ஆவடியில் இயங்கும் இந்திய அரசுப் பாது
காப்புத் துறைக்குச் சொந்தமான திண்ணூர்தி தொழிற்சாலை (Heavy Vehicles
Factory - HVF) யிலும், பல்வேறு அரசுத் தொழில் நிறுவனங்களிலும் 2004ஆம்
ஆண்டு தொடங்கி நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை
எதிர்த்து, 25.08.2013 ஞாயிறு அன்று ஒருநாள் அடையாளப் பட்டினிப் போராட்டம்
நடை பெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்ட
மறுசீரமைப்பு நலச்சங்கம் (NPSERA) சார்பில், ஆவடி பேருந்து நிலையம்
அருகில், காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடை பெற்ற இப்போராட்டத்திற்கு,
சங்கத்தின் தலைவர் திரு. மு.கண்ணன், செயலாளர் திரு. இரட்சகராஜா ஆகியோர்
தலைமையேற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் தோழர்
பிரடெரிக் ஏங்கல்ஸ், தமிழ் நாடு ஆசிரியர் ஊழியர் சங்க மாநிலத் தலைவர்
திருமதி. தமிழ்ச்செல்வி, பத்திரிகையாளர் திரு. டி.எஸ்.எஸ்.மணி, தமிழின மான
மீட்பு இயக்கத் தலைவர் திரு. சேக்காடு ஐ.மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி,
அமைப்புத் தலைவர்கள் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர்.
நிறைவாக,
மாலையில், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர்
கி.வெங்கட் ராமன் உண்ணாப் போராட்டத்தை பழரசம் வழங்கி முடித்து வைத்து,
நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:
“காலை
முதல் மாலை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள
தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு
கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற நாம்,
ஓய்வூதி யத்தின் கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமெனக்
கருதுகிறேன்.
வெறும் 33 ரூபாய்க்கு
மேலே ஒருவர் சம்பாதித்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலானவர் என
வரையறுத்துள்ள இந்தியத் திட்டக்குழுத் துணைத் தலைவராக உள்ள மாண்டேக் சிங்
அலுவாலியா, தன்னுடைய அலுவ லக கழிப்பறையை சீரமைப் பதற்கு மட்டும் 66 இலட்சம்
ரூபாயை செலவழித்துள்ளார்.
அவர்
கேட்கிறார், தொழிலா ளர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமே, வேலை முடிந்து
வீட்டுக் குச் சென்ற பிறகும் உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்?
எதற்காக உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கேட்கிறார். உங்களால்
நாட்டுக்கு என்ன செல்வமதிப்பு சேர்க்கப்படு கிறது எனக் கேட்கிறார். இது
கோட் பாட்டுப் பிரச்சினை.
ஓய்வூதியம்
குறித்த கோட் பாட்டை நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான் அவருக்கு நாம்
பதிலளிக்க முடியும். நாம் வாங்கு கின்ற சம்பளத்தின் ஒரு பகுதி தான்
ஓய்வூதியமாக நமக்கு வழங்கப்படு கின்றது என்ற உண்மையை அவருக்குப் புரிய
வைக்க வேண்டும்.
1976ஆம் ஆண்டு இந்திரா
காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியாவில் அவசரநிலைச் சட்டம்
பிரகடனப்படுத்தப்பட்டது. அப் போது போனஸ் வழங்குவது நிறுத் தப்பட்டது.
நிறுவனத்திற்கு இலா பம் இருந்தால் மட்டும் தான், அதன் ஒரு பகுதி
தொழிலாளர்களுக்கு போனசாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலாபமில்லை யெனில்
போனஸ் கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டது.
இதனை
எதிர்த்து நீதிமன்றத் தில் முறையிட்ட போது, நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர்
ஒரு சிறப்பா னத் தீர்ப்பை வழங்கினார். போனஸ் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட
சம்பளம் (Deffered Wage) என அவர் தீர்ப்பு வழங்கினார். போனஸ் என்பது
சம்பளத்தின் ஒரு பகுதி தான் என்பதை அத்தீர்ப்பின் மூலம் அவர் உறுதி
செய்தார்.
அதே போல ஓய்வூதியம்
(Pension) என்பது உழைப்புச் சக்திக்கான தேய்மானம் (Labour Power
depreciation). ஒரு எந்திரம் இருக்கிற தென்றால் அதற்கென்று உள்ள வாராண்டி
(Warranty) தனியாக வழங்கப்பட்டும் கூட, இருப்பு நிலைக்குறிப்பில் (Balance
Sheet) அதன் தேய்மானமும் குறிப்பிடப் படுகின்றது. கட்டிடத்திற்கு தேய் மான
நிதி வழங்கப்படுகிறது. அதே போல, உழைப்புச் சக்தியை வெளியி டும்
தொழிலாளர்களுக்கான தேய் மானம் தான் ஓய்வூதியம். இதற் குரிய நிதி
ஒதுக்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டும். இதை எல்லா நிலைக
ளிலும் தொழிற்சங்கத் தோழர்கள் வலியுறுத்த வேண்டும். இதை உண ருவதில்,
உணர்த்துவதில் எவ்வித சமரசமும் கூடாது.
ஒரு
இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற் சாலையில் (Automated Industry) பணிபுரியும்
தொழிலாளர் களுக்கு, உடல் உழைப்பாக இருக் கட்டும் அல்லது மூளை உழைப் பாக
இருக்கட்டும், நாளொன்றுக்கு சராசரியாக 3200 கலோரிகள் சக்தி
தேவைப்படுகின்றது. வயது முதிரும் போது இது நாளொன்றுக்கு 2100 ஆக தேய்கிறது.
ஒரு
இயந்திரத்திற்கு பதில் இன்னொரு இயந்திரத்தை அவர் கள் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், தொழிலாளர்களை அப் படி தூக்கிப்போட்டுவிட முடியாது. எனவே தான்,
தொழிலாளர் சக்தியின் (Labour power) இந்தத் தேய் மானத்தையே நாம்
ஓய்வூதியமாகக் கேட்கிறோம். இந்தக் கோட் பாட்டை நாம் அழுத்தம் திருத்த மாகச்
சொல்ல வேண்டும்.
தொழிற்சங்கங்கள் சமூக
உணர் வுடன் வளர்த்தெடுக்கப்பட வேண் டியவை. பொதுப் பிரச்சினைகளில், பொது
உரிமைச் சிக்கல்களில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும். ஆனால்
நடப்ப தென்ன? தொழிற்சங்கங்கள் நடை முறையில் கூட்டு சுயநலமாக (Collective
Selfishness) மாறிவிட்டன. தொழிலாளர்களின் இது போன்ற பலவீனங்களை வாய்ப்பாக
பயன் படுத்திக் கொள்கின்ற ஆட்சியா ளர்கள், அதற்கென அவர்கள் காலம் எடுத்துக்
கொண்டாலும் நம்மை பிளவுபடுத்தி காரியம் சாதிக்கின்றனர்.
அதனால்
தான், தொழிற்சங் கங்கள், இரசிகர்களுக்கு ஏற்ப கச்சேரி வாசிக்கும்
மன்றங்களாகச் சுருங்கி விட்டன. எனவே, தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின்
கோரிக்கைகளை மட்டுமின்றி, பொதுப் பிரச்சினைகளிலும் ஆர் வம் செலுத்த
வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும்.
புதிய
ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்கின்ற நாம், அதற்கு அடிப் படையான புதிய
பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்தாக வேண்டும். அதை எதிர்க்காமல் இதை
மட்டும் எதிர்க்க முடியாது. நம்முடைய ஞாயங்களை வலிமை யாக உணர்த்த வேண்டும்.
நாம் போராடுவது வீணல்ல. நம் போராட்டங்களுக்கு வலிமை யுண்டு. நம்முடைய
ஞாயங்களுக்கும் வலிமையுண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்
கையோடு போராடுவோம்!”
இவ்வாறு தோழர் கி.வெங்கட் ராமன் பேசினார்.
இப்போராட்டத்தில், எச்.வி.எப். தொழிலாளர்களும், தமிழுணர் வாளர்களும் திரளாகப் பங்கேற்ற னர்.
0 கருத்துகள்:
Post a Comment