ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி அரசு
தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக பெருமளவு வளைத்து விட்டது.
இப்போது நரேந்திர மோடி அரசு நடைமுறையில் தொழிலாளர் சட்டங்கள் என்ற ஒரு
வகையே இல்லை என்றாக்கத் துடிக்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த நிலையை மீண்டும் கொண்டுவர மோடி அரசு முனைந்து வருகிறது.
1926
தொழிற்சங்க சட்டம், 1947 தொழிற் தகராறு சட்டம். 1950 தொழிச்சாலை சட்டம்,
1970 ஒப்பந்த தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து
சட்டங்களுக்கும் பெருமளவு திருத்தங்களை பா.ச.க அரசு முன்வைத்துள்ளது.
மின்சாரத்தை
பயன்படுத்தி 20 தொழிலாளர்களுக்கு மேல் பணியில் அமர்த்தும் தொழில்
நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தும் என்றிருந்த நிலையில்
முந்தைய காங்கிரசு அரசு 40 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் தான்
பொருந்தும் என மாற்றியது.
இப்போது
பா.ச.க அரசு கொண்டு வர முயலும் திட்டத்தில் 50 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள
தொழிலகங்களுக்குதான் தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தும் எனக் கூறுகிறது.
பல இலட்சம் தொழிலாளர்கள் இத்திருத்தத்தின் மூலம் சட்டப்பாதுகாப்பு
அற்றவர்களாக மாற்றபடுவார்கள்.
8 மணி
நேர வேலை என்பதை 10 மணி நேரம் என்பதாக மாற்றுவதற்கு தொழிற்சாலை சட்டத்தில்
திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒற்றைச் சம்பளத்திற்கே மிகை நேரப்பணி
என்பது கூடுதல் நேரத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலை
பாதுகாப்பு விதிகளையும், குடியிருப்புகளுக்கு வாகனங்கள் அனுப்புவதையும்
கட்டாயப்படுத்தாமலேயே பெண் தொழிலாளர்கள் இரவு பணிக்கு அமர்த்தப்படும்
வகையில் தொழிற்சாலைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
100
தொழிலாளர்களும் அதற்கு மேலும் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆள் குறைப்பு
செய்வதாய் இருந்தால் மாநில தொழிலாளர் ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும்
என்றுள்ள நிபந்தனையை மாற்றி 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழில்
நிறுவனங்களுக்கே இவ்விதி பொருந்தும் என திருத்தம் செய்யப்பட உள்ளது.
மிகப்பெரும்பாலான நிறுவனங்கள் இந்த எண்ணிக்கைக்குள் வந்து விடும்.
முதலாளிகளின் விருப்பப்படி அமர்த்து–துரத்து (Hire and Fire) என்பதை
பரவலாக்க இத்திருத்தம் பயன்படும்.
தொழிலாளர்களை
வேலை நீக்கம் செய்யும் முன்பு 3 மாத முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என்ற
சட்டக்கட்டாயம் நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக இழப்பீடு தொகைமட்டும்
ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் என்பதிலிருந்து 20 நாள் ஊதியம் என்பதாக
மாற்றப்படுகிறது.
ஏற்கெனவே ஒரு
தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அத்தொழிலில் அல்லது அத்தொழிலகத்தில் உள்ள ஏழு
தொழிலாளர்கள் சேர்ந்து விண்ணப்பித்தால் போது என்ற நிலை இருந்தது. காங்கிரசு
ஆட்சியில் அது 10 விடுக்காடு தொழிலாளர்கள் அல்லது 7 பேர் என்று
மாற்றப்பட்டது. இப்போது 10 விழுக்காடு தொழிலாளர்கள் அல்லது 100 பேர்
என்பதாக திருத்தம் செய்யப்பட உள்ளது.
தொழிற்சங்கங்கள்
ஒரே தொழிலகத்தில் பலவாக பெருகுவதை தடுப்பதற்கே இத்திருத்தம் என்று
சொல்லப்பட்டாலும் உண்மையில் தொழிற்சங்கம் என்ற ஒன்றே உருவாக முடியாது என்ற
நிலையே இத்திருத்ததால் உண்டாகும்.
இப்போதே
ஹுண்டாய், டி.வி.எஸ், ஹோண்டா போன்ற நிறுவனங்களில் பெருமளவு தொழிலாளர்கள்
சேர்ந்தாலும் சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் முன்னணி தொழிலாளர்கள்
பழிவாங்கப்படுவதும், தொழிற்சங்க பதிவே நடைபெற விடாமல் செய்வதும் பொது
போக்காக தலையெடுத்துள்ளது. இந்நிலையில் தொழிற்சங்க சட்டத்தில்
முன்வைக்கப்பட்டுள்ள இத்திருத்தம் திரு.வி.க காலத்திற்கு முந்தைய நிலைக்கு
தொழிலாளர்களை இட்டுச்செல்லும்.
இப்போதுள்ள
நிலையிலேயே ஒப்பந்த முறை, வெளி உற்பத்தி முறை போன்றவற்றால்
தொழிற்சங்கங்கள் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி வலுவாக போராட முடியாத நிலை
உள்ளது. இத்திருத்தம் நிறைவேறினால் நடைமுறையில தொழிற்சங்கம் என்ற ஒன்றே
இல்லாத பழைய நிலைக்கு இட்டுச்செல்லும். முதலாளிகள் விருப்பம் போல
தொழிலாளர்களை பந்தாடும் நிலை ஏற்படும்.
வாங்கிய காசுக்கு மோடி அரசு பெருமுதலாளிகளுக்காக பணிவிடை செய்ய புறப்பட்டுவிட்டது.
இது வெறும் தொழிலாளர் சிக்கல் மட்டுமல்ல, மிகப்பெரும் சனநாயக உரிமைப் பறிப்பு நடவடிக்கையாகும்.
எனவே
இது தொழிற்சங்க பிரச்சினை என்று ஒதுங்காமல் அனைத்து சனநாயக சக்திகளும்
மோடி அரசின் கொலைகாரத்தனமான இச்சட்டத்திருத்தங்களுக்கு எதிராக போராட
அணித்திரள வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment