கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label அணுஉலை. Show all posts

கல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு கண்டனம்! - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

கல்பாக்கத்தில், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசுக் காவல்துறைகொடும் அடக்கு முறைகளை ஏவியுள்ளது கண்டிக்கத்தக்கது.
கல்பாக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டு செயலில் உள்ள அணுஉலைகளிலிருந்து தடையில்லா மின்சாரம் வேண்டும், இலவசமான சுகாதாரமான குடிநீர் வேண்டும்,கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும், இந்திய அரசால் எங்கிருந்தோ கொண்டு வரப்படுகின்றகதிரியக்கம் கொண்ட அணுக்கழிவுகளை கல்பாக்கத்தில் சேமிக்கக் கூடாது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள அணுக்கதிரியக்கத்தின் தாக்கத்தைக் கண்டறியும் வசதிகள் கொண்டபன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும், புதிய அணுஉலைகளை கல்பாக்கத்தில் நிறுவக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம்அணுஉலையைச் சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம், பட்ராஸ், புதுப்பட்டினம், ஒய்யாரி குப்பம், கொக்கிளமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறுபோராட்டங்களி்ல் ஈடுபட்டு வந்தனர்.
26.03.2013 அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேரெழுச்சியுடன் திரண்ட 3000க்கும் மேற்பட்ட மக்கள் முதல் அணுமின் நகரியம் வாயிலை அமைதியான வழியில் முற்றுகையிட்டனர். காலையில் தொடங்கிய மறியல் போராட்டம் மாலை வரை நீடித்தது. கிராம மக்கள் சார்பில் ஊர் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் தொண்டுநிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய 30 பேர் கொண்ட குழு, மாவட்ட வருவாய் அதிகாரி(ஆர்.டி.ஓ.), தாசில்தார் முன்னிலையில் அன்று மாலை அணுமின் நிர்வாகத்துடன்பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வாய்மொழியில் அணுமின் நிர்வாகம் கூறியதை, போராட்டக் குழுப் பிரதிநிதிகள் ஏற்கவில்லை. எழுத்து மூலம்உத்தரவாதம் அளிக்கக் கோரியதையும் அணுமின் நிர்வாகம் ஏற்கவில்லை. எழுத்து உத்தரவாதம் கொடுக்கப் படவில்லையெனில் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவோம்என போராட்டக் குழுவினர் எச்சரித்துவிட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாளான 27.03.2013 அன்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான மக்களை காவல்துறையினர் வழிமறுத்துத் தடுத்தனர்.அங்கு அறவழியில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறை கொடுமையான முறையில் தடியடி நடத்தியது. அதில், 22 பேர்வரை காயமுற்றனர். 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தடியடியைக் கண்டித்து, காவல்துறையிடமும் அணுமின் நிர்வாகத்திடமும் முறையிட்ட 30 பேர்கொண்ட போராட்டக்குழுவினரில், 18 பேர் தடியடியை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தானே முன்வந்து கைதாயினர். அதில், நால்வர் தடியடியில் கடுமையாகக்காயமுற்றிருந்தனர்.
இந்நிலையில், கைதான 18 பேரை விடுவிக்கக் கோரி கல்பாக்கம் பகுதியைத் துண்டிக்கும் வகையில் அனைத்து வழிகளிலும் மக்கள் அமைதியான வழியில் சாலை மறியலில்அமர்ந்தனர். இந்நிலையில், போராட்டக் குழுவினரிடம் கடிதம் ஒன்றை அளித்த அணுமின் நிர்வாக இயக்குநர் கோட்டீசுவரன், மக்கள் கோரிக்கைகள் சிலவற்றைப்பரிசீலிப்பதாகவும், புதிய அணுஉலைகள் அமைக்கும் முடிவு இந்திய அரசிடம் தான் உள்ளதெனவும் தெரிவித்தார். எனினும், கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவிக்கக் கோரிநள்ளிரவு 12 மணி வரை சாலை மறியல் தொடர்ந்தது.
இந்நிலையில், கைதான 18 பேர் மீது கொலை முயற்சி (இ.த.ச. பிரிவு 307) உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. காவல்துறையினரின் இந்தஅடக்குமுறையைக் கண்டித்தும், 18 பேரை விடுவிக்கக் கோரியும் 28.03.2013 அன்று கல்பாக்கத்தில் மக்கள் நடத்தவிருந்த உண்ணாப் போராட்டத்திற்கும் அனுமதிமறுக்கப்பட்டது. தடையை மீறி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில், 130 பெண்கள் மற்றும் 440 ஆண்கள் என மொத்தம் 670 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களில் ஆண்கள் 440 பேரைத் தவிர்த்து, பெண்களை இரவு 9 மணிக்கு விடுவித்தனர்.
ஆண்கள் அனைவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் காவல்துறை திட்டமிட்ட நிலையில், அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, ஒவ்வொருகிராமத்திற்கும் 2 பேர் என போராட்டத்தில் முன்னிலை வகித்த 27 பேரையும், அதன் பின் 102 பேரையும் சேர்த்த மொத்தமாக 129 பேரை நீதிமன்றக்காவலில் சிறைக்குஅனுப்பியுள்ளது காவல்துறை. 27 பேரை சென்னை - புழல் நடுவண் சிறைக்கும், எஞ்சிய 102 பேரை வேலூர் நடுவண் சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும், அப்பகுதியைச் சேர்ந்த எளிய கிராம மக்கள் ஆவார்கள். இவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது, கலவரத்திற்கு வித்திட்டது என பிணையில் வர முடியாத பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் எங்குமே நிறுவப்படாத வி.வி.இ.ஆர்.(VVER) எனப்படும் புதிய அணுத் தொழில்நுட்பத்தில் தான் கல்பாக்கம் அணுஉலை செயல்பட்டு வருகின்றது. அப்பகுதி மக்கள்,செயல்பட்டு வரும் அணுஉலையை மூட வேண்டுமெனக் கோரவில்லை. அதிலிருந்து, மின்சாரம் வேண்டுமென்றும், புதிய அணு உலைகளை நிறுவ வேண்டாம் என்றும், ஆபத்தான அணுக்கழிவுகளை எங்கிருந்தோ கொண்டு வந்து கல்பாக்கத்தில் வைக்க வேண்டாம் என்றும் தான் அறிவுறுத்துகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்குசிலசலுகைகள் வேண்டுமென்று தான் போராடுகின்றனர்.
ஆனால், அவர்கள் மீது இவ்வளவுக் கொடிய அடக்குமுறைகளை ஏவ வேண்டிய அவசியமென்ன? அணுஉலைகளால் மின்சாரச் சிக்கல் தீர்ந்துவிடும் என்று அரசும், ஊடகங்களும்பரப்புகின்ற பொய்ச் செய்திகளை கல்பாக்கம் மக்களின் போராட்டம் தகர்த்தெறிந்துள்ளது தான் இதற்கக் காரணமா?
இந்திய அரசின் கல்பாக்கம் அணுமின் நிலையம், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லையெனில், அதை தமிழக அரசு தான் தட்டிக்கேட்டுநிறைவேற்றிவைக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு எதிராக காவல்துறையை ஏவி ஒடுக்குவது எவ்வகையிலும் நியாயமல்ல.
எனவே, தமிழக அரசு, கைதுசெய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். மக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறைஅதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கோரிக்கைகளை அணுமின் நிலைய நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லையெனில், கல்பாக்கம் அணுமின்நிலையத்தை செயல்பட அனுமதிக்க முடியாதென இந்திய அரசுக்கு, தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

கூடங்குளம் அணு உலை காட்டிக் கொடுக்க தயாராகிவிட்ட செயலலிதா - தோழர் கி.வெங்கட்ராமன்

கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டத்தை காட்டிக் கொடுப்பது என்றத் தனது முடிவை செயல்படுத்த தருணம் குறித்துவிட்டார் செயலலிதா என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கூடங்குளம் அணு உலை கூடாது என தெளிவாக அறிவிப்பதற்குப் பதில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை கூடங்குளம் அணு உலைப் பணிகள் தொடரக்கூடாது என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் செயலலிதா. தமது கட்சி அமைச்சர்களை அனுப்பியும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியும் நேரடியாக கடிதம் அனுப்பியும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இக்கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தினார்.
“கூடங்குளம் பிரச்சினையில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என உள்ளாட்சித் தேர்தலின் போது மக்களிடம் உறுதி கூறிய செயலலிதா, மறுபுறம் சு.ப.உதயகுமார், புஷ்ப ராயன் உள்ளிட்ட போராட்டக்குழு தலைவர்கள் மீதும், போராடும் மக்கள் மீதும் அடுக்கடுக்கான வழக்குகளை தொடர்ந்தார். அணுஉலைக் கெதிரான பரப்புரை தமிழகம் தழுவியதாக வீச்சு பெறுவதை தடுப்பதற்கு காவல்துறை வழியாக பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்.
செயலலிதா அரசின் இரட்டை நிலையால் துணிச்சலடைந்த இந்து முன்னணியினரும், காங்கிரசுக்காரர்களும், போராட்டக் குழுவினரை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே தாக்கினர். இத்தாக்குதலில் பாதிக்கப் பட்ட போராட்டக்குழுவினர் மீதும் வழக்குத் தொடுத்தது தமிழகக் காவல்துறை.
கூடங்குளம் மக்களின் உணர்வோடு இணைந்து இருப்ப தாக இதுவரை புனைந்திருந்த வேடத்தைக் கலைப்பதற்கு செயலலிதா முடி வெடுத்து விட்டார் என்று தெரிகிறது.
“மக்களின் அச்சத்தைப் புரிந்து கொண்டு அறிக்கைத் தருவதற்கு” எனச் சொல்லி தமிழக அரசின் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளார். அம்மக்களின் அச்சத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே கூடங்குளம் அணுஉலைப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரா? இல்லை. இந்திய அரசோடு வெளிப் படையாகச் சேர்ந்து தமிழக மக்களுக்கு எதிராக களம் இறங்க காலம் குறித்து விட்டார் என்பதற்கான முன் அறிகுறியே இது.
செயலலிதா அமைத்துள்ள வல்லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள முதன்மையான அறிவியலாளர் இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் ஆவார். இவர், தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அணு உலைக்கு எதிரான கூடங்குளம், ஜெய்தாப்பூர் போராட்டங்களை எதிர்த்துப் பேசி வருபவர் ஆவார். பல்வேறு ஊடகங்களிலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருபவர் அவர்.
எம்.ஆர்.சீனிவாசனை இக்குழுவில் அமர்த்தியதிலிருந்தே செயலலிதாவின் உண்மை நோக்கம் புரிகிறது. கடந்த 04.02.2012 அன்று வல்லுநர் குழு அமைக்கும் முடிவை சட்ட மன்றத்தில் அவர் அறிவித்த போது அவர் நிகழ்த்திய உரையே அவரது பக்கச் சாய்வைக் காட்டியது.
இந்திய அரசு அமைத்த வல்லுநர் குழுவோடு பேச்சு நடத்த அழைக்கப்பட்டிருந்த போராட்டக்குழுவினர் மூவரில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார் என செயலலிதா குற்றம் சாட்டியதும், இந்திய அரசின் குழு தனது 71 பக்க அறிக் கையில் கூடங்குளம் அணு உலையில் செய்யப் பட்டுள்ள உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தெளிவாக எடுத்துக்காட்டியது என கூறியதும் செயலலிதாவின் மன நிலைக்குச் சான்று.
இதற்கு ஏற்பவே, 09.02.2012 அன்று எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட நால்வர் குழுவை செயலலிதா அரசு அறிவித்தது.
கூடங்குளம் அணுஉலைக்கு குளிர்விப்புத் தண்ணீர் கடலி லிருந்து எடுக்கப்படும் என அவ்வணுஉலைத் திட்டம் கூறுகிறது. கடல்நீர் தூய்மை யாக்கல் நிலையம் ஏதோ ஒரு காரணத்தால் பழுதுபட்டால் மாற்றுத் தண்ணீர் வாய்ப்பு எங்கே என்ற கேள்விக்கு அரசிடமிருந்து பதில் இல்லாம லிருந்தது.
இப்போது, செயலலிதா அரசு பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படும் என அறிவித்து, அதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. இது குமரி மாவட்ட உழவர்கள் மீதுள்ள அக்கறையினால் என நம்ப முடியவில்லை. கூடங்குளம் அணுஉலைக்கு மாற்றுவழித் தண்ணீர் வாய்ப்பாக பேச்சிப் பாறையை செயலலிதா அணியப் படுத்துகிறார் என ஐயம் எழுகிறது.
ஏனெனில், கூடங்குளம் அணுஉலைத் திட்டம் 1987இல் முன்வைக்கப்பட்ட போது பேச்சிப்பாறைத் தண்ணீரைத் தான் முதன்மை நீர் ஆதார மாகக் காட்டினர். பிறகு தான், கடல் நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்தும் திட்டம் கூறப் பட்டது. இப்போது அவசரகால மாற்றுத் தேவைக்கான நீராதார மாக பேச்சிப்பாறை அணிய மாகிறதோ என ஐயம் எழுகிறது.
செயலலிதாவின் கருத்து நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட இந்திய அரசும், காங்கிரசுக் கட்சியும் அண்மைக் காலமாக கூடங்குளம் அணு உலையைத் திறப்பதற்கான தங்களது முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
போராட்டக்காரர்கள் மீது விசாரணை என்ற பெயரில் காவல்துறையும் வருமானவரித் துறையும் ஏவிவிடப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துக் கூறிய ஊடகங்கள் மடக்கப்பட்டன. கூடங்குளம் அணுஉலைக்கு அடித்தள மாநாடு என கடந்த 04.02. 2012இல் நெல்லையில் காங்கிரசு நடத்திய மாநாடும், இந்து முன்னணியினரும் காங்கிரசுக் காரர்களும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகி லேயே போராட்டக்குழுவின ரையும், பெண்களையும் தாக்கி யதும் இதற்கொரு முன்னோட் டமாகும்.
காங்கிரசுக் கட்சியும் அணு உலைக்கு ஆதரவான சக்தி களும், தமிழகத்தில் தற்போது நிலவும் தாறுமாறான மின் வெட்டைக் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகப் பயன் படுத்திக்கொள்கின்றன. கூடங் குளம் அணுமின் உற்பத்தி தொடங்கி விட்டால் தமிழ் நாட்டில் மின் பற்றாக்குறையே இருக்காது என்பது போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.
கூடங்குளம் அணுஉலை தமிழினத்திற்குப் பேரழிவை உண்டாக்கும் என்பது மட்டு மின்றி அந்த அணுஉலையால் தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை தீர்வதற்கும் வழியில்லை. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி, அணுக்கழக அதிகாரிகள் வரை சொல்வதெல்லாம் 1000 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள முதல் அணுஉலை அணியமாக இருக்கிறது என்பது மட்டுமே.
கல்பாக்கம் உள்ளிட்ட இந்தியாவின் எந்த அணு மின்சார நிலையத்திலும் அதன் முழு உற்பத்தித் திறனில் பாதி யளவு உற்பத்தி கூட நடந்ததாக இதுவரை வரலாறில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடக்க நிலை யிலேயே 50 விழுக்காடு உற் பத்தித்திறனோடு இயங்கும் என கற்பனையாக வைத்துக் கொண்டாலும், 500 மெகா வாட் மின்சாரம் தான் உற்பத் தியாகும். அதில் 30 விழுக்காடு மட்டுமே அதாவது 150 மெகா வாட் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைக்கும். அதாவது தமிழக மின்பற்றாக் குறையான 1500 மெகா வாட்டில் 10 விழுக்காடு மட்டுமே கூடங்குளம் வழியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு தான் இவ்வளவு பெரிய பேரழி வைத் தமிழர்கள் தலையில் கட்டத் துடிக்கிறார்கள்.
கூடங்குளம் அணு உலை யைத் திறப்பதற்கு துணை போக தமிழக அரசு முடிவு செய்தாலும், அணுஉலைக்கு எதி ரான மக்கள் போராட்டம் தொய்வின்றித் தொடர வேண்டும். இடிந்த கரையோடு மட்டும் சுருங்கிவிடாமல் தமிழகம் தழுவிய ஒட்டு மொத்தத் தமிழர்களின் தற்காப்புப் போராட்டமாக கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் விரிவு பெற வேண்டும். இது ஒட்டு மொத்தத் தமிழர்களின் கடமை.

கூடங்குளம் அணு உலை - அப்துல்கலாமின் குழப்பல் வாதம் - தோழர் - கி. வெங்கட்ராமன்

சிறந்த அறிவியலாளர், மனிதநேயர் என்று முனைவர் அப்துல் கலாமைக் கருதி கொண்டிருந்த பலரும் கூடங்குளம் அணு உலை குறித்த அவரது நேர்காணலைக் கேட்டபிறகு அதிர்ச்சியும் அருவெறுப்பும் அடைந்தார்கள். பொய்யுரையும், திரிபுகளும் நிறைந்த அவரது இந்தப் பேச்சு மக்களைக் குழப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருந்தது. கூடங்குளம் அணு உலையை இயக்கச் செய்வதற்காக இந்திய அரசின் தூதராக தான் வரவில்லை என்று சொல்லி கொண்டாலும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமின் முயற்சி உண்மையில் அதுவாகத்தான் இருக்கிறது.

கடந்த 06.11.2011 அன்று கூடங்குளம் அணு உலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு அவர் நடுநிலையாளர் அல்ல என்பதை அம்பலப்படுத்தியது. அணு உலையின் அவசியம் பற்றி அப்துல் கலாம் அதிகமாகவே வலியுறுத்தியவர்தான். என்றாலும் கூடங்குளம் செல்கிற அன்று ’இந்து’ நாளேட்டில் ஸ்ரீ ஜன்பால் சிங் என்பவருடன் இணைந்து அவர் எழுதிய நீண்ட கட்டுரை அவரது முன் முடிவை எடுத்துக் காட்டியது.
ஏற்கெனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு ஆற்றல் துறையினரும் கூறி வருவதைப் போலவே அணு மின்சாரத்தின் அவசியம் குறித்து பொய்யான விவரங்கள் அடிப்படையில் அப்துல் கலாமும் வலியுறுத்துகிறார்.
அணு உலை இயங்கும் போது சாதாரண காலத்திலேயே - இயல்பான உற்பத்தி நடக்கும்போதே அப்பகுதியில் கதிரியக்கத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அப்துல் கலாம் மறுத்தார்.
அதைவிட அணுமின் உலை கதிரியக்கத்தின் வெளிப்பாட்டால் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பு ஏதும் வராது என்று அடித்துப் பேசினார். அணுமின்சார உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கமானது உடனடியாக தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு புற்று நோயை உருவாக்கும் என்பதையும், அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கும் தொடர் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதையும் அடியோடு மறுத்த அப்துல் கலாம் இது காமிக் கதைகள் போன்ற கற்பனை என்று எள்ளி நகையாடினார். ஹிரோஷிமா, நாகசாகி பாதிப்பு கள் கூட மிகைப்படுத்தப்பட்ட பரப்புரை என்று கூறினார்(தி இந்து கட்டுரை, 06.11.2011).
அதே கட்டுரையில் கதிரியக்கம் தாக்கினால் மனித உடலில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை என்றும் கூறிக்கொள்கிறார்.
ஹிரோஷிமா அணு குண்டு வீச்சால் இன்று வரை ஜப்பானியர்களிடையே புற்று நோயும் பிறவி ஊனங்களும் தொடர்கின்றன என்ற உண்மை மக்களின் பட்டறிவு மூலமாகவும், பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் வழியாகவும் பலமுறை மெய்பிக்கப்பட்டுவிட்டன. அதைக்கூட அப்துல் கலாம் மறுக்கிறார்.
சோவியத் ஒன்றியத்தில் செர்னோபில் அணு மின்சார உலை விபத்து 1987-ல் நிகழ்ந்த போது உடனடியாக இறந்தவர்கள் 7000 பேர் தான். ஆனால் அதில் வெளிப்பட்ட மிகைக் கதிர்வீச்சு காற்றிலும் நிலத்திலும் தங்கி, தாவரங்களிலும், கால்நடைகளிலும் உயிரணுக்களில் படிந்து, மனிதர்களையும் தொற்றி 25 ஆண்டுகளுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சென்ற ஆண்டு வரை இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரம் பேர் என்பதும் இரஷ்ய அரசே ஒத்துகொண்டுள்ள உண்மையாகும்.
தாராப்பூர், கல்பாக்கம், கைகா அணு உலைகளில் ஏற்படும் கதிர்வீச்சால் அவற்றை சுற்றி வாழும் மக்களிடையே இரத்த புற்றுப்நோய், எலும்புப் புற்றுநோய், தைராய்டு வீக்கம் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளதை சுதந்திரமான அமைப்புகளின் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இவற்றில் எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் ”அறிவியலாளர்” அப்துல்கலாம் இவை காமிக் புத்தக கட்டுகதைகள் என எள்ளி நகையாடுவது அவர் கொஞ்சமும் நெஞ்சில் ஈர மற்றவர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சில மணிநேரங்கள் கூடங்குளம் அணுமின் உலையை சுற்றிப் பார்த்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன என்று அவர் சான்று வழங்கினார். அங்கு போவதற்கு முன்பே மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலிலும் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கூறி விட்டார்.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரஷ்யாவின் வி.வி.இ.ஆர்.1000 (V.V.E.R 1000) அணு உலையில் 31 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதையும் அணு உலை இயங்கத்தொடங்கி இரண்டாண்டுகளுக்கு பிறகு விபத்துகள் நேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் இரஷ்ய அறிவியலாளர்களே இரஷ்ய அரசுக்கு கடந்த சூலை 2011ல் அளித்த ஆய்வறிக்கையில் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றி அப்துல் கலாம் வாய் திறக்கவே இல்லை.
அணு உலைக்கு மிகப்பெரும் அளவில் கடல் நீர் வேகமாக உறிஞ்சப்படும் போதும், அணு உலையிலிருந்து கொதி நீர் கடலுக்குள் விடப்படும் போதும் கடலியல் சூழல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். மீன் வளம் பெருமளவு குறையும். இதனை ஏராளமான கடலியல் ஆய்வறிக்கைகளும் மீனவ மக்களின் பட்டறிவும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துள்ளன. தாராபூரிலும், கல்பாக்கத்திலும் மேற்கொள்ளப்பட்ட கடலியல் ஆய்வுகளும் இந்த உண்மையை உறுதி செய்துள்ளன.
இவைபற்றியெல்லாம் கலாமுக்கு கொஞ்சமும் கவலையில்லை. மீன்வளம் குறையாது மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நெஞ்சாரப் பொய்கூறினார்.
அணு உலையில் வெளிப்படும் கதிரியக்கக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு அப்துல் கலாமும் அவர் அருகில் இருந்த கூடங்குளம் அணு உலை உயர் அதிகாரி எஸ்.கே. ஜெயினும் ஆளுக்கொரு கருத்தை சொன்னார்கள். அணு உலை வளாகத்திற்குள்ளேயே ஆழக் குழிதோண்டி கதிரியக்கக் கழிவுகளை கனமான கலன்களில் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள் என கலாம் கூறினார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எஸ்.கே.ஜெயின் ஆபத்தான இக்கழிவுகளை மறு சுழற்சி செய்து கண்ணாடி இழைகளாக மாற்றி உருண்டை யாக உருட்டி வைத்து மேலேயே பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.
தில்லியில் இச்சிக்கல் குறித்து பேசிய இந்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் அணுக்கழிவுகளை தாராப்பூருக்கு எடுத்துச்சென்று விடுவோம் என்று கூறினார். இந்த அணுக் கழிவுகளை மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தி கொள்வோம் என இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ குமார் பானர்ஜி கூறி வருகிறார்.
இப்படி இவர்கள் ஆளுக்கொன்றாக கூறுவதிலிருந்தே அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்க இந்திய அரசிடம் எந்த திட்டவட்டமான ஏற்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது.
உலகம் முழுவதும் அரசுகள் சந்திக்கிற முக்கியமான பிரச்சினையாகவும் இது உள்ளது. அணு உலைகளை இனி இயக்க வேண்டாம், மூடிவிடலாம் என முடிவு செய்துவிட்ட நாடுகள் கூட இதுவரை வெளியான அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று உறுதியான முடிவெடுக்க முடியாமல் முடியை பிய்த்து கொண்டிருக்கிறார்கள் ஏனெனில் அணுக்கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் அணு உலையின் கதிரியக்கத்தை விட வீரியமானது; ஆபத்தானது. இவற்றின் கதிரியக்க வீரியம் பாதியாகக் குறைவதற்கே குறைந்தது 22, 500 ஆண்டுகள் ஆகும்.
அதற்கு பிறகும் கதிரியக்கம் தொடரும். குறைந்தது 25000 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக புதைத்து வைப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடித்தாக வேண்டும். இன்று வரை விடை கிடைக்காத பெரும் சிக்கல் இது.
நெல்லையப்பர் கோயிலும் தஞ்சை பெரிய கோயில் கோபுரமும் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதிலிருந்தே நெல்லை மாவட்டமும் கூடங்குளமும் நிலநடுக்கம் பாதிக்காத பகுதி என்பது தெரியவில்லையா என அப்துல் கலாம் கேட்டார். இது எளிய மக்களை குழப்புவதற்கான மலிவான உத்தி ஆகும்.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் கோபுரமும் கூடங்குளம் அணு உலையும் ஒன்றல்ல. கோயில் கோபுரத்தில் சிறு விரிசலோ பிளவோ ஏற்பட்டால் கூட அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடாது; சரிசெய்து கொள்ள முடியும். திருச்சி, திருவரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடவில்லை. அக்கோபுரம் ஒருவாறு சீரமைக்கப்பட்டு இன்றும் நிற்கிறது. காளஹஸ்தி கோயில் கோபுரம் கடந்த ஆண்டு தரைமட்டமாக சரிந்தது. அதனால் சுற்றுச் சூழலுக்கோ மனித உயிர்களுக்கோ பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
அணு உலை அப்படியானது அல்ல. அதன் ஆயுட்காலமே 35 ஆண்டுகள்தான் என அதை வடிவமைத்த வல்லுநர்களே வரையறுத்துவிட்டார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம், அதைத்தொடர்ந்த ஆழிபேரலை ஆகியவைதான் வரவேண்டும் என்பதல்ல, நில அதிர்வு ஏற்பட்டு அணு உலைச் சுவரில் சிறிய விரிசல் ஏற்பட்டாலே கூட அதன்வழியாக பெருமளவு கதிரியக்கம் வெளிப்பட்டு பேரழிவை ஏற்படுத்தி விடும்.
கூடங்குளம் பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் நில அதிர்வுகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே அடிக்கடி ஏற்பட்டு வருவதை அரசின் பதிவேடுகள் கூறுகின்றன. 2006 மார்ச் 10ஆம் நாள் கூடங்குளம் அருகில் உள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகிய சிற்றூர்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை அரசின் குறிப்புகளே பதிவு செய்துள்ளன. 2011 ஆகஸ்டில் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் நில அதிர்வு நிகழ்ந்துள்ளது.
தென் தமிழ்நாட்டின் கடலுக்குள் எரிமலை இருப்பதை நிலவியல் ஆய்வுகள் பலவும் எடுத்துகூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தை அச்சன் கோயில், தாமிரபரணி நிலக் கிழிவு மண்டலம் (AchanKovil , Thamirabharani Shear zone- ATS) என நில இயற்பியலாளர்கள் வகைப் படுத்துகின்றனர். அப்பகுதியில் உருகி உருமாறிய பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் உள்ளிட்ட பல்வேறு காலப்பகுதி பாறைகள் சந்திக்கின்றன என்றும் நிலத் தகடுகள், இணையும் பகுதியாக (Contact Zone) உள்ளதையும் ஆய்வுகள் எடுத்து கூறுகின்றன. (எ.கா Restivity studies to Deliniate st ructural features near Abhishekapatti, Thiru nelveli - Y.Srinivas et al-Journal of Indian Geophysics Union, Vol 12, no: 4, page 157 -163-October, 2008). இந்த நிலத் தகடுகள் ஒன்றின் மீது ஒன்று நகரும்போது இலேசான நில அதிர்வில் இருந்து பெரிய நிலநடுக்கம் வரையிலும் ஏற்படுகின்றன. இதுதான் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படக் காரணமாகும்.
இந்த அடிப்படை அறிவியல் உண்மையை மறைப்பதற்காகவே அப்துல் கலாம் கோயில் கோபுரத்தை எடுத்து காட்டாகக் கூறி குழப்ப முயல்கிறார்.
இதற்கு மேலும் உறுதியாக போராடிக்கொண்டிருக்கிற தமிழக மக்களை பிளவுப் படுத்துவதற்காக ஆசை வார்த்தை காட்டும் கேவலமான உத்தியிலும் அவர் இறங்கி விட்டார். சில நூறு கோடி ரூபாய் செலவில் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நாற்கரச் சாலை அமைப்பது, மருத்துவ மனை நிறுவுவது, புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவது, பள்ளிக்கூடங்கள் கட்டித் தருவது, பூங்காக்கள் அமைப்பது என ஆசைவார்த்தைகள் கூறி நாற்காலி அரசியல்வாதிகளின் நிலைக்கு இழிந்து பேசினார். இதன் மூலம் அப்பகுதி மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது என்பதே அவரது திட்டம்.
தான் பிறந்த இராமேசுவரம் பகுதியிலேயே நாள்தோறும் தமிழக மீனவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதையும், அவர் பிறந்த மண்ணிலிருந்து கூப்பிடு தொலைவில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒரே ஆண்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட்தையும் கண்டு மனச்சான்று உருத்தாத மனிதர்தான் இந்த அப்துல் கலாம்.
இவரைப்போலவே அரசமைப்புச் சட்ட பதவிகளில் இருந்த நீதிபதிகள் வீ.ஆர்.கிருஷ்ணய்யரும், பகவதியும் மக்கள் உரிமைக்காக அவ்வப்போது குரல் கொடுக்கும்போது பதவிக் காலம் முடிந்தபிறகும் மனிதப் படுகொலைகளை கூட கண்டிக்காத இந்தியத் தேசியக் கல் நெஞ்சர் தான் கலாம்.
மராட்டிய மாநிலத்தின் ஜெய்தாபூரிலும், மேற்கு வங்கத்தின் அரிபூரிலும் அணு உலைக்கு ஆதரவாக படையெடுக்காத அப்துல் கலாம் தமிழினத்தை அழிக்கும் கூடங்குளம் அணு உலையை நிலை நிறுத்துவதற்காக மட்டும் கோடாரிக் காம்பாக ஓடோடி வந்து ஒரு தலைச்சார்பாக பேசி சீர் குலைக்க முயல்கிறார்.
அணு மின்சாரம் சிக்கனமானது, தூய்மையானது, தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு தேவையானது என்ற ஆட்சியாளர்களின் வாதங்களையே மீண்டும் அவர் பேசினார். இவற்றிற்கெல்லாம் அறிவியல் வழிப் பட்ட விடைகளைச் சொல்லி யாகிவிட்டது. (காண்க: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15, 2011 மற்றும் கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது-த.தே.பொ.க வெளியீடு).
அப்துல் கலாமைப் போன்ற அறிவு அதிகார வர்க்கத்தினரையும், அறிவியல் அடியாட்களையும் எதிர்கொண்டு அணுஉலைக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் முன்னேற வேண்டியது அவசியமாகும்.
-கி. வெங்கட்ராமன்

கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது - தோழர் - கி. வெங்கட்ராமன்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன் எப்போதையும் விட பெருவீச்சோடு நடைபெற்று வருகிறது.  நெல்லை மாவட்டம் இடிந்தகரை என்ற சின்னஞ் சிறு கிராமம், உலகம் கவனிக்கும் முக்கியமான மக்கள் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கூடங் குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் இன்று தமிழகம் தழுவியதாக மாறிவருகிறது. இது இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு வகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்கொள்வதற்காக ஒரு பக்கம் வாக்குறுதிகளையும், குழப்பமான வாதங்களையும் முன்வைத்து, மறுபுறம் தங்கள் கையாட்களின் மூலமாகவும் உளவு நிறுவனங்களின் மூலமாகவும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி மக்களைப் பிளவுபடுத்த முயலுகிறது இந்திய அரசு. கூடங்குளம் அணுஉலை மிகவும் உயர்தரத் தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ளது, பாது காப்பானது என்று இந்தியப் பிரதமர் முதல் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகள் வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம் இந்த அணு உலை தமிழ கத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்த்து தொழில் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்று கூறுகிறார்கள். கூடங்குளம் பகுதி இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் என்ற வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள். இருக்கிற மின்சாரங்களிலேயே அணு மின்சா ரம்தான் சிக்கனமானது, தூய்மையானது, சுற்றுச் சூழலைக் கெடுக்காதது என்றும் கூறுகிறார்கள். இவற்றை எதிர்கொண்டு இந்திய ஏகாதிபத் தியத்தின் சதித்திட்டத்தை முறியடிப்பது தமிழகத்திலுள்ள மக்கள் இயக்கங்களின் முன் னுள்ள பணி ஆகும். அவர்களுடைய வாதங் களையும் வாக்குறுதிகளின் பொய்மைகளையும் எதிர்கொண்டு அம்பலப்படுத்த வேண்டியது முதன்மையான தேவையாக இருக்கிறது. இக்கட் டுரை அந்நோக்கத்திலேயே வருகிறது.

1988 நவம்பரில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்ட உடனேயே தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. இந்திய அரசும் சோவியத் ஒன்றிய அரசும் இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தியது.

அன்று இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு கிளையாக இயங்கிய போது, எம்.சி.பி.ஐ. தமிழ்நாடு மாநில அமைப்புக்குழு 1988 நவம்பர் 26, 27 ஆகிய இருநாட்கள் சிதம்பரத்தில் கூடிய போது இயற்றியத் தீர்மானம் இதனை வலியுறுத்தியது.

பொதுவாக அணு உலைகள் அது எந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1.சாதா ரண உற்பத்திக் காலங்களில் இயல்பாக உற்பத்தி நடக்கிறபோது, 2. உற்பத்தி நடந்து கொண் டிருக்கும்போது ஏற்படுகிற நிகழ்வுகளின் போது (மிஸீநீவீபீமீஸீts), 3. எதிர்பாராமல் நடக்கிற விபத்து களின் போது (ணீநீநீவீபீமீஸீts), 4. உற்பத்தி முடிந்து அணு உலையின் ஆயுள் காலம் முடிந்து அதை மூடி வைக்கிற போது, 5. அணு உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கக் கழிவுகளைப் பாது காக்கிற போது என்று எல்லா நிலைகளிலும் கதிர்வீச்சு ஆபத்து வெவ்வேறு அளவுகளில் இருக்கவே செய்கின்றது.

அணு உலை இயங்கும்போது அதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுவதோடு கதிர் இயக்கத் தனிமங்களும் வெளிப் பட்டுக் கொண்டே இருக் கின்றன. ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகியவற்றின் கதிரி யக்க ஐசோடோப்புகள் வெளிப் படுகின்றன. அது மட்டுமின்றி அயோடின் 131, சீசியம் 137 ஆகிய கதிரியக்க ஐசோ டோப்புகளும் வெளிப்படு கின்றன. இவை ஏராளமான கதிர்வீச்சைப் பரப்புகின்றன.

இயல்பாக உடல் தாங்கக் கூடிய கதிர்வீச்சு அளவை விட ஒரு இலட்சம் கோடி மடங்கு கதிர்வீச்சு இவற்றின் மூலம் வெளிப்படுகிறது, இக்கதிர்வீச்சு உடலைத் தாக்கினால் எலும்புப் புற்று நோய், இரத்தப் புற்று நோய், குடல் புற்று நோய் போன்ற புற்று நோய்கள் வரும்.  கருச்சிதைவு ஏற்படும். தலை முறை தலைமுறையாக உடல் ஊனத்தோடு குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட காற்றைச் சுவாசிக்கும் எல்லா உயிரிகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும். அணு உலை அமைந்திருக்கும் பகுதியில் மட்டுமின்றி, குறைந்தது 170கிமீ சுற்றளவில்  உள்ள புல்லி லிருந்து நெல்லிலிருந்து அனைத்து வகை தாவரங் களிலும் இந்த அணுக்கதிர்வீச்சு படிந்துவிடும். புல்லைத் தின்கிற மாடும் தாவரங்களை மேய்கின்ற ஆடும் அவற்றைப் பயன்ப டுத்துகிற மனிதர்களும் தொ டர்ச்சியாகப் பாதிப்புக்கு உள் ளாவார்கள். அடுத்தடுத்த தலை முறைக்கும் இந்தக் கதிரி யக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

நிகழ்வுகள் நடைபெறுவ தற்கான வாய்ப்பு இந்த இரஷ்ய அணு உலையில் அதிகமாகவே இருக்கிறது. கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலை விவிஇஆர்1000 (க்ஷி.க்ஷி.ணி.ஸி 1000) என்ற ஒரு வகை அணு உலை யாகும். இதன் வாழ்நாள் 35 ஆண்டுகள். 35ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணுஉலையை இயக்கக்கூடாது என்று அதன் தொழில்நுட்பமே கூறுகிறது. அத்தோடு இரண்டாண்டு களுக்குப் பிறகு இந்த அணு உலையில் சிக்கல்கள் (றிக்ஷீஷீதீறீமீனீs) நிகழ்வுகள் (மிஸீநீவீபீமீஸீts) தொ டங்கும் என்று அதை வடிவ மைத்த அறிவியலாளர்களே குறித்திருக்கிறார்கள்.

இப்போது 2011 சூலையில் இரஷ்ய பிரதமர் மெத்வதே விடம் இரஷ்ய சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் அணு உலை களை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் 31 குறைபாடுகள் வி.வி.இ.ஆர். வகையில் இருப்ப தாகச் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள விவிஇஆர் 1000 அணு உலையின் மையப் பகுதியில் தடித்த எஃகால் ஆன பெட்டகம் உள்ளது.  மிகை யான நியூட்ரான் மோதுதல் நடக்கும்போதும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதார ணமாக அன்றாடம் நடக்கிற நியூட்ரான் மோதலின்போதும் அந்த அணு உலைச் சுவர் இற்று ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மெத்வதேவிடம் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அது போல் குளிர்விக்கும் தண்ணீர் கருப்பகுதியைத் தாக்கி ஓட்டை போட்டு கதிர்வீச்சை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இதுபோல் 31 குறைபாடுகள் விவிஇஆர் அணுஉலைபற்றிக் குறிக்கப்பட்டுள்ளன.

இரஷ்ய வடிவமைப்பு வி.வி. இ.ஆர். அணுஉலை மட்டு மின்றி எந்த வகை அணு உலையும் தனது நாடடில் வேண்டாம் என்று செர்மன் நாடு முடிவு செய்துவிட்டது. வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் இருக்கிற எல்லா அணு உலை களையும் படிப்படியாக மூடி விடுவது என்று அந்நாடு முடிவு செய்திருக்கிறது.

எந்த வகை அணு உலையும் தங்கள் நாட்டில் கூடாதென்று இத்தாலி முடிவு செய்து விட்டது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளும்  அணு உலை கூடாது என்று முடிவு செய்துவிட்டன. இவை யெல்லாம் அணு உலைகள் பாதுகாப்பானவை அல்ல என்பதற்கும் குறிப்பாக கூடங் குளத்தில் நிறுவப்படவுள்ள விவிஇஆர் அணு உலை பாது காப்பானது அல்ல என்பதற்கும் சான்றாகும்.

அணு உலைக்குள் செலுத் தப்பட்டு வெப்பத்தால் கொ திக்கும் கடல் நீர் மீண்டும் கடலுக்குள் விடப்பட இருக் கிறது.  சராசரியாக 1300 டிகிரி ஃபாரன் கீட்டுக்கு மேல் அதனு டைய வெப்பம் இருக்கும். அவ்வளவு கொதிக்கும் நீர் கடலில் விடப்படும்போது கூடங்குளத்தைச் சுற்றி மட்டு மல்ல திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட் டம் வரையிலும் உள்ள கடற் பரப்பில் மீன்வளம் கடுமை யாகப் பாதிக்கப்படும்.  கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அங்குள்ள கடல் உயிரிகள் மீன் வகைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடும். மீனவர்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியைச் சந்திக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப் பே இல்லாத பகுதி என்று இந்திய அணுசக்திக் கழகத் தினுடைய தலைவரிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் வரை துண்டு போட்டுத் தாண்டாத குறையாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். உண் மை நிலையோ அதற்கு மாறாக உள்ளது. இதே கூடங்குளம் பகுதியில் 2003ல் இலேசான நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. 2006 மார்ச் 10 ஆம் நாள் கூடங் குளம் அருகிலுள்ள அஞ்சு கிராமம், அழகப்பபுரம், சாமித் தோப்பு ஆகியவற்றில் இலே சான நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை இந்திய அரசின் ஆய்வுக் குறிப்புகளும் தமிழக அரசின் வருவாய்த் துறைக் குறிப்புகளும் பதிவு செய் துள்ளன. இப்போது 2011 ஆகஸ்ட்டில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்தி ருக்கிறார்கள். இதற்கு முன்பு 1996லும் திருநெல்வேலி தூத் துக்குடி மாவட்டங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லாத இடம் என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இந்திய அணு உலைகளில் இதுவரை நிறுவப்பட்டுள்ள எந்த அணு உலையுமே முழு பாதுகாப்புடன் இயங்கியதாக வரலாறு இல்லை.

கைகாவில், நரோராவில், தாராப்புரில், கல்பாக்கத்தில் அனைத்து இடங்களிலுமே தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக் குறைவின் காரண மாகவோ அடிக்கடி நிகழ்வுகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச் சூழலில் கலந்துள்ளது என்றும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் மீண் டும் மீண்டும் கூறி வருகிறார். எல்லா ஏடுகளிலும் அவருடைய நேர்காணல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் அவர் எழுப்பி வருகி றார். அதற்கு அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ உருப்படியான பதில் எதுவும் கிடையாது

அணுமின்சாரம் சிக்கன மானது என்று ஆட்சியாளர்கள் சொல்வதும் உண்மையல்ல. இந்திய அரசே வெளியிட்டுள்ள கணக்குகளைத் தொகுத்துப் பார்த்தால் அணுமின்சாரத் துக்கு இந்திய அரசு வழங்கும் மானியம் 200 விழுக்காடு ஆகும். அதாவது அணு மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் 2000 ரூபாய் மானியமாக அரசு அளிக்கிறது. இதன் மூலமாக ஒரு  நிறுவனம் உற்பத்தியில் இறங்கிவிட்டாலே இரண்டு மடங்கு இலாபத்தைப் பெற முடியும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ரிலையன்ஸ் அம் பானியும் டாட்டாவும் அணு உலை அமைப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன் வந்திருக்கிறார்கள்.

அணு உலை மூடப்பட்ட பிறகு அல்லது அதனுடைய ஆயுள்காலம் முடிந்து நிறுத்தப் பட்டபிறகு அதிலிருந்து வருகிற கதிரியக்க கழிவுகளை மிகத் தடிப்பான சுவருள்ள ஈயப்  பெட்டகங்களில் அடைத்து 3000 அடிக்குக் கீழே குறைந்தது 25000 ஆண்டுகள் பாது காப் பாக வைக்க வேண்டும். இவ்வளவு நீண்ட காலத் திற்கு எந்தக் கண்காணிப்புக்கும் உத்தரவாதம் கிடையாது என வே பல நாட்டு மக்கள் தங்கள் பகுதியில் அணுக் கழிவுகளைப் புதைக்கக் கூடாது என்று கிளர்ச்சி செய்கிறார்கள்.

யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை அணு எரிபொ ருளாகப் பயன்படுத்தினால் அது பாதுகாப்பானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.  (எ.கா. புதிய தலைமுறை வார இதழ் 20.10.2011) தோரியம் என்ற தனிமமும் கதிரியக்கத் தனி மம்தான். அதிலிருந்தும் கதிர் வீச்சு அபாயம் இருக்கிறது.

தோரியத்தில் இயங்கும் அணு உலைகளில் கனநீருக்குப் பதிலாக நீர்ம சோடியம் குளிர் விக்கும் திரவமாகப் பயன் படுத்தப்படுகிறது.  அதிவேக ஈனுலையில் (திணீst ஙிணீக்ஷீ ஸிமீணீநீtஷீக்ஷீ) நீர்ம சோடியமே பயன்படுகிறது.  சோடியமானது காற்று பட்டா லே வெடிக்கக் கூடியது. கன நீரை விட இது பாதுகாப்பு குறைவானது.  இந்த அதிவேக ஈனுலைகளின் மேற்கூரை பல வீனமானது. சோடியம் வெடிப் பை தாங்க இயலாதது.

1995இல் சப்பானின் மொன்சு ஈனுலையில் சோடியம் கசிவு தொடர்ந்து ஏற்பட்டது.  ஆண்டுக்கணக்கில் அதனைச் சரிசெய்ய முயற்சி நடந்தது. அது தோல்வியில் முடிந்ததால் மூடப் பட்டது. பிரான்சு, பிரிட்டன் தோரியம் அணு உலையிலும் இவ்வாறான விபத்துகள் நடந்தன.

உண்மையில் தமிழ்நாட்டில் மின்வெட்டு வரக்கூடாது தொ ழில் நிறுவனங்களுக்கு தடை யற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றால்  தமிழகத்து மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே உரியதாக்கிவிட்டால் போதும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் மின்சார வாரியம் விலை கொடுத்துத்தான் வாங்கு கிறது. விலை கொடுத்து தமிழ் நாட்டு மின்சார வாரியம் வாங்குவதற்குக் கூட இந்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின் சாரம் முழுமையாகக் கிடைப்ப தில்லை.

தமிழகத்திற்குக் காவிரி நீரை அடாவடியாக மறுக்கும் கர் நாடகத்திற்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போய்க் கொண்டி ருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கு நாள் தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. அதே போல் பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கு நெய் வேலி மின்சாரம் நாள்தோறும் 6 கோடி யூனிட் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழகத்துக்கு எதிரான சட்ட விரோதமான நீர் முற்றுகை யிடும் மாநிலங்களுக்கு இந்திய அரசின் நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து நாள் தோ றும் 26 கோடி யூனிட் மின் சாரம் போய்க் கொண்டி ருக்கிறது.

தமிழகத்துக்கு உள்ள மின் சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் தான். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட்டால் தமிழ கத்தில் மின் பற்றாக்குறை இருக் காது. மின்சார உபரி மாநில மாகத்  தமிழ்நாடு திக ழும். இதைச் செய்வதற்கு இந்திய அரசு என்றைக்கும் முன்வரு வதில்லை. மன்மோகன் சிங் என்றைக்கும் இதுபற்றிச் சிந்தித் ததில்லை. கூடங்குளம் அணு உலையை தமிழர்கள் மீது திணிப்பதற்காக இங்குள்ள மின்வெட்டைக் காரணமாகக் காட்டிப் பசப்புகிறார்.

கடலலை மின்சாரம், காற் றாலை மின்சாரம், கழிவி லிருந்து மின்சாரம், கதிரொளி மின்சாரம் ஆகியவற்றில் இந்திய அரசும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும். எளிமை யான உறுதியான இவ்வாறான மாற்று வழிகள்  இருக்க அணு உலை என்பது கூடவே கூடாது. அழிவை ஏற்படுத்தும் அணு மின்சாரத்தை ஒரு மின் உற்பத் திக்கான வழியாக ஏற்கவே கூடாது.

இந்திய அரசு தமிழக அமைச்சரவையின் தீர்மானத் தையோ தமிழக மக்களின் கருத்தையோ ஒரு பொருட் டாகவே கருதவில்லை. எப்ப டியும் கூடங்குளம் அணுஉலை யை இயக்குவது என்று பிடி வாதமாக இருக்கிறது. கண் துடைப்பாக தானடித்த மூப் பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து மக்களிடம் பேசுவது என்று அறிவித்திருக்கிறது. போராடும் மக்களிடமும் வல் லுநர் குழுவின் பட்டியல் பற்றிக் கேட்கப்படவில்லை. தமிழக அரசிடமிருந்தும் பட்டியல் பெறப்படவில்லை. இந்திய அரசு ஒருதலைப்பட்சமாக அக் குழுவை அமைத்து மக்களை எப்படியாவது ஏற்கச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இன்னொரு புறம் இந்திய அரசின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களிடம் பேச வைப்பது என்ற திட்டத்தில் இந்திய அரசு இறங்கியி ருக்கிறது. அப்துல்கலாம் அணு வெடிப்பை அணு குண்டை ஆதரிக்கிற அணுவியலாளர். அணு அறிவியலாளர். இருந்த போதிலும் நல்ல தமிழ் உணர் வாளர். இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை உள் ளவர் என்கிற வகையில் தமிழ்நாட்டு மக்கள் அவரை மதிக்கிறார்கள். ஆனால் கூடங் குளம் அணு உலைக்கு ஆதர வாகப் பரப்புரையில் அவர் இறங்கினால் அது அவருக்கு மதிப்புக் குறைவைத்தான் உண் டாக்கும்.

அவரை வைத்துத் தமிழ் உணர்வாளர்களை, அவர்மீது பற்று வைத்துள்ள இளைஞர் களை, ஒரு பகுதி இஸ்லாமியர் களை இப்போராட்டக் கருத்தி லிருந்தும் களத்திலிருந்தும் அப் புறப்படுத்திவிடலாம் என்று கேவலமான பிளவு உத்தியை இந்திய அரசு வகுத்துள்ளது. அதற்கு யாரும் இரையாகிவிடக் கூடாது. முனைவர் அப்துல் கலாமும்  அதற்குத் துணை போகக் கூடாது.

அது மட்டுமின்றி சாதியை வைத்தும் மதத்தைக் காட்டியும் பணத்தாசைக் காட்டியும் போ ராடும் மக்களைப் பிளவு படுத்துவதற்கு அனைத்து வகை யிலும் இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது அறிவியலுக்கு எதி ரானது. வளர்ச்சிக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்புவதற்கு இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வகை கையாட்கள் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அக்கட்சியின் தமிழ்நாடு அமைப்பு கூடங்குளம் அணு உலைக்கு வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து பேசுகிறது. ஆனால் அதே கட்சியின் அனைத்திந்தியச் செயலாளர் பிரகாஷ் காரத் முயற்சியில் ஜெய்த்தாப்பூர் அணு உலைக்கு எதிராக மராட்டியத்தில் மட்டு மின்றி இந்தியா முழுவதும் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மராட்டிய மாநிலம் ஜெய்த் தாப்பூரில் அமையவிருந்த அணு உலைக்கெதிரான போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முனைப்பாகப் பங்கேற்றது.  இப்போது அனைத்திந்திய அளவில் அப் போராட்டத்தை விரிவுபடுத் துவதற்கும் அக்கட்சி இறங் கியுள்ளது.

இரஷ்ய அணு உலை முத லில் கேரளாவில் அமைய விருந்தது.  கேரளத்திலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் இணைந்து எதிர்த் ததால் கேரளாவில் அமைய விருந்த இரஷ்ய அணு உலை கூடங்குளத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அனைத்திந்தியத் தலைமை யும் மராட்டிய மாநிலத் தலை மையும் கேரளத் தலைமையும் அணு உலைக்கு எதிராக இருக்கும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு குழு தமிழின விரோதப் பாதையில் இன்னொரு நடவடிக்கையாக கூடங்குளம் அணு உலையை ஆதரித்துப் பரப்புரை செய் கிறது. அண்மையில் கூடங் குளம் அணுஉலை நிறுவனத் தலைவர் இராமமூர்த்தியை வைத்து கருத்து உருவாக்கும் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நடத்தியது. அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராசன், அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராசன் ஆகியோர் அதில் கலந்து கொண்டு எப்படியும் கூடங் குளம் அணு உலையை நிறுவி யே தீருவது என்று வலிந்து  பேசியிருக்கிறர்கள்.

இந்திய அரசு பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து அப்போ ராட்டத்தை இடிந்தகரையில் மையம் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிற அறிவாளர் களையும் போராட்டத் தலைவர்களையும் மக்களிடம் இருந்து பிரிப்பதற்குப் பல அவதூறு களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது இரஷ்யா விற்கு எதிரான அமெரிக்கச் சதி என்று சொல்வதற்கு உளவுத் துறை யோடு தொடர்புடைய பலரையும் ஊடகத்தின் வாயிலாகக் களமிறக்கியிருக் கிறது முதல் நபர் அமெரிக்கக் கையாளான சுப்பிரமணியம் சுவாமி “இது வெளிநாட்டுச் சதி“ என்று தொலைக் காட்சியில் பேட்டி அளிக் கிறார். எந்த வெளிநாட்டுச் சதி என்று வெளிப்படையாக அவரால் சொல்ல முடிய வில்லை. காரணம் அவர் சொல்ல விரும்புகிற வெளிநாடு அமெரிக்கா. அந்த அமெரிக்கா வின் முதல் நபர் கையாளாகவே தான் இருக்கிறபோது அதைச் சொல்ல முடியாமல் விழிக் கிறார். இந்த அவதூறு களின் அடிப்படை நோக்கம் மக் களைத் தலைமையற்றவர் களாக மாற்றுவது, அதன் மூலம் திசை தெரியாமல் அவர்களைச் சிதறடிப்பது என்பதுதான்.

உலக அணு ஆயுத வல்லரசு களின் அணிவகுப்பில் இந்தியா வும் சேர்ந்து கொள்ள விரும்பு கிறது. அணு ஆயுத வல்லரசாக மாறும் கனவு இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திரா காந்தி ஆட்சிக் கலத்தில் 1974ஆம் ஆண்டு பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனை நடத்தப் பட்டது. அந்த பொக்ரான் 1 அணு வெடிப்பு சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப் புக்கு இந்திய அரசு ஆளானது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் ஆதர வோடு அணு ஆயுதக் குவிப்பில் இறங்குவதற்கு இந்திய அரசு முனைந்தது. அந்தச் சூழலில் தான் கூடங்குளம் பேச்சு வார்த்தை தொடங்கியது.

அணு மின்சாரத்திற்கான உலை என்பது அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியம் போன்ற கதிரியக்கக் கழிவுகளில் சிலவற்றைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிப்பதிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். இது உலகறிந்த கமுக்கம்.  அணு மின்சாரம் என்ற பெயரில் இரஷ்யாவிலிருந்து யுரேனி யத்தை இறக்குமதி செய்து அணு மின்சாரத்தையும் உற் பத்தி செய்துவிட்டு அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியத் தை வைத்து அணுகுண்டு தயாரிக்கலாம் என்ற ஒரு திட்டத்தில்தான் சோவியத் ஒன்றியத்தை இந்தியா அணு கியது.

ஆனால் சோவியத் ஒன்றி யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அரசியலில் ஏற்பட்டிருக்கிற மாறுதலுக்கேற்ப இந்திய அரசு அமெரிக்க வல்லரசின் கூட்ட ணியில் இணைந்திருக்கிறது. இன்று அமெரிக்க வல்லரசின் அணு ஆயுதக் கூட்டாளிகளில் ஒருவராக இந்தியா இணைந் திருக்கிறது.   இங்கு அணு உலை ஏற்படுத்துவது என்பது இந் தியா உலக ஏகாதிபத்திய வல் லரசுகளில் ஒன்றாக வளர் வதற்கு ஒரு முக்கிய கண்ணியாக அமைகிறது.

இதுவரையிலும் இந்தியா வில் அமைந்துள்ள அணு மின்சார உலைகள் 500 மெகா வாட்டைத் தாண்டி உற்பத்தித் திறன் உள்ளவை அல்ல. முதல் முறையாக 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் கூடங்குளத்தில்தான் நிறுவப்படுகின்றன. இது தொ டர்பான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலம் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தது. இதை நம்பிக் கையாக வைத்துத்தான் மேற்கு வங்காளத்தில் அரிப்பூரிலும் மராட்டியத்தின் ஜெய்த்தாப் பூரிலும் இன்னும் ஒரிசாவிலும் ஆந்திராவிலும் வேறு சில மாநிலங்களிலும அணு உலை களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தொடக்க நிலையிலேயே ஜெய்தாப்பூர் அணு உலைத் திட்டம் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் அரிப் புரில் அணு உலை ஏற்படுத் துவதற்கு அம்மாநில முதல மைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு காட்டியதால் அத் திட்டம் கைவிடப்பட்டது.

எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்கு வதென்பது தொடர்ச்சியான இந்திய அரசின் அணு வல்லரசு முயற்சியில்  முக்கியமான ஒன் றாக அமைந்திருக்கிறது.

இந்த அணு உலை ஒப்பந் தத்தின் மூலமாக அணு உலை தயாரிக்கிற பன்னாட்டு நிறுவ னங்களிடமிருந்து பல இலட்சம் கோடி கையூட்டுப் இந்திய அரசியல் தலைவர்களுக்கம் அதிகார வர்க்கத்தினருக்கும் உயர் மட்ட அறிவியலாளர் களுக்கும் கிடைப் பதற்கான வாய்ப்பு உள்ளது.  இந்தப் பல இலட்சம் கோடி கையூட்டுப் பணம் மிகப் பெரிய கவர்ச்சி யாக ஆட்சியாளர்களை ஈர்க் கிறது.  இவை எல்லாவற்றிற்கு மான திறவு கோலாக இன்று கூடங்குளம் அணு உலை அமைந்துள்ளது.  எனவே தான் கூடங்குளம் அணு உலையைத் திறந்தே தீருவது என்ற முயற்சி யில் இந்திய அரசு இறங்கி யுள்ளது.

அதற்காக முயலைப் போல், எலியைப் போல் சோதனைச் சாலைக்கு உரிய பிராணிகளாக ஒட்டுமொத்தத் தமிழினத்தை மாற்றியுள்ளது.

எனவே இடிந்தகரை தொ டங்கி தமிழகம் முழுவதும் பரவி வரும் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திய வல்லாட்சியை எதிர்த்த தமிழி னத்தின் தொடர் போராட் டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கிறது.

சிங்களப் பேரினவாத அர சோடு இணைந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப் படுகொலை செய்தது இந்திய ஆரிய ஏகாதிபத்தியம் ஆகும்.  தமிழ்நாட்டு மீனவர்கள் 550 பேர் சிங்களத் துப்பாக்கிக்கு பலியானது இந்திய வல்லாட் சியின் துணையோடுதான். அது போதாது என்று நான்கு சுறா மீன்களைப் பிடித்தார்கள் என்ப தற்காக கடலோரக் காவல்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் கை விலங்கிட்டு அடித்து நொறுக்கி இழிவு படுத்தியிருக்கிறது.  நாள் தோறும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினராலும் சிங்கள அரசின் கைக்கூலி களாலும் அன்றாடம் தாக்கப் படுவதும் இழிவுபடுத்தப்படு வதும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

நடுவர்மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப் புக்குப் பிறகும் ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரியில் தர முடியது என்று அடாவடி செய்யும் கன்னடத்தானுக்கு இந்திய வல்லரசு துணை செய் கிறது.  உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தீர்ப்புரைத்த பிறகும் அதைக் காலில் போட்டு மிதித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்ற முயற்சியில் இறங்கி யிருக்கிற மலையாள அரசுக்குத் துணை செய்கிறது இந்திய வல்லரசு. கசிந்து வரும் பாலாற்றைக் கூட வழிமறித்து தடுப்பணை கட்டும் ஆந்திரா விற்குத் துணை போகிறது இந்திய வல்லரசு. வேலை வாய்ப்பைப் பெருக்குவதாகச் சொல்லித் தமிழகத்தை வெளி யாரின் வேட்டைக்காடாக மாற்றியிருப்பதுதான் இந்திய வல்லரசு.

இந்திய வல்லரசின் தமி ழினப் பகைப் போக்கில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் கூடங் குளம் அணு உலையாகும்.  தமிழினத்தை தலைமுறை தலை முறையாக அழித்துவிட்டு வட நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் தடை யில்லாத மின்சாரத்தை வழங்கு வதற்கு முனைந்திருக்கிறது இந் திய அரசு.

 கட்டி முடித்துவிட்டார்கள் தடுத்து நிறுத்த முடியாது என்று கைகட்டி நிற்காமல் இப்போது முனைந்தாலும் கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.  தமிழினத் திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.