கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

“தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற தமிழகப் பெருவிழாவில் சூளுரைப்போம்” தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு

தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற தமிழகப் பெருவிழாவில் சூளுரைப்போம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும்,தமிழ்க்காப்பணியின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
1956  நவம்பர் 1-இல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவானதை நினைவுக்கூர்ந்து ஆண்டுதோரும் தமிழ்க் காப்பணி அமைப்பு தமிழகப் பெருவிழாவைகொண்டாடி வருகிறதுஇதன்படி இந்த ஆண்டும் தமிழ்க்காப்பணி சார்பில் தமிழகப் பெருவிழா நேற்று(30.11.2012) வெள்ளி மாலை 5 மணியளவில் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
சிதம்பரம் மேலவீதி பெல்காம் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தமிழ்க்காப்பணியின் தலைவர்  பேராசிரியர் அழ.பழனியப்பன் அவர்கள் தலைமைத்தாங்கினார்துணைச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வரவேற்றுப் பேசினார்இராமசாமி செட்டியார் நகர மேனிலைப் பள்ளி மாணவர்கள் பி.அறிவன்,பி.ஆதவன்தனுஷ் ஆகியோரது சிலம்பாட்டமும்காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி இராஐஸ்வர்ய நிரஞ்சனி சதிராட்டமும்புவனகிரி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி பாண்டியன் குழுவினரின் நாட்டுப்புறக்கலையும்,  நகராட்சிப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி .ஹர்ஷினி தமிழிசைப் பாடலும்காண்போர் மனதை கவரும் வகையில் அமைந்தன.
தமிழ்க்காப்பணி சார்பில் சிதம்பரம் வட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்கான பரிசளிப்பும் நடைபெற்றது. புவனகிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த, கண் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி மாணவர், திரு. ம.அருள்செல்வன் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வென்று பார்வையாளர்களை ஈர்த்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்தமிழ்க்காப்பணி பொதுச்செயலாளர் திரு. பா.பழநிதிருமதிஜோதிமணி பழநி ஆகியோர்வெற்றிப் பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்விழாவில் தமிழ்க்காப்பணி அமைப்புக் குழு உறுப்பினரும், ஆசிரியரியருமான திருமு.முருகவேல்அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளித்துப் பேசியமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசும் போது, “இன்றைக்கு வேலைக்காகப் படிக்கும் போக்கு தான் தொடர்ந்து கொண்டிருக்கிறதுஅதிலும்ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் மோகம் தான் எங்கும் உள்ளதுஇதுமாற வேண்டும்தமிழ் வழியில் பாடங்களைஅதிலுள்ள கருத்துகளை புரிந்து கொண்டு படிக்கும் போக்கு வளர்ச்சி பெற வேண்டும்தமிழ்வழியில் பயின்றவர்கள்இன்று அறிவியலாளர்களாகவும்முக்கியப் பதவிகளில் செயல்படும் அதிகாரிகளாகவும் முன்னேறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்நமது கேரியார் என்பது நாம்எதை விரும்புகிறோமோ அதுவாகத்தான் அமைய வேண்டும்நமக்கு எதில் ஈர்ப்பும்ஈடுபாடும் இருக்கிறதோஅதுவே நம் கல்வியாக இருந்தால் நாம் நிறையசாதிக்க முடியும்பெற்றோர்களும்தம் பிள்ளைகளுக்கு எதில் ஈடுபாடு உள்ளதோஅதை அறிந்து கொண்டு அவர்களைப் படிக்க வேண்டும்பிள்ளைகள் மீது தம்விருப்பங்களைத் திணிக்கக் கூடாதுபொறியியல்மருத்துவம் போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல்சமூக அறிவியல்வரலாறு என நிறைய அறிவுசார்ந்த படிப்புகள்இன்றைக்கு வளர்ந்துள்ளனதமிழ்ச் சமூகத்தில்அதற்கானத் தேவையும் உள்ளதுஅத்தேவையை நிறைவு செய்யும் வகையில் நாம் படிக்க வேண்டும்” எனக்குறிப்பிட்டார்.
நிறைவாக சிறப்புரையாற்றியதமிழ்க்காப்பணியின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர்கி.வெங்கட்ராமன் அவர்கள், “1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதை நினைவுகூறும வகையில்இன்றைக்குத் தமிழகப்பெருவிழாவாக நாம் விழா எடுத்திருக்கிறோம்அவ்வாறு அமைந்த நாமது தாயகம்இன்றைக்கு ஒவ்வொரு உரிமைகளாக இழந்து கொண்டிருக்கிறதுநேற்றுதமிழக முதல்வருடன் நடத்தியப் பேச்சின் போதுகர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘காவிரியில் ஒரு சொட்டு நீரும் தரமுடியாது’ என கொக்கரித்திருக்கிறார்.தமிழ்நாட்டில் நிலவுகின்ற வறட்சியைக் கணக்கில் கொண்டுநாம் கேட்கும் நீரில் ஒரு பகுதியையாவது பேச்சுக்காவது கொடுக்கிறோம் என்று அவர்சொல்லவில்லைஎதுவுமே தரமாட்டோம் என சொல்லியிருக்கிறார்இது கர்நாடகாவின் இனவெறியைஇனவெறிப் பகையைதம் அப்பட்டமாக அடையாளம்காட்டுகிறதுஇந்திய அரசின் உறுதியான துணை இருப்பதால் தான்இவ்வளவுத் திமிரோடுகர்நாடகா இப்படி சொல்ல முடிகின்றது.
கர்நாடக முதல்வரின் அறிவிப்புஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறதென கொந்தளித்த தமிழக உழவர்களும்உணர்வாளர்களும் இன்றைக்குகாவிரி டெல்டா பகுதிகளில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மையை எரித்துள்ளனர்சிதம்பரத்தில்இன்று காலை தமிழக உழவர்முன்னணி சார்பில் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
காவிரி வெறும்தண்ணீர் சிக்கலல்லஅது ஓர் இனச்சிக்கல் என்பதையும்தமிழ் இனத்திற்கான மானச் சிக்கல் என்பதையும் தான் இந்நிகழ்வுகள் நமக்குஉணர்த்துகின்றனகாயம்பட்ட வேகத்தோடுகாவிரி உரிமை மீட்க நாம் போராட்டங்கள் நடத்த வேண்டியதே இன்றையத் தேவை.
மொழிவழி மாநில பிரிப்பின் போதுதமிழர் தாயகத்தில் இருந்த பல பகுதிகளை இந்திய அரசுஅண்டை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்ததுஅவ்வாறுதமிழர்கள்அதிகம் வாழ்ந்த தேவிகுளம்பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு வழங்கப்பட்டதால் தான்இன்றைக்கு அதே பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில்நமக்குள்ள உரிமையை கேரளா மறுத்துக் கொண்டுள்ளதுமுல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெற வேண்டியதமிழக உழவர்கள் வாழ்விழந்துநிற்கிறார்கள்நமது தாயகப் பகுதியானகச்சத்தீவை சிங்கள அரசுக்கு இந்திய அரசுக் கொடுத்ததன் விளைவாகத் தான்இன்றைக்கும் நமது தமிழ்நாட்டு மீனவர்கள்சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளனர்எனவே தமிழர்தாயகத்தைப் பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமான சிக்கலாகும்.
இன்றைக்கு தமிழ்நாட்டுப் பொருளியலும்வணிகமும் தமிழர் கைகளில் இல்லாத அளவிற்கு தமிழர் தாயகம் வெளியாரால் பறிக்கப்பட்டிருக்கிறதுஎனவே தான்,தமிழ்க்காப்பணி 1956க்குப் பின்தமிழகத்தில் குடியேறிய அனைவரயும் வெளியார் என வரையறை செய்துஅவர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது.அசாமில் 1971ஆம் ஆண்டுக்குப் பின்வந்தவர்களை வெளியாராகக் கணக்கிட்டுஇந்திய அரசு அங்குள்ள இயக்கங்களுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளதை இங்குநாம் நினைத்துப் பார்க்க வேண்டும்அந்த ஒப்பந்தம் மீறப்படும் போது தான்அங்கு சிக்கல் வெடிக்கிறதுநமக்கும் அதே போன்றதொரு கணக்கெடுப்பும்,ஆணையமும் நம் தாயகத்தைப் பாதுகாக்கத் தேவைதற்போது உடனடியாகதமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும்,குடும்ப அட்டையும் கொடுப்பதை தடுக்க வேண்டும்தாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்” என பேசினார்.
