச்சிகள் காரணமாக இவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாவதோ, தண்டனைக்குள்ளாவதோ கூடாது என்பதே நம் கருத்து. அந்த வகையில் இ.த.ச. 377 நீக்கப்படுவது சரியானது.

0 கருத்துகள்:

மாவோயிஸ்ட்டுக்குத் தடை: இடதுசாரிகளின் வலதுசாரி முகம்


மேற்கு வங்க இடது முன்னணி அரசும், காங்கிரசுக் கூட்டணியின் இந்திய அரசும் இணைந்து ஒருவகை உள்நாட்டுப் போரை மாவோயிஸ்டுகளுக்குஎதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளன. மாவோயிஸ்ட் கட்சியை இந்திய அரசு தடைசெய்துள்ளது.
கடந்த 22.06.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யை ‘பயங்கரவாத அமைப்பு’ என அறிவித்துள்ளது. இந்த அமைப்பையும் சேர்த்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்டுள்ள இயக்கங்களின் எண்ணிக்கை 35 ஆகிறது.

மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யை உருவாக்கின. மேற்கண்ட இரு அமைப்புகளும் ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டவை. இவை இரண்டும் இணைந்து உருவான மாவோயிஸ்ட் கட்சி இப்போது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம் மேற்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டங்களே இத்தடை ஆணைக்கு உடனடிக் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஆணையின் காரணமாக மாவோயிஸ்ட் கட்சியும் , அதன் சார்பு அமைப்புகளும் இந்தியா முழுவதும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப் படுகின்றன. அவ்வமைப்பினர் வேட்டையாடப்படுகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் மிதுனாப்பூர், புருலியா, பாங்குரா மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் இடையே மாவோயிஸ்ட் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளாகவே செல்வாக்குப் பெற்று வருகிறது.
தொடக்கத்திலிருந்து மேற்கு வங்காள இடது சாரி அரசின் பல்வேறு அடக்குமுறைகளைத் தாங்கியே இக்கட்சி வளர்ந்து வருகிறது. தொடர்ந்து புறக்கணிப்புக்கும், காவல்துறை அடக்குமுறைக்கும் ஆளான இப்பழங்குடி மக்கள் மேற்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் லால்கார், தரம்பூர், சிஜுவா, ஜார்கிராம் போன்ற பகுதிகளில் “காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த ஏழு மாதங்களாக தொடர்ப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை புறக்கணிப்பு, ஆளுங்கட்சி புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவங்களை இம்மக்கள் மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினருக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவில் இம்மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்கள் செல்லும் பேருந்துகளில் காவல்துறையினர் ஏறினால் அவர்களை இறக்கிவிடுவது, காவல்துறை வாகனங்கள் பழுதானால் அதை நீக்க உதவி செய்ய மறுப்பது, காவல்துறையினருக்கு உணவோ, நீரோ, நெருப்போ தராமல் புறக்கணிப்பது என்று இப்போராட்டம் நாள் ஆக ஆக தீவிரம் பெற்று வந்தது.

இதேபோன்ற நிலை ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களுக்கும் நேர்ந்தது. மேற்கு வங்காள அரசின் கடும் அடக்குமுறையும் பொய்ப் பிரச்சாரமும் பழங்குடி மக்களின் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. இவ்வியக்கத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் தலைமை தாங்கினாலும் இது பெருந்திரள் மக்களின் போராட்டமாக அனைவரையும் உள்ளடக்கி விரிவு பெற்றது.

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க, நெருங்க இப்போராட்டத்தில் மம்;தாபானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர்அதிகமாக பங்கேற்கத் தொடங்கினர். மேற்கு வங்காள காங்கிரஸ்கட்சியின் மறைமுக ஆதரவும் இதற்கு இருந்தது. ஆயினும் இதனை வைத்து இப்போராட்டத்தை திரிணமுல் காங்கிரசின் தூண்டுதலால் நடக்கும் கலவரமாக சித்தரிக்க முடியாது. தேர்தல் முடிந்து தில்லியில் அமைச்சரான பிறகு மம்தா பானர்ஜியின் அணுகுமுறை மாறியது- இப்போராட்டத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க ஆட்சிக்கு நெருக்கடி தருவதில்தான் அவரது கவனம் இருந்ததே தவிர, அம்மக்கள் பற்றி அவர் அக்கறை காட்டவில்லை.

மாவோயிஸ்ட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், மிதுனாபூர், புரூலியா மாவட்டங்களைக் கலவரப்பகுதியாக அறிவித்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மம்தா கூக்குரலிட்டார்.எனவே இப்போராட்டத்தை மம்தாபானர்ஜி தூண்டுவதாகச் சொல்வது பொருந்தாப் பொய்யாகும். மேற்கு வங்காள இடதுசாரி அரசின் கொள்கைகளும், நடைமுறையும் ஒரு மாற்றுப்பாதையை காட்டுவதாகவோ மாற்று அரசியல் பண்பாட்டை நிலைநிறுத்துவதாகவோ இல்லை.

ஒடுக்கப்பட்ட பழங்குடியினர் மாவோயிஸ்ட்டுகள் பக்கம் திரள்வதற்கு இது முக்கிய காரணமாக அமைகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிக்கூட்டணி மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்கிறது. முதலாளிய - நிலக்கிழமை தில்லி ஆட்சிக்கு மாற்றுப்பாதை காட்டும் ஆட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தியா முழுவதும் இது குறித்து தம்பட்டம் அடித்தாலும் உண்மையில் ஒரு மாற்றுப்பாதை காட்டும் ஆட்சியாக அது இல்லை.
காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கு கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராக எந்தவித உருப்படியான முற்போக்கு மாற்றையும் மேற்கு வங்க ஆட்சி முன்வைத்ததில்லை. பிறர் பின்பற்றத்தக்க முற்போக்குத் திட்டங்கள் எதையும் இவ்வாட்சி முன்மொழிந்தது இல்லை.

நிலவும்முதலாளிய அரசமைப்பை “உள்ளிருந்தே உடைப்பது” ;என்று அறிவித்துக் கொண்டு மார்க்சி;ஸ்ட் கட்சியினர் மாநில ஆட்சியில் பங்கு பெற்றனர். ஆனால் உள்ளிருந்து உலுத்துப் போயிருப்பது இவர்கள்தான். காங்கிரஸ் ஆட்சியைப் பின்பற்றியே இவர்களது தொழிற்கொள்கையும், பொருளியல் கொள்கையும் அமைந்தது. 1977-ல் ஆட்சிக்கு வந்த புதிதில் ‘கெரோ’ என்ற முற்றுகைப்போராட்டம் உள்ளிட்டு உழைப்பாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு துணைபுரிந்த அந்த ஆட்சி நாள் செல்ல செல்ல காங்கிரசைப் போலவே கொடும் ஒடுக்குமுறை ஆட்சியாக மாறியது.

சிங்கூரில் டாட்டாவுக்கு சேவை செய்யவும், நந்திக்கிராமில் பன்னாட்டு நிறுவனத்திற்கு பாதம் தாங்கியும், புத்ததேவ் நடத்திய துப்பாக்கி முனை தர்பார் இவர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. நம்மூர் கழகங்களைப் போலவே கட்சிக்காரர்களின் பேட்டையாக காவல்நிலையங்கள் மாற்றப்பட்டன.
அரசு அலுவலகங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத்தலைவர்களின் ஆளுகைக்குட்பட்டவையாக மாறின. ஊழல் மலிந்தது. இந்திய அரசுக்கு மாற்றான போராட்டத்தளமாக மாநில ஆட்சியைப் பயன்படுத்தப்போவதாக சொன்னவர்கள் பிற மாநில அரசாங்கங்களைப் போல கூடுதல் அதிகாரம் கேட்பதற்கு கூட முன்வரவில்லை. மாநிலங்களுக்கு இருக்கிற கணிசமான ஒரே வரி வருமானம் வணிகவரிதான். அதையும் மறுக்க மதிப்புக்கூட்டு வரி (வாட்) கொண்டுவர முனைந்தது இந்திய அரசு.

அதற்கு இரு கை நீட்டி வரவேற்ற ஆட்சி மேற்குவங்க இடதுசாரி ஆட்சி. அதுமட்டுமின்றி ‘வாட்’ வரிவிதிப்பிற்கு வழிமுறை வகுத்த குழுவின் தலைவராக மேற்கு வங்க நிதியமைச்சரே பணியாற்றினார்.

உலகமயக் கொள்ளைத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது முணு முணுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தாங்கள் ஆளும் மேற்கு வங்காளத்தில் அத்திட்டங்களை எந்தத் தயக்கமும் இன்றி செயல்படுத்தினர். பன்னாட்டு நிறுவனங்களுக்காக உழவர்களை அவர்களது நிலங் களிலிருந்தும், வாழிடங்களிலிருந்தும் வெளியேற்றினர். இவற்றின் காரணமாக மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சியும், பிற இடதுசாரிகளும் தனிமைப்பட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில்மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் சந்தித்த சரிவு இதற்குச் சான்று. அடித்தட்டு மக்களைத் திரட்டித் தொடர்ந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள் இச்சூழலில் செல்வாக்கு பெறுவது இயல்பானதே. இது தங்களது பிற்போக்கு கொள்கை மற்றும் மக்கள் விரோத நடைமுறையின் காரணமாக உருவான சூழல் என ஏற்று திருத்திக்கொள்வதற்கு மாறாக புத்ததேவ் ஆட்சி பழங்குடியினர் மீது கொடும் அடக்குமுறையை ஏவியது.
மாவோயிஸ்ட் கட்சியை தடை செய்வதற்கு புத்ததேவ் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவரது மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்காளச் செயலாளர் பிமன் போசும், அனைத்திந்தியப் பொதுச்செயலாளர் பிரகா‘; காரத்தும் இத்தடையாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரம் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் எச்சூரி ‘மாவோயிஸ்ட் கட்சியை இந்திய அரசு தடைசெய்திருப்பது தவிர்க்க முடியாத செயல்’;. என்று நியாயப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி , தேர்தல் அரசியலுக்கு வெளியே புரட்சி நடத்தப்போவதாக சொன்னவர்கள,தேர்தல் கட்சியாக விரைவிலேயே தேய்ந்து போனார்கள்; பதவி அரசியலுக்கேப் பழகிப் போனார்கள். இதன் காரணமாக ஒரு நாடாளுமன்றத்தேர்தல் தோல்விக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் கலகலத்துப்போயிருக்கிறார்கள். குழுச்சண்டைகள் தீவிரம்பெற்றுள்ளன. மாவோயிஸ்ட் தடை குறித்த அணுகுமுறையிலும் இது வெளிப்படுகிறது.

ஆந்திரா தொடங்கி ஒரிசா , பீகார், ஜார்கண்டு மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில் மலையக பழங்குடியினரிடையே மாவோயிஸ்ட் கட்சி பெருந்திரள் ஆதரவோடு வளர்ந்திருக்கிறது. நீண்ட நெடிய போராட்ட மரபோடு பல்வேறு அர்ப்பணிப்புகள் செய்து இக்கட்சி இம்மக்களிடையே வளர்ந்திருக்கிறது.

ஆயினும் “;நாங்கள் வலுவாக உள்ள பகுதிகளையொட்டிய கிராமங்களிலும் , நகரங்களிலும் உள்ள உழைக்கும் மக்களையும், மாணவர்களையும் கூட உரிய அளவு திரட்ட முடியவில்லை. அரசு நிர்வாகம் செயல்படுவது எங்கள் பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளதே தவிர மாற்று நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ முடியவில்லை” என்று மாவோயிஸ்ட் கட்சியின் ஆந்திர செயலாளர் தோழர் இராமகிருஷ்ணா 2004-ல் அறிவித்த நிலை இன்றும் நீடிக்கிறது.

லால்கார் பகுதியில் பழங்குடி மக்களைத்திரட்டும்போது அவர்களது ஒல்ச்சிக்க்கி மொழிக்கு உரிய இடமும், அம்மக்களுக்கு நி;ர்வாக அதிகாரமும் பெறப்போவதாக சொல்லியே மாவோயிஸ்ட்டுகள் காலூன்றினர். இந்தியாவின் பெரும்பகுதிகளில் பழங்குடியினரின் பொருளியல், சமூக நலன்களை பாதுகாக்கும் போராட்டத்தின் ஊடாகவே மாவோயிஸ்டுகள அவர்களி;டையே வளர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இப்பழங்குடியினகிராமங்களையொட்டிய சமவெளிப்பகுதி மக்களின் தேசிய இன உரிமைப் போராட்டத்தோடு தங்களது போராட்டங்களை இணைக்காததன் விளைவாக இவ்வளவு நீண்ட தியாகத்திற்குப்பிறகும் மாற்று அரசுக்குரிய தொடக்க நிலையைக்கூட மாவோயிஸ்டுகளால் எட்ட முடியவில்லை. (விரிவிற்கு காண்க:- தமிழர் கண்N;ணோட்ட்டம் 2004நவம்பர் இதழ்).

நாடாளுமன்ற சகதிக்குள் ஆழ்ந்துபோய் மார்க்சிஸ்ட்டுகள் தேய்ந்து வருகின்றனர். தேசிய இன போராட்டத்தில் மையங்கொள்ளாததால் மாவோயிஸ்டுகளின் தியாகம் தெளிவான அரசியல் விளைவை ஏற்படுத்தாமல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆயினும், இந்திய அரசின் தடை மாவோயிஸ்டுகளை ஒன்றும் செய்துவிட முடியாது.
ஏற்கெனவே அக்கட்சியினர் நடைமுறையில் காவல்துறையின் தடைகளுக்கு இடையில்தான் இயங்கிவருகின்றனர். இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்களைக் கீழேபோட முடியாது; லால்கார் பகுதியில் மோதல் நிறுத்தத்திற்கு மட்டுமே தாங்கள் தயார் என மாவோயிஸ்ட் கட்சியின் மையக்குழு உறுதிபடக் கூறிவிட்டது.தடையை எதிர்கொள்வோம் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரால் மாற்று அரசியலுக்கு குரல் கொடுக்கிற அனைத்து ஜனநாயக சக்திகளையும் அடக்குவதற்கே இந்த தடையாணை பயன்படும்.திரைப்பட நடிகர், இயக்குநர் அபர்னாசென் மற்றும் சில எழுத்தாளர்கள் மீது ‘தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தார்கள’;. என மேற்கு வங்க அரசு பொய் வழக்குத்தொடுப்பதே இதற்கு ஒரு சான்று. லால்கார் பகுதியில் என்ன நடக்கிறது என்று நேரில் கண்டறிய சென்றுவந்ததே அபர்னாசென் செய்த ‘குற்றம்’; ஆகும்.

இந்திய அரசு மாவோயிஸ்ட் கட்சியின் மீது விதித்துள்ள தடையை உடனடியாகக் கைவிட வேண்டும். மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.
காவல்துறை அடக்குமுறையை கைவிடவேண்டும். மாவோயிஸ்ட் கட்சி மீதான தடையை எதிர்த்தும், மேற்கு வங்கஅரசின் அடக்குமுறையை எதிர்த்தும் அனைத்து சனநாயக சக்திகளும் வலுவாக்குரல் எழுப்ப வேண்டும்.
இக்கட்டுரை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூலை இதழில் (2009) வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்:

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள்



நேற்றைக்குப் போராளியாக இருந்தவர் இன்றும் அவ்வாறே நீடிப்பார் என்பதற்கு எந்த உத்தμஅணிதமும் இல்லை. அவர் தான் சார்ந்த அமைப்பின் உதவியோடு போராளியாகத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதவர் துருபிடித்துப் போய்விடுவார்.

முன்னேறும் அμலாறு இத்தகையஅணிμ ஒதுக்கித் தள்ளிவிட்டு ஓடிக் கொண்டே இருக்கும். கூர்கா தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் சுபாஷ் கெய்சிங்குக்கு (குதஞச்ண்ட எஞுடிண்டிணஞ்ட) இதுதான் நிகழ்ந்துள்ளது. கூர்கா தேசிய இனமக்களின் தன்னேரில்லாத தலைஅμணிக விளங்கியவர் சுபாஷ் கெய்சிங். 1980களில் அஅμது உரிமை உணர்ச்சியுள்ள பேச்சு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைகளில் ஓங்கி ஒலித்தது. கூர்கா மக்களை எழுச்சிகொள்ள வைத்தது. அஅμது தலைமையில் கூர்கா தேசிய விடுதலை முன்னணி, கூர்கா மக்களுக்குத் தனிமாநிலம் கோரி பேணிμணிடியது. ஆயினும் இடையில் சமμசம் ஆகி முடிந்தது.

1986இல் "டார்ஜிலிங் கூர்கா மலையக மன்றம்' என்ற அதிகாரம் கூடுதல் பெற்ற உள்ளாட்சி அமைப்பு நிறுவப்பட்டது. ""தனிமாநிலக் கோரிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர கைவிடப்படவில்லை'' என்று அப்போது கெய்சிங் சொன்னார். மலையக மன்றத்தின் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இருந்தார். முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் கூர்கா மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியது. 1999இல் கூர்கா தேசிய விடுதலை முன்னணியில் வெளிப்படையாக இந்த மனக்குமுறல் வெடித்து, பலர் வெளியேறினர். மாற்றுத் தலைமை உருவாகாததால் அது வடிவம் பெறாமலேயே இருந்தது.

இந்நிலையில் 2007இல் பிமல் குருசிங் கூர்கா தேசிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறினார். குருங் தலைமையில் 2007, அக்டோபர் 7இல் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைக்கப்பட்டு, கூர்காக்களுக்குத் தனிமாநிலம் கோரி தீவிரமாக போராட தொடங்கியது.

புதிய தலைமைக்காகவே காத்திருந்தததுபோல் கூர்கா இன இளைஞர்கள் அணி அணியாக கூர்கா ஜனமுக்தி மோர்ச்சாவில் இணைந்தனர். கூ.ஜ.மோ. நடத்தும் பேணிμணிட்டங்களில் கூர்கா இன மாணவர்களே முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றனர். டார்ஜிலிங் அரசு கல்லூரி, குர்சியாங் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலைய விடுதிகள் இவ்வமைப்பின் பாசறையாக விளங்குகின்றன.

டார்ஜிலிங், தோர்ஸ், சிலிகுரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூர்கா தாயகம் தனிமாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என பிமல் குருங் வலியுறுத்துகிறார். இப்பகுதிகளில் வாழும் கூர்கா மட்டுமின்றி, வங்காளிகளும் பிற மலையக மக்களும் கூட தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்துத் திμண்டு வருகின்றனர். மேற்கு வங்க சி.பி.எம். அμசாங்கமும், சி.பி.எம். கட்சியினரும் கூ.ஜ.மோ. இளைஞர்களைத் தாக்குவது கடந்த ஓμணிண்டணிகத் தொடர் நிகழ்வாகி விட்டது.

இன்னொருபுறம் கூர்கா தனிமாநிலக் கோரிக்கையை சட்ட வழியில் தடுத்த நிறுத்த மேற்கு வங்க ஆட்சியும், சுபாஷ் கெய்சிங்கும் கூட்டுச் சதியில் இறங்கினர். டார்ஜிலிங் கூர்கா மலையக மன்றத்தை இந்திய அμசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்ட வணையில் சேர்த்துவிட முனைந்தனர். பட்டியலினப் பழங்குடி மக்களுக்கு கூடுதல் அதிகணிμம் உள்ள உள்ளாட்சி அமைப்பையும், பிமல் குருங் நே தனிமாவட்ட அமைப்பையும் நிறுவித் தரும் பிரிவாகும் இது. இதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டால் டார்ஜிலிங் உள்ளாட்சி அமைப்பை μ'தமாக்கிவிடலாம் கூர்கா தனிமாநிலக் கோரிக்கைக்கு தடை ஏற்படுத்திவிடலாம்; டார்ஜிலிங் நிர்வாகம் தொடர்பாக இனி எது செய்வதாக இருந்தாலும் நாடாளு மன்றத்தில்தான் செய்யமுடியும் கூர்கா மக்களுக்கு அந்த வலு இருக்காது என்பதே மேற்கு வங்க ஆட்சியின் திட்டம்.

இதுதான் சுபாஷ் கெய்சிங் பதவி ஆசைக்கும் பொருத்தமானது. சி.பி.எம். முயற்சியால் 2007 நவம்பர் 3இல் நாடாளுமன்றத்தில் அμசமைப்புச் சட்ட ஆறாவது அட்டவணைக்குத் திருத்தம் முன்மொழிந்தது மன்மோகன் சிங் அμசு. பா.ஜ.க. இத்திருத்தத்தை எதிர்த்ததால் அது வாக்களிப்புக்கு விடப்படவில்லை.

உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு இச்சிக்கல் குறித்து தனது அறிக்கையை 2008 பிப்μஅரி 28 அன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. ""கூர்கா மக்களிடையே இத்திருத்தம் பற்றி கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அம்மக்களிடையே கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது பற்றி புதிதாக மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டும்'' என அவ்வறிக்கை பரிந்துணிμத்தது.

இதற்கிடையில் சுபாஷ் கெய்சிங் தில்லியில் முகாமிட்டு இச்சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுமாறு பிμதமர் மன்மோகன் சிங்கையும், வேறுசில கட்சித் தலைவர்களையும் வலியுறுத்தினார். தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு பிப்μஅரி 18இல் கொல்கத்தா திரும்பிய அவர், டார்ஜிலிங் திரும்ப முடியவில்லை. ஏனெனில் ""து€μணிகி கெய்சிங்கை கூர்கா தாயக மண்ணில் காலடி எடுத்து வைக்க விடமாட்டோம்'' என கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அறிவித்து விட்டது.

கூர்கா மலையகப் பகுதியில் பத்துநாட்கள் முழு அடைப்பு நடைபெற்றது. கூ.ஜ.மோ.வின் மகளிர் அணியினர் காலஅணிμயற்ற உண்ணாப் பேணிμணிட்டம் நடத்தினர்.

"ஆறாவது பட்டியல் திருத்தம் நிறைவேற்றப்படாது, சுபாஷ் கெய்சிங் மலையக மன்றத் தலைவர் பதவியிலிருந்து மார்ச் 10 அன்று விலகுவார்' என்று அதிகணிμப்பூர்வ அறிவிப்பு வந்தபிறகே பேணிμணிட்டத்ணித கூ.ஜ.மோ. நிறுத்தியது. பிமல் குருங் தலைமையில் கூர்கா தனிமாநிலப் பேணிμணிட்டம் வீறுகொண்டு நடைபெற்று வருகிறது.

இவ்வகையில் 2008, மே7 அன்று சிலிகுரியில் நடைபெற்றப் பேμணியில் இμண்டணிμ இலட்சம் மக்கள் பங்கேற்றது தனிமாநிலக் கோரிக்கை கூர்கா பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை என்பதை பறைசாற்றியது. இப்பிμச்சினை குறித்து மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாவுக்கும், கூ.ஜ.மோ. பிμதிநிதிகளுக்கும் இடையில் 2008 மே 22இல் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தனிமாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாது மேற்குவங்க மாநிலத் திற்குள் கூடுதல் அதிகணிμம் உள்ள உள்ளாட்சி என்பது குறித்துப் பேசலாம் என புத்ததேவ் கூறியதே முறிவிற்குக் கணிμணம். "

"கூர்கா தனிமாநிலம் தஅμவேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்'' என பிமல்குருங் உறுதியாகக் கூறிவிட்டார். பேணிμணிட்டம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பேணிμணிடிக்ணிர் என்பதற்காக, "கல்லானாலும் தலைவர்' என்று சுபாஷ் கெய்சிங் பின்னால் கூர்கா மக்கள் தேங்கிக் கிடக்கவில்லை. ஆயிμம் குறை இருந்தாலும், இருப்பதற்குள் இவர் தேவலாம் என எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை பிடித்துக் கொள்கிற வேலையில் ஈடுபட்டு கூர்கா மக்கள் செயலற்றுக் கிடக்கவில்லை. து€μணிகியாகிவிட்ட கெய்சிங்கை அடையாளம் கண்டு ஒதுக்கினர். போர்க்குணமுள்ள புதிய தலைமையை இனங்கண்டு அணி திμண்டக்ர். இதில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னணியில் நின்றனர். பேணிμணிட்டத்திஅ முன்னேறு கின்றனர்.

அசாமிலும், காசுமீரிலும் நாகாலாந்திலும் இதுதான் நடந்தது. அவர்கள்தான் தமது பிμச்சினை பற்றி உலகத்தைப் பேச வைத்திருக் கின்றனர். தமிழர்கள் இதிலிருந்து பாடம் பெற வேண்டும். புதிய அμலாறு படைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

தில்லைப் போராட்டம்: புதிய ஜனநாயகத்தின் அவதூறு

அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய ஜனநாயகம்' ஏடு (மே,2008) ஒரு விமர்சனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தில்லைப்போராட்்டம் குறித்து 'தமிழர் கண்ணோட்டம்' ஏப்μஅ 2008 இதழில் நாம் எழுதியிருந்த செய்திக் கட்டுரைக்கு எதிர்வினையாக இது வெளியாகி யிருக்கிறது.
தில்லைப் போராட்்டத்திஅ ம.க.இ.க. அணியின் பங்கு பணியைக் குறைத்தோ, மறைத்தோ நான் எதுவும் எழுதவில்லை என்பதை 'தமிழர் கண்ணோட்டம்' கட்டுரைணியப் படித்த நடுநிலை வாசகர்கள் அறிவார்கள். எனவே மீண்டும் அதுபற்றி இப்போது விவாதிக்கப்போவதில்லை.
ஆயினும் புதிய ஜனநாயகத்தின் "தெரட்டி்'' கூறியுள்ள சிலவற்றுக்கு மட்டும் உண்மைத் தகவல்களைப் பதிலாகத் தரவேண்டியுள்ளது.
1. சிற்றம்பல மேடையேறி பாடி வழிபடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு ஒன்று கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கறிஞர் நடராசன் என்பவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும், நமக்கும் நேμடி அறிமுகம் கிடையாது. ஆயினும் இப்பிரச்சினையில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை ஆறுமுகசாமி மூலம் அவர் அறிந்திருக்கிறார்.
வழக்கு தொடர்பாக பேசவேண்டியிருப்பதால் வழக்கு நடக்கும் நாளில் நேரில் கடலூர் வருமாறு ஆறுமுகசாமி மூலம் அழைத்தார். நானும் சென்றேன். அன்று சாட்சிகள் குறுக்கு விசரைணிண முடிந்திருந்தது.
வழக்கின் நிலைமைகளை விளக்கிய அவர் "இதனை மனித உரிமை வழக்காக உயர்நீதிமன்றத்தில் நடத்த வேண்டியது அவசியம்' என்றார். அப்போது அவர் கையில் விருத்தாச்சலத்தில் தோழர் μணிச்த தலைமையில் நடக்கவிருந்த பொடா எதிர்ப்புக் கருத்தμங்க அழைப்பு இருந்தது. அதனை என்னிடம் காட்டி, "அஇக்குரைஞர் μணிச்த மூலம் இப்பிμச்சினையை எடுத்துச் செல்லலாம் எனக் கருதுகிறேன் அஅரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் வழியில் வேறு நல்ல வழக்கறிஞர்களை வைத்தாலும் சரியே. எப்படி யிருந்தாலும் வழக்கை உறுதியாக நடத்த வேண்டும்" என்றார். "μணிச்த எனக்கு நெருக்கமானவர் தான். அவர் மூலமே நடத்தலாம். பொடா எதிர்ப்புக் கூட்டத்திற்கு பார்வையராக நானும் வருவேன். அங்கு பேசி முடித்துவிடலாம்" என்று நான் கூறினேன்.
அன்று விருத்தாசலம் வருமாறு ஆறுமுகசாமியிடமும் கூறிவிட்டு வந்தேன். விருத்தாச்சலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் பொடா எதிர்ப்புக் கருத்தμங்கம் தொடங்குவதற்கு முன்பாக அμங்கத்தில் நாங்கள் சந்தித்தோம். ஆறுமுகசாமியை μணிச்தஅக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சுருக்கமாக வழக்கு குறித்துப் பேசினோம். μணிச்த இளைஞர் என்பதால் ஆறுமுகசாமிக்குத் தொடக்கத்தில் சிறு தயக்கம் இருந்தது. அப்போது இவர்களது அமைப்பு பற்றியெல்லாம் ஆறுமுகசாமிக்கு எதுவும் தெரியாது. "உங்களுக்கு அரசு வைத்துத் தரும் இலவச வழக்குரைஞர்களை விட இவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்தாம்" என்று சொல்லி, அஅμது தயக்கத்தைப் போக்கினேன்.
2. இதற்கு சில நாள்கள் சென்று μணிச்தஅம் அஅμது ச€கணிதμரும் சிதம்பμத்திஅ என்னைச் சந்தித்தார்கள். த.தே.பொ.க. தோழரின் உழுவை பராமரிப்பகத்தில் அந்த சந்திப்பு நடந்தது. "அமைப்பில் பேசி விட்டேன். வழக்கையும் இதுகுறித்த இயக்கங்களையும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நாம் கூட்டாக இதன் மீதான இயக்கங்களை நடத்தலாமா?" என தோழர் ராஜீ கேட்டார்.
"ம.க.இ.க.வுடன் த.தே.பொ.க. கூட்டு இயக்கம் நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் ம.க.இ.க. நடைமுறையில் ஒரு சீர்குலைவு அமைப்பு; மறைமுகமான பார்ப்பனிய அமைப்பு என்பது த.தே.பொ.க.வின் மதிப்பீடு.
எனவே கூட்டியக்கமோ, ம.க.இ.க.வுக்கு துணையாக செயல்படுவதோ சாத்திய மில்லை. நீங்களே உங்கள் வழியில் நடத்துங்கள்" என நான் தெளிவுபடக் கூறிவிட்டேன்.
ஆயினும் அதற்குப் பிறகு 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் இப்பிμச்சினை குறித்து நாம் தனியே நடத்திய உண்ணா நிலைப் போராட்்டங்கள், தெருமுனைப் பரப்புரை இயக்கங்கள், பொதுக் கூட்டம் ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், செய்திகளை ஊன்றி கவனிக்கிற நோக்கர்களும் அறிவார்கள்.
3. திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் பாடி வழிபட ம.க.இ.க. போராட்டம் நடத்தியதால் ம.க.இ.க. மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்ற நமது மதிப்பீடு பொய்யாகி விடாது. ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் நிதி பெறும் சில 'தன்னார்வ' அமைப்புகள் கூட உலகமயத்தை எதிர்த்து சில போராட்்டங்கள் நடத்துவதைப் பார்க்கிறோம்.
ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன.
எனவே இந்த அமைப்புகளை மறைமுகப் பார்ப்பனிய அமைப்புகள்; இந்திய ஆளும் சக்திகளுக்கு மறைமுகமாக சேவை செய்யும் சீர்குலைவு அமைப்புகள் என த.தே.பொ.க. மதிப்பிடுகிறது. இண்Oஅரை ம.க.இ.க. வின் இந்த அடிப்படை நிலைபாடுகளில் மாறுதல் இல்லை. எனவே நமது அதே மதிப்பீடும் தொடர்கிறது.
4. வ.சுப. மாணிக்கனார் தலைமையில் தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் பேராடுவதற்கு அதற்கு முன்னால் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதை தீட்சிதர்கள் மறுத்தே வந்தனர். அவர்களது போராட்டத்திற்குகு பிறகே, 1987 முதல் தீட்சிதரில் ஒருவர் பாடுவது என்ற வகையில் €தஅரைம் ஒலித்தது. இது முதல்கட்ட வெற்றி என்றோம். காலை பூசை முடிவில் ஒருவர் ஒரு பாடல்பாடி அந்த 'சடங்கை' தீட்சிதர்கள் முடிக்கிறார்கள். அதை முனைவர் த.செயராமன் குறிப்பிட்டிருந்தார். இரண்டுமே உண்மைதான். இதில் முμண்பாடு இருப்பது போல் 'தொரட்டி' குதிக்கிறார்.
5. மார்ச் 2 (2008) மாலை காவல்துறை தடியடிக்குப் பிறகு ஆறுமுகசாமி 'அனாதையாக' அமர்ந்திருந்தார் என்று பு.ஜ. த.தே.பொ.க. மீது பாய்கிறது. கைதானது 34 பேர். ம.க.இ.க. பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மீதமுள்ள பலரும் அங்கேதான் இருந்தார்கள். இந்நிலையில் அவரை அனாதையாக விட்டு விட்டதாக நம்மீது தோழர் 'தொரட்டி' பாய்வது வியப்பாக இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?
காவல்துறை ஆறுமுகசாமியைக் கைது செய்யவில்லை. கைதானோர் பட்டியலில் அவரையும் சேர்த்துவிட வேண்டும் என்று ம.க.இ.க.வினர் முயன்று கொண்டிருந்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள நடைமேடையில் அவரை அமர வைத்திருந்தனர். அருகே சென்னையிலிருந்து ம.க.இ.க. சார்பில் வந்திருந்த வழக்கறஙிஞர் இருந்தார். ஆறுமுகசாமியைக் கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார். த.தே.பொ.க. சிதம்பர நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிராகாசமும் நானும் இரவு நீண்ட நேரம் அவர்கள் அருகிலேயே இருந்து சிறு சிறு உதவிகளைச் செய்துகொண்டிருந்தோம்.
அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். அதன் பிறகு ஆறுமுகசாமியும் கைது செய்யப்பட்டார்.
5. அதன் பிறகு மார்ச் 12 தொடங்கி நாளதுவரை சிவ நெறியார்கள் தமிழகமெங்கிருந்து த.தே.பொ.க.- தமிழ்க் காப்பணியைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்டநாள்தோறும் வருகிறார்கள். திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி மனமுருகி வழிபடுகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் காலைநேரத்திலேயே வந்து வழிபடவே விரும்புகிறார்கள். தங்கவைப்பது, ஒய்வு நேரத்தில் இரண்டு ஊர்களிலிருந்து வந்து மனநிறைவாக வழிபட முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க நேரத்தை ஒழுங்கு செய்வது, தீட்சிதர்களோடு அவ்வப்போது எழும் உரசல்களை எதிர்கொண்டு நெறிப்படுத்துவது.... போன்ற பணிகளில் த.தே.பொ.க., தமிழ்க் காப்பணி தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிக்கென்று தமிழ்க் காப்பணி சார்பில் 'தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதன்நெறியளாராக தோழர் சிவப்பிரகாசம் இருந்தாலும், வழமையாகக் கோயிலுக்குச் சென்று வழிபடும் இளைஞர்களைக் கொண்டே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழர் தேசிய இயக்கத்தின் வை.இரா.பாலசுப்பிரமணியன் இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார்.
தமிழகமெங்குமிருந்து பல சிவனடியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இக்குழுவைத் தொடர்புகொண்டு பாடி வழிபடுவது தொடர்கிறது.பெரும்பாலோர் காலையில் வழிபட்டுச் சென்று விடுகிறார்கள். ஆம்பூர், திருநெல்வேலி, வடலூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலை8, காலை 10 மணி, மாலை எனவெவ்வேறு நேரங்களில் பாடி வழிபட்டதும் உண்டு.
தொடக்கத்தில் பதட்டம் இருந்த சூழலில் மேடையில் பாட விரும்பு கிறவர்கள் காவல்துறையை அணுக வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பாளர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் அமைதிக் கூட்டம் நடந்து எழுத்துப்பூர்வமாக செய்து கொள்ளப் பட்டதுதான் நான் குறிப்பிட்டஉடன்பாடு. காலை வேளையைத் தவிர பிற காலங்களில் பாடமாட்டோம் என்பது அதன் பொருளல்ல என எல்லோருக்கும் புரியும். 'தொரட்டி'க்கு மட்டும் அது புரியவில்லை. அரசாணைக்கு மாறாக உள்ளூர் காவல்நிலையத்தில் எழுதிக் கொள்ள முடியாது.
நாம் அவ்வாறு செய்யவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஏதோ ம.க.இ.க. பெற்றுத்தந்த ஆறுகால வழிபாட்டு உரிமையை ஒரு காலமாக வெட்டிக் குறுக்கிவிட்டதாக த.தே.பொ.க. மீது 'புதிய ஜனநாயகம்' அவதூறு அள்ளி வீசுகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மீதும், வ.சுப.மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள் மீதும் ம.க.இ.க. வசைமாரி பொழிந்தாலும் தில்லைப் பிரச்சினையில் ம.க.இ.க.வின் பணியை நாம் குறைத்துக் கூறியதே இல்லை.
அதேநேரம் "ம.க.இ.க.வின் அரசியலானது சாரத்தில் இந்திய ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது. இந்துமதம், இடஒதுக்கீடு குறித்த அதன் பார்வை பார்ப்பனியத் திற்குச் சேவை செய்கிறது" என்ற நமது திறனாய்விலும் மாற்றமில்லை.

0 கருத்துகள்:

விலை உயர்வு : தாராளமயத்தின் பரிசு


தாராளமயப் பொருளியல் கொள்கையின் கொடும் விளைவாய் விலைவாசி விண்ணை முட்டுகிறது. அனைத்துச் சிக்கல்களுக்கும் சந்தை நாயகமே தீர்வு என்று மந்திரம்போல் உச்சரித்து வந்த பிரதமர் மன்மோகன்சிங் ""விலைவாசிச் சிக்கலை தீர்ப்பதற்கு என்னிடம் ஒன்றும் மந்திரக்கோல் இல்லை. இது உலகுதழுவிய ஒரு பிரச்சினை'' என்று கைவிரிக்கிறார்.""உலக நாடுகள் ஒன்றுபட்டு முயன்று ஏதாவது செய்யுங்கள் அப்போதுதான் உணவுக் கலவரம் உலகமயமாக மாறாமல் தடுக்கமுடியும்'' என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் யாருக்கோ வேண்டுகோள் விடுக்கிறார். ""கையில் காசு இருந்தால் விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினையே அல்ல'' என்று தத்துவம் தருகிறார் முதலமைச்சர் கருணாநிதி.

டிசம்பர் 2007 வøர ஆண்டு விலைவாசி உயர்வு 4 விழுக்காடு என்று இருந்தது, 2008 மார்ச் இறுதியில் 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்திய சேமவங்கி கூறுகிற அபாய அளவான 5 விழுக்காட்டையும் தாண்டி மிக அபாய அளவை நோக்கி விலை உயர்வு விøரந்து செல்கிறது. இந்தக் கணக்குக்கூட மொத்த விலைவாசிக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கூறப் படுவதாகும்.
உண்மையில் மக்கள் சந்திக்கிற சில்லøர விலை உயர்வு இதைவிடப் பன்மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக, 2008 மார்ச்சுடன் முடிந்த கடந்த 12 மாதங்களில் வனஸ்பதியின் (டால்டா) விலை மொத்த வணிகத்தில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சில்லøர வணிகத்தில் 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. அரிசி விலை மொத்த சந்தையில் 8 விழுக்காடு உயர்ந்துள்ளது. சில்லøரச் சந்தையில் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் மொத்த வணிகத்தில் 9 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சில்லøரச் சந்தையில் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. கோதுமை மாவு 0.5 விழுக்காடு மொத்த வணிகத்தில் விலை உயர்ந்துள்ள போது சில்லøரச் சந்தையில் 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. இரும்புக்கம்பிகளின் விலை 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை ஒவ்வொரு நாளும் கணிக்க முடியாத வகையில் உயர்ந்தும் மாறியும் வருகிறது. உயிர்காக்கும் மருந்துகள் சில்லøரச் சந்தையில் 300 விழுக்காடு உயர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட 1960களின் இறுதியில் சந்தித்த விலைவாசி உயர்வை இன்று இந்தியா சந்தித்து வருகிறது. அன்றைக்கு ஏற்பட்ட உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தார்கள். ஆனால் இன்று அந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த உணவுப் பஞ்சம் உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. செனிகல், கேமரூண், கென்யா, வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலவரம் நடந்துவருகிறது.
காசு கொடுத்தாலும் உணவு கிடைக்காதவர்களும், உயர்ந்துள்ள உணவுப் பொருள் விலையை எதிர்கொள்ள முடியாதவர்களும் இந்நாடுகளில் மோதிக் கொள்கிறார்கள். உணவு உற்பத்தியும், கொள்முதலும் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டில் கூட நெருக்கடி கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 1கோடியே 97 இலட்சம் உணவு வழங்கல் அட்டைகள் (÷ரஷன் கார்டு) வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் அரிசி உள்ளிட்டு அனைத்துப் பொருள்களும் வாங்குகிற வறுமைக் கோட்டு மக்களின் பச்சை அட்டை சுமார் 1கோடியே 86 இலட்சம் ஆகும். அரிசி தவிர பிற இன்றியமையாப் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வெள்ளை அட்டைக்காரர்கள் சுமார் 10 இலட்சம் பேர். மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கிக் கொள்ளும் பழுப்பு அட்டைக்காரர்கள் 42 ஆயிரம் பேர். மீதமுள்ளவர்கள் ÷ரசன் கடைகளில் ஒரு பொருளும் வாங்காத உயர்வருமானப் பிரிவினர்.
பச்சை அட்டைக்காரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 2 வீதம் மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்குவதாக ஏற்பாடு. ஆனால் இது நடைமுறையில் 10 கிலோவாகக் குறைக்கப்பட்டு விட்டது என்ற கூக்குரல் பரவலாக எழுந்து வருகிறது. இதற்குக் காரணம் இந்திய அரசு மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருவதேயாகும். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இந்திய அரசு உணவு மானியத்தை வெகுவாக வெட்டி வருவதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசிக்கு கிலோவுக்கு 2ரூபாய் 70 காசு மானியமாக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. ரூபாய் 11 விலையுள்ள 1கிலோ மத்திய தொகுப்பு அரிசியை ரூ.8.30 கொடுத்து தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. அதனை ரூ.2க்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.6.30 தமிழக அரசு அளிக்கிற மானியம். தமிழ்நாட்டு நியாயவிலைக் கடைகள், அரசு மருத்துவ மனைகள், சிறைச்சாலைகள், முதியோர் உதவித்திட்டங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் அரிசியில் 40 விழுக்காடுதான் தமிழ் நாட்டில் கொள்முதல் செய்யப் படுகிறது.
தமிழ்நாட்டில் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்வது ஆண்டுக் காண்டு குறைந்தும் வருகிறது. எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு 15.38 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 10.38 இலட்சமாக அது குறைந்துள்ளது. தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருப்பிலுள்ள அரிசி மற்றும் நெல் இவற்றின் மொத்த அளவே 6.83 இலட்சம் டன்தான். இது செப்டம்பர் மாதம் வøரயிலும் தான் வழங்கலுக்கு போதுமானது. அதன் பிறகு உள்ள தேவைகளுக்கு என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்திய அரசு அண்மையில் டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் பெட்÷ரால் விலையை 2 ரூபாயும் உயர்த்தியது. இந்த விலைஉயர்வு அனைத்துப் பொருள்களின் விலையையும் ஏற்றிவிட்டது.
பெட்÷ரால், டீசல் மீது அரசு வரிவிதிப்பைச் சற்றே குறைத்திருந்தால் கூட அரசின் வரி வருமானத்தைப் பாதிக்காமலேயே இந்த விலையுயர்வைத் தவிர்த்திருக்க முடியும். அவ்வாறான மக்கள் நலப் பார்வை இந்திய அரசுக்கு இல்லை. இது விலை உயர்வை தீவிரப் படுத்துவதில் போய் முடிந்தது. சிமெண்ட் முதலாளிகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயற்கையாக விலையை உயர்த்துவது ஊரறிந்த ரகசியமாகும்.

அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு எதையும் இந்திய அரசு செய்வதில்லை. அதேபோல் இரும்பு ஏற்றுமதியாளர்கள் தங்கள் கொள்ளை இலாபத்திற்காக உள்நாட்டுச் சந்தையிலும் இரும்பு விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள்.

ஏனெனில் சீனச் சந்தை மிகப்பெரும் வாய்ப்பை இரும்பு ஏற்றுமதி யாளர்களுக்கு திறந்துவிட்டுள்ளது. அதேபோல் அய்÷ராப்பிய நாடுகளிலும் இரும்புச் சந்தை விரிவடைந்து வருகிறது. அங்கு நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தியாவிலுள்ள இரும்பு ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரும் இலாப விலை கிடைக்கிறது. இந்த உலகச் சந்தை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டிலும் இரும்பு உற்பத்தியாளர்கள் செயற்கையாக விலையை உயர்த்துகிறார்கள்.
இது சிறுபட்டறை உற்பத்தியில் பெரும்பங்காற்றி வரும் தமிழ்நாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. இரும்பு விலையும், நிலக்கரி விலையும் சேர்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் 300 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவையைச் சுற்றியுள்ள இரும்புப் பட்டறை உற்பத்தியாளர்கள் ஏறத்தாழ 5000 பேர் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

விலைவுயர்வுப் பிரச்சினைக்கு இந்திய அரசிடம் எந்த உருப்படியான தீர்வும் கிடையாது. ஆனால் இந்த சிக்கலையும் உழவர்களுக்கும் உழைப்பாளர் களுக்கும் எதிராகத் திருப்பிவிடுவதில் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு வேளாண் விலை நிர்ணயக் குழு பரிந்துøரத்தபடி குவிண்டால் நெல்லுக்கு ரூ.1000 வழங்க முடியாது என்று தில்லி உணவு அமைச்சர் சரத்பவார் கைவிரித்துவிட்டார். அரிசி விலை உயர்வை இதற்குக் காரணம் காட்டுகிறார்.

சந்தையில் அரிசி விலை உயர்வது நெல் உழவர்களுக்கு இலாபகரமான விலை வழங்கியதால் அல்ல. அதேபோல் எள், நிலக்கடலை, தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் விலை உயராத போதும் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சோப்பு, வனஸ்பதி போன்ற பொருள்களின் விலை மட்டும் கடுமையாக உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.இதற்கு முதன்மையான காரணம் உழவர்கள் அல்லர். சில்லøர வணிகர்களும் அல்லர். இணைய தள (ஆன் லைன்) வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மிகப்பெரும் வணிக நிறுவனங்களும் சில்லøர வணிகத்தை கைப்பற்றி வரும் பன்னாட்டு வடநாட்டு பெருமுதலாளிகளுமே ஆவர்.
இந்தப் பெருவர்த்தக நிறுவனங்கள் ஒப்பந்த வேளாண்மையின் மூலமாகவும், தமது முகவர்களின் வழியாகவும் குறைந்த விலைக்கு உழவர்களிடமிருந்து வேளாண் விலை பொருள்களை கொள்முதல் செய் கிறார்கள். இவற்றை இந்திய அரசுக்குச் சொந்தமான கிட்டங்கிக் கழகம், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், சிறு நகரங்களிலுள்ள கோயில்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற பொது இடங்கள் ஆகிய வற்றில் சேமித்து வைக்கிறார்கள். உண்மையில் இது சேமிப்பு அல்ல. பதுக்கலே ஆகும்.
இவ்வாறு இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் வைக்கப் பட்டுள்ள பொருள்களுக்கு இணைய தளத்தின் மூலம் விலை கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒரு பெரு வணிகர் தன்னிடம் 1 இலட்சம் மூட்டை எள் இருப்பதாக அறிவித்து அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை இணைய தளத்தில் அறிவிக்கிறார். இதைப் பார்க்கிற இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இன்னொரு வணிகர் இதில் 10ஆயிரம் மூட்டையை "வாங்குவதற்கு' முன்வருவதாக அறிவிக் கிறார். இப்படி "வாங்குகிறவர்' உடனடியாக முழுப்பணத்தையும் செலுத்தி விடுவதில்லை. 10 விழுக்காடு தொகையை பெருவணிகரின் கணக்கில் செலுத்திவிட்டால் போதும். அந்தப் 10ஆயிரம் மூட்டை இவருக்கு உரியதாகக் குறிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை அவர் எப்போது செலுத்துகிறா÷ரா அப்போது தனது சரக்கை கிட்டங்கியி லிருந்து எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இவர் உடனடியாக மீதத் தொகையைச் செலுத்தி சரக்கை எடுக்கமாட்டார்.
அதற்கு பதிலாக இந்த 10ஆயிரம் மூட்டையை தனக்குத் தேவையான இலாபத்தையும் சேர்த்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனது இணையதள முகவரியில் அறிவிப்பார். அதைப் பார்க்கிற சிறுவணிகர் அந்தத் தொகையைக் கொடுத்தால் இவரிடமிருந்து சரக்கை எடுத்துச் செல்லலாம். இவ்வாறுதான் ஆன் லைன் வர்த்தகம் நடைபெறுகிறது.

உண்மையில் சரக்கு கைமாறாமலேயே கைமாறியதுபோல் கணக்கிடப்பட்டு விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறது. தங்கள் கண்களால் பார்த்திராத, தாங்கள் கையாளாத சரக்குகளை வெறும் ஊக வணிகத்தில் கைமாற்றிவிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறார்கள் பெரும் வணிகர்கள். இவர்களுடைய ஊக இலாபமெல்லாம் கடைசியில் நுகர்வோர் தலையில் சில்லøர விலையாக உயர்த்தி வைக்கப்படுகிறது.உற்பத்தி செய்த உழவர்களுக்கு இந்தச் சந்தை விலையேற்றத்தால் பயன் ஏதும் இல்லை.
நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இப்போது வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் ரிலையன்ஸ், பிர்லா, ரகேஜா போன்ற வடநாட்டு நிறுவனங்களும் சில்லøர வணிகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டன. இந்நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் பல்லாயிரக் கணக்கான டன் இன்றியமையாப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையாக விலை உயர்வை ஏற்படுத்திக் கொள்ளையடிக்கின்றனர்.
இப்பெருநிறுவனங்களிடமிருந்து பதுக்கலை எடுத்து விலையைக் குறைக்க இந்திய அரசு முன்வருமா என்ற கேள்வி நேருக்கு நேர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது ""இது மத்திய அரசின் பணி அல்ல மாநில
அரசாங்கங்களின் வேலை'' என்று கூறி ப.சிதம்பரம் நழுவினார்.

ஒரு பக்கம் விலை உயர்வுக்குக் உலக நாடுகள் காரணம் என்று சொல்லியும். மறுபுறம் பதுக்கலை எடுப்பது மாநில அரசாங்கங்களின் கடமை என்று சொல்லியும் தமது கடமையை தட்டிக் கழிப்பதில் ப.சிதம்பரம் குறியாய் இருக்கிறார். இந்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமயகொள்கைதான் இச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

தாராளமயப் பொருளியல் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கிய 1990களுக்குப் பிறகு வேளாண்மை குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுவøரஉணவு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு 1.7 விழுக்காடு என்று இருந்தது. 2000ஆம் ஆண்டில் 0.5 விழுக்காடாக வீழ்ந்தது. 2006இல் முழுவதும் தேக்கநிலையை அடைந்தது. இதன் காரணமாக ""1991இல் உணவுதானிய உற்பத்தி தலா 510 கிராம் என்று இருந்தது, 2005இல் தலா 422 கிராம் என்று குறைந்து 2006இல் 412 கிராம் என்று மேலும் வீழ்ந்தது'' என்று பொருளியல் அறிஞர் உட்சா பட்நாயக் அம்மையார் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய எச்சரிக்கையாகும். (Frontline ஏப்ரல்,25,2008) மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தனிநபர் உணவு வழங்கல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் உற்பத்திக்கும் தேவைக்கும் இடைவெளி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது வெளிப்படை.
வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்து இதனை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்பதே அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. உணவு உற்பத்தியை விட பணப் பயிர் வேளாண் மையில் இறங்கினால் தான் உழவர்கள் வாழ்வு செழிக்கும் என்பதையே மன்மோகன் சிங் மீண்டும் மீண்டும் அறிவித்தார். அயல்செலாவணிக் கையிருப்பு ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்வது திட்டமிட்ட வகையில் செயல் படுத்தப்பட்டது. இதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் கொள்கை என மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்தது.

அயல்செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பதை தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி என்று இந்தக் கூட்டணி பறைசாற்றியது. 1980களின் இறுதியில் சந்திரசேகர் பிரதமராக இருந்தபொழுது அயல்செலாவணி கையிருப்பு கøரந்துபோய் கையிலிருந்த தங்கத்தை அடகு வைத்து காலத்தைக் கடத்த வேண்டிய நிலமையிலிருந்து இன்று 30,000 கோடி டாலர் அயல் செலாவணி கையிருப்பு இருப்பதை தங்கள் கொள்கையின் வெற்றி என்று இந்தக் கூட்டணி அறிவித்தது. ஆனால் இது இரண்டு முனையில் சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒன்று, உணவுதானிய வேளாண்மையானது குறைக் கப்பட்டு பணப் பயிøர நோக்கி திருப்பிவிடப்பட்டது.
அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிøர நோக்கி விரட்டப்பட்டார்கள். இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப் பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன.

உலகச் சந்தையில் இந்திய பணப்பயிர்கள் மட்டுமின்றி பல பின்தங்கிய நாடுகளின் பணப் பயிர்களும் போட்டியிட்டன. எனவே ஏற்றுமதிக்கு மானியம் அளித்து செயற்கையாக விலையைக் குறைத்து உலகச் சந்தையில் விற்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த மானியமும் ஏற்றுமதியில் ஈடுபட்ட வணிகர்களுக்கே கிட்டியது. உழவர்களுக்கு கொள்முதல் விலை குறைக்கப்பட்டது.

எனவே பருத்தி உள்ளிட்ட பணப்பயிர் சாகுபடி செய்த உழவர்கள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு கடனை இறக்குமதி செய்து கொண்டார்கள். ஆந்திரா, விதர்ப்பா உள்ளிட்ட பருத்தி சாகுபடிப் பகுதிகளில் உழவர்கள் தற்கொலை அதிகரித்ததின் பின்னணி இதுதான்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் எரிஎண்ணெய் தேவைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆனால் எரி எண்ணெய் விலையோ கடந்த இரண்டாண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துவிட்டது. பெட்÷ராலியப் பொருள்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டால் புவிவெப்பமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அபாய அளவை எட்டின. இந்நிலையில் பெருகிவரும் எண்ணெய்த் தேவையை ஈடுசெய்யவும், சுற்றுச்சூழல் சீர்கேடு தீவிரமடையாமல் தடுக்கவும் எத்தனால் (ஞுtடச்ணணிடூ) போன்ற உயிரி எரிபொருள்களைப் பயன்படுத்துவதை வளர்ச்சி யடைந்த நாடுகள் அதிகரித்தன. இச்சிக்கலை உலக மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று முதன் முதலில் எச்சரிக்கை விடுத்தவர் பிடல்காஸ்ட்÷ரா தான். (விரிவிற்கு காண்க@ தமிழர் கண்ணோட்டம், மே 2007)

வடஅமெரிக்கா, அய்÷ராப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவற்றில் சோளம், கோதுமை, கரும்பு முதலியவை இந்த உயிரி எரிபொருள் தேவைக்காக திருப்பி விடப்பட்டன. இதனால் இந்நாடுகளிலிருந்து ஏற்றுமதிக்கு கிடைக்கும் உணவுதானியங்கள் குறையத் தொடங்கின. மறுபுறம் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வளர்ந்துவரும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் உணவில் இறைச்சியையும் கால்நடை சார்ந்த பொருள் களையும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர்.
இது சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை தீவனத் தேவைக்கு எடுத்துச் செல்லும் போக்கை அதிகரித்தன. இவையெல்லாம் சேர்ந்து உலகச் சந்தையில் உணவுதானிய வழங்கலை வெகுவாகக் குறைத்தன. இந்திய அரசு உணவுதானிய வேளாண்மையைப் புறக்கணித்து வெளிநாடுகளிலிருந்து உணவு தானியத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற அணுகுமுறையும் தோல்வியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாவதாக, அதிகரித்து வரும் அயல் நாணயக் கையிருப்பு பெரும்பாலும் டாலர் நாணயத்திலேயே இருப்பதால் இன்னொரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க டாலரின் வரத்து கடந்தாண்டில் மட்டும் 10ஆயிரம் கோடி ஆகும். அதேநேரம் டாலரின் மதிப்புவீழ்ந்துவருகிறது. இதன் காரணமாக ரூபாய் நாணயப் புழக்கம் அதிகரித்து எதிர்பாராத அளவில் பணவீக்கத்தை அதிகரித்தது. இந்த டாலøர வாங்கி சேமித்து வைப்பதன் மூலமாக இந்திய சேமவங்கி பணப்புழக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு படாதபாடுபட்டு வருகிறது. இதுவும் அதன் உயர் வரம்பை எட்டிவிட்டது.
இதற்கு மேல் டாலøர வாங்குவதன் மூலம் பணம் வீக்கத்தை கட்டுப் படுத்துவது முடியாத காரியம். வளர்ச்சியடைந்த நாடுகள் உணவுதானியங்களை எத்தனால் உற்பத்தியை நோக்கி திருப்பி விட்டிருப்பதால் உணவுதானிய விலை உலகச் சந்தையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. எனவே 1960களில் செய்தது போல இறக்குமதியின் மூலம் உணவுப் பொருள் தட்டுப்பாட்டை ஈடுகட்டவும் முடியாது. தாங்கள் இதுகாறும் கடைபிடித்து வந்த தாராளமயக் கொள்கையின் தோல்விதான் இப்போது ஏற்பட்டுள்ள விலையேற்றம் என்பதை ஏற்றுக் கொண்டு அதனைச் சரிசெய்ய வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக இதையும் உழவர் களுக்கு எதிராகத் திருப்பி விடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். உணவு எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப் படுத்துவது என்ற பெயரில் 10 இலட்சம் டன் உணவு எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்திருக் கிறார்கள். இது தற்காலிகமாக சந்தையில் உணவு எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தக் கூடும். ஆனால் எண்ணெய் வித்து உழவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த இறக்குமதியால் உள்நாட்டு உழவர்களின் எண்ணெய் வித்துச் சந்தை பறிக்கப்படுகிறது. இன்றைக்கு உள்ள அயல்நாணயக் கையிருப்பை காரணங்காட்டி இதைத் தவிர வேறுவாய்ப்பில்லை என்று அரசு வாதிடுகிறது. ஆனால் உண்மையில் இறக்குமதிச் சந்தையில் கோலோச்சுகிற பன்னாட்டு நிறுவனங்களையும் வடநாட்டு நிறுவனங்களையும் பாதுகாத்து உள்நாட்டு உழவர்களை சந்தையை விட்டுத் துரத்துவதில்தான் இது முடியும். தமிழகத்திற்கு இதில் முன்அனுபவம் உண்டு. 1970களில் உணவுதானிய உற்பத்தியில் குறிப்பாக நெல் உற்பத்தியில் தேவைக்கும் வழங்கலுக்கும் பெரிய இடைவெளி இருந்ததை காரணம்காட்டி தமிழகச் சந்தையை ஆட்சியாளர்கள் திறந்துவிட்டார்கள். ஆந்திரா அரிசியும் கர்நாடக அரிசியும் மத்திய தொகுப்பு என்ற பெயரால் பஞ்சாப் அரியானா அரிசியும் தமிழ்நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்தன. இன்று தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி கிட்டத்தட்ட தன்னிறைவை எட்டும் அளவுக்கு இருந்தபோதிலும் தமிழகச் சந்தை தமிழ்நாட்டு உழவர்களுக்குக் கிடைக்கவில்லை. அயல் மாநில அரிசிகளை தமிழகச் சந்தையிலிருந்து விரட்ட முடியவில்லை.

இதே நிலை உணவு எண்ணெய் இறக்குமதியின் காரணமாக எண்ணெய் வித்து உழவர்களுக்கும் ஏற்பட இருக்கிறது. இதற்கு முன்னர் வாஜ்பாய் ஆட்சியில் மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் (பாமாயில்) ஏராளமாக இறக்குமதியானதால் உள்நாட்டில் எண்ணெய் வித்து விளைவித்த உழவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். ஏற்கெனவே உலகச் சந்தை நிலவரத்தின் காரணமாக பருத்தி உழவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டினோம். உணவுதானிய உற்பத்தியும் செய்ய முடியாது, பணப்பயிர் சாகுபடியும் பயன்தராது என்ற நிலையில் உழவர்கள் வேளாண்மையை விட்டு விரட்டப்படுவது தீவிரம் பெறும்.
விலையேற்றப் பிரச்சினையை உழவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் அரசாங்கமும் வலது சாரி, இடது சாரி அரசியல் கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன. சி.பி.எம். கட்சியோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ அல்லது ம.தி.மு.க.வோ எந்தக் கட்சி விலைவாசிப் பிரச்சினைக்கு போராட்டம் நடத்தினாலும் அவர்கள் எடுத்துக் காட்டுவது காய்கறி விலையைத்தான். ஆர்ப்பாட்டம் செய்கிற இளைஞர் அமைப்பின÷ரா மகளிர் அமைப்பின÷ரா காய்கறிகளை மாலையாகப் போட்டுக் கொண்டு கையில் அரிசி, பருப்பு போன்றவற்றை ஏந்திக் கொண்டு விலை உயர்வு எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தை நடத்துவது வழக்கமாகிவிட்டது. இவர்கள் யாரும் கையில் ஒரு சிமெண்ட் பொட்டலத் தையோ, உயிர் காக்கும் மருந்து பாட்டிலையோ, வேறு பொருள்களையோ வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை.
இன்றியமையாப் பொருள் என்ற பெயரால் உழவர்கள் விளைவிக்கும் பொருள்களைத்தான் இவர்கள் குறிவைத்துத் தாக்குகிறார்கள். ஒரு கொப்பøர தேங்காய் கொள்முதல் விலை குறைந்தது 5ரூபாய் வேண்டும் என்று உழவர்கள் கோரினால் அதனை எதிர்ப்பதில் பா.ஜ.க.வும் தேர்தல் கம்யூனிஸ்ட்டுகளும் ஒ÷ர நிலையில் இருப்பதைப் பார்க்கமுடியும். சிமெண்ட், இரும்பு, மருந்து போன்றவை பெரும் பாலும் பெருமுதலாளிய நிறுவனங்களால் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் காய்கறி, அரிசி, பருப்பு முதலியவற்றை உற்பத்தி செய்பவர்கள் கோடிக்கணக்கான உழவர்கள். இவர்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பது கிராமப் பொருளாதாரத்தை பாதுகாக்கும். நிலத்திலிருந்து அவர்கள் வெளியேறாமல் பாதுகாக்கும்.
தமிழர்களின் தாயக நிலம் வேற்றாருக்கு கைமாறாமல் பாதுக்கப்படும். ஒரு தேநீர் விலையை விடக் குறைவான விலைக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதை காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலை கொடுக்காமல் ஆட்சியாளர்கள் மறுப்பது இந்த அணுகுமுறையின் காரணமாகத்தான். அரசு தனது மானியச் செலவை உயர்த்திக் கொள்வதற்குமுன்வராமல், வாக்கு வாங்குவதற்காக தாங்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோடிக் கணக்கான உழவர்களைப் பழிவாங்குகிறார்கள்.

இந்த அணுகுமுறை கிராமப்புறத்தில் பணச் சுழற்சியே இல்லாமல் மட்டுப்படுத்தி, உழவர்களை நகரங்களை நோக்கி விரட்டுகிறது. நகரங்களில் பல்வேறு சமூக பதட்டங்களும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் இதன் காரணமாக தீவிரப்படுகின்றன. "வருமானத்தை அதிகரித்தால் விலையேற்றம் ஒரு பிரச்சினையே அல்ல' என்ற முதலமைச்சர் கருணாநிதியின் அணுகுமுறைதான் ஒட்டுமொத்த இந்திய ஆட்சி யாளர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. அதற்காக எல்லா மக்களின் வருமானத்தையும் இவர்கள் உயர்த்தி விடுவதில்லை. குரல்கொடுக்கும் வலுவுள்ள நடுத்தர வர்க்கத்தை சரிக்கட்டிக் கொண்டு தங்கள் மக்கள் வி÷ராத, பொருளியல் கொள்கையை ஆட்சியாளர்கள் தங்கு தடையின்றிச் செயல்படுத்திக் கொள்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துøர இந்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக இடைமட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு இரண்டு மடங்கிலிருந்து மூன்று மடங்குவøர ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அரசு ஊழியர்களும் சில ஒழுங்கமைக் கப்பட்ட தொழிலக ஊழியர்களும் விலைவாசிக்கேற்ற அகவிலைப்படி பெறுகிற வாய்ப்பில் வைக்கப் பட்டுள்ளார்கள். இப்போது ஏற்படும் விலை உயர்வு இவர்களைப் பெருமளவு பாதிப்பதில்லை. இந்த வாய்ப்பில்லாத உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத தற்காலிகத் தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் போன்ற பிரிவினர் விலை உயர்வுத் தாக்குதலை எந்தப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் எதிர்கொள்ளுகிறார்கள். இந்தத் தாராளமய பொருளியல் கொள்கை மாறினாலே தவிர இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுச் சிக்கலிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாது. தாராளமய தனியார்மயக் கொள்கை தோல்வி யடைந்து வருவதை உலக பொருளியல் நிலைமை எடுத்துக்காட்டுகிறது.

இங்கிலாந்தில் திவாலாகிவிட்ட நாதர்ன்ராக்(Northern Rock Bank) வங்கியை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டதும் அமெரிக்காவின் பேர்ஸ்டேன்ஸ் (Bear Stearns Bank) வங்கியை அமெரிக்க அரசு ஏற்றுள்ளதும் இந்தத் தாராளமயக் கொள்கை தோல்வியடைந்ததற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இந்திய பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்ட போது ஒ÷ர நாளில் இந்திய சேம வங்கி 1700 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் ஈடுபடுத்தி சந்தை சரியாமல் முட்டுக்கொடுக்க முனைந்ததும், ரூபாய்க்கு எதிரான டாலர் நாணய மதிப்பு சரியும்போது இந்திய சேமவங்கி டாலøர வாங்கிக் குவித்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க முனைந்ததும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. இதனைப் படிப்பினையாகக் கொண்டு இந்திய அரசு சந்தை நாயகத்திற்கு அடிபணியாமல் மக்கள் சார்பில் சந்தையில் தலையிட வேண்டும்.

* இணையதள வர்த்தகச் சூதாட்டத்தை (ஆன்லைன் வர்த்தகம்) தடைசெய்ய வேண்டும்.

* உணவு தானியங்கள் மற்றும் வேளாண்மை விளைபொருள்களுக்கு இலாபகரமான விலை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

* உணவுதானிய வர்த்தகத்திலும், இன்றி யமையாப் பொருள் வணிகத்திலும் கார்கில், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ், பிர்லா, பாரதிமிட்டல், öரகேஜா போன்ற வடநாட்டு பெருநிறுவனங்களும் ஈடுபடுவதைத் தடைசெய்ய வேண்டும்.

* செலவுக்குறைவான, நீர், நிலவளங்களைப் பாதுகாக்கும் இயற்கை சார்ந்த நீடித்த சாகுபடிகளுக்கு வேளாண் மானியத்தை அதிகமாக அளித்து அவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

* வேளாண்மை சார்ந்த மக்கள் தொகையை குறைப்பதுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற மேற்கத்திய அணுகுமுறையைக் கைவிட்டு சிறு நிலவுடைமையாளர்களை அடிப்படையாகக் கொண்ட வேளாண் உற்பத்தியைச் சார்ந்திருக்கும் அணுகு முறைக்கு திரும்பவேண்டும்.

* புன்செய் தானிய உற்பத்தியைத் தீவிரப் படுத்துவது, பழம், காய்கறி ஆகியவற்றைச் சேமிக்க உற்பத்தி இடங்களுக்கு அருகே குளிர்பதன கிட்டங்கிகள் அமைப்பது போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அரிசி உணவு மட்டுமே சாப்பிடும் ஒற்றை உணவு முறையிலிருந்து கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட கலப்பு உணவுப் பழக்கத்திற்குத் தமிழர்கள் திரும்ப வேண்டும். அரசு இவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

* வேளாண்மைத் துறையில் அரசின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

*சிறுதொழில் முனைவோருக்கு மானிய விலையில் இரும்பு உள்ளிட்ட இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

*விலைவாசியோடு இணையாத ஊதிய முறையே எந்த பிரிவு உழைப்பாளர்களுக்கும் இருக்கக் கூடாது.

இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு நெருக்கடி தாராளமய உலகமய பொருளியலால் விளைந்த ஒன்று; இக் கொள்கைக் கைவிடப்பட வேண்டும் என்ற விழிப் புணர்வுபடித்த இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும்.

0 கருத்துகள்: