நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி
உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள்
முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நா.த.க. முதன்மை நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்திக், சுனந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் சுட்டுரை (ட்விட்டர்) கணக்குகள், நேற்றிரவு திடீரென முடக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் முடிவுக்கு இணங்க இம்முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத ஆரியத்துவ பா.ச.க., தனது இந்திய ஆட்சி அதிகாரத்தின் வழியே தொடர்ந்து எதிர்கருத்தாளர்களை வேட்டையாடி வருவது நாம் அறிந்ததே. கர்நாடகத்தின் கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரை நேரடியாகக் கொன்றதில் தொடங்கி, எதிர்கருத்தாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது வரை இச்செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களின் சுட்டுரைக் கணக்குகளை முடக்கி, தான் தமிழினத்தின் எதிரி என பா.ச.க. மீண்டுமொருமுறை தம்மை பறைசாற்றிக் கொண்டுள்ளது.
கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாகக் கைவிட்டு, இக்கணக்குகளை மீண்டும் இயக்கிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் அனுமதிக்க வேண்டும். கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிக்கும் இந்திய அரசின் செயலுக்கு இணங்கிப் போகக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
==================================
Showing posts with label இந்திய அரசு. Show all posts
"புதிய நாடாளுமன்றம் - தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!" --- தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
புதிய நாடாளுமன்றம் -
தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!
================================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். திறப்பதற்குத் தேர்வு செய்த நாள், திறப்பாளராகத் தேர்வு செய்த நபர் ஆகிய அனைத்திலும் மோகன் பகவத் - மோடி கூட்டணியின் அடாவடித்தனம் வெளிப்பட்டது.
சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28-ஐ தேர்ந்தெடுத்ததின் மூலம் இது ஆரியத்துவ ஆட்சிதான் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தி இருக்கிறது மோகன் பகவத் - மோடி அணி!
குடியரசுத் தலைவரை இவ்விழாவிலிருந்து முற்றிலும் ஒதுக்கி வைத்தது, ஒடுக்குண்ட மக்களின் புறக்கணிப்பு, அரசமைப்பு நெறி மீறல் என காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியே!
ஆனால், இந்த ஆரவாரங்களுக்கும் எதிர்ப்புக் கூச்சல்களுக்குமிடையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மிகப்பெரிய தமிழின ஒடுக்குமுறைக் கருவியாக நாடாளுமன்றத்தை வலுப்படுத்தப் போகிறது என்ற பேராபத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் புதிய கட்டடமே கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் தேவையைக் கருதித் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றமே, முதன்மையான தமிழின ஒடுக்குமுறைக் கருவி என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம்.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில், உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்து வரையறுக்கப்பட்டிருப்பது தான் செயற்கையாக தமிழினத்தை நிரந்தர சிறுபான்மையாகவும், இந்தி இனத்தை நிரந்தர பெரும்பான்மையாகவும் வைத்திருக்கிறது.
இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கு 39, புதுச்சேரிக்கு 1 என மொத்தம் 40 உறுப்பினர்கள் தான் தமிழர்களுக்கு! இந்தி இனத்திற்கு 225! இந்தி சாயல் உள்ள பிற இன உறுப்பினர்களைச் சேர்த்துப் பார்த்தால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வதற்கான உறுப்பினர் வலு அவர்களுக்கு இருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்தில் இந்த நிலை இன்னும் கொடிய வகையில் மாறப் போகிறது.
நடப்பிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் வரையறை 1971ஆம் ஆண்டு, மக்கள் தொகை அடிப்படையில் உள்ளது. 2026க்குப் பிறகு, இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தின் நிலை!
மோகன் பகவத் - மோடி அணியும் ஒற்றையாட்சி நோக்கியே நகர்ந்து கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - அதை உறுதிப்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
15ஆவது நிதி ஆணையத்தை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2026ஆம் ஆண்டுக்கு அதனைக் கணக்கு நீட்டிப்பு (Projection) செய்து, தொகுதி வரையறைகளை உருவாக்குவது என்ற திட்டம் பா.ச.க. அரசிடம் இருக்கிறது.
இந்தக் கணக்கின்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39லிருந்து 49 ஆக உயரும். மறுபுறம் உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 143 ஆகவும், பீகாருக்கு 40லிருந்து 79 ஆகவும், மத்தியப்பிரதேசத்திற்கு 29 லிருந்து 52 ஆகவும் ஆக மொத்தம் இந்தி மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை 225லிருந்து 408 ஆகவும் உயர இருக்கிறது.
அவ்வாறான சூழலில், இந்திக்காரர்களை ஒப்பிட தமிழ்நாட்டின் வலு இப்போதிருப்பதைவிட மிகமிகச் சிறயதாக மாறிப்போகும். நாடாளுமன்ற சனநாயகம் என்ற வடிவத்திலேயே ஒரு கட்டமைப்பு இன அழிப்பு நிகழ்வதற்கான வாய்ப்பை புதிய நாடாளுமன்றம் உருவாக்குகிறது.
எப்போது மோடி தமிழையும், தமிழரையும் உயர்த்திப் பேசினாலும், அது தமிழினத்திற்கெதிரான புதிய தாக்குதலின் அறிகுறி எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
பாப்புவா நியூ கினியாவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுவிட்டு, தமிழ் மொழியை மோடி புகழ்ந்து பேசியதும், தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து சிறப்பு செய்யப் போகிறோம் எனக் கூறுவதும் தமிழின அழிப்பை மறைப்பதற்கான பெரும் சூது!
தமிழ்நாட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் அலங்கோலங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழின ஒதுக்கல் (Aparthied) தீவிரம் பெறுவதற்கும், நிலைப்படுவதற்கும் ஒரு சனநாயக வடிவம் தயாரிக்கப்படுகிறது என்ற ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.
இதனை மக்களுக்கு உணர்த்தும் கடமை தமிழ்த்தேசியர்களுக்கே இருக்கிறது!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2023 சூன் மாத இதழின் ஆசிரியவுரை இது).
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
========================================
தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!
================================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். திறப்பதற்குத் தேர்வு செய்த நாள், திறப்பாளராகத் தேர்வு செய்த நபர் ஆகிய அனைத்திலும் மோகன் பகவத் - மோடி கூட்டணியின் அடாவடித்தனம் வெளிப்பட்டது.
சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28-ஐ தேர்ந்தெடுத்ததின் மூலம் இது ஆரியத்துவ ஆட்சிதான் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தி இருக்கிறது மோகன் பகவத் - மோடி அணி!
குடியரசுத் தலைவரை இவ்விழாவிலிருந்து முற்றிலும் ஒதுக்கி வைத்தது, ஒடுக்குண்ட மக்களின் புறக்கணிப்பு, அரசமைப்பு நெறி மீறல் என காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியே!
ஆனால், இந்த ஆரவாரங்களுக்கும் எதிர்ப்புக் கூச்சல்களுக்குமிடையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மிகப்பெரிய தமிழின ஒடுக்குமுறைக் கருவியாக நாடாளுமன்றத்தை வலுப்படுத்தப் போகிறது என்ற பேராபத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் புதிய கட்டடமே கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் தேவையைக் கருதித் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றமே, முதன்மையான தமிழின ஒடுக்குமுறைக் கருவி என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம்.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில், உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்து வரையறுக்கப்பட்டிருப்பது தான் செயற்கையாக தமிழினத்தை நிரந்தர சிறுபான்மையாகவும், இந்தி இனத்தை நிரந்தர பெரும்பான்மையாகவும் வைத்திருக்கிறது.
இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கு 39, புதுச்சேரிக்கு 1 என மொத்தம் 40 உறுப்பினர்கள் தான் தமிழர்களுக்கு! இந்தி இனத்திற்கு 225! இந்தி சாயல் உள்ள பிற இன உறுப்பினர்களைச் சேர்த்துப் பார்த்தால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வதற்கான உறுப்பினர் வலு அவர்களுக்கு இருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்தில் இந்த நிலை இன்னும் கொடிய வகையில் மாறப் போகிறது.
நடப்பிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் வரையறை 1971ஆம் ஆண்டு, மக்கள் தொகை அடிப்படையில் உள்ளது. 2026க்குப் பிறகு, இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தின் நிலை!
மோகன் பகவத் - மோடி அணியும் ஒற்றையாட்சி நோக்கியே நகர்ந்து கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - அதை உறுதிப்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
15ஆவது நிதி ஆணையத்தை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2026ஆம் ஆண்டுக்கு அதனைக் கணக்கு நீட்டிப்பு (Projection) செய்து, தொகுதி வரையறைகளை உருவாக்குவது என்ற திட்டம் பா.ச.க. அரசிடம் இருக்கிறது.
இந்தக் கணக்கின்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39லிருந்து 49 ஆக உயரும். மறுபுறம் உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 143 ஆகவும், பீகாருக்கு 40லிருந்து 79 ஆகவும், மத்தியப்பிரதேசத்திற்கு 29 லிருந்து 52 ஆகவும் ஆக மொத்தம் இந்தி மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை 225லிருந்து 408 ஆகவும் உயர இருக்கிறது.
அவ்வாறான சூழலில், இந்திக்காரர்களை ஒப்பிட தமிழ்நாட்டின் வலு இப்போதிருப்பதைவிட மிகமிகச் சிறயதாக மாறிப்போகும். நாடாளுமன்ற சனநாயகம் என்ற வடிவத்திலேயே ஒரு கட்டமைப்பு இன அழிப்பு நிகழ்வதற்கான வாய்ப்பை புதிய நாடாளுமன்றம் உருவாக்குகிறது.
எப்போது மோடி தமிழையும், தமிழரையும் உயர்த்திப் பேசினாலும், அது தமிழினத்திற்கெதிரான புதிய தாக்குதலின் அறிகுறி எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
பாப்புவா நியூ கினியாவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுவிட்டு, தமிழ் மொழியை மோடி புகழ்ந்து பேசியதும், தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து சிறப்பு செய்யப் போகிறோம் எனக் கூறுவதும் தமிழின அழிப்பை மறைப்பதற்கான பெரும் சூது!
தமிழ்நாட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் அலங்கோலங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழின ஒதுக்கல் (Aparthied) தீவிரம் பெறுவதற்கும், நிலைப்படுவதற்கும் ஒரு சனநாயக வடிவம் தயாரிக்கப்படுகிறது என்ற ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.
இதனை மக்களுக்கு உணர்த்தும் கடமை தமிழ்த்தேசியர்களுக்கே இருக்கிறது!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2023 சூன் மாத இதழின் ஆசிரியவுரை இது).
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
========================================
"சூழ்ச்சியை மறைக்க இன்னொரு சூழ்ச்சி! 2000 ரூபாய் பணத்தாள் திரும்பப் பெறும் திட்டம்! " ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன்அறிக்கை!
சூழ்ச்சியை மறைக்க இன்னொரு சூழ்ச்சி!2000 ரூபாய் பணத்தாள் திரும்பப் பெறும் திட்டம்!
=================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
ஐயா கி.வெங்கட்ராமன்அறிக்கை!
=================================================
இந்திய அரசின் சேம வங்கி (ரிசர்வ் வங்கி) 2000 ரூபாய் பணத்தாள்களை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (19.05.2023) அறிவித்திருக்கிறது.
இதன்படி, 2023 மே 23 தொடங்கி செப்டம்பர் 30 வரை மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் பணத்தாளை வங்கிகளில் சேமிப்பில் செலுத்தலாம் அல்லது சில்லரையாக மாற்றிக் கொள்ளலாம் என கால வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த இந்திய சேம வங்கியின் அறிவிக்கை தமது “தூய பணத்தாள் கொள்கை” (Clean note Policy) ப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கிறது. அதே நேரம், பணத்தாள் மாற்ற காலக் கெடுவுற்குப் பிறகும் 2000 ரூபாய் தாள் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் விளக்கமளித்திருக்கிறது. அதாவது இது செல்லா நோட்டு அறிவிப்பல்ல. புழக்க விலக்க அறிவிப்பாகும். அக்டோபர் 1, 2023 க்குப் பிறகும் 2000 ரூபாய் நோட்டு செல்லும்.
2016 நவம்பர் 8ஆம் நாள் 1000 ரூபாய் மற்றும் 500 பணத்தாள்கள் செல்லாது என மோடி அறிவித்ததைத் தொடர்ந்து 2000 ரூபாய் பணத்தாள் சுழற்சிக்கு வந்தது. அப்போதே மீண்டும் புதிய 500 ரூபாய் பணத்தாளும் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வெளியிடப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே, 2017 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் பணத்தாள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போதைய அறிவிப்பின்படி வங்கிகள் 2000 ரூபாய் பணத்தாளை இனி புழக்கத்திற்கு விடாது.
ஏற்கெனவே இருக்கிற சட்டவிதிகளின்படி ரூபாய் தாள் கடுமையான அழுக்கடைந் திருந்தாலோ, கிழிந்திருந்தாலோ வங்கிகளில் கொடுத்தால் அதே மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறமுடியும். ஆனால், ஒருவர் கிழிந்த 2000 ரூபாய் தாளை வங்கியில் கொடுத்தால் புதிய 2000 ரூபாய் தாள் தரமாட்டார்கள். மாறாக சில்லரை பணத்தாளாக மாற்றித்தான் தருவார்கள். இவ்வளவுதான் வேறுபாடு.
2000 ரூபாய் பணத்தாள் திரும்பப்பெறப்படுவதின் உண்மையான நோக்கம் அந்தப் பணத்தாள் அழுக்கடைந்துவிட்டது அல்லது கிழிந்துவிட்டது என்பதற்காக அல்ல. ஏனெனில், புழக்கத்திற்கு வந்த 6 ஆண்டுகளில் ரூபாய் நோட்டு சேதமடைவதற்கான வாய்ப்பு இயல்பில் மிகமிகக் குறைவு. உண்மையான காரணம் 2000 ரூபாய் பணத்தாளில் கள்ள நோட்டு புழக்கம் (Fake currency) அளவுகடந்துவிட்டது என்பதே ஆகும்.
நரேந்திரமோடி 2016இல் ரூபாய் நோட்டு செல்லாது என சூழ்ச்சியாக அறிவித்தபோதே இதனை நாம் சுட்டிக் காட்டினோம்.
”1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது பணப் பதுக்கலையும், கறுப்புப்பண புழக்கத்தையும் எளிதாக்குமே தவிர தடுத்துவிடாது.
தமிழ்நாட்டில், தஞ்சை, அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தேர்தலில் புழக்கத்தில் விடப்படும் கன்டெயினர் லாரி பணத்தை இது தடுத்துவிட்டதா என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. பதுக்கி வைத்த ரூபாய் நோட்டுகளை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளும் முகவர்களாக வாக்காளர்களையே மாற்றிவிடும் வாய்ப்பு இதில் திறந்துவிடப்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டுத் தொகை அதிகரித்ததை இத் தேர்தல்கள் காட்டின. இதுவரை 1000 ரூபாயாக இருந்த ஓட்டின் விலை 2000 ஆக உயர்ந்ததை இத்தேர்தல்கள் காட்டின.”
(விரிவிற்கு காண்க: ‘செல்லாத ரூபாய் செல்லாத சூழ்ச்சி’ – கி.வெங்கட்ராமன் – பன்மைவெளி வெளியீடு)
1000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக, 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்ததால், உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்தினரும் அவருக்கு வேண்டியவர்களும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டனர் என்பதை ஏடுகள் தெரிவித்தன. இன்று, 2000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமான அளவில் பணச்சந்தையில் உலவுகிறது.
2016 ஆம் ஆண்டு செல்லாத பணத்தாள் அறிவிப்பின் முக்கியமான காரணம் பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகளின் வழியாக கள்ள நோட்டு புழக்கத்தில் வந்து விட்டது என்பதாகும். அது பொய்யான காரணம் என்பது அப்போதே அம்பலமானது. கள்ளநோட்டு மற்றும் கறுப்புப் பண புழக்கத்திற்கு 2000 ரூபாய் நோட்டு கூடுதல் வாய்ப்பானது என அப்போதே எச்சரித்தோம். அது உண்மையாகி விட்டதை இந்திய சேம வங்கியின் இப்போதைய அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
சேம வங்கியின் இந்த அறிவிப்பிற்கு உட்பட்டு எளிய மக்கள் 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் செலுத்திவிடுவார்கள்.
ஆயினும், இது தொடர்ந்து செல்லுபடியாகும் என்ற நிலையில் வங்கிகளில் செலுத்துவதற்கான காலவரம்பு செப்டம்பர் 30 க்குப் பிறகும் நீடிக்க வாய்ப்புண்டு. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மத்தியபிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வருகின்றன.
இத்தேர்தல்களில் வாக்காளர்களுக்குக் கையூட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகளையும் சேர்த்து வழங்கும் வாய்ப்பு கட்சிகளுக்குக் கிடைக்கும். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் முகவர்களாக மக்களே மாற்றப்படும் வாய்ப்பும் அதிகம். இந்த 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை வேறு சில்லரை நோட்டுகளாக மாற்றிவிட்டால் மக்களுக்கு இலாபம். இது கள்ள நோட்டு என கண்டுபிடித்து வங்கி அதிகாரிகள் வாங்க மறுத்தால் அதை மக்கள் வெளியேயும் சொல்ல முடியாது.
இந்திய சேம வங்கியின் இந்த அறிவிப்பு பொருளியலைச் சீர்படுத்த எந்த வகையிலும் உதவப் போவதில்லை. மாறாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவும் கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றவும் பயன்பட வாய்ப்பு உண்டு.
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
========================================
இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை
இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈழத்தமிழர்கள்
இன அழிப்பைத் தொடர்ந்து, இப்போது தமிழ் முஸ்லீம்களை குறிவைத்து இனவெறித்
தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது சிங்கள – பவுத்தப் பேரினவாதம்.
அண்மைக்காலமாக
இலங்கைத் தீவில் தெற்கில் வாழும் கிருத்துவர்களையும், முஸ்லீம்களையும்
சிங்கள புத்த வெறியர்கள் திட்டமிட்ட வகையில் தாக்கி வருகின்றனர். இச்
சிறுபான்மை மக்களுடைய வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை
தொடர்த் தாக்குதலுக்கும், சூறையாடலுக்கும் உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக சூன் 15 தொடங்கி அலுத்துகமா, பெருவலா, தர்காடவுன் போன்ற
இடங்களில் இசுலாமியருக்கு எதிரான தாக்குதல்கள் ஓர் இனத் துடைப்பு
நடவடிக்கையாக உச்சம் பெற்றுள்ளது “பொத்து பல சேனா” என்ற சிங்கள – புத்த
வெறி அமைப்பு காவல்துறையின் துணையோடே இத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சிங்கள புத்த பிக்குகள் தலைமையில் செயல்படும் இந்த காடையர் அமைப்புக்கு
மகிந்த இராசபட்சேயும், கோத்தபய இராசபட்சேயும் வெளிப்படையாக ஆதரவு
அளித்ததைத் தொடந்தே இவர்களது இன வெறியாட்டம் தீவிரம் பெற்றுள்ளது.
இலங்கையில் அரசு வழிப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் சிங்கள – பவுத்த பாசிசத்தின் உடன்பிறந்த விளைவு இது.
தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள இந்த இன
வெறித் தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக்
கண்டிக்கிறது.
சிங்கள – பவுத்த பாசிச இராசபட்சே கும்பலை இனப் படுகொலை தொடர்பாக பன்னாட்டு
விசாரணைக்கு உட்படுத்தாமல் சர்வ தேச சமூகம் காலம் கடத்துவதால் ஊக்கம்
பெற்றுள்ள இன வெறி கும்பல் அடுத்தடுத்து இன அழிப்பு நடவடிக்கைகளில்
முனைப்புடன் இறங்குகிறது.
சிங்கள – பவுத்த பேரினவாத அடாவடிகள் அனைத்துக்கும் இந்திய அரசு பக்க பலமாக
திகழ்வதால் எந்த கேள்விமுறையும் அற்று இந்த அநீதி தொடர்கிறது.
இலங்கை அரசின் துணையோடு சிங்கள் புத்த வெறியர்கள் தமிழ் முஸ்லீம்களுக்கு
எதிராக நடத்தும் இன வெறித் தாக்குதல்களை இப்போதாவது இந்திய அரசு
வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், இந்த வெறியாட்டம் மேலும் தொடராமல் தடுத்து
நிறுத்த முன் வரவேண்டும் என த.தே.பொ.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்
கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்
கொல்லைப் புற வழியில் மான்சாண்டோ விதைக்கு அனுமதி - தோழர் கி.வெங்கட்ராமன்
ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு வழியில்
செல்வது என்று முடி வெடுத்து மிகவேகமாக பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு
பல்லக்குத் தூக்கும் பணியில் இந்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.
பன்னாட்டு
விதை நிறுவனங்களுக்குத் தங்குதடையில்லாமல் கதவைத் திறந்துவிடுவதற்காக
இந்திய அரசு முன்வைத்த “உயிரித் தொழில் நுட்ப ஒழிங்காற்றுச் சட்டவரைவு’’
கடும் எதிர்ப்பின் காரணமாக சட்டமாக நிறைவேறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம்,
பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிப்பது குறித்து
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டுள்ளது. இந்தச் சூழலில் எதைப்
பற்றியும் சட்டை செய்யாமல் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
வீரப்பமொய்லி மரபீனி மாற்ற விதைகளுக்கு அனுமதியை வழங்கி ஆணையிட்டார்.
அவரது
ஆணைக்கு இணங்க மரபீனி பொறியியல் ஏற்பிசைவு குழு, (Genetic Engineering
Approval Committee) மரபீனி மாற்ற நெல், கோதுமை, சோளம் உள்ளிட்ட இரு பது
மரபீனி மாற்றப் பயிர்களின் வெளிக்கள ஆய்வுக்கு இசைவு வழங்கி உள்ளது.
மன்மோகன்
சிங் தலைமையிலான காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் முடிகிற
தருணத்தில் சனநாயக மரபுகள் எவை பற்றியும் கவலைப்படாமல் அவசர அவசரமாக இந்த
ஏற்பிசைவுகள் வழங்கப் பட்டுள்ளன.
தேர்தல்
நேரத்தில் காங்கிரசுக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் பகாசுர விதை
நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாய் கையூட்டுப் பணம் பெறுவதற்காகவே இவ்வளவு
அவசர கோலத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டுள்ன என்று ஐயுற இடமுண்டு!
இதற்கென்றே திட்டமிட்ட முறையில் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஊகங்கள் உலவுகின்றன.
அறிவியலாளர்களும்,
உழவர் அமைப்புகளும், சூழலியல் அறிஞர்களும் வலுவானக் காரணங்களை முன் வைத்து
மரபீனி மாற்றப் பயிர்களை வெளிக்கள ஆய்வுக்கோ, வணிக வகை விற்பனைக்கோ
அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
குறிப்பாக
பிட்டி கத்தரிக்கு இசைவளிப்பது என இந்திய அரசு கடந்த 2010இல்
முடிவெடுத்தபோது அம் முடிவுக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன.
இதற்கு
முன்னர் மான்சாண்ட் டோவின் பி.ட்டி பருத்திக்கு கொல்லைப்புற வழியில்
அனுமதியளிக்கப்பட்டதின் விளைவாக ஆந்திராவிலும், விதர்பாவிலும்
வேளாண்மைக்கும் சுற்றுச் சூழலுக்கும் கால்நடைக்கும் ஏற்பட்ட பேரழிவு
உண்டாக்கிய பட்டறிவில் இந்த எதிர்ப்புகிளம்பியது. பி.ட்டி பருத்தியின்
இலைகளைத் தின்ற ஆடுகள் மற்றும் பிற கால் நடைகள் மடிந்து வீழ்ந்தன.
பருத்திச் செடிகளைக்கையாளும் பெண் தொழிலாளிகளுக்கு இனம் புரியாத ஒவ்வாமை நோய்கள், கருப்பைக் கோளாறுகள் போன்றவை ஏற் பட்டன.
மான்சாண்டோவின்
முற்றுரிமை விலைக்கு விதை வாங்கி அந்த நிறுவனத்திடமே அதிக விலைக்கு
பூச்சிக் கொல்லிகள் வாங்கி வளர்த்த பருத்தியோ நெட்டிழை பருத்தியாக இல்லாமல்
தெளிவான வெண்மை நிறமும் இன்றி தரம் குறைந்த நிலையில் இருந்தன. இதனால்
சந்தையில் குறைந்த விலைக்குவிற்கும் நிலைக்கு பருத்தி உழவர்கள்
தள்ளப்பட்டார்கள்.
கடன்பட்ட உழவர்களில்
பலர் விதர்பாவிலும் ஆந்திராவிலும் நஞ்சுண்டு மடிந்தார்கள். இந்தப்
பின்னணியில்தான் அமெரிக்க மான்சாண்டோவின் பி.ட்டி கத்தரிக்கு மக்களிடையே
எதிர்ப்பு கிளம்பியது.
அதுமட்டுமின்றி
பி.ட்டி கத்தரிக்கு அனுமதி வழங்கியதில் பெருமளவு முறைகேடு
நடந்திருப்பதைடவுன் டு எர்த் ஏடு அம்பலப் படுத்தியது. பி.ட்டி கத்தரிக்கு
ஏற்பிசைவு வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட
வல்லுனர்குழுவில் இருந்த கே.கே. திரிபாதி, மதுராராய், வசந்தா முத்துசாமி,
சசிகரன், திலிப்குமார் ஆகிய அறிவியலாளர்கள் மான்சாண் டோவின் கையாட்கள்
என்பது அம்பலமானது.
இந்தப் பின்னணியில்
தான் இந்தியாவின் பல பகுதிகளில் பி.ட்டி கத்தரிக்கு அனுமதி அளிப்பதா
வேண்டாமா என்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை அன்றைய சுற்றுச்
சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டங்கள்
அனைத்திலுமே அறிவியளாளர்களும் உழவர் அமைப்புகளும் பி.ட்டி கத்தரியின்
தீமைகளை வலுவான ஆதாரங்களோடு எடுத்து வைத்தனர்.
உலகின்
முன்னணி உயிரியல் வல்லுனர்கள் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக
எழுதியுள்ள 400-க்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் முன்வைக்கப்பட்டன.
இவற்றின்
விளைவாக பி.ட்டி கத்தரிக்கு அளித்த அனுமதியை தற்காலிகமாக திரும்பப்
பெறுவதாக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். இதையொட்டி ஒட்டு மொத்த
மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து முழு அளவில் விவாதம் நடைபெற வேண்டும்
என்றக் கோரிக்கை வலுபெற்றது.
உத்திரபிரதேசம்,
கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மரபீனி மாற்றப் பயிர்களின் கள
ஆய்வுக்கும் விற்பனைக்கும் தடை விதித்தன. இந்த நிலையில் இந்திய அரசின்
வேளாண்மை அமைச்சகம் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து ஆய்வு செய்ய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ்
ஆச்சார்யா தலைமையில் நாடாளுமன்றக் குழுவை அமைத்தது. காங்கிரசு கட்சியின்
ஏழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முப்பத்தோறு நாடாளு மன்ற உறுப்பினர்களும் பல
துறைகளைச் சேர்ந்த ஐந்து வல்லுனர்களும் கொண்ட இக்குழு மிகவிரிவாக ஆய்வு
செய்து கடந்த 2012 ஆகஸ்ட்டில் தனது அறிக்கையை இந்திய அரசுக்கு அளித்தது.
வெவ்வேறு
பருவ நிலை மண்ட லங்களைச் சேர்ந்த பல நாடுகளில் மரபீனி மாற்றப் பயிர்கள்
குறித்த ஆய்வறிஞர்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் ஐ.நா.வின் சுற்றுச்
சூழல் அமைப்பின்கள ஆய்வு அறிக்கையையும் இந்தியாவின் பல மாநிலங்களின்கள
ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு பாசு தேவ் ஆச்சார்யா குழு அறிக்கை அளித்தது.
எக்காரணம்
கொண்டும் மரபீனி மாற்றப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என
தெளிவாக பரிந்துரை செய்த அக்குழு உயிரிப் பன்மயத்தைப் பாதுகாக்க சிறப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என
வலியுறுத்தியது.
கிரீன் பீஸ் அமைப்பு
சார்பில் மரபீனி மாற்ற விதைகளுக்கு எதி ராக தொடுக்கப்பட்ட வழக்கில்
மரபீனிப் பயிர்களுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
நாடாளுமன்றக்
குழு வின் அறிக்கையையோ,உச்சநீதி மன்றத்தின் தடை ஆணையையோ முற்றிலும்
புறம்தள்ளி கடந்த 3.2.2014 அன்று ஜம்முவில் நடை பெற்ற தேசிய அறிவியல்
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி
அளிக்கப் போவதாக அறிவித்தார்.
இதனடிப்படையில்
கடந்த 2014 மார்ச் 1 அன்று சுற்றுச் சூழல் அமைச்சர் வீரப்பமொய்லி நெல்
கோதுமை உள்ளிட்ட 20 மரபீனி மாற்றப் பயிர்களின் கள ஆய்வு களுக்கு அனுமதி
வழங்குவதாக அறிவித்தார்.
கள ஆய்வுக்கு
அனுமதிப்பதும் விற்பனைக்கு அனுமதிப்பதும் கிட்டத் தட்ட ஒரே விளைவையே
உண்டாக்கும். ஒரு தடையை காரணம் காட்டி அறிவியல் ஆய்வுகளை முடக்கிப் போட
முடியாது என்று தனது முடிவுக்கான காரணத்தை வீரப்ப மொய்லி கூறினார்.
ஆய்வகங்களில் நடக்கும் மரபீனீ மாற்றப் பயிர்கள் குறித்த ஆய்வுகளுக்கு
தடைவிதிக்க வேண்டுமென்று யாரும் கோரவில்லை. வெளிக்கள ஆய்வுகளுக்குதான்
எதிர்ப்பு உள் ளது. ஏனெனில், பல வயல்களுக்கு இடையில் ஒரு நிலத்தில்
வெளிக்கள ஆய்வுக்காக மரபீனி மாற்ற விதைகள் விதைக்கப்பட்டால் இதனால்
மண்ணுக்கும் , நீருக்கும், காற்றுக்கும் ஏற்படும் சூழல் பாதிப் புகள்
அணுக்கதிரியக்கத்தைப் போன்று தொடர் விளைவுகளை உண்டாக்கக் கூடியவை. மீளச்
சரி செய்ய முடியாதவை.
எனவே தான்
வெளிக்கள ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. பி.ட்டி பருத்தி வெளிக்கள
ஆய்வுக்கு என்று அனுமதிக்கப் பட்டக் காலத்தில் தான் முறையான அனு மதி
ஏதுமின்றி திருட்டுத் தனமாக சந்தைக்கு வந்தது. அதன் விளைவு களை மக்கள்
சந்தித்து வருகிறார் கள். வெளிக்கள ஆய்வை எதிர்ப்ப தற்கு இந்தப் பட்டறிவும்
ஒரு முக்கிய காரணமாகும். இவற்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி வெளிக்கள
ஆய்வுக்கு இசைவு அளித்திருக்கிறார் வீரப்ப மொய்லி.
கடந்த
ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன்
மரபீனி மாற்றப் பயிர்களின் வெளிக்கள ஆய்வை தடை செய்து அளித்த அறிக்கை
வலுவானது. “அறிவியலாளர் சமூகம் மரபீனி மாற்றப் பயிர்கள் மற்றும் அவற்றின்
வெளிக்கள ஆய்வை அனுமதிக்க லாமா வேண்டாமா என்பது குறித்த பிரச்சினையில்
செம்பாதியாக பிரிந்து நிற்கிறது. இச் சூழலில் விரிவான ஆய்வுகள் இன்றி
இவற்றை அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஓர் அரசு வரமுடியாது. “ என்று ஜெயந்தி
நடராஜன் குறிப் பிட்டிருந்தார்.
அண்மையில் போலந்தில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டிலும் இக் கருத்தை அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய
சூழலில் மான்சாண்டோ, சின்ஜெண்ட்டா, பாயர் போன்ற பன்னாட்டு விதை
நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக திடீரென்று அப்பதவியி லிருந்து ஜெயந்தி
நடராஜன் “கட்சிப் பணிகளுக்கு’’ என்று சொல்லி நீக்கப்பட்டார். கடந்த 2013
டிசம்பரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி சுற்றுச் சூழல்
அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.
சுற்றுச்
சூழலை கெடுப்பதில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் பெட்ரோலியத் துறைக்கு
பொறுப்பான ஒருவரே சுற்றுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பதற்கான அமைச்சராகவும்
நியமிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.
காங்கிரசுக்
கூட்டணி அமைச் சரவையின் பதவிக் காலம் முடிகின்ற தருவாயில், அடுத்து
காங்கிரசுக் கட்சி பதவிக்கு வருவதற்கான வாய்ப்ப்புகள் குறைந்துள்ள சூழ லில்
அவசர அவசரமாக இந்த அமைச்சரவை மாற்றங்கள் திட்ட மிட்டமுறையில் நடந்தேறின.
வீரப்ப மொய்லி கடந்த டிசம்பரில் பதவி ஏற்றவுடன் மூன்றே வாரங்களில் 70
நிறுவனங்களுக்கு சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மறுப் பின்மைசான்றிதழ்
வழங்கி ஆணையிட்டார். அதற்கு அடுத்து மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இசைவு
வழங்கினார்.
இவ்வாறு மரபீனி மாற்றப்
பயிர்களுக்கு இசைவளித்திருப்பது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்
ஆபத்து உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்து உழவர்களை பன்னாட்டு விதைக்
கம்பெனிகளின் காலடியில் கட்டிப் போடுகிற இழிசெயல் இது.
மாநில
அரசுக்கு உள்ள அதிகா ரத்தைப் பயன்படுத்தி வீரப்ப மொய்லியின் முடிவுக்கு
எதிராக கேரள அரசு களம் இறங்கியுள்ளது. தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றப்
பயிர்களுக்கான கள ஆய் வுக்கோ, அவ்விதைகளின் விற் பனைக்கோ அனுமதி இல்லை
என்று கேரள அரசு திட்டவட்ட மாக அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில அரசும்
இந்த முடிவுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு
முதலைமைச்சர் செயலலிதா மரபீனி மாற்றப் பயிர்களை இந்திய அரசு அனுமதித்த
தைக் கண்டித்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பேசிவருகிறார். இது வெறும்
பேச்சாக இல்லாமல் தமிழக அரசு இதற்கு உறுதியான தடை விதிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள்,
வேளாண் ஆய்வு மையங்கள், தனியார் நிலங்கள், ஆகிய எந்த வழியிலும் மரபீனி
மாற்றப் பயிர்கள் கள ஆய்வுக்கோ விற்பனைக்கோ தமிழ் நாட்டிற்குள் வர
அனுமதிக்கக் கூடாது .
உழவர்களும் இந்த மண்ணை நேசிக்கிற அனைவரும் இந்திய அரசின் சூதான இந்த முடிவை எதிர்த்து உறுதியாகக் களம் காண வேண்டும்.
மத்திய அரசின் கருத்து தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது பேரறிவாளன் , முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்
தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரறிவாளன்
முருகன் சாந்தன் நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கு ஆணையிட்ட தமிழக அரசின் முடிவு கட்சி வேறுபாடின்றி தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் இராகுல் காந்தி இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். தூக்குமர நிழலிலும், சிறைக்குள்ளும் 23 ஆண்டுகள் கழித்தபிறகே இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்பதையும், அதுவும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய சூழலில் இந்த விடுதலை உத்தரவு வந்திருக்கிறது என்பதையும் மறந்து இராகுல் காந்தி தெரிவித்துள்ள எதிர்ப்பு அவரது பழிவாங்கும் வன்மத்தையே காட்டுகிறது.
ஆனால், இந்த வன்ம எதிர்ப்புக்கு இந்திய அரசு துணைபோய்விடுமோ என்ற ஐயம் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என் சிங் அவர்களின் கூற்றின் மூலம் ஏற்படுகிறது. இச் சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்தும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.
குற்றவியல்
நடைமுறை சட்ட விதி 432 (1) மற்றும்
433 (A) ன் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் தற்சார்பானது, தங்கு தடையற்றது. குற்றவியல் சட்ட விதி 435 இராசீவ்காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செயல்பட முடியாதது என்ற போதிலும், ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு தமிழக அரசு 435 (1) கீழ் மத்திய அரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவேளை இத்தண்டனைக் குறைப்பை, அதாவது 7 பேரின் விடுதலையை எதிர்க்குமானால் அது தமிழக அரசைக் கட்டுப்படுத்தக் கூடியது அல்ல! அவ்வாறான நடுவண் அரசின் கருத்தை தமிழக அரசு பொருட்படுத்தத் தேவை இல்லை. எந்த தயக்கமும் இன்றி 7 பேரையும் விடுதலை செய்து விடலாம்.
இராசீவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் மேல் முறையிட்டில் உச்ச நீதிமன்றம் இவ் வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று முடிவு அறிவித்துதான் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.
அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 14 பேர் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் தடை சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு, விசாரணைக் காலத்தில் சிறையிலிருந்த ஆண்டுகளையே அத்தண்டனைக் காலமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அதாவது இப்போது சிறையில் உள்ள ஏழுபேரும் ஏற்கனெவே விடுதலை செய்யப்பட்ட 19 பேரில் 14 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி உள்ள அதிகபட்ச தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் ஆவர்.
இந் நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் முழு தண்டனையையும் அனுபவித்து முடித்துவிட்டார்கள் எஞ்சி இருப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழுள்ள கொலைக் குற்றத்திற்கான தண்டனை தான்.
இந் நிலையில் மத்திய அரசாங்கத்தின் சட்டம் எதுவும் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கு குறுக்கே வர முடியாது. 432 -ன் கீழ் உள்ள மாநில அரசின் தங்கு தடையற்ற முழு அதிகாரத்தின் படியே இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுக் குழு நடத்தியது என்பதற்காகவே 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
435
(1) –ன்படி மத்திய அரசுடன் கருத்து கேட்டு கலந்து ஆலோசிப்பது அடிப்படையில் ஒரு சட்ட சடங்கு தானே தவிர மத்திய அரசின் கருத்து மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.
435(1)
மற்றும் 435 (2) ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் இந்த வேறுபாடு துல்லியமாகத் தெளிவாகும் .
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டனை வழங்கப்பட்டிருந்தால் தான் அவ்வாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசின் கருத்து மேலோங்கும் நிலை இருக்கும். இதைத் தான் 435 (2) கூறுகிறது.
இந்த ஏழுபேரும் மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் உள்ள முழு தண்டனைக் காலத்தையும் சிறையில் அனுபவித்துவிட்டவர்கள். இந்த ஏழுபேரில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிறகு வாழ் நாள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்குபேரும் 433 (A) –ன் படி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கடந்து விட்டவர்கள் ஆவர்.
23 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையின் துடிப்புமிக்க காலத்தை சிறையில் கழித்த இந்த ஏழுபேரை இனியும் தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு மனித நேயத்தின்பால்பட்டது என்பது மட்டுமின்றி அண்மையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சுட்டிக் காட்டியதற்கு இசைவானதும் ஆகும்.
எனவே அறிவித்துள்ள படி மூன்று நாள் கால அவகாசம் முடிந்ததும் இந்த ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(கி.வெங்கட்ராமன்)
Subscribe to:
Posts (Atom)