நிறைவில், தமிழ்க்காப்பணியின் பொருளாளர் திருசி.ஆறுமுகம் நன்றி கூறினார். இந்நிகழ்வில்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், உணர்வாளர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

தமிழ்ச் சர்வதேசியமும், நான்காம் உலகமும் - தோழர் கி.வெங்கட்ராமன்

நினைக்கும் தோறும், நினைக்கும் தோறும் நெஞ்சைக் கனக்க வைக்கும் இனப்படுகொலையையும், தமிழீழ விடுதலைக்கு வித்தான மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாள் 26-11-2012 அன்றும் அதைத் தொடர்ந்து ஒருவாரகாலமும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களாலும், தமிழ் நாட்டுத் தமிழர்களாலும் கடைபிடிக்கப்படவிருக்கிறது. தமிழீழத்தில் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்த முடியாத சூழல் இந்த ஆண்டும் நீடிக்கிறது.

தமிழீழ விடுதலைக்கு உயிரீகம் செய்த விடுதலைப்புலி மாவீரர்களுக்கும், இனப்படுகொலைப் போரில் உயிரிழந்த பல்லாயிரம் ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம்.
இந்த 21-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு முடிவதற்குள்ளாகவே உலகம் இதுவரைக் கண்டிராத மிகக் கொடுமையான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் சந்தித்தது. தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனம் உலகின் முக்கிய வல்லரசுகளின் துணையோடு, இட்லரைவிடவும் கொடுமையான சிங்கள சிறீலங்கா இனவாத அரசால் இன அழிப்புக்கு உள்ளானது.
2008-2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்த மனிதப் பேரவலம் ஊடகங்கள் அனுமதிக்கப்படாத வன்னிப் பெருநிலத்தில் நடந்தேறியது என்றாலும் இது சாட்சிகளற்ற போரல்ல. உலக நாடுகளின் தூதரகஙகளும், அவை சார்ந்த உளவு நிறுவனங்களும் நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்க, ஐ.நா வின் செயற்கைக்கோள் படமெடுத்து அனுப்பிக் கொண்டிருக்க, தமிழராகப் பிறந்த ஒரே காரணத்திற்காக பல்லாயிரம் மக்கள் நாள் தவறாமல் கொன்றழிக்கப்பட்டார்கள். அவர்களது தாயகம் தரைமட்டமாக்கப்பட்டது. தமிழீழத் தாயகம் போலவே தமிழீழப் பெண்களின் உடலும் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது. தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் " உலக சமுதாயமே, இந்தப் போரை நிறுத்து " என்று தமிழர்கள் எழுப்பிய மரண ஓலத்தை நாகரிக நாடுகள் செவிமடுக்க முன்வரவில்லை.
'பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ' என்று நியாயப்படுத்தப்பட்ட இந்தப் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தப் பின்னும் ஈழத்தமிழர்களின் கொடுந்துயரம் ஓயவில்லை. முள்ளிவாய்க்காலி லேயே மரணித்திருக்கலாம் என்று எஞ்சியுள்ள மக்கள் அரற்றும் அளவுக்கு அன்றாடம் தமிழீழ மண்ணில் கொடுமைகள் அரங்கேறுகின்றன. முள்ளிவாய்க்காலைவிட முள்வேலி முகாம் வாழ்க்கை கொடுமையானது, முகாமைவிட்டு வெளியேற்றப்பட்ட வாழ்க்கை அதைவிட அவலமானது என்ற வகையில் ஈழத்தமிழர்கள் சித்திரவதையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
காணிகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, இல்லங்களும் வழிபாட்டு இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர் தாயகம் சிங்கள - புத்த மயமாக்கப்பட்டு அங்கு அடுத்தக்கட்ட இனவதை - கட்டமைப்பு இனப்படுகொலை (Structural Genocide )- தொடர்கிறது. வடக்கு, கிழக்கை கூறுபோட்டு கலப்பின மாகாணங்களை உருவாக்கி, தமிழீழ தாயகத்தையே இல்லாது ஒழிக்கும் இன அழிப்பு முயற்சியில் இராசபட்சேயின் சிங்களப் பேரினவாத அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
ஆனால் எல்லாம் முடிந்தபிறகு, இப்போதுதான் வன்னிப் பெருநிலத்தில் 2009-ல் குற்றம் நடந்திருப்பதாக அதுவும் போர்க்குற்றம் நடந்திருப்பதாக பன்னாட்டுச் சமூகம் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவும் கூட புலம்பெயர் ஈழத்தமிழர்களின் இடைவிடாத அரசியல் அழுத்தத்தால் நடந்தது என்பதே உண்மை. சுயேட்சையான டப்ளின் தீர்பாயத்தின் அறிக்கையும், சேனல் 4 வெளிப்படுத்திய இனப்படுகொலைக் காட்சிகளும் மேற்குலக நாடுகளின் மனச்சான்றை உலுக்கின. இவற்றிற்குப் பிறகே உலகம் விழித்துப்பார்க்கத் தொடங்கியது. இந்தத் திசையில் ஐ.நா பொதுச்செயலாளரின் வல்லுனர் குழு அளித்த அறிக்கை முக்கியமான முன்னேற்றத்தைக் குறித்தது.
ஆயினும் இந்த அறிக்கை கூட வன்னிப்பெருநிலத்தில் நடந்தது போர்க்குற்றம் என்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் மட்டுமே வரையறுத்தது. இந்த அறிக்கை இன அழிப்பு (Persecution) நடந்ததை ஏற்றுக்கொண்டாலும் நடந்திருப்பது கொடுமையான இனப்படுகொலை (Genocide) என வலியுறுத்தவில்லை. 2008-2009ல் இறுதிக்கட்ட போர் நடந்தபோது நிகழ்ந்த குற்றங்களை மட்டுமே விசாரிக்குமாறு இக்குழு பணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்பவே இதன் அறிக்கையும் அமைய முடிந்தது.
மிகவும் வரம்புக்குட்பட்ட இந்த அறிக்கைக்கு கூட ஐ.நா மனித உரிமை மன்றத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை உலகமே பார்த்தது. இராசபட்சே அரசு தான் செய்த குற்றங்களை தானே விசாரித்து முடிவு கூறுமாறு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா தீர்மானத்தை முன் வைத்தது. ஐ.நா மனித உரிமை மன்றத்தின் எந்த வகைத்தலையீடும் இல்லாதவாறு இந்தியா அத்தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்தது.
இதன் மீது 2012 நவம்பர் 5-ல் ஐ.நா மனித உரிமை மன்றம் நடத்திய பதினெட்டாவது கூட்டத்தின் மீளாய்வானது, இத்தீர்மானத்தால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
பேரழிவுப் போர் முடிந்த கையோடு 2009ல் நடந்த வாக்கெடுப்பில் மட்டுமின்றி, கடந்த ஆண்டும், இப்போதும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கியூபா, வெனிசுவேலா உள்ளிட்ட 'முற்போக்கு' நாடுகள் இராசபட்சேயின் பக்கம் மீண்டும் மீண்டும் நின்றதை அனைவரும் அறிவர்.
இதற்கு முன்னர் உணராதிருந்தாலும் இப்போதாவது உலக அரசியலின் உண்மை நிலையை தமிழர்கள் உணரவேண்டும். பன்னாட்டு அரசியலில் மிகப் பெரும்பாலான நேரங்களில் மனித நேயம், மானுட ஞாயம் என்பதற்கெல்லாம் இடமே இல்லை என்பதே அந்த உண்மை. எல்லா நாட்டு அரசுகளும் தங்கள் தங்கள் தேச நலனை அல்லது தேச ஆதிக்க நலனை முன் வைத்தே இயங்குகின்றன. இந்த உலக சதுரங்கக் காய் நகர்த்தல்களுக்கிடையில் நம்முடைய ஞாயத்தை, தேச உரிமையை எப்படி முன்னெடுப்பது என்பதை உணர்ந்து, செயல்படுவதே தேவையாகும்.
நாம் ஏற்கெனவே எடுத்துக் கூறியது போல், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சிகளற்று நடந்த குற்றமல்ல. வல்லரசுகளின் துணையோடும், பெரும்பாலான நாட்டு அரசுகளின் மவுன சம்மதத்தோடும் நடந்தேறிய பேரழிவு ஆகும். போர் முடிந்து, இப்போது தொடரும் இனவதைகளும், தாயக அழிப்பும் உலக நாட்டு அரசுகள் அறியாமல் நடப்பதல்ல.
போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்ற அளவிலாவது சிங்கள ஆட்சியாளர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பது தேவைதான். என்றாலும், நடந்து முடிந்தது இனப் படுகொலைப் போர் என்ற உண்மையையும், சிங்கள சிறீலங்கா இனவாத அரசக் கட்டமைப்புக்குள் ஈழத்தமிழ்ர்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் உலக சமூகம் ஏற்கச் செய்வதே அடுத்தக் கட்ட நகர்விற்கான வழியாகும். தனித்த வரலாறும் பண்பாடும் கொண்டு விளங்கும் தனித்தன்மையுள்ள தேசம்தான் தமிழீழம் என்பது உணர்த்தப்பட வேண்டும்.
வெளிப்படையான இந்த உண்மையை பெரும்பாலான நாட்டு அரசுகள் தெரிந்தே வைத்திருக்கிறன. ஏனெனில், தனித்த தேச அரசோடு விளங்கிய தமிழீழம் சிங்களத்தோடு ஒற்றை ஆட்சியில் கட்டிப்போடப்பட்டது பிரித்தானிய காலனி ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற அண்மைக் கால வரலாறாகும்.
ஈழத்தமிழர்கள் ஒற்றை சிறீலங்காவில் வாழும் சிறுபான்மை சமூகம் அல்லர். அவர்கள் வரலாற்று ஓட்டத்தில் சிறீலங்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத் தேசத்தவர் ஆவர். இழந்த இறையாண்மையை மீட்டுக்கொள்ள தகுதியுள்ள தேசிய இனத்தவர் ஆவர்.
மலைபோன்ற இந்த உண்மையை உலக நாட்டு அரசுகள் தாமாக ஏற்க மாட்டா. முள்ளிவாய்க்கால் குறித்த ஐ.நா தீர்மானம் படும் பாட்டை வைத்தே இதனை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பன்னாட்டு அரசுகளுக்கு மக்கள் சமூகத்தின் அழுத்தத்தை ஏற்படுத்தி ஏற்கச்செய்ய வேண்டும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட தேசங்கள், ஒதுக்கப்பட்ட இனங்கள் ஆகியவற்றோடும், எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் சமூகங்களோடும் (civil society) இயக்க வழிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருசமூகத்திற்கு இன்னொரு சமூகம் உரிமைப் போராட்டங்களில் ஆதரவு தெரிவிக்கும் "மக்கள் உலகை" கட்டி எழுப்ப வேண்டும்.
மேற்குலக நாடுகளைக் கொண்ட முதல் உலகம், சீனா, ரசியா போன்ற நாடுகளைக் கொண்ட இரண்டாம் உலகம், இந்தியா, பிரேசில், வெனிசுவேலா போன்ற நாடுகளைக் கொண்ட மூன்றாம் உலகம் ஆகிய அனைத்தையும் சேர்ந்த மக்கள் உலகம் ஆகும் இது. நடைமுறையில் இது நான்காம் உலகமாக செயல்பட வேண்டும்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் இதன் தொடக்கப் புள்ளி எது?.
அது தமிழ்ச் சர்வதேசியமே (Thamizh Internationalism) ஆகும். பல்வேறு நாடுகளில் சிறுபான்மை சமூகமாக வாழும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கும் இதுவே அரணாக அமையும். தமிழ்ச் சர்வதேசியத்தை அச்சாகக் கொண்டே மேற்சொன்ன நான்காம் உலகைக் கட்டியெழுப்ப முடியும். 
சிங்கள சிறீலங்கா போலவே ஆரிய இந்தியாவும் தமிழினத்தின் மாற்றமுடியாத பகை நாடு என்ற அரசியல் தெளிவே தமிழ்ச் சர்வதேசியத்தின் அடித்தளமாகும். தமிழீழம் போலவே தமிழ் நாடும் ஆக்கிரமிக்கப்பட்ட அடிமைத்தேசம் என்ற பேருண்மையை ஏற்பது இதன் முன் நிபந்தனையாகும். தமிழீழமும், தமிழ் நாடும் வெவ்வேறு வரலாற்றுப் போக்கில் உருவான தமிழர்களின் வரலாற்று தாயகங்கள் ஆகும். இந்த இரண்டு தாயகங்களும் தத்தமது வழியில் தமக்கான இறையாண்மையுள்ள தேச அரசுகளை படைத்துக்கொள்ள வேண்டியது அடிப்படைத் தேவையாகும்.
தமிழீழம் வரலாற்று வழிப்பட்ட தனித்த தேசம் என்ற உண்மையை உலக நாடுகள் ஏற்காமல் இருப்பதற்கு முதன்மையான காரணம் சிங்கள சிறீலங்கா அல்ல. மாறாக, ஆரிய இந்தியாதான் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கி வருகிறோம். தமிழ் நாட்டுத் தமிழர்களும், உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத்தமிழர்களும் இதனை எவ்வளவு விரைவில் ஏற்கிறோமோ அந்த அளவுக்கே நமது விடுதலை பயணத்தின் அடுத்தக்கட்ட நகர்வு அமையும்.
சிங்கள சிறீலங்காவின் பிடியிலிருந்து தமிழீழத் தேசம் விடுதலை பெறுவதும், ஆரிய இந்தியாவின் அடிமைத்தளையிலிருந்து தமிழ் நாடு விடுதலை பெறுவதும் இவ்விரண்டு தேசிய இனங்களுக்கும் முதல் தேவையாகும்.
இந்தப் போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதிலிருந்தே தமிழ்ச் சர்வதேசியம் என்ற அச்சு நிறுவப்படும். இந்த அச்சின் சுழற்சிதான் நான்காவது உலக ஒற்றுமையை தமிழர்களுக்கு ஆதரவாக ஈட்டித்தரும். இந்த தமிழ்ச் சர்வதேசியம் தான் உலகத் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்.
புவிசார் அரசியல் காய் நகர்த்தலில் இந்தியாவுக்கு எதிரான அணிவகுப்பு நமது தேசங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை திறந்துவிடும் என்பதை உலக அரசியலை உற்று நோக்கினால் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்ச் சர்வதேசியத்தை படைப்போம். நான்காவது உலகம் நிறுவுவதை நோக்கி நகர்வோம்.

0 கருத்துகள்:

கர்நாடகம் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் – தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு

காவிரி மறுக்கும் கர்நாடகம் மீதுதமிழக அரசுப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற உழவர்கள் உண்ணாப்போராட்டத்தை நிறைவு செய்து பேசிய போதுகூறினார்.
கருகும் சம்பா பயிரைப் பாதுகாக்ககாவிரி நீரை கர்நாடகம் நாள்தோறும் 2 டி.எம்.சிஅளவிற்குத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகஉழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில்இன்று(04.11.2012), காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நடைப்பெற்ற இப்போராட்டதிற்கு குமராட்சி தமிழக உழவர் முன்னணி ஒன்றியத் தலைவர்திரு தங்ககேன்னடி தலைமையேற்றார்..முமாவட்டச் செயலாளர் திரு சிஆறுமுகம்மாவட்டத் தலைவர் திரு .கோ.சிவராமன்மாவட்டஒருங்கிணைப்பாளர் திரு மா.கோ.தேவராசன்கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பொறியாளர் திரு என்.செயபாலன்மையக்குழு உறுப்பினர்திரு இராசேந்திரன்திரு மதிவாணன்மாவட்டத் துனை செயலாளர் திரு சரவணன் உள்ளிட்ட திரளான உழவர் முன்னணிப் பொறுப்பாளர்களும்,உழவர்களும் இதில் பங்கேற்றனர்.
