கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label நீதிமன்றம். Show all posts

தமிழை வழக்காடு மொழியாக்கும் போராட்டத்தை நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடத்த வேண்டும்! - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழக உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, மதுரையிலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஊர்திப் பரப்புரையாக மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 06.09.2013 அன்று காலை சென்னை வந்தடைந்தனர்.
இப்பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா, சென்னை பாரிமுனை உயர்நீதிமன்றம் வாயிலில் நடைபெற்றது. மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.இராமசாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன், முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பால். கனகராஜ் உள்ளிட்ட பல முன்னணி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும், திரளான வழக்கறிஞர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் அ.சவுந்திரராசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத் தமிழ்வேலன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சை யப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்னெடுத்து மதுரை வழக்கறிஞர்கள் முன்முயற்சியில் ஊர்திப் பரப்புரையும், இக்கண்டன ஆர்ப்பாட்டமும் முனைப்புடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அவர் களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி 348(2)இன்படி நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டுமெனக் கோருகிறோம். 1991ஆம் ஆண்டு இதே சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே புகுந்து, முதன்மை நீதிபதியின் அரங்கத்திற்கு வெளியே தமிழை வழக் காடு மொழியாக அறிவிக்கக் கோரி முழக்கம் எழுப்பினோம். துண்டறிக்கை விநியோகித்த எங்கள் தோழர்களை காவல் துறை கைது செய்தது.
அதன் பிறகு, தொடர்ச்சியாக இக்கோரிக்கையை நாம் முன்வைத்து வருகிறோம். அப்பொழுதெல்லாம், நமது வழக்கறிஞர்களிடையே கூட இக்கோரிக்கை குறித்து போதிய தெளிவில்லாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கு இக் கோரிக்கை தமிழக வழக்கறிஞர்களின் ஒட்டு மொத்தக் கோரிக் கையாக மலர்ந் திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக் கிறது.
அரசமைப்புச் சட்டவிதி 348(2) - ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியை, அம்மாநில நீதிமன்ற மொழியாக அறிவிக்க அம்மா நிலத்தின் அமைச்சரவை கூடி முடி வெடுத் தால் போதும் எனச் சொல்கிறது. ஆனால், இது தமிழர் களின் ஒட்டுமொத்த கோரிக்கை என்கிற வகையில், 2006ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை யிலேயே இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலை வருக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிமிடம் வரை இதற்கு பதிலில்லை.
தமிழ் - தமிழ்நாட்டின் அலுவல் மொழி மட்டுமல்ல, தமிழ் நாட்டின் தேசிய மொழியும் அதுவே! தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பது, இங்குள்ள ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது வழக்கு களில் என்ன நடைபெறுகின்றது என்பதைக் கூட அறிய விடாமல் அவர்களைக் கண்ணாடித் தடுப்பைப் போட்டு மறைக் கின்ற செயலாகும். ஒடுக்கப்பட்ட சமூக வழக்கறிஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்ற தடைக் கல்லாகும்.
வழக்கறிஞர்களாகிய உங்களிடம் நான் ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழை வழக்கு மொழி யாக்க வேண்டுமென்ற நமது போராட்டம், நீதி மன்றத்திற்கு வெளியே மட்டுமல்ல நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடைபெற வேண்டியி ருக்கிறது.
எனவே, இங்குள்ள வழக்கறி ஞர்கள் அனைவரும் இனி தாங்கள் உயர் நீதிமன்றத்தில் தமிழில்தான் வாதாடுவேன் என உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழிலேயே வழக்காட வேண்டும். அது ஒரு அழுத்தத்தைத் தரும்”.
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
இந்நிகழ்வில், திரளான வழக்கறிஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தை யொட்டி, 6.9.2013 அன்று ஒருநாள் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்து, தமிழை உயர்நீதி மன்றத்தின் மொழியாக்க வலியுறுத்தி த.தே.பொ.க. சார்பில் சென்னையின் பல பகுதிகளில் சுவரொட் டிகள் ஒட்டப் பட்டன.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலா ளர் தோழர் இரா.இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோ வேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் தமிழர் கண்ணோட்டம் இணைய இதழ் பொறுப்பாளர் தோழர் கோபிநாத், பாலா உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இந் நிகழ்வில் பங் கேற்றனர்.

