Showing posts with label இந்திய தேசியம். Show all posts
"மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிவெட்டு - பெண்கள் மீது கட்டாயத் தடுப்பூசித் திணிப்பு! மோடி அரசின் மக்கள் பகை நிதிநிலை அறிக்கை!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிவெட்டு -பெண்கள் மீது கட்டாயத் தடுப்பூசித் திணிப்பு!
மோடி அரசின் மக்கள் பகை நிதிநிலை அறிக்கை!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=======================================
பளபளப்பான அறிவிப்புகள், உற்றுப் பார்த்தால் ஏழை எளிய மக்கள் மீதான நிதித் தாக்குதல்கள், பொருளியல் வளர்ச்சி - வேலைவாய்ப்பு வளர்ச்சி - வறுமைக் குறைப்பு ஆகிய அனைத்து முனைகளிலும் பெருவீழ்ச்சி, பெண் குழந்தைகளுக்கு எதிரான மிகக் கொடிய திட்ட அறிவிப்பு – இதுதான் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள், முன்வைத்த 2024 – 2025க்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம்!
இந்தக் கூட்டத் தொடரின், தொடக்க நிகழ்ச்சியான நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மோடி அமைச்சரவை தயாரித்துக் கொடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் படித்த மோடி ஆட்சியின் பத்தாண்டு “சாதனைக்” கூக்குரல்தான் நிர்மலா சீத்தாராமனின் 57 நிமிட பட்ஜெட் உரையிலும் இருந்தது.
சிறப்பாக செயல்பட்டு, நிதிப் பற்றாக்குறையை 5.8% ஜி.டி.பி.யாக, அதாவது நிதி வருவாய்க்கும் நிதிச் செலவுக்கும் உள்ள பற்றாக்குறையை 21.66 இலட்சம் கோடி ரூபாயாகக் குறைத்து விட்டோம் என நிர்மலா சீத்தாராமன் மார்தட்டிக் கொண்டார். தங்களது ஆட்சியின் சிறப்பான நிதி நிர்வாகத்தை இது எடுத்துக் காட்டுகிறது என மோடி புகழ்ந்துரைத்தார்.
ஆனால், மேற்சொன்ன நிதிப் பற்றாக்குறைக் குறைப்பு எப்படி நிகழ்ந்திருக்கிறது என்று பார்த்தால், மக்களை அடித்து நிதியை சேமித்து செலவைக் குறைத்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியும்.
அரசின் கடன், கடந்த ஆண்டில் மட்டும் 14 இலட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது. முதன்மை வருவாய் வழியாக கடன் தொகையே வருகிறது (28%).
மறுபுறம், செலவைக் குறைப்பதற்கு மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அனைத்து முனையிலும் வெட்டியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 2023 – 24ஆம் ஆண்டு, வரவு செலவு அறிக்கையில், கல்விக்கான நிதி ஒதுக்கீடு 1,16,417 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திருத்திய மதிப்பீட்டில் கல்விக்கான ஒதுக்கீடு – 1,08,878 கோடி ரூபாய் எனப் பெருமளவு வெட்டப்பட்டுள்ளது. அதேபோல், உடல் நலவாழ்வுத் திட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட 88,956 கோடி ரூபாயில், ஏறத்தாழ 10,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.
பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக, கடந்த பட்ஜெட்டில் 9,409 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அறிவித்தார்கள். ஆனால், உண்மையில் அது 6,780 கோடியாக சுருங்கி விட்டது.
எதிர்கால வளர்ச்சிக்காக சாலை விரிவாக்கம், தொழில் துறை மற்றும் வேளாண்மைத் துறை விரிவாக்கம், தொடர்வண்டித் துறை போன்ற மூலதனச் செலவுக்காக, சென்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10 இலட்சம் கோடி ரூபாய் என்பது, உண்மையில் 9.5 இலட்சம் கோடி ரூபாயாக சுருங்கி விட்டதென்றும், இந்தத் தொகையிலும் கணிசமானவை செலவிடப் படவில்லை என்றும், நிதியமைச்சரின் அறிக்கையிலிருந்தே தெளிவாகிறது.
இவ்வாறு, மக்கள் நலத் திட்டங்களை வெட்டிக் குறைத்து, பற்றாக்குறையை சரி செய்திருக்கிறார்கள்.
மறுபுறம், ஜி.எஸ்.டி. வரி வசூல் சென்ற ஆண்டை விட அதிகரித்திருக்கிறது என சாதனைப் பட்டியல் நீட்டினாலும், மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்குத் தொகையை பெருமளவு வெட்டிக் குறைத்துதான் இந்திய அரசின் ஜி.எஸ்.டி. வருவாயை உயர்த்திக் காட்டி யிருக்கிறார்கள்.
இவை போதாதென்று, பெண் குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாப்பதற்கான திட்டம் என்ற பெயரில், இந்திய நிதியமைச்சர் அறிவித்திருக்கிற புதிய தடுப்பூசித் திட்டம் – மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது.
நாடு முழுவதும் உள்ள 9 வயதிலிருந்து 15 வயதிற்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் கருப்பை (கர்ப்பப்பை) புற்றுநோய்த் தடுப்பு தடுப்பூசித் திட்டம் என்ற ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, இந்திய அரசே வெளியிட்ட குடும்ப நல ஆய்வறிக்கையின்படி 55 வயதிற்கு மேற்பட்ட இந்தியப் பெண்களில் 0.0147% பெண்களுக்குத்தான் கருப்பைப் புற்றுநோய்க்கான வாய்ப்புள்ளது என இதே இந்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில், வளர்ந்த பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் வருவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கட்டாயத் தடுப்பூசி போடப் போவதாக அறிவித்து, அதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்திருக்கிறார்கள்.
“சீரம் இந்தியா” என்ற மருந்து நிறுவனத்தின் தயாரிப்பான ”செர்வவாக்” (CERVAVAC) தடுப்பூசியை எல்லா பள்ளிப் பிள்ளைகளுக்கும் கட்டாயமாக செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் சுற்றறிக்கை, கடந்த வாரமே மராட்டிய அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
ஏற்கெனவே கடந்த 2008ஆம் ஆண்டு, ஆந்திரா – குசராத் ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில், பெண் பிள்ளைகளுக்கு இந்தக் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, மெர்க் (Merck) என்ற செர்மனி நாட்டு மருந்து நிறுவனத்தின் கார்டாசில் (GARDASIL) என்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிற செர்வவாக், கார்டாசிலை விட தரம் குறைவானது.
இத்தடுப்பூசியின் விளைவாக ஆந்திராவிலும், குசராத்திலும் 2008ஆம் ஆண்டு 12 சிறுமிகள் மரணமடைந்தார்கள். பல பேருக்கு கருப்பை வாய்ப் புண் மற்றும் புதிய வகை புற்றுநோய் ஆகியவை ஏற்பட்டன. அன்றைக்கு இந்திய நாடாளுமன்றத்தில், அது பெரும் புயலைக் கிளப்பியது. அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக்குழு, 2011 பிப்ரவரியில் விசாரணை அறிக்கையை முன்வைத்தது.
தடுப்பூசி தயாரித்த மருந்து நிறுவனமும், அதனை மக்களிடம் கொண்டு செலுத்திய பாத் (PATH) என்ற தொண்டு நிறுவனமும் இந்திய அரசின் மருத்துவக் கழகம், தலைமை மருந்து ஆய்வகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் துணையோடு, பட்டியல் சாதி – பழங்குடியின பெண் குழந்தைகள் மீது எவ்வளவு பெரிய உடல் தாக்குதலை நடத்தி, மரணத்தையும் நோயையும் ஏற்படுத்தி, கொள்ளை இலாபம் அடித்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வறிக்கை (Report of the Committee appointed by the Govt. of India - “Alleged irregularities in the conduct of studies using Human Papilloma Virus (HPV) vaccine” by PATH in India, February 15, 2011) வெளிப்படுத்தியது. (காண்க : https://main.icmr.nic.in/.../HPV_PATH_final_report.pdf)
வயதில் பெரிய பெண்களுக்கு சோதனை செய்து பார்ப்பதற்கு முன்னால், சிறுமிகள் உடலில் சோதனை செய்யக் கூடாது என்ற அடிப்படை மருத்துவ விதியே வேண்டுமென்றே மீறப்பட்டிருக்கிறது. இத்தடுப்பூசித் திட்டத்தில், அரசுக்கும், மருந்து நிறுவனத்திற்கும், மக்களுக்கும் இடையே நல்லெண்ண அடிப்படையில் பாலமாக செயல்பட்டிருக்க வேண்டிய “பாத்” என்ற தொண்டு நிறுவனம், கொள்ளை இலாப மருந்துக் கம்பெனியின் கையாளாகவே செயல்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், இந்திய மருந்து ஆய்வகம் ஆகிய உயர் நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகளே இதற்குத் துணை போயிருக்கிறார்கள்.
தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னால், அதன் நன்மை தீமைகளை குழந்தைகளின் பெற்றோருக்குப் புரியும்படியாக விளக்க வேண்டும் என்ற சட்டநிலை முற்றிலுமாக மீறப்பட்டது. பல இடங்களில் பெற்றோர் அனுமதி பெறாமலேயே சிறுமிகளின் பள்ளி விடுதி காப்பாளருடைய கையொப்பம் பெறப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற ஆய்வுக்குழு, உரிய சட்ட விதிகளையும் மருத்துவ அறநெறிகளையும் (Medical Ethics) கடைபிடிக்காமல், இனி தடுப்பூசித் திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது, பாத் என்ற நிறுவனத்தை இனி இந்தியாவுக்குள் எந்த நலத் திட்டத்திலும் அனுமதிக்கக் கூடாது, அந்த அமைப்பின் மீது அமெரிக்க நாட்டில் வழக்குத் தொடுக்க இந்திய வெளியுறவுத்துறை உரிய வழிமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
இப்போது, நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருக்கிற தடுப்பூசித் திட்டம் எப்படி செயல்படும் என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே கொரோனா தடுப்பூசியில் நடந்ததைப் பார்த்திருக்கிறோம். தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும், பெற்றோரை மிரட்டி பிள்ளைகள் தேர்வுக்கு அமர முடியாது என்ற நிர்பந்தத்தை உருவாக்கி, கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை, பள்ளிப் பிள்ளைகளிடையே செயல்படுத்தியதை பார்த்தோம். இதேநிலை தான், கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசி என்ற இந்தத் திட்டத்திற்கும் ஏற்படும்.
இந்தக் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு (கல்பனா மேத்தா - எதிர் – இந்திய ஒன்றிய அரசு - Kalpana Mehta And Ors. vs Union Of India And Ors. on 9 May, 2018) இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற ஆய்வுக்குழு அரசுக்கு அளித்த அறிக்கையை அடிப்படையான ஆவணமாகக் கொள்ளலாம் என 2018இல் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், இத்தடுப்பூசிக்கு எதிரான – உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் ஆய்வறிக்கையைப் பற்றி, சற்றும் கவலைப்படாமல் மீண்டும் அதே தடுப்பூசித் திட்டத்தை இந்தியா முழுவதுமுள்ள பெண் குழந்தைகளின் மீது திணிப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும்!
தேர்தல் வரக்கூடிய நேரத்தில், மருந்துக் குழுமங்களிடம் பல கோடி ரூபாய் பணம் பெறுவதற்காக மோடி அரசு, இந்தக் கொலைகாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதற்கு, நிதி மசோதா என்ற சட்ட அரணைப் பெறுவதற்கு பட்ஜெட் வழியாக அறிவிக்கிறது.
இந்தக் கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை மோடி அரசு முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடு – புதுவை அரசுகள், தங்கள் மாநிலங்களிலுள்ள பள்ளி பிள்ளைகள் மீது இந்தத் தடுப்பூசித் தாக்குதலை செயல்படுத்த மறுக்க வேண்டும்!
மொத்தத்தில், மோடி ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை – முற்றிலும் மக்கள் பகையானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
"மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல்! தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல்!தொடர்வண்டித்துறையின்
தமிழினப் பகைக்குக் கண்டனம்!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
========================================
தமிழ்நாட்டு மக்களால் இன்றளவும் போற்றப்படுபவர்கள் மூவேந்தர்கள். அதில் மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். குறிப்பாக பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனால் உருவாக்கப்பட்டதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். அதுபோல் நீதிக்காக பாண்டிய மன்னனிடம் கண்ணகி வாதாடியதும் மதுரையில் தான்.
மதுரையில் 1981ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் மூவேந்தர்களின் பெயரால் சேர, சோழ, பாண்டியர் தோரண வாயில்கள் உருவாக்கப்பட்டது.
அதுதவிர, குலசேகர பாண்டியனுக்கோ, கண்ணகிக்கோ எந்த அடையாளச் சின்னமும் தமிழக அரசால் இதுவரை நிறுவப்படவே இல்லை.
1999ஆம் ஆண்டு பாண்டிய மன்னர்களின் நினைவைப் போற்றும் விதமாக மதுரை தொடர்வண்டி நிலையம் கிழக்கு நுழைவு வாயில் முன்பு ஒன்றோடு ஒன்று துள்ளிக் குதிக்கும் மூன்று மீன் கொண்ட வெண்கலச் சிலையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நிறுவப்பட்டது. இந்த வெண்கல மீன் சிலைகள் 15 அடி உயரமும், 3 டன் எடையும் கொண்டவை.
இருபது வருடங்களாக நீடித்து நிலைபெற்று பார்ப்போரை கவர்ந்திழுத்து வந்த மூன்று மீன் சிலைகளையும் 2019ஆம் ஆண்டில் தொடர்வண்டி நிர்வாகம் அகற்றியது.
தொடர்வண்டி நுழைவு வாயில் பகுதியில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், அழகு படுத்துவதற்கும் மீன் சிலைகளை அகற்றுவதாக கூறிய தொடர்வண்டி நிர்வாகமே தமது வளாக அறையில் சிலைகளை பூட்டி பாதுகாத்து வந்தது.
தொடர்வண்டி நிலைய மேம்பாட்டு வேலைகள் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் சிலை வைக்கும் முயற்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஈடுபட்டது.
2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினரும், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும் தெற்கு தொடர்வண்டி கோட்ட மேலாளர் ஆனந்த் அவர்களை சந்தித்து மீன் சிலை வைப்பதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தேசியக் கொடி கம்பம் அருகில் உள்ள 100 அடி இடத்தில் சிலையை வைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார்.
பின்னர் ஒரு வாரம் கழித்து சிலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் செங்கல் வைத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், இரயில்வே கோட்ட தலைமைப் பொறியாளர் வில்லியம்ஸ் ஜோய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் அவர்களும், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும், "மீன் சிலை மட்டுமின்றி சிலையின் வலது மற்றும் இடது பக்கமாக தலா மூன்று வண்ண நீரூற்றுகளையும் அமைக்க உள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ரூ 20 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒரு மாதத்தில் மக்களின் பார்வைக்கு சிலை வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் ஓராண்டாகியும் மீன் சிலை நிறுவப்படவில்லை. இதற்கிடையில் 2022ஆம் ஆண்டு நவம்பரில் மீன் சிலையை வைக்கக் கோரி தமிழர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது பதிலளித்த மதுரை தொடர்வண்டி கோட்ட நிர்வாகம் மீன் சிலை நிறுவப்பட்டு விட்டதாக பொய்யான தகவலை தெரிவித்தது. வழக்கும் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.
தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில் பொய்யான தகவலை தந்ததாகக் கூறி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.
2023 நவம்பர் 3ஆம் நாளன்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஆர். விஜயகுமார் ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில், மீன்கள் சிலையை வைத்த தொழில் வர்த்தக சங்கத்தினரே விரிவாக்க பணியின் போது எடுத்துவிட்டனர் என்றும், தொடர்வண்டி நிலையப் பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவு சின்னங்கள் உள்ளிட்டவை வைக்கக் கூடாது என்று தொடர்வண்டித் துறையின் சுற்றறிக்கை உள்ளதாகவும், இதனால், வேறு பகுதியில் மீன் சிலைகள் வைத்துக் கொள்ளுமாறு கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகும். 2021ஆம் ஆண்டு தெற்கு தொடர்வண்டி கோட்ட மேலாளர் ஆனந்த் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் மீண்டும் மீன் சிலை வைப்பதற்காக செங்கல் வைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
1999இல் மீன் சிலை வைப்பதற்கும், எடுத்த சிலையை 2021இல் மீண்டும் நிறுவுவதற்கும் அனுமதி கொடுத்த தொடர்வண்டி நிர்வாகம் தற்போது தொடர்வண்டித்துறை விடுத்த சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏற்கும்படியாக இல்லை.
அண்மையில் தென்மேற்கு தொடர்வண்டித் துறை சார்பில் கர்நாடகா மாநிலம் ஹீப்ளி நிலையத்திற்குள்ளேயே காந்தி சிலையை தொடர்வண்டித் துறை கோட்ட மேலாளர் திறந்து வைத்துள்ளார். மேலும் அங்கு யோகி சித்தாரூத சுவாமிகள் சிலையும் உள்ளது. அது போல போபால் நிலையத்தில் ராணி கமலா பாட்டி சிலையும், மைசூர் நிலையத்தில் சிற்பக் கலைஞர் யுவராஜ் வடிவமைத்த சிலைகளும் பெல்லாரி நிலையத்தில் காந்தி சிலையும் உள்ளது.
இதுபோல், பல்வேறு தொடர்வண்டி நிலையங்களில் தலைவர்களின் சிலைகளும், நினைவுச் சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளது.
அவ்வாறு உள்ளபோது, திடீரென்று சுற்றறிக்கை இருப்பதாகக் கூறி மதுரை தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் பாண்டியர்களின் மீன் சிலையை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று வாதிடுவது அப்பட்டமான தமிழின பண்பாட்டு அடையாள எதிர்ப்பு நிலையாகும்.
உடனடியாக தெற்கு தொடர்வண்டி கோட்ட நிர்வாகம் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நிறுவிய மீன் சிலையை அதே இடத்தில் நிறுவிட அனுமதிக்க வேண்டும்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளச் சின்னமான மீன் சிலையை நிறுவுதற்கு தமிழ்நாடு அரசும் இதில் தலையிட வேண்டுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
==================================
"நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது! " --- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி
உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள்
முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நா.த.க. முதன்மை நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்திக், சுனந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் சுட்டுரை (ட்விட்டர்) கணக்குகள், நேற்றிரவு திடீரென முடக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் முடிவுக்கு இணங்க இம்முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத ஆரியத்துவ பா.ச.க., தனது இந்திய ஆட்சி அதிகாரத்தின் வழியே தொடர்ந்து எதிர்கருத்தாளர்களை வேட்டையாடி வருவது நாம் அறிந்ததே. கர்நாடகத்தின் கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரை நேரடியாகக் கொன்றதில் தொடங்கி, எதிர்கருத்தாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது வரை இச்செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களின் சுட்டுரைக் கணக்குகளை முடக்கி, தான் தமிழினத்தின் எதிரி என பா.ச.க. மீண்டுமொருமுறை தம்மை பறைசாற்றிக் கொண்டுள்ளது.
கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாகக் கைவிட்டு, இக்கணக்குகளை மீண்டும் இயக்கிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் அனுமதிக்க வேண்டும். கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிக்கும் இந்திய அரசின் செயலுக்கு இணங்கிப் போகக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
==================================
உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள்
முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நா.த.க. முதன்மை நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்திக், சுனந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் சுட்டுரை (ட்விட்டர்) கணக்குகள், நேற்றிரவு திடீரென முடக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் முடிவுக்கு இணங்க இம்முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத ஆரியத்துவ பா.ச.க., தனது இந்திய ஆட்சி அதிகாரத்தின் வழியே தொடர்ந்து எதிர்கருத்தாளர்களை வேட்டையாடி வருவது நாம் அறிந்ததே. கர்நாடகத்தின் கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரை நேரடியாகக் கொன்றதில் தொடங்கி, எதிர்கருத்தாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது வரை இச்செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களின் சுட்டுரைக் கணக்குகளை முடக்கி, தான் தமிழினத்தின் எதிரி என பா.ச.க. மீண்டுமொருமுறை தம்மை பறைசாற்றிக் கொண்டுள்ளது.
கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாகக் கைவிட்டு, இக்கணக்குகளை மீண்டும் இயக்கிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் அனுமதிக்க வேண்டும். கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிக்கும் இந்திய அரசின் செயலுக்கு இணங்கிப் போகக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
==================================
"புதிய நாடாளுமன்றம் - தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!" --- தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
புதிய நாடாளுமன்றம் -
தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!
================================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். திறப்பதற்குத் தேர்வு செய்த நாள், திறப்பாளராகத் தேர்வு செய்த நபர் ஆகிய அனைத்திலும் மோகன் பகவத் - மோடி கூட்டணியின் அடாவடித்தனம் வெளிப்பட்டது.
சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28-ஐ தேர்ந்தெடுத்ததின் மூலம் இது ஆரியத்துவ ஆட்சிதான் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தி இருக்கிறது மோகன் பகவத் - மோடி அணி!
குடியரசுத் தலைவரை இவ்விழாவிலிருந்து முற்றிலும் ஒதுக்கி வைத்தது, ஒடுக்குண்ட மக்களின் புறக்கணிப்பு, அரசமைப்பு நெறி மீறல் என காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியே!
ஆனால், இந்த ஆரவாரங்களுக்கும் எதிர்ப்புக் கூச்சல்களுக்குமிடையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மிகப்பெரிய தமிழின ஒடுக்குமுறைக் கருவியாக நாடாளுமன்றத்தை வலுப்படுத்தப் போகிறது என்ற பேராபத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் புதிய கட்டடமே கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் தேவையைக் கருதித் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றமே, முதன்மையான தமிழின ஒடுக்குமுறைக் கருவி என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம்.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில், உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்து வரையறுக்கப்பட்டிருப்பது தான் செயற்கையாக தமிழினத்தை நிரந்தர சிறுபான்மையாகவும், இந்தி இனத்தை நிரந்தர பெரும்பான்மையாகவும் வைத்திருக்கிறது.
இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கு 39, புதுச்சேரிக்கு 1 என மொத்தம் 40 உறுப்பினர்கள் தான் தமிழர்களுக்கு! இந்தி இனத்திற்கு 225! இந்தி சாயல் உள்ள பிற இன உறுப்பினர்களைச் சேர்த்துப் பார்த்தால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வதற்கான உறுப்பினர் வலு அவர்களுக்கு இருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்தில் இந்த நிலை இன்னும் கொடிய வகையில் மாறப் போகிறது.
நடப்பிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் வரையறை 1971ஆம் ஆண்டு, மக்கள் தொகை அடிப்படையில் உள்ளது. 2026க்குப் பிறகு, இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தின் நிலை!
மோகன் பகவத் - மோடி அணியும் ஒற்றையாட்சி நோக்கியே நகர்ந்து கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - அதை உறுதிப்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
15ஆவது நிதி ஆணையத்தை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2026ஆம் ஆண்டுக்கு அதனைக் கணக்கு நீட்டிப்பு (Projection) செய்து, தொகுதி வரையறைகளை உருவாக்குவது என்ற திட்டம் பா.ச.க. அரசிடம் இருக்கிறது.
இந்தக் கணக்கின்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39லிருந்து 49 ஆக உயரும். மறுபுறம் உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 143 ஆகவும், பீகாருக்கு 40லிருந்து 79 ஆகவும், மத்தியப்பிரதேசத்திற்கு 29 லிருந்து 52 ஆகவும் ஆக மொத்தம் இந்தி மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை 225லிருந்து 408 ஆகவும் உயர இருக்கிறது.
அவ்வாறான சூழலில், இந்திக்காரர்களை ஒப்பிட தமிழ்நாட்டின் வலு இப்போதிருப்பதைவிட மிகமிகச் சிறயதாக மாறிப்போகும். நாடாளுமன்ற சனநாயகம் என்ற வடிவத்திலேயே ஒரு கட்டமைப்பு இன அழிப்பு நிகழ்வதற்கான வாய்ப்பை புதிய நாடாளுமன்றம் உருவாக்குகிறது.
எப்போது மோடி தமிழையும், தமிழரையும் உயர்த்திப் பேசினாலும், அது தமிழினத்திற்கெதிரான புதிய தாக்குதலின் அறிகுறி எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
பாப்புவா நியூ கினியாவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுவிட்டு, தமிழ் மொழியை மோடி புகழ்ந்து பேசியதும், தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து சிறப்பு செய்யப் போகிறோம் எனக் கூறுவதும் தமிழின அழிப்பை மறைப்பதற்கான பெரும் சூது!
தமிழ்நாட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் அலங்கோலங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழின ஒதுக்கல் (Aparthied) தீவிரம் பெறுவதற்கும், நிலைப்படுவதற்கும் ஒரு சனநாயக வடிவம் தயாரிக்கப்படுகிறது என்ற ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.
இதனை மக்களுக்கு உணர்த்தும் கடமை தமிழ்த்தேசியர்களுக்கே இருக்கிறது!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2023 சூன் மாத இதழின் ஆசிரியவுரை இது).

Subscribe to:
Posts (Atom)