மாலையில் உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து பேசியதமிழக உழவர் முன்னணியின் ஆலோசகரும்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், “இரு முதலமைச்சர்கள் பேச்சு வார்த்தையில்ஒரு சொட்டுக் காவிரித் தண்ணீரும்திறந்து விட மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தது தமிழ்நாட்டு உழவர்களை மட்டுமின்றிஒட்டுமொத்தத்தமிழினத்தையே இழிவுபடுத்தியதாகும்.
நேற்று(03.12.2012) காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போதுஉச்சநீதிமன்ற நீதிபதிநாங்கள் 20 அல்லது 25 டி.எம்.சிதிறந்து விட வெண்டும்என ஆணையிட்டால் கர்நாடகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்கள்அதற்குகர்நாடகத் தரப்பு மூத்த வழக்குரைஞர் நாரிமன்அப்படியொரு ஆணையிட்டால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று பதிலுரைத்தார்இருதரப்பு வாதங்களையு்ம் கேட்டு ஆவணங்களை ஆய்வுசெய்து ஆணைப் பிறப்பிக்க வேண்டிய நீதிமன்றம்நாங்கள் உத்தரவிட்டால் அதை செயல்படுத்துவீர்களா எனக் கேட்பது இதுவரையிலும்நீதிமன்றங்களில் நிகழாத இழிநிலையாகும்தமிழ்நாட்டிற்கு ஞாயம் வழங்குகிற போது மட்டும்எதிர்த்தரப்பை இவ்வாறு கேட்பதுஉச்சநீதிமன்றமும் தமிழகத்திற்கு எதிராக இருப்பதையே எடுத்துக் காட்டுகிறதுஇந்திய அரசு கர்நாடகத்தின் அடாவடிக்கு துணைபோவதால்தான்இவ்வாறு அப்பட்டமான சட்ட மீறலில் கர்நாடகம் ஈடுபடுகிறது.
சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் செயல்படுவதாக இருந்தால், 1956 மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டப்படிகர்நாடக காவிரிஅணைகளின் நிர்வாகப் பொறுப்பை இந்திய அரசு தற்காலிகமாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டுநடுவர் மன்றத் தீர்ப்பின்படி,கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும்அரசமைப்பு சட்டவிதி 355இன்படிகர்நாடகத்திற்கு தண்ணீர்திறந்துவிடும்படி தாக்கீது அனுப்ப வேண்டும்.
தமிழக முதலமைச்சர் செயலலிதாஇனியாவது தனது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்அனைத்துக் கட்சி மற்றும்அனைத்து உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டிஒட்டுமொத்த தமிழகத்தையும் தன்னோடு அணிதிரட்டிக் கொண்டு, “கர்நாடகத்தைப்புறக்கணிப்போம்” என்று செயலில் இறங்க வேண்டும்கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதார தடை விதிக்க வேண்டும்கர்நாடக அரசியோ,கர்நாடக தயாரிப்புப் பொருள்களோ தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டும்கர்நாடக அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்தால்,அவர்களை வரவேற்பதோ பாதுகாப்புக் கொடுப்பதோ கூடாதுநெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்கு செல்லதாமல் தடுத்து நிறுத்தவெண்டும்இந்திய அரசுக்கெதிராக அரசியல் மற்றும் பொருளியல் அழுத்தங்களை கொடுக்க வெண்டும்தமிழ்நாட்டு உழவர்கள் சோர்வடைந்துதற்கொலைப் பாதைக்குள செல்லாமல்நம்பிக்கையோடு போராட்டக் களத்திற்கு வர வேண்டும்நாம் ஒன்றிணைந்து போராடினால் காவிரியைமீட்க முடியும்” எனப் பேசினார்.
நிறைவில்திருசிவபுரி பொன்னுசாமி நன்றி நவின்றார்இந்நிகழ்வில்சிதம்பரம்கடலூர்பெண்ணாடம் பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள்திரளாகப் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: