கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்

ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label இந்தியம். Show all posts

"உத்திரப்பிரதேசம் ஒளிவர்வதற்கு தமிழ்நாடு காலனியா..?" --- கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

உத்திரப்பிரதேசம் ஒளிவர்வதற்கு

தமிழ்நாடு காலனியா?
===========================
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===========================

வெள்ளைக்காரர்களின் காலனியச் சுரண்டலைவிட, தில்லிக் கொள்ளைக்காரர்களின் சுரண்டல் கொடுமையானது!

கடந்த 2020-21 ஆம் ஆண்டிலிருந்து 2024-25 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில், இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து திரட்டிய வரி வருவாய் 8 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு வரிப்பகிர்வாக அளித்தது 5 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்தான். அதாவது, ஆண்டுக்கு 66 ஆயிரம் கோடி ரூபாய், வரிவருவாய் என்ற வகையில் மட்டும் தமிழ்நாடு இப்படிக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

இதில், மேல்வரி (சர்சார்ஜ்), தீர்வை (செஸ்) போன்றவை சேர்க்கப்படவில்லை. இவை முழுவதுமே இந்திய அரசு மாநிலங்களுக்குப் பங்கு கொடுக்காமல் எடுத்துச் செல்லும் தொகை ஆகும்.

மறுபுறம், இந்திக்கார உத்திரப்பிரதேசம் இந்த ஐந்தாண்டுகளில், 5 இலட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வரியாகக் கொடுத்துவிட்டு 17 இலட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயை வரிப்பங்காகப் பெற்றிருக்கிறது. அதாவது கொடுத்ததை விட 300+% கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அதே போல் இன்னொரு இந்தி மாநிலமான பீகார், இதே கால கட்டத்தில், வெறும் 76 ஆயிரம் கோடி ரூபாய் வரி கொடுத்துவிட்டு, 9 இலட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் வரிப் பங்காகப் பெற்றிருக்கிறது.

மத்தியப் பிரதேசம், இராசஸ்தான் உள்ளிட்ட இந்தி மாநிலங்களின் நிலையும் இதுதான்.

மகாராட்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கான போன்ற ஒரு சில மாநிலங்கள் இவ்வாறு வரிவருமானப் பங்கீட்டில் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 3.12.2025 அன்று நாடாளுமன்ற மக்களவையில், இந்திய அரசு முன்வைத்த புள்ளி விவரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசம் ஒளிர்கிறது, பீகாரில் மகளிருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்ற பளபளப்பான அறிவிப்புகளுக்குப் பின்னால், உள்ள காலனியக் கொள்ளை இதுதான்.

இந்தக் கொள்ளையை எதிர்கொள்ள அரசியல் உறுதியற்ற திராவிட மாடல் அரசு, தன் பங்கிற்கு மதுக்கடை விரிவாக்கம், மலை, மணல் கொள்ளை ஆகியவற்றின் வழியாக மக்களைச் சூறையாடி மாநிலத்தின் சொந்த வரிவருவாயைப் பெருக்கிவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கிறது. போதாதற்கு மூச்சு முட்டும் கடன் வேறு!

மக்கள்தான் விழிப்படைய வேண்டும்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம்
காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம்
இருட்டில் தள்ளிவிட்டது!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
======================================

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத சில பகுதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் இருளுக்குள் தள்ளி விட்டது!

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பு குறித்து, கடந்த 2025 ஏப்ரலில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா – ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது, குடியரசுத் தலைவர் வழியாக இந்திய அரசு எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் இன்று (20.11.2025) வழங்கிய கருத்துரை, இதுவரை இருந்த தெளிவுகளையும் குழப்பி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளிவிட்டுள்ளது.

ஏற்கெனவே, சம்சேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு, மாரூராம் எதிர் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட அரசமைப்பு ஆயங்கள் “அமைச்சரவை முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர், அவர் அமைச்சரவைக் கருத்தின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனிப்பட்ட விருப்பு அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை” என்று தீர்ப்புரைத்த பின்னும், அதே அளவுக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பி.ஆர். கவாய் ஆயம், அதற்கு நேர் எதிரான வகையில் ஆளுநருக்கு வானளாவிய மேலதிகாரத்தை மீண்டும் வழங்குகிறது.

அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆளுநர் கால வரம்பற்று கையெழுத்திடாமல் இருக்கக் கூடாது என்று கூறிக் கொண்டே, அவருக்கு ஆறு மாதம் கால வரம்பிடுவதும் கூடாது எனக் கூறுகிறது. இதன் மூலம், இந்தியா ஒரு குடியரசு என்பதையும் இது ஒரு கூட்டாட்சி என்பதையும் கேலிக் கூத்தாகுகிறது. பர்திவாலா – மகாதேவன் அமர்வு, ஆளுநர் அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆறு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பிடுவதை “நீதிமன்றத்தின் அத்துமீறல்” எனக் கண்டிப்பதன் வழியாக, ஆளுநரின் அத்துமீறலுக்கு கவாய் ஆயம், பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

ஆறு மாதமல்ல, எந்தக் கால வரம்பையும் ஆளுநர் மீதோ, குடியரசுத் தலைவர் மீதோ விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தைத் தள்ளி வைப்பதன் வழியாக, இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறாகக் கூறப்படும் கூட்டாட்சி முறைமை கவிழ்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் அதிகம்போனால், “நியாயமான காலவரம்புக்குள் ஒப்புதல் அளிக்க முன்வர வேண்டும்” என்று ஆளுநரைக் கேட்டுக் கொள்ளலாமே தவிர, கால வரம்பைத் தீர்மானிக்க முடியாது எனக் கருத்துரைப்பதன் வழியாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கவாய் ஆயம் பெருமளவு வெட்டிச் சுருக்கிவிட்டது!

அரிதான சூழலில், “முழு நீதி வழங்குவதற்காக (For doing complete Justice)” அரசமைப்பு உறுப்பு 142இன் படி உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நிர்வாக ஆணையின் அதிகாரமுடையது என்பதையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, இந்திய அரசின் கேள்வி முறையற்ற ஆதிக்கத்திற்கு வழி திறந்துவிட்டுள்ளது.

இந்திய அரசமைப்பு செயல்படத் தொடங்கிய 1950லிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரின் மேலதிகாரம் சனநாயகத்தையே முடக்கிப் போட்டதன் விளைவாகத்தான் அவ்வப்போது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 142, 143, 200, 201, 361 போன்ற உறுப்புகள் மீது தெளிவுகள் வழங்கித் தீர்ப்புரைத்திருக்கின்றன. ஆனால், பி.ஆர். கவாய் ஆயத்தின் இந்தக் கருத்துரைத் தீர்ப்பு கடந்த 75 ஆண்டுகளின் சட்ட வளர்ச்சி நிலையையே கவிழ்த்துப் போட்டு, மீண்டும் 1950ஆம் ஆண்டின் நிலைக்கே திருப்பியிருக்கிறது.

இது உடனடியாக பர்திவாலா – மகாதேவன் தீர்ப்பை தள்ளுபடி செய்கிற மேல் முறையீட்டுத் தீர்ப்பு அல்ல என்ற போதிலும், இது கருத்துரைத் தீர்ப்புதான் என்ற நிலையிலும், இது நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்க்கர் ஆகிய ஐந்து நீதிபதிகளின் ஒத்தக் கருத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற கருத்துரை என்பதால், விரைவான எதிர்காலத்தில் தமிழ்நாடு ஆளுநர் வழக்குத் தீர்ப்பு உள்ளிட்ட இதற்கு முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் வருங்கால வழக்குகளில் இரத்து செய்வதற்கு வழிகாட்டும் வலுவுள்ளது.

ஆளுநர் பதவி ஒழிக்கப்பட‌ வேண்டும், இந்தியாவை முழுக் கூட்டரசாக்க வேண்டும் என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது!

இந்தியாவை முழுக் கூட்டரசாக திருத்தியமைப்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும், கூட்டரசு முறைமையின் மீதும் தேசிய இன உரிமைகள் மீதும் அக்கறையுள்ள கட்சிகளும் இயக்கங்களும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய தேவையையே பி.ஆர். கவாய் ஆயத்தின் கருத்துரைத் தீர்ப்பு முன்னிறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும், இன உரிமையில் அக்கறையுள்ளோரும் கூட்டரசுக் கோரிக்கையை நோக்கி, உடனடியாக அணிதிரள வேண்டும்!