தமிழக உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்கு
மொழியாக அறிவிக்கக் கோரி, மதுரையிலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த
வழக்கறிஞர்கள் ஊர்திப் பரப்புரையாக மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி,
விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 06.09.2013 அன்று காலை சென்னை
வந்தடைந்தனர்.
இப்பரப்புரைப் பயணத்தின்
நிறைவு விழா, சென்னை பாரிமுனை உயர்நீதிமன்றம் வாயிலில் நடைபெற்றது. மதுரை
வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.இராமசாமி நிகழ்வை
ஒருங்கிணைத்தார். சென்னை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் மோகன
கிருஷ்ணன், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன்,
முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பால். கனகராஜ் உள்ளிட்ட பல
முன்னணி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும், திரளான வழக்கறிஞர்களும் இதில்
பங்கேற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் அ.சவுந்திரராசன், தமிழ்த்
தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள்
கட்சித் தலைவர் தோழர் தங்கத் தமிழ்வேலன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத்
தலைவர் புலவர் கி.த.பச்சை யப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கையை
வலியுறுத்திப் பேசினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
உயர்நீதி
மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்னெடுத்து
மதுரை வழக்கறிஞர்கள் முன்முயற்சியில் ஊர்திப் பரப்புரையும், இக்கண்டன
ஆர்ப்பாட்டமும் முனைப்புடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அவர் களுக்கு தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய
அரசமைப்புச் சட்ட விதி 348(2)இன்படி நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு
மொழியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டுமெனக் கோருகிறோம். 1991ஆம் ஆண்டு இதே
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சியின் இளைஞர்
அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே
புகுந்து, முதன்மை நீதிபதியின் அரங்கத்திற்கு வெளியே தமிழை வழக் காடு
மொழியாக அறிவிக்கக் கோரி முழக்கம் எழுப்பினோம். துண்டறிக்கை விநியோகித்த
எங்கள் தோழர்களை காவல் துறை கைது செய்தது.
அதன்
பிறகு, தொடர்ச்சியாக இக்கோரிக்கையை நாம் முன்வைத்து வருகிறோம்.
அப்பொழுதெல்லாம், நமது வழக்கறிஞர்களிடையே கூட இக்கோரிக்கை குறித்து போதிய
தெளிவில்லாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கு இக் கோரிக்கை தமிழக
வழக்கறிஞர்களின் ஒட்டு மொத்தக் கோரிக் கையாக மலர்ந் திருப்பது மிகவும்
மகிழ்ச்சியளிக் கிறது.
அரசமைப்புச்
சட்டவிதி 348(2) - ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியை, அம்மாநில நீதிமன்ற
மொழியாக அறிவிக்க அம்மா நிலத்தின் அமைச்சரவை கூடி முடி வெடுத் தால் போதும்
எனச் சொல்கிறது. ஆனால், இது தமிழர் களின் ஒட்டுமொத்த கோரிக்கை என்கிற
வகையில், 2006ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை யிலேயே
இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலை வருக்கு ஆளுநர் மூலம்
அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிமிடம் வரை இதற்கு பதிலில்லை.
தமிழ்
- தமிழ்நாட்டின் அலுவல் மொழி மட்டுமல்ல, தமிழ் நாட்டின் தேசிய மொழியும்
அதுவே! தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பது, இங்குள்ள
ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது வழக்கு களில் என்ன
நடைபெறுகின்றது என்பதைக் கூட அறிய விடாமல் அவர்களைக் கண்ணாடித் தடுப்பைப்
போட்டு மறைக் கின்ற செயலாகும். ஒடுக்கப்பட்ட சமூக வழக்கறிஞர்களின்
முன்னேற்றத்தைத் தடுக்கின்ற தடைக் கல்லாகும்.
வழக்கறிஞர்களாகிய
உங்களிடம் நான் ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழை வழக்கு மொழி
யாக்க வேண்டுமென்ற நமது போராட்டம், நீதி மன்றத்திற்கு வெளியே மட்டுமல்ல
நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடைபெற வேண்டியி ருக்கிறது.
எனவே,
இங்குள்ள வழக்கறி ஞர்கள் அனைவரும் இனி தாங்கள் உயர் நீதிமன்றத்தில்
தமிழில்தான் வாதாடுவேன் என உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழிலேயே
வழக்காட வேண்டும். அது ஒரு அழுத்தத்தைத் தரும்”.
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
இந்நிகழ்வில்,
திரளான வழக்கறிஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை யொட்டி, 6.9.2013 அன்று ஒருநாள் தமிழகம் மற்றும் புதுச்
சேரியில் உள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கள் நீதிமன்ற
புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின்
போராட்டத்தை ஆதரித்து, தமிழை உயர்நீதி மன்றத்தின் மொழியாக்க வலியுறுத்தி
த.தே.பொ.க. சார்பில் சென்னையின் பல பகுதிகளில் சுவரொட் டிகள் ஒட்டப் பட்டன.
தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் உதயன்,
தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க.
சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலா ளர் தோழர்
இரா.இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோ வேந்தன்,
தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் தமிழர் கண்ணோட்டம் இணைய இதழ்
பொறுப்பாளர் தோழர் கோபிநாத், பாலா உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இந்
நிகழ்வில் பங் கேற்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment