கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

டார்பரும் தமிழீழமும் - தோழர் கி.வெங்கட்ராமன்

போர்க் குற்றங்களுக்காக சூடான் குடியரசுத் தலைவர் உமர் ஹாசன் அல் பசீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. தனது ஆட்சியின் கீழ் மேற்கு சூடானில் டார்ஃபர் பகுதியில் வாழ்ந்த ஃபர், மசாலித், ஜாகுவா ஆகிய இன மக்களை இனப்படுகொலை செய்தார் அல் பசீர். இதனை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணையைப் பிறப்பித்துள்ளது.

தனது ஆட்சியின் கீழ் மேற்கு சூடானில் டர்;ஃபர் பகுதியில் வாழ்ந்த ஃபா;, மசாலித், ஜாகுவா ஆகிய இன மக்களை இனப்படுகொலை செய்தார் அல் பசீர். இதனை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணையைப் பிறப்பித்துள்ளது. 2002-இல் இந்நீதிமன்றம் நிறுவப்பட்டதற்கு பிறகு ஒருநாட்டின் ஆட்சித்தலைவருக்கு எதிராக முதல்முறையாக இப்போதுதான் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டார்ஃபர் மக்களை அல் பசீர் ஆட்சி திட்டமிட்டு கொலை செய்தது, கொத்துக்கொத்தாக அழித்தொழித்தது, அவர்களது தாயகப் பகுதியிலிருந்து வெளியேற்றியது, சித்திரவதை செய்தது, பாலியல் வல்லுறவு கொண்டது, மருந்து உணவு கிடைக்காமல் டார்ஃபர் மக்கள் சிறுகச்சிறுகச் சாவதற்கு காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அல் பசீர் மீது முன் வைக்கப்பட்டது.

அல் பசீர் ஆட்சியின் திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக அப்பாவி மக்கள் ஏறத்தாழ 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். டார்ஃபர் மக்கள் சார்பில் ஆய்தப்போராட்டம் நடத்திய நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் (துரளவiஉந யனெ நுஙரயடவைல ஆழஎநஅநவெ-துநுஆ) அதன் தலைவர் கலீல் இப்ராஹிம் தலைமையில் கடந்த 2003-முதல் வீரஞ்செறிந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்தை தாக்குவது என்ற போர்வையில் அல் பசீர் ஆட்சி இக்கொலைகளை நிகழ்த்தியுள்ளது.

அல் பசீர் மீது இனக்கொலைக் குற்றம் (Genocide) மெய்ப்பிக்கப்படவில்லை என்ற போதிலும் அவர் தனது ஆட்சியைப் பயன்படுத்தி மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயலிலும் (Crimes Against Humanity) போர்க் குற்றத்திலும் (WarCrime) ஈடுபட்டார். என்பது மெய்ப்பிக்கப்பட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முடிவு செய்தது.அதன் அடிப்படையிலேயே கடந்த 2009 மார்ச் 4 அன்று கைதாணை பிறப்பித்தது. இதே போன்ற குற்றச் செயலில் ஈராக்கில் ஈடுபட்ட அமெரிக்க வல்லரசின் மீதோ, பாலஸ்தீன மக்கள் மீது இனக்கொலை குற்றம் புரிந்த இசுரேல் மீதோ சர்வதேச நீதிமன்றம் பாயவில்லை என்ற நியாயமான குற்றச்சாட்டு அல் பசீர் தரப்பில் வைக்கப்படுகிறது.

நமது கேள்வியெல்லாம் இதைவிட படுபாதகச் செயலில் ஈடுபட்டுள்ள சிங்கள ராஜபக்N‘ மீது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதே. அல் பசீர் தனது ஆட்சியின் கீழ் உள்ள குறிப்பிட்ட சில இன மக்களுக்கு எதிராக என்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ அதேவகை குற்றங்களை செய்தவர்தான் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே ஆவார்.

தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் விடுதலைப் புலிகளைத்தாக்குவது என்ற சாக்கில் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனக்கொலைப் போர் நடத்திவருகிறது. நீண்டநாள் பொருளாதார முற்றுகையிட்டு உணவு, மருந்து கிடைக்காமல் செய்வது, கொத்துக்குண்டுகளை வீசி தொகைதொகையாக அப்பாவி மக்களைக் கொன்றுக்குவிப்பது, அவர்களது தாயகத்திலிருந்து விரட்டியடிப்பது, பெண்கள் மீது வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவது, கையில் கிடைத்தவர்களை சித்திரவதை செய்வது ஆகிய அனைத்துக் குற்றச்செயல்களிலும் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.

சூடானில் டார்ஃபர் பகுதியிலிருந்து செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு அமைப்புகளை அல் பசீர் ஆட்சி வெளியேற்றியது போலவே தமிழீழப் பகுதிகளிலிருந்து செஞ்சிலுவை சங்கத்தையும் ஐ.நா. தொண்டு நிறுவனங்களையும் ராஜபக்சே வெளியேற்றினார். தமிழர்களாகப்; பிறந்ததற்காகவே இக்கொடுமைகளுக்கு அம்மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதத்தில் 9,985 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைக் குழுவே குற்றம் சாட்டியுள்ளது.

எனவே ராஜபக்சே மீது இனக்கொலைக் குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றம் ஆகிய மூன்றுவகை குற்றச்சாட்டுகளையும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியா இக்குற்றவாளிக்கு பக்கபலமாக இருப்பதால் அவர் தப்பித்துக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்: