கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

சுரங்கத்தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: நெய்வேலியிலிருந்து மத்தியப் பாதுகாப்புப்படையினரை திரும்பப்பெற வேண்டும்

சுரங்கத் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை: நெய்வேலியிலிருந்து மத்தியப் தொழில் பாதுகாப்புப் படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று (17.03.2014) நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் மத்தியப் பாதுகாப்புப் படை ஆள் ஒருவரால் இராஜ்குமார் என்ற ஒப்பந்தத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிகிறது. 
மொழித் தெரியாத , மனித உரிமை பயிற்சியேதும் இல்லாத மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையினர் நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் செய்துவரும் தொடர்ச்சியான அத்துமீறல்களின் ஓர் உச்ச இது.
17.03.2014 அன்று காலை இரண்டாவது சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தனது நண்பரை சந்திக்க, அடையாள அட்டையை காண்பித்து அனுமதி கோரிய இளம் ஒப்பந்த தொழிலாளி இராஜ்குமாரை அங்கு காவலுக்கு இருந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மறுத்து தடுத்துள்ளனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நடந்த நிகழ்வு இவ்வளவே.
இதுகுறித்து தான் சந்திக்க விரும்பிய பணியிலிருந்த தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது சற்றும் தேவையற்ற முறையில், பாதுகாப்புக்கு எந்த அச்சுருத்தலும் இல்லாத சூழலில் தொழி்ற்சாலைப் பாதுகாப்பு படையை சேர்ந்த என்.ட்டி. நோமன் என்ற வட நாட்டு பாதுகாப்பு படை ஆள் இராஜ்குமாரின் தலையில் சுட்டுள்ளார்.
மூன்று சுற்று நடைபெற்ற இத் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் மூளை சிதறி இளம் தொழிலாளி நிகழ்விடத்திலேயே குறுதி வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். 
காட்டுமிராண்டித் தனமான இந்தக் கொலை பாதுகாப்புப் படையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு முறையையும் சட்டங்களையும் மீறிய கொலைக் குற்றச் செயலாகும்.
இக் கொடிய நிகழ்வு என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது இயல்பான ஒன்று. 
இக் கொலைச் செயலைக் கண்டித்து சுரங்கத்தொழிலாளர்கள் நெய்வேலி – விருத்தாசலம் சலையில் மறியல் போராட்டம் செய்ததும் இது போன்ற அதிர்ச்சி நிகழ்வுகளில் பல நேரங்களில் நடக்கும் கண்டனப் போராட்டம்தான்.
சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தடியடியும், கண்ணீர் புகைக் குண்டு வீச்சும் நடத்தியதோடு இல்லாமல், சிதரி ஓடி அக்கம் பக்கத்து வீடுகளில் புகுந்துகொண்ட தொழிலாளர்களையும் துரத்திச் சென்று வீடுகளுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து அடித்து தமிழக காவல்துறை தனது பங்கிற்கு அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது. 
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டதிலிருந்தே தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக தொடர்ச்சியான அத்துமீறல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் கூட ஆனந்தன் என்கிற தொழிலாளி இப்படையினரால் சட்டவிரோதமாக தாக்கப்பட்டுள்ளார். 
ஏதோ அயலார் படையெடுப்பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதைப் போல் அமைதியாக இயங்கும் என்.எல்.சி நிறுவனத்திற்குள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவது தேவையற்றது. என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர்களை குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர அச்சத்தில் வைத்து வேலை வாங்கும் நோக்கத்திலேயே இப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 
இம் மக்களின் மொழியான தமிழ்த் தெரியாத வட நாட்டுக் காரார்களே மிகப் பெரும்பாலும் என்.எல்.சி யில் இப்படையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்த் தெரிந்தவராக இருந்தால் தொழிலாளர்களுடைய நிலைமைகளைப் புரிந்துகொள்வார் என்பதற்காகவே மொழி புரியாத படையாட்களை நெய்வேலியில் நிறுத்துகிறார்கள். 
துணை இராணுவ பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு மக்களிடைடையே பணியாற்றுவதற்கு தேவையான குறைந்த அளவு மனித உரிமைகள் பயிற்சிகள் கூட தரப்படுவதில்லை. இவர்கள் எதிர்கொள்ளுகிற எல்லோருமே எதிரிகள் என்ற மன நிலையிலேயே இப்படையினர் வளர்க்கப்படுகிறார்கள்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நெய்வேலியிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றக் கோரிக்கை தொழிலாளர்களிடத்திலேயும், நெய்வேலிப் பகுதி மக்களிடத்திலேயெயும் தொடர்ந்து இருந்துவருகிறது. இவை எதுபற்றியும் சட்டை செய்யாமல் இந்திய அரசின் சுரங்கத்துறை அமைதியான நெய்வேலியில் இந்தத் துணை இராணுவப் படையினரை நிறுத்தியுள்ளது. அவர்கள் தொடர்ந்து பல அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது பற்றி அவ்வப்போது நிர்வாகத்திடம் புகார் அளிக்பபட்டாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. 
இந்நிலையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் நெய்வேலியிலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 
இராஜ்குமார் சாவு ஒருக் கொலைக் குற்றம் என்ற வகையில் மத்தியப் பாதுகாப்புப் படையை சேர்ந்த என்.ட்டி நோமன் மீதும் இத் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய பிற அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 
இராஜ்குமார் கொலையை கண்டித்து குரல் எழுப்பிய நெய்வேலி சுரங்கம் 2-ன் தொழிலாளர்கள் மீது கேள்வி முறையற்று தடியடித் தாக்குதல் நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 
கொலையுண்ட இராஜ்குமார் குடும்பத்திற்கு என்.எல்.சி. நிர்வாகம் ரூபாய் இருபது இலட்சம் இழப்பீடும், அவருடைய இளம் மனைவிக்கு அவரது தகுதிக்குத் தகுந்த வேலையும் வழங்கி உடனடியாக ஆணையிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

0 கருத்துகள்:

வல்லரசுகளின் பந்தயப் பொருளாக உக்ரைன் - தோழர் கி.வெங்கட்ராமன்

இன்னுமொரு உள்நாட்டுச் சிக்கல் உலக வல்லரசுகளின்  பகடைக்காயாக மாறியுள்ளது.  எகிப்து,  தாய்லாந்து, லிபியா, சிரியா ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது உக்ரைன்  நாட்டுச் சிக்கல்  உலக வல்லரசுகளின் கைகளில்  ஆதிக்கப் போட்டிக்கான பகடைக்காயாக மாறிவிட்டது.
 சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த சில நாடுகள் ‘சுதந்திர நாடுகளின் பொதுநலக் கூட்டமைப்பு’ என ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு  தங்கள் இறை யாண்மையை பாதுகாத்துக் கொண்டே இரசியக் கூட்டரசுடன் வணிக உறவுகளையும் , அரசியல் நட்புறவையும், பேணிவருகின்றன.
ஆனால் உக்ரைன் அது தனி நாடாக உருவெடுத்ததிலிருந்து உலக வல்லாதிக்க முகாம்களில் எந்தப் பக்கம் போவது என்று குழம்பிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றுக் காலம் தொட்டு  உக்ரைனுக்கும் இரசியாவுக்கும் இருந்த உறவு  நெருக்கமான ஒன்று.
இரசியப் புரட்சி, முதல் உலகபோர் ஆகியவற்றைத் தொடர்ந்து உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இணைந்த இறையாண்மையுள்ள குடியரசாக விளங் கியது.  இக்குடியரசின்  இரசிய உறவு சில தனித்தன்மைகளைக் கொண்டது.
இரசியக் கூட்டரசின்  தன்னாட்சிப் பகுதியாக விளங்கிய  கிரீமியா - குருசேவ் ஆட்சி காலத்தில் 1954ல் உக்ரைன் குடியரசோடு இணைக்கப்பட்டது. தமது இரசிய இன மேலாண்மையை உறுதி செய்து கொள் வதற்கான  குருசேவின் சூழ்ச்சி ஏற்பாடே இது என்று இதனை திறனாய்வு செய்வோரும் உண்டு.
புவியியல் வழியில்  உக்ரைன்  ஐரோப்பாக் கண்டத் தில் உள்ளது. இந்நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடு களான எஸ்டோனியா, லித்துவேனியா ஆகியவை போன்று உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்  இணைப்பதற்கான முயற்சி மேற்குலக நாடுகளின் தரப்பிலும்  உக்ரைன் ஆட்சியாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘இணைப்பு உரிமை கொண்ட’ நாடாக உக்ரைனை  இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் தீவிரம் பெற்றன.
 ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பு நாடாகவும் இல்லாமல்  எதிர்காலத்தில் உறுப்புரிமை வழங்கப்படக் கூடிய நிலையே ”இணைப்புரிமை “ணீssஷீநீவீணீtவீஷீஸீ” எனப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து உக்ரைன் ஆட்சி யாளர்களிடையேயும் அரசி யல் கட்சிகளிடையேயும் எதிரும் புதிரு மான கருத்துகள் அண்மைக் கால மாக தீவிரமாக விவாதிக்கப் பட்டு வருகின்றன.
உக்ரைன் குடியரசுத்தலைவர் விக்டர் யான்கோவிச்  முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முடிவு செய்து அறிவித்தார். ஆனால் கடந்த 2013 நவம்பர் 21 அன்று தமது முடிவை மாற்றிக் கொண்டு ஐரோப்பிய ஒன் றியத்தில் இணைவது என்ற முடிவி லிருந்து  தமது அரசு பின் வாங்குவ தாக அறிவித்தார்.
இது எதிர்க்கட்சிகளிடையேயும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகளிடையேயும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின.
அடுத்த நாளிலேயே உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெறத் தொடங் கின.  யான்கோவிச்  ஆட்சியின் சர்வாதி கார அணுகுமுறை, அளவு கடந்த ஊழல் ஆகியவை ஏற்கெனவே மக் களிடையே பெரும் எதிர்ப்பை ஏற் படுத்தி வந்தன.  கோதுமை ஏற்று மதியில் முதல் நிலை நாடாக விளங் கும் இயற்கை வளம் மிக்க அமைதி யான உக்ரைனின் செல்வாதா ரங்கள்  விக்டர் யான்கோவிச் குடும் பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்க மான ஒரு ஆட்சிக் கும்பலால் ஊழல் வழிகளில் குவிக்கப் பட்டி ருந்தது . யான்கோவிச்சுக்கு ஐரோப் பிய நாடுகள் எங்கும் பல்லாயிரம் ஏக்கர்  நிலங்களும் வேறு பல சொத் துகளும் இருந்தன. கணக்கில் வராத கருப்புப் பணத்தை பல நாட்டு வங்கிகளில் இரகசியக் கணக்கு களில் அவர் பதுக்கி வைத்திருப்ப தாக குற்றச் சாட்டுகள் உண்டு.
இவை அனைத்தும் சேர்ந்து யான்கோவிச் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெருந்திரளான மக்களை இணைத்தது.
யான்கோவிச் ஆட்சி  கீவ் நகரில் திரண்ட மக்கள் மீது கொடும் அடக்கு முறையை ஏவியது.
இப்போராட்டங்களுக்கு  தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்  முன்னாள் பிரதமர் யூலியா தைனாசங்கோ அம்மை யாரை யான் கோவிச் அரசு சிறையில் தள்ளியது. இந்த தைனோசங்கோவும் இலேசு பட்ட வர் அல்லர்.  இவரும் பல்லா யிரம் கோடிக்கு அவர் ஆட்சியில் இருந்த போது சொத்துகள் குவித்தவர்தான்.
நவம்பர் 22.2013 அன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பங் கேற்ற ஒரு சிறுவன்  காவல் துறை யால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டக் காட்சி முக நூல் களின் வழியாக பரவியது.  இது உக்ரைன் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  திசம்பர் 1 ஆம் நாள் கீவ் நகரில்  நடைபெற்ற பேரணியில்  மூன்று இலட்சம் மக்கள் பங்கேற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கீவ் நகரின் ”ஐரோப்பிய மை தானம் ” என்றத் திடலில்  குழுமியி ருந்த மக்களிடையே  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் நிலை  அதிகாரிகள் வெளிப்ப டையாகவே தோன்றி அப் போராட்டத்தை தங்கள் நாடுகள் ஆதரிப்பதாக அறிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின்  சிறப் புப் பேராளர் பரோனஸ் ஆஸ்ட் டான் , அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் வேட்பாளர் மேக்கைன், யூரேசியா மற்றும் ஐரோப் பாவிற்கான அமெரிக்கத் தலைமைச் செயலாளர் விக்டோ ரியா நுலாண்ட்  உள்ளிட்ட  உயர் மட்ட அதிகாரிகள்  பன்னாட்டு சட்டங்களைப் பற்றி சட்டை செய்யாமல்  பேரணியில்  பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.
ஒரு உள் நாட்டுப் போராட்டம் வல்லரசுகளின்  பந்தயப் பொருளாக  மாறுவதை குறிக்கும் தொடக்கக் காட்சியாக அது அமைந்தது. இவர்கள்  மேற்குலக வல்லரசு நாடு கள்  ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தவுடன்  ஐரோப்பிய மைதானத்திலிருந்த மக்கள் கூட் டம் கீவ் மாநகர மன்ற அரங்கில் நுழைந்து அதனை கைப்பற்றிக் கொள்வதாக அறிவித்தது. அவ் வாறு நுழையும்போது காவல் துறையினரை எதிர்கொள்ள இம் மக்களிடையே சில குழுவினரின் கைகளில் எறி ஏவு கணை உள் ளிட்ட ஆயுதங்கள் வழங்கப் பட்டன.
சிரியாவிலும், லிபியாவிலும் என்ன நடந்ததோ அதையே உக்ரை னிலும் அரங்கேற்ற அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள் முனைந்து விட்டதை இது காட்டியது.
உக்ரைன் நாட்டில் வலுவான  ராணுவம் எதுவும் கிடையாது. ஆயினும்  தமது அரசின்  காவல் துறையைக் கொண்டே இப் போராட்டத்தை அடக்கிவந்த யான் கோவிச் பின்வாங்கத் தொடங் கினார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முன் முயற்சியில் போராடுகிற அமைப்புகளுக்கும் யான்கொ விச்சுக்கும்  பேச்சுவார்த்தை நடந்து  2013 பிப்ரவரி 16 அன்று  ஓர் ஒப் பந்தமும் ஏற்பட்டது.
தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான் என்றாலும் யான் கோவிச் பதவி விலக முன் வந்தார். அதிகாரப் பரவலாக்க அடிப் படையில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்ட இடைக் கால தேசிய அரசு நிறுவிக் கொள் ளவும், 2014 நவம்பர் அல்லது திசம் பரில்  தேர்தல் நடத்தவும்  ஒப்புக் கொண்டார்.
எதிர்க் கட்சியை சேர்ந்த 235 போராட்டக்காரர்களையும் விடு தலைசெய்ய ஒப்புக் கொண் டார்.
இந்த ஒப்பந்தத்தை இரசியாவும்  ஏற்றுக்கொண்டது. கீவ் நகர முற்று கையை விலக்கிக் கொள்வதாக போராட்டக் குழுவினர் தெரிவித்த னர். அமைதி திரும்பும் என்ற நம்பிக்கைப் பூத்தது.
ஆனால்  அமெரிக்க வல்லரசு இப்பிரச்சினை இத்தோடு முடி வடைவதை விரும்பவில்லை. அரசி யல் நோக்கர்கள் யாரும் எதிர் பாராத வகையில்  பிப்ரவரி 20 அன்று  மிகப் பெரும் போராட்டம்  மீண்டும் வெடித்தது.
காவல்துறை நடத்திய துப்பாக் கிச் சூட்டில் 20 பேர் இறந்தனர். இந்நிலையில் விடுதலை செய்யப் பட்டு வெளியே வந்த முன்னாள் பிரதமர் யூலியா தைலோசெங்கோ  மக்களிடையே தோன்றி  போராட் டத்தை தீவிரப்படுத்தும்படி அழைப்பு விடுத்தார். அதன் போர் வையில் ஆயுதம் தாங்கிய குழு வினர் உக்ரைன் பாராளுமன்றத்தை கைப்பற்றிக் கொண்டனர்.
யான்கோவிச் பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும் அவருக்கு பதிலாக நாடாளுமன்ற அவைத் தலைவர் அலக்சாண்டர் துர்கி னோவ் தற்காலிகக் குடியரசுத் தலை வராக நியமிக்கப்படுவதாகவும் அறி வித்தனர்.
ஆட்சிக் கவிழ்ப்பில் பதவி இழந்த யான்கோவிச் தப்பித்து இரசியாவில் அடைக்கலம் அடைந்தார்.
மறுகணமே இரசியா  தனது படைகளை உக்ரைன் நோக்கி குவித் தது. உக்ரைனின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கிய கிரீமியா  இரசியாவுக்கு ஆதரவாக திரும் பியது.  கிரீமியா நாடாளுமன்றம் உக்ரைன் ஆட்சி மாற்றத்தை  தாங்கள் ஏற்கவில்லை என்றும் தாங்கள் உக்ரைனிலிருந்து பிரிந்து  இரசியக் கூட்டரசில்  இணைந்து கொள்ளப் போவதாகவும் தீர்மானம் நிறை வேற்றியது. இரசியாவில் இணை வதா அல்லது கூடுதல் தன்னாட்சி யோடு உக்ரைன் நாட்டில் நீடிப் பதா என்பது குறித்து கிரீமியா தேசத்து மக்களின் கருத்து அறிய 2014 மார்ச் 16 அன்று  கிரீமியாவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
வல்லரசுகளின் போட்டிக்களமாக இவ்வாறு உக்ரைன் மாறியது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான ஆட்சி உக்ரைனிலும், ரசியாவுக்கு ஆதர வான நிலை கிரீமியாவிலும் என்று உக்ரைன் சிக்கல் ஓர் உயர் நிலையை அடைந்தது.
கிரீமியாவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் கிரீமியா இரசியாவில் இணைவது என்ற முடிவுக்கு ஆதரவான வாக்கு களே அதிகம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஏனெனில், கிரீமியாவில் வாழும் 15 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் இரசிய தேசிய இனத்தவர் ஆவர். அங்கு உக்ரைனியர்கள் 27 விழுக்காட்டினரே உள்ளனர்.
இதனால், உலக வல்லரசுக ளிடையே  பதட்டம் ஏற்பட்டுள் ளது.  கிரீமியாவில்  கருத்து வாக் கெடுப்பு நடத்துவதை தாங்கள் ஏற்க வில்லை என்றும், கருத்து வாக் கெடுப்பு நடந்து இரசியாவுடன் இணைவது என கிரிமிய மக்கள் முடிவு செய்தால் அதனை அங்கீ கரிக்க மாட்டோம் என்றும் வல்லர சுகள் கொக்கரிக்கின்றன.
இதற்கிடையில் மின்னல் வேகத் தில் படைகளை அனுப்பி  கிரீமிய  கருங்கடல் பரப்பை தனது கட்டுப் பாட்டுக்குள் இரசிய அதிபர் புடின் கொண்டுவந்து விட்டார்.
இதற்கு பதிலடியாக  இரசியா வுக்கு எதிராக  விசாக்கட்டுப் பாடு களையும்  சில வணிகக் கட்டுப்பாடு களையும்  விதிப்பதாக அமெரிக்க  குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அவரை பின் பற்றி இரசியாவுக்கு எதிரான பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என சில ஐரோப்பிய நாடுகள் சொல்லி வந்தாலும் ஐரோப்பிய நாடுகளிடையே இதில் ஒத்த கருத்து இல்லை.  ஏனெனில்  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்  எண்ணெய் மற்றும் எரிவளித் தேவைகளில்  ஏறத்தாழ 35 விழுக் காட்டை இரசியாவே நிறைவு செய்கிறது.
அதிலும் எரிவளிக் குழாய்கள் உக்ரைன் வழியாகவே செர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு வருகின் றன.  இதை ஈடு செய்யுமளவுக்கு  எண்ணெய் வழங்கும் நிலையில் அமெரிக்காவோ அல்லது அதன் சார்பு நாடுகளோ இல்லை. மறு புறம் இரசிய அதிபர் புட்டினின் நெருக்கமான முதலாளிகள் பலரும் அமெரிக்காவில் அல்லது அமெரிக்க நிறுவனங்களில்கணிசமாக  முதலீடு செய்துள்ளவர்கள் ஆவர் . ஒபாமா  விதித்துள்ள கட்டுப்பாடு அவர் களை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.
இன்னொருபுறம் பதவி நீக்கம் செய்யப்பட்டு இரசியாவில் தஞ்ச மடைந்துள்ள உக்ரைனின் குடியர சுத்தலைவர் விக்டர் யான் கோவிச் சுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றில் ஏராளமான சொத்து களும் நிறுவனங்களும் உள்ளன.
உக்ரைனிய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில்  இணைய விரும்புவதற்கு  அவர்களது தன்ன லமே முதன்மைக் காரணமாக அமைகிறது. மற்றபடி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால்  உக்ரை னுக்கு பெரிய இலாபம் ஒன்றும் இல்லை.  ஏனெனில் உக்ரைன் அடிப்படையில்  வேளாண்மை நாடு. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால்  அதன் கோதுமை ஏற்றுமதி கடும் பாதிப்பை சந்திக் கும். ஏனெனில் உக்ரைனின் கோதுமை ஏற்றுமதியில் ஏறத்தாழ பாதியளவு  இரசிய ஆதரவில் இயங்கும்  சுதந்திர அரசுகளின் பொது நலவாய அமைப்பு நாடு களுக்கே செல்கிறது.  இதற்கு சுங்கவரி விலக்கு உண்டு. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால் இந்த வாய்ப்பு மிகப்பெரும் அள வுக்கு மறுக்கப்படும்  இந்தக் கோது மையை  முழுவதும் ஐரோப்பிய சந்தையிலும்  விற்க முடியாது.
மறுபுறம் ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள்  உக்ரைன் சந்தையை  ஆக்கிரமிக்கும். இவற்றின் விளை வாக  உக்ரைன் நாடு ஆண்டுக்கு 2000 கோடி யூரோ  அளவுக்கு  இழப்பைத்தான் சந்திக்க வேண்டி வருமே தவிர பெரிதாக இலாபம் ஒன்றும் இல்லை . ஏற்கெனவே உக் ரைன் கிட்டத்தட்ட ஓட்டாண்டி ஆகிவிட்டது.  அந் நாடு 7500 கோடி டாலர் கடனில் சிக்கியுள் ளது.  அமெரிக்க மற்றும் ஐரோப் பிய வல்லரசுகளின்  குறி உக்ரைன் சந்தையல்ல. மாறாக ஐரோப்பிய  ஒன்றியத்தில் சேர்த்து பலவீனமான உக்ரைனை தங்களது சார்பு நாடாக மாற்றிக் கொண்டுவிட்டால் அதன் பிறகு உக்ரைனை தங்களது படைத் தளமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக வல்லரசுகள் கணக்குப் போடுகிறன.
தனது எல்லைப் புறத்தில் அமெரிக்க ஆயுத வலு  அதிகரிப்பது  பெரும் அச்சுறுத்தல் என்ற கணக் கிலேயே இரசியா களமிறங்குகிறது.
அதே நேரம்  உக்ரைன் சிக்க லைப் பயன்படுத்தி ஒரு போரில் ஈடுபடவும் இரண்டு முகாம்களுமே அணியமாக இல்லை.  கருத்து வாக் கெடுப்பில் கிரீமியா இரசியா வுடன் இணைவது என்று முடிவெடுத்து விட்டால் அதைத் தடுப்பதற்கு படையெடுக்கும்  நிலையில் மேற் குலக வல்லரசுகள் இல்லை.
ஆனால் உக்ரைன் நாடு  இரசி யாவிற்கும்  மேற்குலக நாடுகளுக் கும் இடையில் சிக்கிக் கொண்டு நீண்ட காலம் அமைதியற்ற இழு பறியில் இருப்பதற்கான ஆபத்து உள்ளது.
ஏனெனில் இரண்டு தரப்புமே  இரண்டு  வெவ்வேறு சர்வதேச ஒப் பந்தங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் காட்டுகின்றன.
”கருங்கடல் போர்க் கப்பல்கள் தொடர்பான  இரு நாட்டு பங்கீட்டு ஒப்பந்தம் ” என்ற ஒப்பந்தத்தை தன் தரப்புவாதமாக இரசியா முன் வைக்கிறது. உக்ரைனுக்கும்  இரசியாவுக்கும் இடையே  1997 இல் செய்துகொள்ளப்பட்ட  ஒப்பந் தமே  மேற்சொல்லும் ஒப்பந்தமா கும்.  இதன்படி  கருங்கடலில் உள்ள போர்க்கப்பல்களில் 80 விழுக்காடு இரசிய ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும் என்பதை  உக்ரைன்  ஏற்றுக் கொண்டது. மேலும்  இரசிய நலன்களுக்கு அச் சுறுத்தல் எதுவும் ஏற்பட்டால்  படை நகர்வு உள்ளிட்ட  அனைத் து வகை  முயற்சிகளுக்கும்  இரசியா வுக்கு இவ்வொப்பந்தம் உரிமை வழங்குகிறது.  இந்த ஒப்பந்தம்  ஐ.நா -வால் அங்கீகரிக்கப்பட்ட ஒப் பந்தம் ஆகும்.
தனது படை நகர்வுகளுக்கு இந்த ஒப்பந்தத்தையே இரசியா வாதமாக முன்வைக்கிறது.
மேற்குலக நாடுகளோ  1994 ல்  உக்ரைன், இரசியா அமெரிக்கா பிரிட்டன்  ஆகிய நாடுகளிடையே  கையெழுத்தான “புடாபெஸ்ட் பாதுகாப்பு வாக்குறுதி ஒப்பந்தம் “ என்ற ஒப்பந்தத்தைக் காட்டு கின்றன.  இந்த ஒப்பந்தம் உக்ரைன் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது  எனக் கூறியது.  அதுமட்டுமின்றி  உக்ரைனின்  தற்போதைய எல்லை வரையறுப்பை  மதிப்பதாக உறுதிக் கூறியது.  மேலும்,  தங்கள்  பாது காப்புக்கு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஒழிய உக்ரைன் நாட்டின் பிரதேச ஒருமைப் பாட்டிற்கோ  அரசியல் சுதந்திரத் திற்கோ  எதிரான ஆயுத நட வடிக்கை எதுவும் மேற்கொள்ளுவ தில்லை என உறுதிக் கூறியது.
இந்த ஒப்பந்தத்தையே தங்கள் தரப்பு வாதமாக அமெரிக்கா உள்ளிட்ட  மேற்குலக வல்லரசுகள் முன் வைக்கின்றன. இந்த ஒப்பந் தத்தை  இரசியா மீறிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றன.
எனவே  உக்ரைன் இழுபறி  இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதற்கான வழிமுறைகளையே இரண்டு தரப்பினரும் மேற் கொண்டு வருகிறனர்.
இந் நிலையில்  உக்ரைனின் இப் போதைய  சிக்கல்  தீருவதற்கு  கீழ் வருவன  முதன்மையானவை  என நாம் கருதுகிறோம் .
1)            முதலில்  அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் இரசியா  ஆகி யவை உக்ரைனில் தலையிடுவதை  நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இரு தரப்பும்  தங்களது படை வகை மற்றும் மறைமுக தலை யீடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  உக்ரைன்  மக்கள் அவர்களது சிக்கலை அவர்களே தீர்த்துக் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
2) மேற்குலக ஆதரவு ஆயுதக் குழுக்களின் பின்னணியில்  நடந் துள்ள ஆட்சி மாற்றத்தை  ஆட்சிக் கவிழ்ப்பு என உலக நாடுகள் உணர வேண்டும்.  2014 பிப்ரவரி 16 அன்று  உக்ரைனிய குடியரசுத் தலைவர்  விட்டர் யான்கோவிச்-க் கும்  எதிர்க் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி  அனைத்து தரப்பினரும் இணைந்த இடைக்கால தேசிய அரசு அமைத்துக் கொள்வதற்கும்  அவ் வொப் பந்தத்தில் அறிவிக்கப் பட்டபடி இருதரப்பாரும் ஏற்றுக் கொள் ளக்கூடிய நாளில்  தேர்தல் நடத்த வும்  ஐ.நா மேற்பார்வையில் உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
3) ஐரோப்பிய ஒன்றியத்தில்  இணைவதா அல்லது வேறு வகை முடிவு மேற்கொள்ளுவதா என்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும் இறையாண்மை அதிகாரம்  உக்ரைனியர்களுக்கே உண்டு என்பதை  ஐயத்திற்கு இட மின்றி உலக நாடுகள் ஏற்க வேண்டும்.
4) உருவாகும்  புதிய ஆட்சி எந்த முடிவையும் மேற்கொள்ள உரிமை படைத்தது. மறைமுக அழுத்தங்கள் உள்ளிட்ட  எந்த வகை வெளித்தலை யீடும் அதில் இருக்கக் கூடாது.
5) கிரீமியாவிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் மேற்கொண் டுள்ள அனைத்து  வகை படை நகர் வுகளையும் இரசியா திருப்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6) சுதந்திரமான, அமைதியான சூழ் நிலையில் கிரீமியா மக்கள்  ஐ.நா மேற் பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்.
7) அக் கருத்து வாக்கெடுப்பின் முடிவை உலக நாடுகள் ஏற்றுச் செயல் படுத்த வேண்டும்

0 கருத்துகள்:

கிழித்தெறியப்பட வேண்டிய அமெரிக்கத் தீர்மானம் - தோழர் கி.வெங்கட்ராமன்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்ற பெயரில் இந்த ஆண்டும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் முன்வைக்கப் பட்டுள்ளது.
2014 மார்ச் 3 அன்று ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் , பிரிட்டன், மொரிசியஸ், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகள் ஒரு வரைவுத் தீர்மானத்தை முன்மொழிந்தன. இதன் மீது விவாதம் நடந்து திருத்தங்கள் இருந்தால் செய்யப்பட்டு வரும் 26.03.2014 அன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் மேலோட்டமான ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டுத் தீர்மானம் ”சிறீலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்’’ என்று இருந்தது. இந்த ஆண்டு வரைவில் மேற்சொன்னவற்றுடன் ’மனித உரிமைகள்’ என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டுத் தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மற்றும் பொருத்தமான சிறப்புரிமை பெற்ற அதிகாரிகள் இலங்கைக்குள் இலங்கை அரசின் ஆலோசனையோடும் ஒப்புதலோடும் செல்லலாம் என்று இருந்தது. இந்தத் தீர்மானத்தில் அந்த வரிகள் இல்லை.
மற்றபடி கருதத்தக்க எவ்விதமான மேம்பாடும் இத்தீர்மானத்தில் இல்லை. ஆனால் மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளும், 13-ஆவது சட்டத்திருத்தத்தின் வரம்புக்குள்ளும் நிரந்தரமாக சிக்கவைக்கும் முன் மொழிவுகளே இத் தீர்மானத்தில் உள்ளன. தீர்மானத்தில் எந்த இடத்திலும் பாதிக்கப் பட்டவர்கள் ’தமிழர்கள்’ என்ற வாசகமே இல்லை!
‘இனம் அல்லது மதநம்பிக்கை வேறுபாடு எதுவுமின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுபட்ட நாட்டில் அமைதியாக உரிமையோடு வாழ்வது’ என் பது மட்டுமே வலியுறுத்தப்படுகிறது.
”மத ஒழுகலாறு மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்டோர் மீது கட்ட விழ்த்து விடப்படும் வன்முறை அதிகரித்துள்ளதைக் கண்டு இம்மன்றம் அதிர்ச்சி அடைகிறது’’ என்று தான் இத்தீர்மானவரைவு கூறுகிறது. அங்கு கூட ”தமிழ்ச் சிறுபான்மையினர்’’ என்ற சொற்கள் இல்லை.
தீர்மானம் நெடுகிலும் ’தமிழர்’ என்ற சொல்லே வராமல் கவனமாக பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
2013 செப்டம்பர் 21 அன்று மாகாணங்களுக்கு வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டதையும் பெருமளவு வாக்காளர்கள் அதில் கலந்து கொண்டதையும் வரவேற்பதாக அத்தீர்மானம் கூறுகிறது. அதே நேரம் தேர்தலையொட்டி நடை பெற்ற வன்முறைகள் அச்சுறுத்தல் போன்றவை குறித்து கவலை தெரிவிப்பதாக கூறுகிறது.
முத்தாய்ப்பாக ”சிறீலங்கா அரசாங்கம் பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் மற்றும் மனிதநேய சட்டம் ஆகியவை மீறப்படுவதாக சொல்லப்படுவனவற்றில் சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தி மீறல்களுக்கு பொறுப்பானவர் களை அவற்றுக்குப் பொறுப்பாளியாக்க வேண்டும்.’’ என்றும் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். என்றும், ”மனித உரிமை ஆணையருடைய அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளவற்றை செயல்படுத்த வேண்டும” என்றும், ”இலங்கையின் 13 ஆவது அரசமைப்புச்சட்ட திருத்தம் கோருவது போல் வடக்கு மாகாண மன்றத்திற்கும் அதன் முதலமைச்சருக்கும் ஆட்சி நடத்துவதற்கு தேவையான அதிகாரத்தையும் வளங்களையும் வழங்க வேண் டும்’’ என்றும் கூறுகிறது.
இறுதியாக ”இலங்கையில் நம்பகமான கருதத்தக்க விளைவுகளை உருவாக்கும் தேசிய நடவடிக்கைகள் செயல்படாமல் போனால் சுதந்திரமான நம்பகமான பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற ஆணையரின் பரிந்துரையை இம்மன்றம் வரவேற்கிறது. அதே நேரம் பொறுப்பேற்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தேசிய செயல்பாடுகளை மதிப்பிடுவதுடன் இலங்கையில் இருதரப்பாரும் மேற்கொண்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவைத்தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் 27ஆவது கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையையும் 28 ஆவதுக் கூட்டத்தில் எழுத்துப் பூர்வமானஅறிக்கையையும் அளிக்கு மாறு மனித உரிமை ஆணையரை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது’’ என்று கூறுகிறது.
கடந்த 2013 திசம்பரில் ஜெர்மனியில் கூடிய ” சிறீலங்கா குறித்த மக்கள் தீர்ப்பாயம்’’ அளித்த தீர்ப்புரையோ, அடுத்தடுத்து சேனல் 4 தொலைக்காட்சி எடுத்துக் காட்டி வரும் ஆதாரங்களையோ ஐ.நா மனித உரிமை மாநாடு திரும்பிப் பார்க்கவே இல்லை.
பிரேமன் தீர்ப்பாயம் தெளிவான ஆதாரங்களுடன் இலங்கையில் நடந்தது ”இனப்படுகொலை”தான் (genocide) இப்போது நடப்பதும் தமிழின துடைப்புதான் (ethnic cleancing) என்று பன்னாட்டு சட்டத்தின் வெளிச்சத்தில் தெளிவு பட கூறியிருக்கிறது.
சேனல் 4 தொலைக்காட்சி சிங்களப் படையாட்களின் கைப்பேசியின் வழி கிடைத்த படத் தொகுப்புகளை கொண்டே நடந்திருப்பது இன அழிப்புதான் என உறுதிபட கூறுகிறது.
இவற்றைக்கூட வேண்டாம், ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த ஆய்வுக்குழுவின் அறிக்கையைக் கூட அமெரிக்கத் தீர்மானம் சட்டை செய்யவில்லை. ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்த தாருஸ்மான் குழு இலங்கையில் நடந்திருப்பது போர்க்குற்றம் மற்றும் மனித குலத் திற்கு எதிரான குற்றம் என்று வரையறுத்துக் கூறியது.
ஆனால், அமெரிக்க வரைவுத் தீர்மானத்தில்நடந்திருப்பது போர்க் குற்றமென்றோ மனித குலத்திற் கெதிரான குற்றமென்றோ கூட வரையறுத்துக் கூறப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப் படவும் இல்லை.
இலங்கைத்தீவில் தொடர்ந்து பல்லாண்டுகளாக நிகழ்வது இன ஒதுக்கல், இன மோதல், இன அழிப்பு ஆகியவை தான்.
தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே வடக்கு கிழக்கு மக்களும் மலையக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் இன அழிப்புக்கு உள்ளானார்கள். இவற்றை யெல்லாம் முற்றிலும் மறைத்துவிட்டு பொத்தாம் பொதுவாக பன்னாட்டு மனித உரிமைச்சட்டம் மற்றும் மனித நேய சட்டம் மீறப் பட்டிருப்பதாகவும் அதிலும் மதச் சிறுபான்மையினர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் வரையறுப் பது முழு பித்தலாட்டம் ஆகும்.
இன அழிப்பு நடந்து ஐந்தாண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த ஐந்தாண்டுகளில் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து இனவதைக்கு உள்ளாகி வருவதையும், தமிழர் தாயகம் திட்டமிட்ட முறையில் சிங்கள் மயமாக்கப்பட்டு வருவதையும் ஐ. நா மனித உரிமை ஆணையரே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இச் சிக்கலை முற்றிலும் திரித்து இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது போதாதென்று இனக் கொலையாளிக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் அளிக்கப் படுகிறது. இராசபட்சே நம்பகமான உள் நாட்டு விசாரணை நடத்தி நிலைமையை மேம்படுத்த வேண்டுமாம். அவ்வாறு நம்பகமான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது இராசபட்சே நடவடிக்கை எடுக்கிறாரா என்று கண்காணித்து ஐ.நா மனித உரிமை ஆணையர் அடுத்த 2015 மார்ச்சில் அறிக்கை அளிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு மனித உரிமை மன்றம் மேல் முடிவு எடுப்பதைப் பற்றி ஆய்வு செய்ய லாம் என்கிறது தீர்மானம்.
ஏற்கெனவே ஐந்தாண்டுகள் கடந்து விட்ட நிலையில் இப்போது மேலும் காலம் கடந்துவது இனக்கொலை குறித்தத் தடயங்களை இராசபட்சே அரசு அழிப்ப தற்கே பயன்படும்.
இத் தீர்மானத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்து மேம்படுத்து வதற்கு ஒரு சிறு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இத் தீர்மானம் பாதிக் கப்பட்டது தமிழினம் என்று ஏற்க வில்லை.
நடந்தது இனப்படுகொலை என ஏற்பது இருக்கட்டும் 2008--2009 இலங்கையில் நிகழ்ந்தது போர்க் குற்றம் மற்றும் மனிதகுலத்திற்க்கு எதிரான குற்றம் என்று கூட ஏற்க வில்லை.
பன்னாட்டு விசாரணை என்பதை ஆண்டுக்கு ஆண்டு தள்ளிக் கொண்டே போகிறது.
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தினரை திரும்பப்பெற வேண்டும் என்று கோருவதோடு நின்று கொள்கிறது. சிங்கள மயமாக்கலை கண்டு கொள்ளவில்லை.
ஒன்றுபட்ட இலங்கை என்பதை கட்டாயப்படுத்துகிறது.
13 ஆவது சட்டத்திருத்தத் திற்குள் மொத்த சிக்கலையும் அமுக் கப்பார்க்கிறது.
கருத்து வாக்கெடுப்புக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் அடைக்க முயல்கிறது.
மொத்தத்தில் சில வார்த்தை விளையாட்டுகளின் ஊடாக இனக் கொலையாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானமே அமெரிக்கத் தீர்மானம் ஆகும்.
இலங்கை ஆட்சியாளர்கள் மீது மென்மையான சில குற்றச்சாட்டுகள் இத்தீர்மானத்தில் வைக்கப் படுவதைக் கூட இராசபட்சே விரும்பவில்லை. வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார். அவர் விரும்புவதெல்லாம் 2009 சூனில் நடந்தது போல் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் மேலும் ஒரு பாராட்டுத் தீர்மானம் தான். எனவே இத் தீர் மானத்திற்கு எதிராக பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து வலியுறுத்துகிறார்.
அமெரிக்கத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ள சூழலில் இந்தியாவின் முயற்சி என்ன என்பது கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.
அண்மையில் மியான்மரில் இராசபட்சேவை சந்தித்த மன்மோகன் சிங் வலியுறுத்தியது கவனம் கொள்ளத்தக்கது. இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் “வடக்கு மாகாணத்திலி ருந்து பெரும் தொகையான படை யினரை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அதைக் கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர் இராசபட்சே வடக்கு மாகாணம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரை இடம் பெறச்செய்ய அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்’’ என்று விளக்கினார்.
இதேதான் அமெரிக்க வரைவிலும் முன் வைக்கப்பட்டுள்ளது. 13- ஆவது சட்டத்திருத்தத்தின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரமும் நிதி ஆதாரமும் வழங்க வேண்டுமென்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பது இந்தியாவின் வாசகம் என ஐயுற இடமிக்கிறது . மோரீசியசின் வாயிலாக இந்தியா இதனை கொண்டுவந்திருக்கக் கூடும்.
இதைக் கூர்ந்து நோக்கினால் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இதில் உள்ள சதித்திட்டம் புரியும்.
இம் முன்மொழிவு, தமிழர்களிம் தாயகமான கிழக்கு மாகாணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. அதைச் சிங்கள மாகாண மாக எடுத்துக் கொள்கிறது. வடக்கு மாகாணம் பற்றி மட்டும் பேசுகிறது. கிழக்கு மாகாணத்திலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
இராசபட்சே கணிசமான படைக் குறைப்பு செய்துகொள்ள வேண்டும். 13 ஆவது சட்டதிருத்தத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண மன்றத்திற்கு சில அதிகாரங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய அரசின் செல்வாக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியினரை இலங்கை நாடாளுமன்ற அனைத் துக் கட்சிக் குழுவில் இணையச் செய்யலாம் என்பதே இந்த பஞ்சாயத்து.
இவ்வாறு செய்துவிட்டால் இலங்கை அரசின் சிங்கள மயமாக்கல் முயற்சிக்கு எந்த கேள்வி முறையுமிருக்காது.
சிங்களவர்களாக இருந்தால் என்ன? தமிழர்களாக இருந்தால் என்ன? எல்லோரும் இலங்கையர் தான் எனக் கூறி உலக அரங்கில் இதை ஏற்கச் செய்துவிடலாம்.
ஏனெனில், 13 ஆவது திருத்தத்தில் நிலம் தொடர்பான அதிகாரம் மாகாண அரசுக்கு வருவதற்கான வழியில்லை. இலங்கையின் ஒற்றை ஆட்சி முறை கூட்டாட்சியாக மாற்றப்படுவதற்கும் வழியில்லை.
இலங்கை ஒரே நாடு என்று இந்தியா வலியுறுத்துவதைத்தான் அமெரிக்கத் தீர்மானமும் வலியுறுத்துகிறது.
இலங்கை அரசோடு பிணக்கு காட்டிவரும் வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இராசபட்சே அரசு அமைக்கும் குழுக்களில் இணைத்துக் கொண்டு விட்டால் ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களை இணைப்பது முற்று முழுதாகிவிடும். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு சிற்சில நிதி ஆதாரங்களை வழங்கிவிட் டால் போதும்.
அதற்கு பிறகு கருத்து வாக்கெடுப்பு என்ற கோரிக்கைக்கே வழி இல்லாமல் போய்விடும். ஒரு வேளை கருத்து வாக்கெடுப்பை பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக் கொள் ளக்கூடிய நிலை எதிர்காலத்தில் வந்தால் அதற்குள் சிங்களமய மாக்கல் முழுமை பெற்றிருக்கும். அச்சூழலில் கருத்து வாக்கெடுப்பு நடந்தாலும் தமீழத்திற்கு ஆதர வான முடிவு வரவாய்ப்பில்லை.
இது தான் இந்தியாவின் சதித்திட்டம். அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்றுக்கொண்டுள்ள திட்டமும் இதுதான்.
எனவே, தமிழர்கள் கீழ்வரும் மூன்று கோரிக்கைகளில் தெளிவாக, உறுதியாக இருக்கவேண்டும்.
1) இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அங்கு இப்போதும் தொடர்வது தமிழின அழிப்பு என்பதை பன்னாட்டுச் சமூகம் ஏற்க வேண்டும். இக்குற்றச் சாட்டின் மீது இராசபட்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் மீது தற்சார்பான பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்.
2) இலங்கைத் தீவுக்குள்ளும் உலகின் பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களிடையே தேசியத் தன்னுரிமை அடிப்படையில் தமிழீழம் குறித்த கருத்து வாக்கெடுப்பு ஐ.நா மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்
3) உடனடியாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில்ஐ.நா மேற்பார்வையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டு அதன் மேற் பார்வையில் துயர் துடைப்பு, நில உரிமை மீட்பு, வாழ்வுரிமை மீட்பு, பண்பாட்டு உரிமை மீட்பு, ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழர்களின் போராட்டம் அமைய வேண்டும்.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத்தீர்மானம் மேற் சொன்ன அடிப்படைகள் அனைத்திற்கும் நேர் எதிரான தீர்மானம் ஆகும் .
எனவே இத் தீர்மானம் ஈழத் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டும் நீண்ட பயணத்தில் ஒரு படி முன்னேற்றம் என்று பார்க்கிற அழிவுப் பார்வையை ஒரு சிறிதும் ஏற்கக் கூடாது.
தமிழினம் குறிப்பாக தமிழினத்து இளையோர் இந்த ஐ.நா மனித உரிமை மன்ற அமெரிக்கத் தீர்மானத்தை கிழித் தெறிய வேண்டும்.

0 கருத்துகள்:

ஏழு தமிழர் விடுதலை சட்டப்படி சரியே - தோழர் கி.வெங்கட்ராமன்

இராசீவ் காந்திக் கொலைவழக்கில் தண்டிக்கப் பட்டு கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபட்பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்து கடந்த 19.02.2014 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதா அறிவித்தார்.
தமிழக அரசின் இம்முடிவு கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முதல் நாள் 18.02.2014 அன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்தது. இம் மூவரின் கருனை மனுவை ஆய்வு செய்ய அவசியமற்ற அளவில் நீண்டகாலம் எடுத்துக் கொண்டு இந்தியக் குடியரசுத்தலைவர் நிராகரித்து ஆணையிட்டது செல்லாது என்று இத் தீர்ப்பு கூறியது. இதனடிப் படையில் இம் மூவரின் மரணதண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.
இத் தீர்ப்புக்கு தமிழகமெங்கும் கிடைத்த உணர்ச்சிகரமான வரவேற்பையும், இவ்வழக்கில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக் கையையும் ஆய்வு செய்தபிறகே தமிழக அரசு இம் முடிவுக்கு வந்தது.
ஆனால், காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் இராகுல் காந்தி இதனைக் கடுமையாக எதிர்த்தார். தூக்குமர நிழலிலும், சிறைக்குள்ளும் 23 ஆண்டுகள் கழித்தபிறகே இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்பதையும், அதுவும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய சூழலில் இந்த விடுதலை உத்தரவு வந்திருக்கிறது என்பதையும் மறந்து இராகுல் காந்தி தெரிவித்துள்ள எதிர்ப்பு அவரது பழி வாங்கும் வன்மத்தையே காட்டுகிறது.
இந்த வன்ம எதிர்ப்புக்கு இந்திய அரசு துணை போனது. இந்தியப் பேரரசின் இளவரசன் குரலே ஆட்சியின் குரலாக எதிரொலித்தது. ”தமிழக அரசு இந்தியாவின் ஆன்மாவுக்கே துரோகம் இழைத்து விட்டது’’ என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொக்கரித்தார்.
எசமான் காட்டிய திசை நோக்கி பாயும் பிராணிகளைப் போல காங்கிரசு அமைச்சர்களும், தலை வர்களும், தமிழக அரசின் மீது பாய்ந்தனர்.
இராசீவ்காந்தி கொலையில் தொடர்புடைய இந்த ஏழுபேரை விடுதலை செய்வது தவறான முன் எடுத்துக்காட்டை ஏற்படுத்திவிடும் எனக்கூறி பாரதிய சனதா கட்சி நாடாளுமன்றக் குழுத்தலைவர் அருண் ஜெட்லி கண்டித்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ”இந்த ஏழு பேரின் விடுதலை பயங்கரவாதி களுக்கு ஊக்கமளித்துவிடும்’’ என்று தீக்கக்கினார்.
இதற்கு முன் எவ்வளவோ கொலைவழக்குகளில் வாழ்நாள் சிறையாளிகள்தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு. அப்போதெல்லம் அதுபற்றி கருத்து சொல்லாதவர்கள் இராசீவ் காந்தி கொலை என்று வந்த பிறகு துள்ளிக் குதிக்கிறார்கள். சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 14 இவர்களால் சுக்கு நூறா கக் கிழித்தெறியப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் ‘தேசத்தந்தை‘ என்று இவர்களால் போற்றப்படும் காந்தியாரின் கொலையில் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த நிலையிலேயே 1964 -இல் கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கப் பட்டதை வசதியாக மறைக்கிறார் கள். அதுவும் கோபால் கோட்சேயின் தண்டனை குறைப்பு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித் தப்பின்னும் மராட்டிய மாநில அரசால் அவர் விடுதலை செய்யப் பட்டார் என்ற அப்பட்டமான உண்மையை இவர்கள் கூச்சலில் அமுக்கப்பார்க்கிறார்கள். ஒரு வே ளை மகாத்மா காந்தியை விட இராசீவ் காந்திதான் மேலானவர் என்று இவர்கள் கருதிவிட்டார்கள் போலும்.
கட்சி வேறுபாடின்றி வட நாட்டுத் தலைவர்கள் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக எழுப்பும் கூச்சல் ஓர் உண்மையை உணர்த்து கிறது. இந்தியாவின் மனித உரிமைக் கொள்கைகள் எல்லாம் தமிழர் களுக்கு செல்லுபடியாகாது என் பதே அந்த உண்மை.
இது ஒருபுறம் இருக்க இச் சிக்கலில் சட்ட நிலைமை என்ன என்று ஆய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.
ஏழு தமிழர் விடுதலைகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையை எதிர்த்து 20.02.2014 அன்று இந்திய உள்துறை அமைச் சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், இச்சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் தண்டனைக் குறைப்பு வழங்கி வாழ் நாள் சிறை யாளிகளை விடுதலை செய்வது குறித்து கடந்த 2013 பிப்ரவரியில் இந்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பி யுள்ளக் கடிதம் மேற்கோள் காட் டப்பட்டு மீண்டும் வலியுறுத்தப் பட்டது.
இந்தியக் குற்றவியல் தண்ட னைச் சட்ட விதி 432 (2 )ன் படி இந்த எழுபேரின் தண்டனையை இறுதிசெய்த உச்ச நீதிமன்ற ஆயத் திற்கு தலைமைத்தாங்கிய நீதிபதி யின் விரிவான கருத்துரை பெறப் பட்ட பிறகே மாநில அரசு தண்ட னைக்குறைப்பு முறையை மேற் கொள்ள முடியும் என்றும் உள் துறை அமைச்சகக் கடிதத்தில் குறிப் பிடப்படுகிறது. இதற்கு ஆதரவாக சங்கீத் - எதிர்- அரியானா மாநில அரசு தீர்ப்பிலிருந்து ஒரு பத்தியும் எடுத்துக்காட்டப்படுகிறது.
தொடர்புடைய ஏழுபேரிடம் கோரிக்கை மனு பெறப்பட்டு அதன் மீது ஒரு ஆய்வுக்குழு நியமிக்கப் பட்டு அதன் முடிவு பெறப்பட்ட பின்னரே விடுதலை என்ற முடிவை மாநில அரசு மேற்கொள்ள முடி யும் என்றக் கருத்தும் கூறப்படுகிறது.
இக்காரணங்கள் எதுவும் சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. மேற் கண்ட காரணங்களைக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக பெறப் பட்டுள்ள இடைக்காலத்தடை நீடிக்க வாய்ப்பில்லை என்பதே நமது கருத்து.
குற்றவியல் நடைமுறை சட்ட விதி 432 (1) மற்றும் 433 (கி) ன் படி யான மாநில அரசின் தண்ட னைக் குறைப்பு அதிகாரம் தற்சார் பானது, தங்கு தடையற்றது. குற்ற வியல் சட்ட விதி 435 இராசீவ் காந்தி கொலைவழக்கில் செயல்பட முடி யாதது . நளினி, சாந்தன், முரு கன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மரணதண்டனையை உறுதி செய் தும் மீதி உள்ள மூவருக்கு வாழ்நாள் தண்டனை அளித்தும் நீதிபதி கே.ட்டி தாமஸ் தலைமையிலான ஆயம் அளித்தத் தீர்ப்பு இதனை தெளிவுபடுத்தும். என்ற போதிலும் ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர் வோடு தமிழக அரசு 435 (1) கீழ் மத்திய அரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
இராசீவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் தொடுக்கப் பட்டிருந்தாலும் இதன் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவ் வழக்கிற்கு தடா சட்டம் பொருந் தாது என்று முடிவு அறிவித்துதான் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.
அவ்வாறு விடுதலை செய்யப் பட்டவர்களில் 14 பேர் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் தடைச் சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு, விசார ணைக் காலத்தில் சிறையிலிருந்த ஆண்டுகளையே அத்தண்டனைக் காலமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
ஆயுதச்சட்டத்தின் படியான சிறைத்தண்டனையே மூன்றாண்டு முதல் அதிகபட்சம் ஏழாண்டுவரை தான். இதில் இராசீவ்காந்தி கொலைவழக்கின் ஆயுதச் சட்ட பிரிவில் விதிக்கப்பட்டது மூன் றாண்டு சிறைதண்டனையே. வெடி பொருட்கள் தடைச் சட்டம் வழங்கும் அதிகபட்ச தண்டனையே இரண்டாண்டு சிறைதான். இராசீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் அதிகாரத்திற்குட் பட்ட சட்டங்கள் இவைதாம்.
இப்போது சிறையில் உள்ள ஏழுபேரும் ஏற்கனெவே விடுதலை செய்யப்பட்ட 19 பேரில் 14 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட் பட்ட மேற்கண்ட சட்டங்களின் படி உள்ள அதிகபட்ச தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் ஆவர்.
இந் நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங் களின் கீழ் முழு தண்டனையையும் அனுபவித்து முடித்துவிட்டார்கள் எஞ்சி இருப்பது இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழுள்ள கொலைக் குற்றத்திற்கான தண்ட னைதான்.
மத்திய அரசாங்கத்தின் சட்டம் எதுவும் மாநில அரசின் தண்ட னைக் குறைப்பு அதிகாரத்திற்கு குறுக்கே வர முடியாது. 432 -ன் கீழ் உள்ள மாநில அரசின் தங்கு தடையற்ற முழு அதிகாரத்தின் படியே இவர்கள் விடுதலை செய்யப் படுகிறார்கள்.
இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுக் குழு நடத் தியது என்பதற்காகவே 435 (1) -ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பி யுள்ளது.
435 (1) -ன்படி மத்திய அரசுடன் கருத்து கேட்டு கலந்து ஆலோசிப் பது அடிப்படையில் ஒரு சட்ட சடங்கு தானே தவிர மத்திய அரசின் கருத்து மாநில அரசைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில், இச் சட்டப்பிரிவு ”கலந்தாலோசிப்பை’’ (consultation) தான் கோருகிறதே தவிர மத்திய அரசின் “ஒப்புதலை” (consent) வலியுறுத்த வில்லை.
435(1) மற்றும் 435 (2) ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் இந்த வேறுபாடு துல்லியமாகத் தெளி வாகும் .
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டனை வழங்கப்பட்டு, அத் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலைசெய்வதாக மாநில அரசு முடிவு செய்தால் தான் அவ்வாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசின் கருத்து மேலோங் கும் நிலை இருக்கும். இதைத் தான் 435 (2) கூறுகிறது.
435 (1) “ கலந்தாலோசிப்பதையும்” (consultation) 32 (2) “ஒப்புதல் (consent) வலியுறுத்துகிறது என்பதைப் பார்த்தாலே இவ்விரண்டு உட் பிரிவுகளின்வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
மேலே சுட்டிக்காட்டியபடி மத்திய அரசு சட்டப்படி வழங்கப் பட்ட தண்டனை முழுவதையும் இந்த ஏழுபேரும் சிறையில் கழித்து விட்டார்கள். இத் தண்டனையில் குறைப்பு ஏதும் வழங்குவதாக மாநில அரசு முடிவு செய்யவில்லை. 435(2) இங்கு எழாது. வழக்கை மத்திய அரசின் புலனாய்வுக்குழு விசாரித்தது என்றக் காரணத்திற்காகவே ஒரு கூடுதல் எச்சரிக்கைக்காக 435 (1) -இன் படி மத்திய அரசின் கருத்துக் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மீது மத்திய அரசு எந்த விதக் கருத்துக் கூறினாலும் அது தமிழக அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தில் தலையிடும் சட்டத் தகுதி உடையது அல்ல.
இந்த ஏழுபேரில் தூக்கு தண் டனை உறுதி செய்யப்பட்டு, பிறகு வாழ்நாள் தண்டனையாக தண் டனை குறைப்பு பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்குபேரும் 433 (கி) -ன் படி 14 ஆண்டுகள் சிறைத் தண்ட னையைக் கடந்து விட்டவர்கள் ஆவர்.
இந்திய தண்டனைசட்டம் 302ன் கீழ் தண்டனைப் பெற்றவர் கள் அதாவது மரண தண்டனை பெற்று வாழ்நாள் தண்டனையாகக் குறைப்பு பெற்றவர்கள். அல்லது மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் சிறைத்தண்டனை பெற் றவர்கள். 14 ஆண்டுகள் கழிக்கும் முன்பாக விடுதலைக் கேட்டு மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்பதே 433 (கி) விதிக்கும் நிபந்தனையாகும். இந்த நிபந்தனை அடிப்படை யிலேயே காந்தியார் கொலை வழக்கில் கோபால் கோட்சே 15 ஆண்டுகள் 8 மாதம் சிறையிலிருந்த பிறகு வாழ்நாள் சிறைத் தண்ட னையிலிருந்து மராட்டிய மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
23 ஆண்டுகள் தங்கள் வாழ்க் கையின் துடிப்புமிக்க காலத்தை சிறையில் கழித்த இந்த ஏழுபேரை இனியும் தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு மனித நேயத்தின்பால்பட்டது என் பது மட்டுமின்றி அண்மையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலை மையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சுட்டிக் காட்டியதற்கு இசைவானதும் ஆகும்.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 432(7) தண்டனைக் குறைப்பு வழங்க பொருத்தமான அரசாங்கம் (appropriate government) பற்றிப் பேசு கிறது.
ஒன்றிய அரசின் நிர்வாக அதி காரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனைக்குறைப்பு குறித்து முடி வெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என 432 (7) (a) கூறுகிறது. பிற எல்லாவழக்குகளிலும் மாநில அரசுகளின் தண்டனை குறைப்பு அதிகாரமே செல்லும் என்று 432 (7) (தீ) வரையறுக்கிறது. இரண்டு இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுகிறது.
இதில் எந்த இடத்திலும் மத்திய அரசாங்கத்தின் கருத்தே மேலோங் கும் என்று சொல்லப்படவில்லை. எனவே தமிழக அரசின் முடிவின் மீது இந்திய உள்துறை அமைச்சகம் எந்த வகையிலும் ஆணை செலுத்த முடியாது.
இந்திய உள்துறை அமைச்சகம் 2013 பிப்ரவரியில் அனுப்பியக் கடிதத்திலும், இப்போது அனுப்ப பட்டுள்ள கடிதத்திலும் இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவு 432 (2) மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப் படுகிறது.
432 (2) கீழ்வருமாறு கூறுகிறது.
“தண்டனை நிறுத்தம் அல்லது தண்டனை குறைப்பு குறித்து எப்போதெல்லாம் பொருத்தமான அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கப் படுகிறதோ அப்போதெல்லாம், பொருத்தமுடைய அரசாங்கம் விண்ணபித்தவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கிய நீதிபதியிடம் கருத்துக் கேட்கலாம். விண்ணப் பித்தவரின் கோரிக்கையை ஏற்று தண்டனைக் குறைப்பு வழங்க லாமா அல்லது அக்கோரிக்கையை நிராகரிக்கலாமா என்றக்கேள்வி நீதிபதியிடம் முன்வைக்கபட வேண்டும். அவ்வாறான சூழலில் தொடர்புடைய நீதிபதி காரண காரிய விளக்கங்களுடன் தனது கருத்தை எழுதி அவ்வழக்கு குறித்த நீதிமன்ற ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்” .
ஏழு தமிழர் விடுதலைப் பிரச்சினையை உற்று நோக்கினால் 432(2) உறுதியாக செயல்பட முடியாது என்பது தெளிவாகும். தண்டனை பெற்றவர் தண்டனைகுறைப்பு கோரி மாநில அரசிடம் விண்ணப்பம் அளித்தபிறகு எழும் சூழல் குறித்து 432 (2) விவாதிக்கிறது.
ஆனால், ஏழுதமிழர் விடுதலையில் செயல்பட்டிருப் பதோ 432 (1) என்ற பிரிவு. மாநில அரசு எப் போது வேண்டுமானாலும் (ணீt ணீஸீஹ் tவீனீமீ) நிபந்தனை இன்றியோ அல் லது நிபந்தனை விதித்தோ (without conditions OR upon any conditions) தண்டனைகுறைப்பு வழங்கலாம் என கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது.
 இந்திய உள்துறை அமைச்சகம் சுட்டிகாட்டும் சங்கீத் - எதிர்-- அரியான மாநில அரசு தீர்ப்பிலும் அரசாங்கத்தின் இந்த நிர்வாக அதிகாரத்தின் கட்டற்றத் தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது.
432 (1) ன் படி சிறையாளிகளின் விண்ணப்பத்தை பெற்றோ பெறா மலோ மாநில அரசு தண்டனைக் குறைப்பு அளிக்கலாம் என்பது தெளிவு.
ஆய்வுக்குழு நியமிப்பது என்ப தெல்லாம் மாநில அரசு தனது நிர்வாக வசதிக்காக, வழக்கின் தன் மையையும் தண்டனை பெற்றவரின் சிறை நடத்தையையும் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடே தவிர, அதில் சட்டக்கட்டாயம் எதுவும் இல்லை. அவ்வாறு அமைக்கப்படும் ஆய்வுக்குழுவின் பரிந்துரையை அப்படியே ஏற்க வேண்டிய சட்டக் கட்டாயமும் மாநில அரசாங்கத்திற்கு இல்லை. . எந்த நிபந்தனையும் இன்றி (without conditions) எப்போது வேண்டுமானாலும் (at any time) என 432 (1) கூறுவதை கவனித் தால் இது புரியும்.
432 (2) -ன் படி மாநில அரசு இந்த ஏழுபேரின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற ஆயத்திற்கு தலைமைத் தாங்கிய நீதிபதி கே.ட்டி.தாமசிடம் கருத்துக் கேட்பது கட்டாயமா என்பது அடுத்து கவனிக்கவேண்டியது ஆகும். சிறையாளியின் தண்டனை குறைப்பு விண்ணப்பம் வந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையைப் பற்றியே 432 (2) பேசுகிறது.
இங்கு சிறையாளிகளின் விண்ணப்பம் எதுவும் பெறாமல் தமிழக அரசு 432 (1) படி தன்னிச்சையாக முடிவெடித்திருப்பதால் 432 (2) செயலுக்கே வராது.
மேலும், தண்டனையை உறுதி செய்த அமர்வின் தலைமை நீதிபதி யிடம் “கருத்துக் கேட்கலாம்’’ (may) என்றுதான் கூறுகிறது. சங்கீத் -எதிர் - அரியானா மாநில அரசுத் தீர்ப்பில் இதனை “கேட்க வேண் டும்’’ (must) என்று விளக்கமளித் திருப்பது விவாதத்திற்குறியது. 432 (2) -இன் நேரடிக் கருத்தை இந்த விளக்கம் தெளிவாக்குவதாக இல்லை.
 தண்டனையை உறுதிசெய்த அமர்வுக்கு ”தலைமை தாங்கும் நீதிபதி” (presiding judge) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. நீதிபதி கே.ட்டி தாமஸ் தண்டனை வழங்கிய ஆயத் திற்கு தலைமை தாங்கிய நீதிபதியே அன்றி “தலைமை தாங்கும்’’ நீதிபதி இல்லை. அதாவது நீதிபதி கே.ட்டி தாமஸ் இப்போது பதவியில் இல்லை. ஓய்வுபெற்று விட்டார்.
இதே போன்றதொரு கேள்வி புல்லார் வழக்கிலும் எழுப்பப் பட்டது. புல்லாருக்கு மரணதண்ட னையை உறுதிசெய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமைதாங்கிய நீதிபதிஜெ.பி.ஷா கூறிய விளக்கம் இங்கு கவனம் கொள்ளத்தக்கது.
அன்றைய அமர்வின் தலைமை நீதிபதி என்ற வகையில் புல்லார் தண்டனைக் குறைப்பு குறித்து ”உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது’’ நான் இப்போது பதவியில் இல்லை. என்னிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்ய வேண்டியதில்லை 432(2) இவ்வழக் கில் செயல்படாது’’ என்று ஜெ.பி. ஷா கூறினார்.
நீதிபதி கே.ட்டி தாமசுக்கும் இது பொருந்தும்.
தனிப்பட்டமுறையில் கே.ட்டி தாமசைக் கேட்டாலும் தமிழக அரசின் முடிவை அவர் ஏற்கவே செய்வார் ஏனெனில் பேரறிவாளன் குறித்த “உயிர்வலி’’ ஆவணப் படத்தில் நீதிபதி கே.ட்டி தாமசின் கருத்து பதிவாகி இருக்கிறது. “இவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம். ஏன்? இவர்களுக்கு விடுதலையே வழங்கலாம்’’ என்று நீதிபதி கே.ட்டி.தாமஸ் கூறுகிறார்.
எனவே எப்படி பார்த்தாலும் ஏழு தமிழர் விடுதலைகுறித்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு சட்டத்தின் பார்வையில் மிகச்சரியானது. இராகுல் காந்தியின் கூச்சலுக்கு இணங்க இந்திய அரசு எழுப்பியுள்ள எதிர்ப்புகள் அனைத் துமே சட்ட மீறல்கள் ஆகும். இவற்றைப் பொருட்படுத்தாது தமிழக அரசு ஏழுதமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும்.
இதற்கு குறுக்கே வந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தடை நீடிக்க வாய்ப்பில்லை என்பதே நமது கருத்து.
ஒரு வேளை உச்ச நீதி மன்றம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஏழு தமிழர் விடுதலைக்கு ஆணையிட தாமதம் செய்தாலோ, தடுமாறினாலோ, தமிழக அரசு அதற்காகத் தயங்க வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 இன்படி இவர்களின் விடுதலைக்கு உறுதியான ஆணையிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏழு தமிழர் விடுதலை முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது.

0 கருத்துகள்: