முல்லைப் பெரியாறு அணையை
உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
தமிழகத்திற்குச்
சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை
தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மதுரையில் இன்று மாலை நடந்த
ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
"முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்"
என வலியுறுத்தி, இன்று(03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை
விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர்
தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி
பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கட்டக்குளம் இராமசாமி, வாடிப்பட்டி
தேவராசன், நடராசன், பெரியசாமி மற்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம்
அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், கதிர்நிலவன்(த.தே.வி.இ.), மக்கள் உரிமைப்
பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், நாயகம் (இயற்கை
பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் இதில் கலந்து கொண்டு மலையாளிகளின் உரிமை
மறுப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "நேற்று
கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதி மன்றத்தில் முல்லைப்
பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும்
இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை
பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை
உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக
அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர்
கூறினார். இது தான் உண்மை நிலை.
ஊடகங்கள்
மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு
கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப்
பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7
மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே
இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.
கேரளத்தின்
அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன்
அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித்
தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான்
நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து
நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது.
தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர்
பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும்
இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை
மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.
இன்று
மாலை குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை
அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து
மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள
வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள்
போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத்
தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை" என்று பேசினார்.
0 கருத்துகள்:
Post a Comment