புல்லார் தீர்ப்பின் பாதிப்பு: பேரறிவாளன் - முருகன் - சாந்தன் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும்

தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக் கிறது.
நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜெ. முகபாத்தி யாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதி மன்றப் பிரிவு 12-04-2013அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும்,மனித உரிமையையும் குறித்து அக்கறைப் படுவோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.இத்தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித்தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராசிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடி யரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவ தற்கான நாளும் குறிக் கப்பட்டது.இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்கத் தமி ழகமே போர்க் கோலம்பூண்டது.குமரி முதல் கும் முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங் கள் நடைபெற்றன.இப்போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங் கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.
இச் சூழலில் 30-08-2011அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பேரறி வாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இத்தடை ஆணை பிறப்பிக்கப் படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால்,தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்ட ணையை இரத்து செய்ய வலியு றுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் ஒன்றை இயற்றியது.
ஆனால், இவ்வழக்கில் எவ்வி தத் தொடர்பு மில்லாத எல்.கே. வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் இம் மூவர் மரண தண்டனை குறித்த வழக்கை தன் விருப்பமாக (suo moto) உச்சநீதி மன்றத்துக்கு மாற்றிக் கொண் டது.
அரசமைப்புச் சட்ட விதி 139(கி)(1)க்குப் பொருந்தாத காரணங் களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்வி,முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.
“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அத னைக் குடியரசுத் தலைவர் நிராக ரித்தது சட்டவிரோத மானது என்ற நிலைப்பாட்டை தேவேந் திர பால் சிங் புல்லார் வழக்கிலும்,மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ் வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்கு மென இந்நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.
இந்தக் காரணம் முற்றிலும் பொருந்திவரக் கூடியக் காரணம் அன்று.இது தொடர்பாக மூன்று தமிழர் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளா மலேயே நீதிபதிகள் சிங்வி,முக பாத்தியாயாஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்து கொண்டனர்.
இந்திய அரசமைப்பு சட்டத் தின் விதி 139 (கி) (1) உயர் நீதி மன்றங்களிலிருந்து உச்ச நீதி மன்றத்துக்கு வழக்குகளை மாற் றல் செய்வது பற்றி பேசுகிறது. இவ்வாறு மாற்றல் செய்வ தென்றால் இரண்டு முக்கிய நிபந் தனை கள் வேண்டுமென்று அது வரைய றுக்கிறது. அவை
1) உச்ச நீதிமன்றம் தானா கவோ அல்லது இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் மனு அளித்தாலோ அல்லது தொடர் புடைய வழக்குதாரர்கள் மனு செய்தாலோ விசாரித்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்து கொள்ளலாம்.
2) அவ்வாறு மாற்றல் செய்வதற்கான வழக்குகள் பொது முக்கியத்துவம் வாய்ந்த, ஒத்தத் தன்மையுள்ள அல்லது பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுகிற வழக்குகளாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு நிபந் தனைகளுமே நமது மூவர் வழக்கில் பொருந்தி வரா.
மரணதண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றமே கூட இராசீவ் காந்திகொலை ஒரு கொலைக்குற்றமே தவிர பயங்கரவாதக் குற்றம் அல்ல எனக் கூறி விட்டது.
எனவே,இதில் யார் வேண்டு மானாலும் மனு செய்துவிட முடியாது.இது பொது நல வழக்கல்ல;வெறும் கொலை வழக்கு ஆனால்,கொலையுண்ட இராசீவ் காந்திக்கு உறவினரோ நண்பரோ அல்லாத யாரோ ஒரு எல்.கே.வெங்கட் கொடுத்த மனுவை ஏற்று அதில் கோரியுள்ளவாறு மாற்றல் செய்து கொண் டது 139 (கி) (1)க்கு எதிரானது.
மூவர் கருணை மனு தொடர் பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடக் கக் கூடாது என்பதுதான் மனு தாரர் எல்.கே வெங்கட்டின் வாதம்.வழக்கறிஞர்களும் மாண வர்களும் பொதுமக்களும் பல் வேறு அரசியல் கட்சியினரும் மூன்று தமிழர் மரண தண்ட னையை இரத்து செய்ய வலியு றுத்தி போராடுவது சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது ஒரு வெளி அழுத்தத்தைக் கொண்டு வருகிறது என்பதே எல்.கே.வெங்கட் சார்பில் கூறப்பட்ட முதன்மையான காரணமாகும்.
இதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே ஒத்தத் தன் மையுள்ள வழக்கு என்பதால் தான் உச்ச நீதிமன்றத்துக்கு மாற் றல் செய்துகொண்டதாக நீதிபதி கள் சிங்வி, முகபாத்தி யாயா ஆகியோர் கூறிக்கொள்கின்றனர்.
ஆனால்,இதே போன்ற வேறொரு வழக்கில் இதே நீதிபதிகள் திறந்த நீதிமன்றத்தில் உதிர்த்த கருத்துகள் இவர்கள் எல்.கே.வெங்கட் வாதத்தை ஏற்றுக் கொண்டே இவ் வழக்கை மாற்றல் செய்துள்ளனர் என்ற வலுவான ஐயத்தை ஏற்படுத்துகிறது.
பல்வந்த் சிங் ராஜோனா தூக்குதண்டனை தொடர்பான வழக்கில் 29.03.2012அன்று இந் நீதிபதிகள் கூறியவைகளே அவை.
பல்வந்த் சிங் ராஜோனா 1995ல் பஞ்சாப் முதலைமச்சர் பியாந்த் சிங்கை கொலை செய்ததாக தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர் ஆவார்.அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து 28.03.2012என அவரது தூக்கு தண்ட னைக்கு நாளும் குறிக்கப்பட்ட நிலையில் பஞ்சாபே கொந்தளித்தது. இச்சூழலில் எதிர்க்கட்சி தலைவர்கள் புடை சூழ பஞ்சாப் முதலைமைச்சரே நேரில் சென்று பிரதமரை சந்தித்து பல்வந்த் சிங் ராஜோனாவின் தூக்கு தண்ட னையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்கள்.
சீக்கியர்களின் மத அமைப் பான சிரோன் மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி சார்பில் இக் கருணை மனு தொடர்பான வழக்கும் தொடுக்கப்பட்டு இதே இரண்டு நீதிபதிகள் முன்னாள் விசாரணைக்கு வந்தது. அதே நாளில் புல்லார் வழக்கின் மீதான வாதமும் நடந்தது.
இச் சூழலில் பல்வந்த் சிங் ராஜோனா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது நீதிமன்றத் தின் சார்பில் 29.03.2012 அன்று நீதிபதி சிங்வி கூறியது வரு மாறு:
“பயங்கரவாதிகளின் ஆதரவில் பதவிக்கு வந்தவர்கள் இவர்கள். அப்பயங்கரவாதிகளுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள இவர்கள் எப்படி அவர்களைக் கைவிடுவார்கள்? இது பட்டப்பகலில் நடந்த படுகொலை.அதுவும் கொல்லப் பட்டவர் மாநிலத்தின் முதல மைச்சர்.அரசு விரைவாக செயல் பட்டிருந்தால் இந்த மனுவுக்குத் தேவையே எழுந்திருக்காது.இது தொடர்பான அரசின் பணமும் பெருந்தொகையாக செலவாகி இருக்காது’’ இதுதான் இவ்விரு நீதிபதிகளின் மனநிலை.
ஏன் முதலிலேயே தூக்கில் போடவில்லை என்றுதான் பதறு கிறார்கள். ஒரு அந்தஸ்த்தில் இருந்த தலைவரைக் கொன்றவர் களுக்கு அதுவும் பட்டப் பகலில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே கொன்றவர்களுக்கு கருணைக் காட்டலாமா என்று தான் கவலைப்படுகிறார்கள்.
கொலையுண்டவர் ஒரு மாநில முதலமைச்சர் என்பதற்கே இவ் வளவு பதறும் இவர்கள் குடும்பத் தின் வாரிசு முன்னாள் பிரதமர் மட்டுமல்ல நேரு இராசீவ்காந்தி கொலை வழக்கில் எந்த அளவுக்கு முன் முடிவோடு இருப்பார்கள்?
புல்லார் வழக்கிலும் பேரறி வாளன் முருகன் சாந்தன் வழக் கிலும் பெரிதும் ஒத்தத்தன்மை யுள்ள வாதங்களே முன்வைக்கப் படுவதாக இவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பது நமது ஐயத்தை மேலும் வலுப்படுத்து கிறது.
 பேராசிரியர் தேவேந்திர பால் சிங் புல்லார், மற்றும் மகேந்திநாத் தாஸ் வழக்குகளும் மூன்று தமிழர் கருணை மனு வழக்கும் அவற்றின் பின்னணி அவற்றில் பின்பற்றப்பட்டுள்ள சட்ட விதிகள் அவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்துள்ள விதம் ஆகிய வற்றில் முற்றிலும் வேறு பட்ட தன்மையுள்ளவை ஆகும். இவற்றைப் பெரிதும் ஒத்தத் தன்மையுள் ளவையாக வரையறுத்ததே பிழையானது.
இந்நிலையில் புல்லார் வழக்கில் “கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அத னைக் குடியரசுத் தலைவர் நிரா கரித்தது சட்டவிரோத மானது’’ என்ற வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரணதண்டனையை உறுதி செய்து 12.04.2013 அன்று தீர்ப் பளித்துவிட்டது.
மரண தண்டனைத் தொடர் பான தீர்ப்புகள் குறித்து அண் மைக் காலத்தில் உச்ச நீதிமன் றத்தில் எழுந்துள்ள முக்கியமான வாதங்களை இந்த இரண்டு நீதி பதிகள் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை.
சங்கீத் -எதிர் -அரியானா மாநில அரசு என்ற வழக்கில் 2012 நவம்பர் 20-ஆம் நாள் வழங்கிய தீர்ப்பும், அத்தீர்ப்பு மேற்கோள் காட்டி விரிவாக விவாதிக்கும் சந்தோஷ்குமார் பரியார் - எதிர்- மகாராஷ்டிர மாநில அரசு வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப் பும் மிக முக்கியமானவை ஆகும்.
இவ்விரண்டு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றங்கள்இழைத்துள்ள சட்ட அறியாமை (perincurium) பற்றி குற்றம் சாட்டுகின்றன.
பச்சன்சிங் வழக்கில் (1980,2, SCC 684) 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்டப் பிரிவு அளித்தத் தீர்ப்பு அதற்குப் பின்னால் பல வழக்குகளில் பின் பற்றப்படவில்லை என்று சங்கீத் தீர்ப்பும் பரியார் தீர்ப்பும் சுட்டிக் காட்டுகின்றன.ஐந்துக்கும் குறை வான நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றப் பிரிவுகள் பட்சந்த் சிங் தீர்ப்பை பின்பற்றி இருக்க வேண்டியது சட்டக் கட்டாயம் ஆகும். பல தீர்ப்புகளில் இந்த சட்ட வரம்பு மீறப்பட்டுள்ளது. இது உச்சநீதி மன்ற நீதிபதிகளின் சட்ட அறியாமை (perincurium)என இவற்றைக் கண்டிக்கின்றன.
அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை விதிக் கப்படலாம் என்பதுதான் பச்சன் சிங் தீர்ப்பின் சாரமான செய்தியாகும். பச்சன்சிங் தீர்ப்பின் இச் சாரமான கருத்தை பரியார் தீர்ப்பு கீழ் வருமாறு எடுத்துரைக்கிறது.
ஒருவர் மீது கொலைக்குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனை யை வரையறுத்து தீர்ப்பு வழங்கும் கட்டத்துக்கு வரும் போது நீதிமன்றமானது குற்றவாளியின் முன் நடத்தை, கொலைக்குற்றம் நடைபெற்ற சூழல்,அக் குற்றம் நடைபெற்ற போது இருந்த கொலையாளியின் மனநிலை ஆகியவற்றைக்கருத்தில் கொள்ள வேண்டும்.
மரண தண்டனை வழங்காமல் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கினால்,அக்குற்றவாளி திருந்தமாட்டார்,அவரால் சமூகத் தில் பதற்றமும் அமைதி யற்ற சூழலுமே ஏற்படும் என்பதை அரசு தரப்பு வலுவான ஆதாரங் களோடு மெய்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறான நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் மனம் போன போக்கில் அரிதிலும் அரிதான வழக்கு என்று முத்திரைக் குத்தி மரண தண்டனை வழங்குவது தான் நீதிபதிகளின் சட்ட அறியாமை என குறை கூறுகின்றன இத்தீர்ப்புகள்.
பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர் நீதிபதி கே.டி.தாமஸ்.ஓய்வுப் பெற்றப்பிறகு இவர் இத்தீர்ப்பு குறித்து மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கும் தன்னாய்வு இம் மூவர் வழக்கிலும் சட்ட அறியாமை என்ற மா பெரும்பிழை நேர்ந்துள்ளதை எடுத்துக் கூறுகிறது.
ஏற்கெனவே, 2011 செப்டம்பர் 2 ஆம் நாள் தி ஏசியன் ஏஜ் இதழில் இதனைக் குறிப்பிட்ட நீதிபதி கே.டி.தாமஸ் 24.02.2013 அன்று இன்னும் விளக்கமாக்க் கூறுகிறார். அடுத்த நாள் 25.02. 2013 அன்று பல்வேறு இதழ்களி லும் கே.டி. தாமசின் அறிக்கை வெளியானது. (காண்க: தி. இந்து 25.2.2013)
“இந்த மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப் பட்ட போது அவர்களின் முற்பண்புகள் இயல் புகள் ஒழுக்கம் போன்ற வற்றை கவனிக்கத் தவறிவிட்டோம்’’என்று கூறுகிறார். தாங்கள் சட்ட அறியாமை  குற்றம் இழைத்ததை நீதிபதி கே.டி. தாமஸ் வெளிப்படையாகவே இவ்வாறு ஒத்துக் கொள்கிறார்.
ஆனால்,புல்லார் வழக்கில் நீதிபதிகள் சிங்க்வி முகப்பாத்தி யாயா ஆகியோர் மீண்டும் இந்த சட்ட அறியாமைத் தவறை செய் திருக்கிறார்கள்.இதே தவறு நமது மூவர் வழக்கிலும் நிகழ்ந்துவிட வாய்ப்புண்டு.
புல்லார் வழக்கும் பேரறி வாளன் முருகன் சாந்தன் வழக்கும் பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே நீதிமன்றம் வரைய றுத்து விட்டதால் புல்லார் வழக் கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.
இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க இரண்டு வழிகளே உள்ளன.
1) பச்சன் சிங் தீர்ப்புக்கு பின் வந்துள்ள (மூன்று தமிழர் வழக்கு உள்ளிட்ட) அனைத்து மரண தண்டனை வழக்குகளை யும் மீளாய்வு செய்யும் வகையில் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் நீதிபதி களைக் கொண்ட உச்ச நீதிமன்றப் பிரிவிற்கு விட வேண்டும்.இப்போதுள்ள இரண்டு நீதிபதிகள் பிரிவு இவ் வழக்கை விசாரிக்கக் கூடாது. புல்லார் வழக்கு உட்பட அனைத்து மரண தண்டனை வழக்குகளும் அரசமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும்.
2) அரசமைப்புச் சட்ட விதி 161-ன் படி தமிழக ஆளுநர் இம் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும்.
இவற்றுள் இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு இரண் டாவதாக சொல்லப்பட்ட வழி தான்.இம் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்து நியாயத்தையும்,மனித உரிமையையும் நிலை நாட்டுவது தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது.
தமிழக அமைச்சரவை முடிவு செய்து அரசமைப்பு விதி 161ன் படி மாநில ஆளுநர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண் டும்.
30.08.2012 அன்று தமிழக சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் செயலலிதா முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப் பதாகவும் இது அமையும்.
உச்சநீதிமன்றத்தின் இப் போதைய தீர்ப்புரையோ அரச மைப்புச் சட்ட விதி 257(1)ன் படியான உள்துறை அமைச் சகத்தின் 5.3.1991நாளிட்ட அறிவிக்கை உள்ளிட்ட இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுநரின் அதிகாரம் ஆகும். உச்சநீதி மன்றம் பல தீர்ப்புகளில் இதனை உறுதிபடக் கூறியிருக்கிறது. (மாரூராம்-எதிர்- இந்திய ஒன்றிய அரசு 1981,1 ஷிசிசி 107, சத்பால்- எதிர்- அரியானா மாநில அரசு கிமிஸி 2000,ஷிசி, 1702)
அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்ட னைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.
மன்னிப்பு வழங்கும் ஆளுந ரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற் றவை ஆகும்.
எனவே,தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் களின் தூக்கு தண்டனையை இரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழ் நாட்டு மக்களின் பெரு விருப்பமும் அதுவே.

 - தோழர் கி.வெங்கட்ராமன்

காவிரித் தீர்ப்பு செயலுக்கு வர.... - தோழர் கி.வெங்கட்ராமன்

மிகநீண்ட இழுபறிக்குப் பிறகு,காவிரிதீர்ப் பாயத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு 20.2.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டது.
அரசிதழில் வெளியானவுடன் காவிரிச் சிக்கலே தீர்ந்துவிட்டது போலவும், காவிரி நீர் வந்து விட்டது போலவும் அ.தி.மு.க.வினர் குதியாட்டம் போட்டனர். ஊருக்கு ஊர் இனிப்பு வழங்கி, செயலலிதாவை வானளாவப் புகழ்ந்து சுவரொட்டிகள், பதாகைகள் வைத்தனர். இது தனது வாழ்நாள் சாதனை என முதலமைச்சர் செயலலிதா துள்ளிக் குதித்தார்.
அரசிதழில் காவிரி தீர்ப்பு வெளியானதற்குத் தாங்கள் தான் காரணமென தி.மு.க தலைவர் கருணாநிதியும் காங்கிரசுக் கட்சியினரும் போட்டிப் போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடினர்.
காவிரிச் சிக்கல் தீர்ந்துவிட்டது போன்ற குழப்பத்தை பெரும் பகுதி உழவர்களிடமும், பொதுமக்களிடமும் இது ஏற்படுத்தி இருக்கிறது.இதேபோல் இடைக்கால தீர்ப்பு 1991-ல் வெளியிடப்பட்டு நேற்று வரை கடந்த 21ஆண்டுகளாக அது வெறும் ஏட்டளவில் இருந்ததை பலரும் நினைவுகூரத் தவறிவிட்டனர்.
இறுதித் தீர்ப்பை செயல்படுத்த உறுதியான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்யாது போனால் இதுவும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து விடும்.
“தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வழங்கப் பட்டவுடன் அதனை நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் 1956 இதற்கு கால வரம்பு எதுவும் கூறவில்லை என்றாலும்,ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பது நீண்ட காலதாமதம் ஆகும். இனியாவது 20.02.2013 ஆம் நாளைத் தாண்டாமல் விரைவில் அரசிதழில் வெளியிடவேண்டும்”எனஉச்ச நீதிமன்றம் இடித்துரைத்து கெடுவிதித்த பிறகே,அக்கெடுவின் கடைசி நாளான 20.02.2013 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
இத் தீர்ப்பின்படி கர்நாடகம் சூன் மாதம் 10, சூலையில் 34, ஆகஸ்டில் 50, செப்டம்பரில் 40, அக்டோபரில் 22, நவம்பரில் 15, டிசம்பரில் 8, சனவரியில் 3, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாதத்திற்கு 2.5ஆ.மி.க மொத்தம் ஆண்டுக்கு 192ஆ.மி.க காவிரி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும். (1 ஆ.மி.க = 100 கோடிகன அடி) இதில் 10 ஆ.மி.க சுற்றுச் சூழல் பயன் பாட்டிற்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள 182 ஆ.மி.க. தான். இதில் புதுவைக்கு 7ஆ.மி.க.தமிழகம் தரவேண்டும்.தமிழகத்துப் பாசனத்திற்கு மிஞ்சுவது 175 ஆ.மி.க. தான். இந்தப் பங்கீடு மிகவும் பாதக மானது என்றாலும் இதையாவது உறுதி செய்து கொள்ள வேண் டும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.
தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மிகக் குறைவான நீரை ஒதுக்கீடு செய்தாலும் இத் தீர்ப்பை செயல்படுத்த உறுதியான சட்ட ஏற்பாடுகளைக் காவிரித் தீர்ப்பாயம் வலியுறுத்திக் கூறுகிறது.
‘இத்தீர்ப்பை செயல்படுத்த நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்க வேண்டும். அதன் கட்டுப் பாட்டில் கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளையும் தமிழ்நாட்டின் மேட்டூர், பவானிசாகர்,அமராவதி ஆகிய மூன்று அணைகளையும் கேரளத்தின் பாணாசுரசாகர் அணையையும் வைத்து தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடுவதைக் கண்காணிக்க வேண்டும்.பத்து நாட்களுக்கு ஒருமுறை இதனை ஆய்வு செய்ய வேண்டும்.இந்த மேலாண்மை வாரியம் தனது பணிகளை நிறைவேற்ற காவிரி ஒழுங்குமுறைக் குழுவை  ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்துகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கான காரணங்களையும், அதற்கான முன் எடுத்துக்காட்டுகளையும் விரிவாக எடுத்துக் கூறுவதோடு, மேலாண்மைவாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றின் கட்டமைப்பு பற்றியும் காவிரித் தீர்ப்பாயம் விவரமாகக் கூறுகிறது.
“1991-ல் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புப்படி தண்ணீர் பெற ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டியிருந்தது என்பதை ஆவணங் களிலிருந்து அறியமுடிகிறது.ஒவ்வொரு முறையும் பற்றாக் குறை என்று காரணம் சொல்லி கர்நாடகம் தட்டிக்கழித்தது என்பதையும் அறியமுடிகிறது.எனவே இப்போது அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த உருப்படியான பொறியமைவுகள் உருவாக்காமல் போனால் இத்தீர்ப்பும் வெற்றுக் காகிதமாகவே இருக்கும்.”என மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தனது பரிந்துரைக்கான காரணத்தை தீர்ப்பாயம் கூறுகிறது. (காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அறிக்கை, தொகுதி 5, பக்கம் 216)
இறுதித் தீர்ப்பு குறித்த உச்ச நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை இந்த இறுதித் தீர்ப்பை செயல்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என கர்நாடகம் கூறுவது அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானது.மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கும் எதிரானது.
ஆனால், இந்த சட்ட விரோத நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு ஒத்துழைக்க முனைந்துள்ளது. “உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவ தற்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்’என இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அரீஷ் ராவத் கூறுவது சட்டவிரோத - இனப்பகைக் கொக்கரிப்பு ஆகும்.
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்டு விட்டால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டவிதி 6 (2) கூறுகிறது. கிருஷ்ணா ஆற்று நீர்ப் பகிர்வு குறித்து எழுந்த சட்டச் சிக்கலின் பட்டறிவு விளைவாக 2002-ஆம் ஆண்டு தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6ல் இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி உருவாக்கப் பட்டதே 6 (2) என்ற உட் பிரிவு ஆகும். திருத்தப்பட்ட இப்பிரிவு 06.08.2002 முதல் செயலுக்கு வந்தது.
விதி 6 (2) கூறுவதாவது:
“6 (1) ன் படி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசால் அதன் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு அத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது ஆணையின் வலு வைப் பெறுகிறது’.’
எனவே,அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது,தொடர்புடைய அனைத்து மாநிலங்களையும் இந்திய அரசையும் கட்டுப் படுத்தும்.
ஆயினும் இந்திய அரசு தனது சட்டக் கடமையிலிருந்து வழுவி விடும் என்ற ஐயம் தீர்ப்பாயத்திற்கு இருந்தது போலும்.எனவே தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விரி வாக எடுத்துரைக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்குகள் முடியும் வரை மேலாண்மை வாரியம் அமைப்பதை நிறுத்தி வைக்கக் கூடாது. அரசிதழில் வெளியிட ஆணை யிட்ட தீர்ப்பிலேயே உச்ச நீதி மன்றம் அதனைத் தெளிவு படுத்துகிறது.“தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசி தழில் வெளியிட்டு செயல்படுத்துவது இது தொடர் பாக நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கு களை எவ்விதத் திலும் பாதிக்காது என்பது சொல்லாமலே விளங்கும்” என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத் திய பிறகும் இந்திய அரசு ‘மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை’ எனக் கூறு வது அடாவடியானது.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது முடிவுக்கான முன் எடுத் துக்காட்டுகளை தீர்ப்பாயம் காட்டுகிறது.
“தீர்ப்பாயமானது தனது தீர்ப்பை செயல்படுத்தத் தேவை யான பொறியமைவு குறித்தும், அப்பொறியமைவு செயல்பாட் டிற்கான வழிமுறை குறித்தும் ஆணை பிறப்பிக்கலாம், அது தீர்ப்பாயத் தீர்ப்பின் ஒருங்கி ணைந்த பகுதியாக அமையும்” என கிருஷ்ணா ஆற்று நீர் தீர்ப் பாயம் கூறுகிறது. (கிருஷ்ணா தீர்ப்பாய அறிக்கை - தொகுதி 2, பக்கம் 164 )
”ஆற்று நீர்ப் பகிர்வு சிக்கல் குறித்து விசாரணை செய்வதற்கும், கட்டுப்படுத்தும் ஆணைப் பிறப்பிப்பதற்கும் தீர்ப்பாயத்திற்கு நாடாளுமன்றம் அதிகாரம் வழங்குகிறது. கட்டுப்படுத்தும் ஆணைப் பிறப்பிக்க அதிகாரம் உண்டு என்றால்,அந்த ஆணை யைச் செயல்படுத்த இன்றிய மையாத் தேவையான அனைத் தையும் செய்வதற்குத் தீர்ப்பாயத் திற்கு அதிகாரம் உண்டு என்று பொருள்”. (நர்மதா தீர்ப்பாய அறிக்கை - தொகுதி 2, பக்கம் 130).
நர்மதை தீர்ப்பு 1979-ல் வெளியானதற்குப் பிறகே மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர் தகராறு சட்டத்தில் 6கி என்ற பிரிவு சேர்க் கப்பட்டது. தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்ட பிறகு அதனைச் செயல் படுத்தத் தேவையான பொறியமைவு அல்லது பொறியமைவுகளை இந்திய அரசு நிறுவவேண்டும் என இப்பிரிவு கூறுகிறது.
இப்பொறியமைவு குறித்த அறிவிக்கைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும்,நாடாளுமன்றம் விரும் பினால் இப்பொறிய மைவை மாற்றி அமைக்கலாம் என்றும் 6கி (7) கூறுகிறது.
மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6 (2) -ன் வெளிச்சத்தில் இந்த 6கி (7) ஐ நோக்கினால் இது தொடர் பான நாடாளு மன்றத் தின் அதிகாரம் மிகவும் வரம்புக்குட் பட்டது என்பது புலனாகும்.ஏனெனில் 6(2)-ன் படி தீர்ப் பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபிறகு அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையா கிறது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றம் திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது.வேண்டுமானால் வேறொரு புதிய சட்டத்தின் மூலம்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர் கொள் ளலாம்.
6 (2) இப்போது செயலில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு அனைத்துத் தரப்பையும் கட்டுப் படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப் புக்கு இணையான ஆணையாகும்.
எனவே, இந்திய அரசு ஒரு நிர்வாக ஆணை மூலம் (Executive order) தீர்ப்பாயம் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.இதற்கு 6கி(7)ன் படி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதென்பது ஒரு சட்ட சடங்கே தவிர வேறொன்று மில்லை.நிர்வாக ஆணையின் மூலம் காவிரி மேலாண்மை வாரி யம் அமைத்து அதனை உடனே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம். நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
உண்மையில் கிருஷ்ணா ஆற்று நீர்ச் சிக்கலில் கர்நாடகத் தின் நிலைப்பாடும் இதுதான். கிருஷ்ணா வழக்கில் கர்நாடகம் சார்பில் வழக்காடிய மூத்த வழக்குரைஞர் நாரிமன் செயலாக் கப் பொறியமைவுக்கு நிர்வாக ஆணை போதும் என்றே வழக் காடினார். கிருஷ்ணா வழக்கில் கர்நாடகம் கோரியதைத் தான் காவிரி சிக்கலில் நாம் கோருகி றோம்.
கிருஷ்ணா உச்ச நீதிமன்ற வழக்கு 2000 -ல் நடந்தது. அப் போதே இந்த வாதத்தை கர் நாடகம் வைத்தது.அதன்பிறகு 2002-ல் மாநிலங்களுக் கிடையி லான தண்ணீர் தகராறு சட்டத் தில் 6(2)சேர்க்கப் பட்டது.இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு இணையான கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆணையே தீர்ப்பாயத்தின் முடிவு எனக் கூறுகிறது.
சட்ட நிலைமைகள் இவ் வாறு இருக்க,உச்ச நீதிமன்ற காவிரி வழக்குகளின் முடிவு தெரியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என இந்திய அரசு கூறுவது அப்பட்டமான சட்ட மீறலாகும்.
எனவே, இந்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கட்டுப் பாட்டில் மூன்று மாநிலங் களிலும் உள்ள காவிரி அணை களின் நீர்ப்பகிர்வு மேலாண்மையைக் கொண்டு வந்து காவிரித் தீர்ப்பை முழுமை யாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசும், தமிழகக் கட்சிகளும்,தமிழ்நாட்டு உழவர்களும் இத்திசையில் இந்திய அரசுக்கு வலுவான அரசியல் அழுத் தங்கள் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் இடக்காலத் தீர்ப்பைப் போலவே இறுதித் தீர்ப்பும் ஏட்டுச் சுரைக்காயா கத்தான் இருக்கும். அது கரிக்கு உதவாது.

குற்றவாளிக்கூண்டில் நீதிபதிகள்

கடைசியில் பொதுமக்களின் கருத்துக்கு தலைமை நீதிபதி பணிந்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தானும் பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் சொத்துக் கணக்குகளை மக்கள் அறியும்படி வெளிப்படுத்த முன்வருவதாக 26.08.09 அன்று அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் அறியும்படி வெளியிட வேண்டும் என அறிவித்தது. கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையிலும் நீதித்துறையில் ஊழல் பெருத்து வருவதை மக்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய கே.என்.சிங், ஏ.எஸ்.ஆனந்த், எம்.எம்.பூஞ்சி, ஒய்.கே.சபர்வால் ஆகியோர் மீது வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, வினாயகா மிசன் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஒரு வழக்கில் முன் பிணை வழங்குமாறு தில்லி அமைச்சர் ஒருவர் நிர்பந்தம் செய்வதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். நீதிபதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான உறவு இல்லாமல் இது நடக்க முடியாது. ஏதோ காரணத்துக்காக அவர்களுக்குள் விரிசல் வரும் போது அது வெளிப்படுகிறது.

நீதிபதி பி.டி.தினகரன் ஏழை தலித்துகளுக்கு சேர வேண்டிய அரசுப் புறம்போக்கை வளைத்துப் போட்டது அம்பலமாகியுள்ளது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதோ, குற்றவியல் வழக்குத் தொடுப்பதோ மிக மிக அரிதாகவே நடக்க முடியும். இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ள தடுப்புச் சுவர் அத்தகையது.

எனவே, தகவல் அறியும் உரிமை சட்டப்படி உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக வலுவாக எழுந்துள்ளது. இதற்கேற்ப நடுவண் தகவல் ஆணையம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சொத்துக் கணக்குகளை வெளியிடுமாறு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

அவ்வழக்கில் தான் நாம் தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உயர்நிலை நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகின்றார்.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சைலேந்திரக் குமார் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் கடந்த 20, 21.08.09 நாட்களில் விரிவான கட்டுரை எழுதினார். உயர்நிலை நீதிபதிகள் ஐயத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தங்களது சொத்து விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் இணையத்தளங்களில் வெளியிட வேண்டும் என்ற வாதங்களை எடுத்துரைத்தார்.

இச்சிக்கலில் அனைத்து நீதிபதிகள் சார்பில் கருத்துக் கூற தலைமை நீதிபதிக்கு உரிமை இல்லை என அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார். இதற்கடுத்த நாள், பஞ்சாப், அலீஜீயானா உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன், தமது குடும்ப சொத்து விவரங்களை “நீதித்துறையின் கடமைப்பாடு மற்றும் சீர்திருத்தம் குறித்த மன்றம்” என்ற அமைப்புக்கு அனுப்பிவிட்டு, அதன் நகலை இணையதளங்களிலும் வெளியிட்டார்.

முதலில் சைலேந்திர குமாரின் கட்டுரையை எரிச்சலோடு விமர்சித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இது கீழ்த்தரமான விளம்பர உத்தி என்று சாடினார். நீதிபதி கண்ணன் சொத்துக் கணக்குகளை வெளியிட்டதால் தங்களுக்கு தர்ம சங்கடம் ஏதுமில்லை என்று மழுப்பினார். ஆயினும், சைலேந்திரக் குமாரின் கருத்துக்கும் கண்ணனின் செயலுக்கும் மக்களிடையே பெருத்த ஆதரவு எழுந்தது. கே.ஜி.பாலகிருஷ்ணன் நீதித்துறை ஊழலை மறைக்க விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டு வலுத்தது.

இந்த மக்கள் கருத்துகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, “உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்குகளை உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடுவதென ஒருமித்து முடிவு செய்திருக்கிறோம்” என்று வேறு வழியின்றி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவிக்க வேண்டியதாயிற்று.

ஆயினும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படுவதும், இவர்கள் அரசு ஊழியர்கள் என்ற வரையறுப்பின் கீழ் கொணரப்படுவதும் அவசியமானது. அதே போல், நீதிபதிகளின் நியமனம், குற்ற விசாரணை, நீக்கம் ஆகியவற்றில் அதிகாரம் கொண்ட நீதித்துறை ஆணையம் நிறுவப்படுவதும் தேவையானது. இது முன்னாள் நீதிபதிகள் மற்றும் நாடாளுமன்றத்தாலும், மனித உரிமை அமைப்புகளாலும், நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட நிரந்தர அமைப்பாக அமைய வேண்டும். இது தேர்தல் ஆணையம் போல் அரசமைப்பு சட்டத்தால் நிறுவப்படும் அமைப்பாகத் திகழ வேண்டும். (இச்சிக்கல் குறித்த விரிவான விவாதத்திற்கு காண்க: புதிய தமிழர் கண்ணோட்டம் சனவரி 2009.)