கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

புல்லார் தீர்ப்பின் பாதிப்பு: பேரறிவாளன் - முருகன் - சாந்தன் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும்

தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக் கிறது.
நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜெ. முகபாத்தி யாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதி மன்றப் பிரிவு 12-04-2013அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும்,மனித உரிமையையும் குறித்து அக்கறைப் படுவோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.இத்தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித்தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராசிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடி யரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவ தற்கான நாளும் குறிக் கப்பட்டது.இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்கத் தமி ழகமே போர்க் கோலம்பூண்டது.குமரி முதல் கும் முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங் கள் நடைபெற்றன.இப்போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங் கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.
இச் சூழலில் 30-08-2011அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பேரறி வாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இத்தடை ஆணை பிறப்பிக்கப் படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால்,தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்ட ணையை இரத்து செய்ய வலியு றுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் ஒன்றை இயற்றியது.
ஆனால், இவ்வழக்கில் எவ்வி தத் தொடர்பு மில்லாத எல்.கே. வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் இம் மூவர் மரண தண்டனை குறித்த வழக்கை தன் விருப்பமாக (suo moto) உச்சநீதி மன்றத்துக்கு மாற்றிக் கொண் டது.
அரசமைப்புச் சட்ட விதி 139(கி)(1)க்குப் பொருந்தாத காரணங் களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்வி,முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.
“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அத னைக் குடியரசுத் தலைவர் நிராக ரித்தது சட்டவிரோத மானது என்ற நிலைப்பாட்டை தேவேந் திர பால் சிங் புல்லார் வழக்கிலும்,மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ் வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்கு மென இந்நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.
இந்தக் காரணம் முற்றிலும் பொருந்திவரக் கூடியக் காரணம் அன்று.இது தொடர்பாக மூன்று தமிழர் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளா மலேயே நீதிபதிகள் சிங்வி,முக பாத்தியாயாஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்து கொண்டனர்.
இந்திய அரசமைப்பு சட்டத் தின் விதி 139 (கி) (1) உயர் நீதி மன்றங்களிலிருந்து உச்ச நீதி மன்றத்துக்கு வழக்குகளை மாற் றல் செய்வது பற்றி பேசுகிறது. இவ்வாறு மாற்றல் செய்வ தென்றால் இரண்டு முக்கிய நிபந் தனை கள் வேண்டுமென்று அது வரைய றுக்கிறது. அவை
1) உச்ச நீதிமன்றம் தானா கவோ அல்லது இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் மனு அளித்தாலோ அல்லது தொடர் புடைய வழக்குதாரர்கள் மனு செய்தாலோ விசாரித்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்து கொள்ளலாம்.
2) அவ்வாறு மாற்றல் செய்வதற்கான வழக்குகள் பொது முக்கியத்துவம் வாய்ந்த, ஒத்தத் தன்மையுள்ள அல்லது பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுகிற வழக்குகளாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு நிபந் தனைகளுமே நமது மூவர் வழக்கில் பொருந்தி வரா.
மரணதண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றமே கூட இராசீவ் காந்திகொலை ஒரு கொலைக்குற்றமே தவிர பயங்கரவாதக் குற்றம் அல்ல எனக் கூறி விட்டது.
எனவே,இதில் யார் வேண்டு மானாலும் மனு செய்துவிட முடியாது.இது பொது நல வழக்கல்ல;வெறும் கொலை வழக்கு ஆனால்,கொலையுண்ட இராசீவ் காந்திக்கு உறவினரோ நண்பரோ அல்லாத யாரோ ஒரு எல்.கே.வெங்கட் கொடுத்த மனுவை ஏற்று அதில் கோரியுள்ளவாறு மாற்றல் செய்து கொண் டது 139 (கி) (1)க்கு எதிரானது.
மூவர் கருணை மனு தொடர் பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடக் கக் கூடாது என்பதுதான் மனு தாரர் எல்.கே வெங்கட்டின் வாதம்.வழக்கறிஞர்களும் மாண வர்களும் பொதுமக்களும் பல் வேறு அரசியல் கட்சியினரும் மூன்று தமிழர் மரண தண்ட னையை இரத்து செய்ய வலியு றுத்தி போராடுவது சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது ஒரு வெளி அழுத்தத்தைக் கொண்டு வருகிறது என்பதே எல்.கே.வெங்கட் சார்பில் கூறப்பட்ட முதன்மையான காரணமாகும்.
இதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே ஒத்தத் தன் மையுள்ள வழக்கு என்பதால் தான் உச்ச நீதிமன்றத்துக்கு மாற் றல் செய்துகொண்டதாக நீதிபதி கள் சிங்வி, முகபாத்தி யாயா ஆகியோர் கூறிக்கொள்கின்றனர்.
ஆனால்,இதே போன்ற வேறொரு வழக்கில் இதே நீதிபதிகள் திறந்த நீதிமன்றத்தில் உதிர்த்த கருத்துகள் இவர்கள் எல்.கே.வெங்கட் வாதத்தை ஏற்றுக் கொண்டே இவ் வழக்கை மாற்றல் செய்துள்ளனர் என்ற வலுவான ஐயத்தை ஏற்படுத்துகிறது.
பல்வந்த் சிங் ராஜோனா தூக்குதண்டனை தொடர்பான வழக்கில் 29.03.2012அன்று இந் நீதிபதிகள் கூறியவைகளே அவை.
பல்வந்த் சிங் ராஜோனா 1995ல் பஞ்சாப் முதலைமச்சர் பியாந்த் சிங்கை கொலை செய்ததாக தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர் ஆவார்.அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து 28.03.2012என அவரது தூக்கு தண்ட னைக்கு நாளும் குறிக்கப்பட்ட நிலையில் பஞ்சாபே கொந்தளித்தது. இச்சூழலில் எதிர்க்கட்சி தலைவர்கள் புடை சூழ பஞ்சாப் முதலைமைச்சரே நேரில் சென்று பிரதமரை சந்தித்து பல்வந்த் சிங் ராஜோனாவின் தூக்கு தண்ட னையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்கள்.
சீக்கியர்களின் மத அமைப் பான சிரோன் மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி சார்பில் இக் கருணை மனு தொடர்பான வழக்கும் தொடுக்கப்பட்டு இதே இரண்டு நீதிபதிகள் முன்னாள் விசாரணைக்கு வந்தது. அதே நாளில் புல்லார் வழக்கின் மீதான வாதமும் நடந்தது.
இச் சூழலில் பல்வந்த் சிங் ராஜோனா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது நீதிமன்றத் தின் சார்பில் 29.03.2012 அன்று நீதிபதி சிங்வி கூறியது வரு மாறு:
“பயங்கரவாதிகளின் ஆதரவில் பதவிக்கு வந்தவர்கள் இவர்கள். அப்பயங்கரவாதிகளுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள இவர்கள் எப்படி அவர்களைக் கைவிடுவார்கள்? இது பட்டப்பகலில் நடந்த படுகொலை.அதுவும் கொல்லப் பட்டவர் மாநிலத்தின் முதல மைச்சர்.அரசு விரைவாக செயல் பட்டிருந்தால் இந்த மனுவுக்குத் தேவையே எழுந்திருக்காது.இது தொடர்பான அரசின் பணமும் பெருந்தொகையாக செலவாகி இருக்காது’’ இதுதான் இவ்விரு நீதிபதிகளின் மனநிலை.
ஏன் முதலிலேயே தூக்கில் போடவில்லை என்றுதான் பதறு கிறார்கள். ஒரு அந்தஸ்த்தில் இருந்த தலைவரைக் கொன்றவர் களுக்கு அதுவும் பட்டப் பகலில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே கொன்றவர்களுக்கு கருணைக் காட்டலாமா என்று தான் கவலைப்படுகிறார்கள்.
கொலையுண்டவர் ஒரு மாநில முதலமைச்சர் என்பதற்கே இவ் வளவு பதறும் இவர்கள் குடும்பத் தின் வாரிசு முன்னாள் பிரதமர் மட்டுமல்ல நேரு இராசீவ்காந்தி கொலை வழக்கில் எந்த அளவுக்கு முன் முடிவோடு இருப்பார்கள்?
புல்லார் வழக்கிலும் பேரறி வாளன் முருகன் சாந்தன் வழக் கிலும் பெரிதும் ஒத்தத்தன்மை யுள்ள வாதங்களே முன்வைக்கப் படுவதாக இவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பது நமது ஐயத்தை மேலும் வலுப்படுத்து கிறது.
 பேராசிரியர் தேவேந்திர பால் சிங் புல்லார், மற்றும் மகேந்திநாத் தாஸ் வழக்குகளும் மூன்று தமிழர் கருணை மனு வழக்கும் அவற்றின் பின்னணி அவற்றில் பின்பற்றப்பட்டுள்ள சட்ட விதிகள் அவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்துள்ள விதம் ஆகிய வற்றில் முற்றிலும் வேறு பட்ட தன்மையுள்ளவை ஆகும். இவற்றைப் பெரிதும் ஒத்தத் தன்மையுள் ளவையாக வரையறுத்ததே பிழையானது.
இந்நிலையில் புல்லார் வழக்கில் “கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அத னைக் குடியரசுத் தலைவர் நிரா கரித்தது சட்டவிரோத மானது’’ என்ற வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரணதண்டனையை உறுதி செய்து 12.04.2013 அன்று தீர்ப் பளித்துவிட்டது.
மரண தண்டனைத் தொடர் பான தீர்ப்புகள் குறித்து அண் மைக் காலத்தில் உச்ச நீதிமன் றத்தில் எழுந்துள்ள முக்கியமான வாதங்களை இந்த இரண்டு நீதி பதிகள் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை.
சங்கீத் -எதிர் -அரியானா மாநில அரசு என்ற வழக்கில் 2012 நவம்பர் 20-ஆம் நாள் வழங்கிய தீர்ப்பும், அத்தீர்ப்பு மேற்கோள் காட்டி விரிவாக விவாதிக்கும் சந்தோஷ்குமார் பரியார் - எதிர்- மகாராஷ்டிர மாநில அரசு வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப் பும் மிக முக்கியமானவை ஆகும்.
இவ்விரண்டு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றங்கள்இழைத்துள்ள சட்ட அறியாமை (perincurium) பற்றி குற்றம் சாட்டுகின்றன.
பச்சன்சிங் வழக்கில் (1980,2, SCC 684) 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்டப் பிரிவு அளித்தத் தீர்ப்பு அதற்குப் பின்னால் பல வழக்குகளில் பின் பற்றப்படவில்லை என்று சங்கீத் தீர்ப்பும் பரியார் தீர்ப்பும் சுட்டிக் காட்டுகின்றன.ஐந்துக்கும் குறை வான நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றப் பிரிவுகள் பட்சந்த் சிங் தீர்ப்பை பின்பற்றி இருக்க வேண்டியது சட்டக் கட்டாயம் ஆகும். பல தீர்ப்புகளில் இந்த சட்ட வரம்பு மீறப்பட்டுள்ளது. இது உச்சநீதி மன்ற நீதிபதிகளின் சட்ட அறியாமை (perincurium)என இவற்றைக் கண்டிக்கின்றன.
அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை விதிக் கப்படலாம் என்பதுதான் பச்சன் சிங் தீர்ப்பின் சாரமான செய்தியாகும். பச்சன்சிங் தீர்ப்பின் இச் சாரமான கருத்தை பரியார் தீர்ப்பு கீழ் வருமாறு எடுத்துரைக்கிறது.
ஒருவர் மீது கொலைக்குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனை யை வரையறுத்து தீர்ப்பு வழங்கும் கட்டத்துக்கு வரும் போது நீதிமன்றமானது குற்றவாளியின் முன் நடத்தை, கொலைக்குற்றம் நடைபெற்ற சூழல்,அக் குற்றம் நடைபெற்ற போது இருந்த கொலையாளியின் மனநிலை ஆகியவற்றைக்கருத்தில் கொள்ள வேண்டும்.
மரண தண்டனை வழங்காமல் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கினால்,அக்குற்றவாளி திருந்தமாட்டார்,அவரால் சமூகத் தில் பதற்றமும் அமைதி யற்ற சூழலுமே ஏற்படும் என்பதை அரசு தரப்பு வலுவான ஆதாரங் களோடு மெய்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறான நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் மனம் போன போக்கில் அரிதிலும் அரிதான வழக்கு என்று முத்திரைக் குத்தி மரண தண்டனை வழங்குவது தான் நீதிபதிகளின் சட்ட அறியாமை என குறை கூறுகின்றன இத்தீர்ப்புகள்.
பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர் நீதிபதி கே.டி.தாமஸ்.ஓய்வுப் பெற்றப்பிறகு இவர் இத்தீர்ப்பு குறித்து மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கும் தன்னாய்வு இம் மூவர் வழக்கிலும் சட்ட அறியாமை என்ற மா பெரும்பிழை நேர்ந்துள்ளதை எடுத்துக் கூறுகிறது.
ஏற்கெனவே, 2011 செப்டம்பர் 2 ஆம் நாள் தி ஏசியன் ஏஜ் இதழில் இதனைக் குறிப்பிட்ட நீதிபதி கே.டி.தாமஸ் 24.02.2013 அன்று இன்னும் விளக்கமாக்க் கூறுகிறார். அடுத்த நாள் 25.02. 2013 அன்று பல்வேறு இதழ்களி லும் கே.டி. தாமசின் அறிக்கை வெளியானது. (காண்க: தி. இந்து 25.2.2013)
“இந்த மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப் பட்ட போது அவர்களின் முற்பண்புகள் இயல் புகள் ஒழுக்கம் போன்ற வற்றை கவனிக்கத் தவறிவிட்டோம்’’என்று கூறுகிறார். தாங்கள் சட்ட அறியாமை  குற்றம் இழைத்ததை நீதிபதி கே.டி. தாமஸ் வெளிப்படையாகவே இவ்வாறு ஒத்துக் கொள்கிறார்.
ஆனால்,புல்லார் வழக்கில் நீதிபதிகள் சிங்க்வி முகப்பாத்தி யாயா ஆகியோர் மீண்டும் இந்த சட்ட அறியாமைத் தவறை செய் திருக்கிறார்கள்.இதே தவறு நமது மூவர் வழக்கிலும் நிகழ்ந்துவிட வாய்ப்புண்டு.
புல்லார் வழக்கும் பேரறி வாளன் முருகன் சாந்தன் வழக்கும் பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே நீதிமன்றம் வரைய றுத்து விட்டதால் புல்லார் வழக் கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.
இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க இரண்டு வழிகளே உள்ளன.
1) பச்சன் சிங் தீர்ப்புக்கு பின் வந்துள்ள (மூன்று தமிழர் வழக்கு உள்ளிட்ட) அனைத்து மரண தண்டனை வழக்குகளை யும் மீளாய்வு செய்யும் வகையில் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் நீதிபதி களைக் கொண்ட உச்ச நீதிமன்றப் பிரிவிற்கு விட வேண்டும்.இப்போதுள்ள இரண்டு நீதிபதிகள் பிரிவு இவ் வழக்கை விசாரிக்கக் கூடாது. புல்லார் வழக்கு உட்பட அனைத்து மரண தண்டனை வழக்குகளும் அரசமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும்.
2) அரசமைப்புச் சட்ட விதி 161-ன் படி தமிழக ஆளுநர் இம் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும்.
இவற்றுள் இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு இரண் டாவதாக சொல்லப்பட்ட வழி தான்.இம் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்து நியாயத்தையும்,மனித உரிமையையும் நிலை நாட்டுவது தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது.
தமிழக அமைச்சரவை முடிவு செய்து அரசமைப்பு விதி 161ன் படி மாநில ஆளுநர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண் டும்.
30.08.2012 அன்று தமிழக சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் செயலலிதா முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப் பதாகவும் இது அமையும்.
உச்சநீதிமன்றத்தின் இப் போதைய தீர்ப்புரையோ அரச மைப்புச் சட்ட விதி 257(1)ன் படியான உள்துறை அமைச் சகத்தின் 5.3.1991நாளிட்ட அறிவிக்கை உள்ளிட்ட இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுநரின் அதிகாரம் ஆகும். உச்சநீதி மன்றம் பல தீர்ப்புகளில் இதனை உறுதிபடக் கூறியிருக்கிறது. (மாரூராம்-எதிர்- இந்திய ஒன்றிய அரசு 1981,1 ஷிசிசி 107, சத்பால்- எதிர்- அரியானா மாநில அரசு கிமிஸி 2000,ஷிசி, 1702)
அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்ட னைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.
மன்னிப்பு வழங்கும் ஆளுந ரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற் றவை ஆகும்.
எனவே,தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் களின் தூக்கு தண்டனையை இரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழ் நாட்டு மக்களின் பெரு விருப்பமும் அதுவே.

 - தோழர் கி.வெங்கட்ராமன்

0 கருத்துகள்:

புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து செய்க !

புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும்
பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை
அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து  செய்க !
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை !

 தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜெ. முகபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு 12-04-2013 அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமையையும் குறித்து அக்கறைப்படு வோரிடையே  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத் தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராசிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க தமிழகமே போர்க் கோலம்பூண்டது. குமரி முதல் கும்முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங்கள் நடை பெற்றன.  இப் போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.

இச் சூழலில் 30-08-2011 அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இத்தடை ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்டணையை இரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது.

 ஆனால், இவ்வழக்கில் எவ்விதத் தொடர்புமில்லாத எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இம் மூவர் மரணதண்டனைகுறித்த வழக்கை தன் விருப்பமாக(suo mato) உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொண்டது.

அரசமைப்புச் சட்ட விதி 139 (A) (1) க்குப் பொருந்தாதக் காரணங்களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்க்வி , முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.

“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திர பால் சிங்புல்லார் வழக்கிலும், மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ்வழக்கிலும் சென்னை யர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. பெரிதும் ஒத்தத் தன்மையுள் சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இந் நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.

ந்நிலையில் புல்லார் வழக்கில் "கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது'' என்ற வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

புல்லார் வழக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே  நீதிமன்றம் வரையறுத்துவிட்டதால் புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரணதண்டனையை உறுதிசெய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.

ந்நிலையில் இம் மூன்றுதமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து மாநில ஆளுனர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்குதண்டனையை இரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

30-08-2012 அன்று தமிழக  சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப்பதாகவும் இது அமையும் என சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்புரையோ, அரசமைப்புச் சட்டவிதி 257 (1) ன் படியான இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுரின் அதிகாரம் ஆகும்.

அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப்பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.

மன்னிப்பு வழங்கும் ஆளுரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற்றவை ஆகும். 

எனவே, தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161 ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் துக்குதண்டனையை இரத்து செய்து ஆணை பிறப்பித்து தமிழ் நாட்டுமக்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                                          தோழமையுடன்,
கி. வெங்கட்ராமன்,
 பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்: