கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label பி.ட்டி. Show all posts

பி.ட்டி. கத்தரி தடுப்போம்


எப்படியும் பி.ட்டி.கத்தரியைத் திணித்து விடவேண்டும் என்ற முனைப்போடு இந்திய அரசு செயல்படுகிறது. அதற்காக மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழுவில் பகாசுர அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கையாள் அறிவியலாளர்களை நிரப்பியது. ஆனால் அக்கறையுள்ள அறிவாளர்களும், உழவர்களும் எளிதில் விடுவதாக இல்லை.

பி.ட்டி.கத்தரியை அனுமதிக்கலாமா கூடாதா என்று தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு2ல் இருந்தவர்கள் மான்சான்டோவின் கையாள்கள் என்பதை டவுன் டு எர்த் (Down to Earth) 2009 டிசம்பர் 16--31 இதழ் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. அது வருமாறு:

வல்லுனர் குழுவில் உள்ள கே.கே.திரிபாதி மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்து,அது நடுவண் புலனாய்வுக்குழுவின் விசாரணையில் உள்ளது. மான்சான்டோவின் துணை நிறுவனமான மஹைகோவுக்கு சாதகமாக தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் திரிபாதி என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

வல்லுனர் குழுவின் அடுத்த உறுப்பினர் மதுராராய். இவர் வாரணாசியில் உள்ள இந்திய அரசின் காய்கறி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர். இந்நிறுவனத்தின் சார்பில் அமெரிக்க நிதியுதவிக்கழகத்தின் நிதி ஏற்பாட்டில் மஹைகோ பி.ட்டி.கத்தரியைப் பரப்புவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக புல ஆய்வில் ஈடுபட்டவர் இந்த மதுராராய்

வல்லுனர் குழுவின் இன்னொரு உறுப்பினர் வசந்தா முத்துசாமி. மற்றொருவர் பி.சசிகரன். இந்த இருவரும் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர்கள். அப்போது அமெரிக்க நிதியுதவியில் மான்சான்டோவின் மரபீனி உணவுப் பயிர்களை தெற்காசியாவில் பரப்புவது குறித்து ஆய்வு நடத்தியவர்கள். அடுத்த உறுப்பினர் பி. ஆனந்தகுமார். இவர் பி.ட்டி கத்தரி வளர்ப்பவர்.

-align: justify;"> மற்றொரு உறுப்பினர் திலீப்குமார். மான்சான்டோவின் துணை நிறுவ னமான மஹைகோ நிதி ஏற்பாட்டில் ஆய்வு நடத்தியவர். பி.ட்டி. கத்தரியை மீன் உணவாக பரப்புவது குறித்த ஆராய்ச்சியே அது.

இவ்வாறான கையாள் வல்லுனர்கள் மான்சான்டோவுக்கு ஆதரவாக பி.ட்டி.கத்தரியை அனுமதித்ததில் வியப்பேதும் இல்லை.

ஆயினும்,பி.எம் பர்கவா, தேவீந்தர் சர்மா, ராமாஞ்சனேயலு, நம்மாழ்வார் போன்ற அறிஞர்களும், க்ரீன்பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், பல்வேறு உழவர் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் தில்லி அரசு வேறு வழியின்றி பொது விசாரணைக்கு உத்தரவிட்டது.

கொல்கத்தா, புவனேஸ்வர், ஆமதாபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் பொது விசாரணை நடந்துள்ளது. இங்கெல்லாம் பெருந்திரளான உழவர்களும், அக்கறையுள்ள அறிவாளர்களும் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களில் எண்பது விழுக்காட்டினர் பி.ட்டி.கத்தரிக்கு எதிரான கருத்துகளையே பதிவு செய்ததாக இக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஜ ெயராம் ரமேசே ஒத்துக்கொண்டார்.

புவனேஸ்வரில் இப்பொதுவிசாரணை அரங்கிற்கு உழவர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கைகளில் இயற்கை வேளாண்மையில் விளைந்த கத்தரிக்காய்கள். அந்தக் காய்களை அமைச்சருக்குப் பரிசாக வழங்கி பி.ட்டி.கத்தரி வேண்டாம் என முழங்கினர்.

ஏற்கெனவே கேரளா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பி.ட்டி.கத்தரியைத் தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன. கர்நாடக அரசு மரபீனி மாற்ற உணவுப்பயிர்களை அவசரப்பட்டு அனுமதித்து விடமாட்டோம் என்று அறிவித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு மான்சான்டோவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட பி.ட்டி.கத்தரி என்ற பெயரால் இதனைத் திணிக்க முனைந்துள்ளது. மான்சான்டோவின் முகமூடியாக வேளாண் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்துகிறது. அதற்கேற்ற விஞ்ஞானிகள் அப்பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்புகளில் அமர்ந்துள்ளனர்.

இந்திய அரசும், தமிழக அரசும் எப்படி முயன்றாலும் பி.ட்டி.கத்தரியைத் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த மண்ணையும், மண்ணின் மரபான வேளாண் அறிவையும் நசுக்கி, தமிழர்களை வெள்ளைக்கார முதலாளிகளின் அடிமையாக மாற்ற முயலும் அரசுகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக எத்தகைய தியாகம் செய்யவும் அணியமாக வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்: தமிழக வேளாண்மையை அழிக்க வரும் பி.ட்டி நெல்


ஒரு உயிரிலிருந்து மரபீனிகளைப் பா¢த்து எடுத்து, வேறொரு உயி¡¢க்குள் செலுத்தி அந்த உயி¡¢க்குச் சில புதிய குணங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்.

நெல்லுக்குப் பகையான சில பூச்சிகளைக் கொல்லும் திறன் சில பாக்டீ¡¢யாக்களுக்கு இருக்கின்றன. இந்தத் தன்மைக்கு அந்த பாக்டீ¡¢யாவில் இருக்கும் சில மரபீனிகளே காரணம். இந்த மரபீனிகளை நெல்லுக்குள் செலுத்தினால் நெற்பயிர்கள் தங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் அளவுக்கு தற்காப்புத் திறன் பெற்றவையாக மாறிவிடும் என்று எதிர்பார்த்தனர். அவ்வாறு உருவான ஒன்றுதான் பி.ட்டி நெல் ஆகும்.

இதற்கு அடிப்படையாக இருப்பது பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் என்ற பாக்டீ¡¢யா ஆகும். இதனைத்தான் சுருக்கமாக பி.ட்டி என்கின்றனர். பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி என்ற பாக்டீ¡¢யா உருவாக்கும் Cry 1Ab, Cry 1Ac என்ற நஞ்சுகள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான், இலை சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கவல்லவை.

பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி பாக்டீ¡¢யாவிலிருந்து மரபீனியைப் பி¡¢த்து, நெல் விதைக்குள் செலுத்தினால் உருவாகும் புதிய நெல் விதையிலிருந்து முளைக்கும் நெற்பயிர் மேற்சொன்ன நஞ்சுகளைச் சுரந்து, இலைச் சுருட்டுப் புழுக்களையும், தண்டு துளைப்பான்களையும் கொன்று விடும் என்று கண்டறிந்தனர்.

இந்த வகை மரபீனி மாற்று நெல்தான் பி.ட்டி நெல் (bt rice) ஆகும். இதற்க அமொ¢க்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் காப்பு¡¢மை பெற்றுள்ளது.

பொதுவாக மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் இன்னும் குழந்தை நிலையில்தான் உள்ளது. மரபீனிகளின் செயல்தளம் இன்னும் வி¡¢வாகக் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் மரபீனி மாற்றுப் பயிர்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவசரப்பட்டுக் கொண்டு வந்து விடக்கூடாது.

சாதாரணமாக மரபீனிகள் ஓய்வு நிலையில் இருக்கும். வெளியிலிருந்து இன்னொரு மரபீனி செலுத்தப்படும் பொழுது அக்கம் பக்கத்திலுள்ள மரபீனிகள் எல்லாம் தீவிரமாகச் செயல் வேகம் பெற்றுவிடும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நிலையில் மரபீனியை இன்னொரு மாற்றுத் தளத்தில் செலுத்துவது என்பது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒட்டும் இடத்தைப் பொருத்து எண்ணிக்கைப் பெருக்கம் அடைய வாய்ப்புண்டு. அதன்பிறகு அதன் கட்டுப்பாடு நம் கையில் இல்லை. நெல்லில் ஒரு மரபீனியை மாற்றீடு செய்ய நாம் முயலும் போது அது செலுத்தப்படும் நெல்லின் ஒட்டு மொத்த மரபீனித் தொகுப்பையே சிதைத்தவிடும் ஆபத்தும் உண்டு.

அவ்வாறாயின் அக்குறிப்பிட்ட நெல் வகையில் ஏற்கெனவே இருந்த நல்ல தன்மைகளும் சேர்ந்து குலைந்து விடும். அல்லது அவற்றில் வேறுவகையான நச்சுப் பொருள்கள் உருவாகி விடலாம். இது விளைச்சலைப் பாதிப்பதோடு, உண்பவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பி.ட்டி அ¡¢சியை எலிக்குக் கொடுத்து உண்ணச் செய்தபோது அதற்கு உடலில் முடி உதிர்தல, குடல் தொடர்பான நோய்கள் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. Cry 1Ac என்ற நச்சு இவ்வாறான விளைவை ஏற்படுத்தியது. இதே போன்ற ஒவ்வாமைகள் பாலூட்டியான மனிதர்களுக்கும் வரும் ஆபத்து உண்டு - என்று முனைவர் ஜேனட்டு காட்டர் என்ற அறிவியலாளர் எச்சா¢க்கிறார்.

எனவே பி.ட்டி நெல் தமிழ் நாட்டில் தடைசெய்யப் படவேண்டும். அந்நெல்லுக்கு ஆய்வுப் பண்ணைகள் அமைக்கவும் அனுமதிக்கக் கூடாது.

இந்த வகையான நெல் தமிழ்நாட்டில் - கோவை மாவட்டத்தில் - ஆலங்குடி என்ற சிற்றூ¡¢ல் ரங்கராஜன் என்பவரது பண்ணையில் விளைவிக்கப்பட்டு முதிர்ந்து நின்றது. இந்த நெல் எப்படிப்பட்டது என்பதே அவருக்குத் தொ¢யாது. பசுமை அமைதியின் செயல்வீரர்களும், விவசாயத் தலைவர்களும், பசுமை இயக்கத்தினரும் - முனைப்போடு சென்று தேடி, கண்டுபிடித்து - இதனை அழித்துள்ளனர். இவர்கள் இது பற்றி மக்களுக்கும் பத்தி¡¢கைகளுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு இச் செயலை வாழ்த்தியுள்ளார் - இந்த மண்ணைக் காக்க வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துரைத்துள்ளார்.

(இன்னம் எங்கெல்லாம் இந்த நெல் விளைவிக்கப் பட்டுள்ளதோ யார் அறிவார்? இவர்கள் நுழைய அனுமதி தந்தது யார்? )