இன்னுமொரு உள்நாட்டுச் சிக்கல் உலக
வல்லரசுகளின் பகடைக்காயாக மாறியுள்ளது. எகிப்து, தாய்லாந்து, லிபியா,
சிரியா ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது உக்ரைன் நாட்டுச் சிக்கல் உலக
வல்லரசுகளின் கைகளில் ஆதிக்கப் போட்டிக்கான பகடைக்காயாக மாறிவிட்டது.
சோவியத்
ஒன்றியத்திலிருந்து பிரிந்த சில நாடுகள் ‘சுதந்திர நாடுகளின் பொதுநலக்
கூட்டமைப்பு’ என ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் இறை யாண்மையை
பாதுகாத்துக் கொண்டே இரசியக் கூட்டரசுடன் வணிக உறவுகளையும் , அரசியல்
நட்புறவையும், பேணிவருகின்றன.
ஆனால்
உக்ரைன் அது தனி நாடாக உருவெடுத்ததிலிருந்து உலக வல்லாதிக்க முகாம்களில்
எந்தப் பக்கம் போவது என்று குழம்பிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றுக் காலம்
தொட்டு உக்ரைனுக்கும் இரசியாவுக்கும் இருந்த உறவு நெருக்கமான ஒன்று.
இரசியப்
புரட்சி, முதல் உலகபோர் ஆகியவற்றைத் தொடர்ந்து உக்ரைன் சோவியத்
ஒன்றியத்தில் இணைந்த இறையாண்மையுள்ள குடியரசாக விளங் கியது.
இக்குடியரசின் இரசிய உறவு சில தனித்தன்மைகளைக் கொண்டது.
இரசியக்
கூட்டரசின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கிய கிரீமியா - குருசேவ் ஆட்சி
காலத்தில் 1954ல் உக்ரைன் குடியரசோடு இணைக்கப்பட்டது. தமது இரசிய இன
மேலாண்மையை உறுதி செய்து கொள் வதற்கான குருசேவின் சூழ்ச்சி ஏற்பாடே இது
என்று இதனை திறனாய்வு செய்வோரும் உண்டு.
புவியியல்
வழியில் உக்ரைன் ஐரோப்பாக் கண்டத் தில் உள்ளது. இந்நிலையில் கிழக்கு
ஐரோப்பிய நாடு களான எஸ்டோனியா, லித்துவேனியா ஆகியவை போன்று உக்ரைனை
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைப்பதற்கான முயற்சி மேற்குலக நாடுகளின்
தரப்பிலும் உக்ரைன் ஆட்சியாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பிய
ஒன்றியத்தின் ‘இணைப்பு உரிமை கொண்ட’ நாடாக உக்ரைனை இணைத்துக் கொள்ளும்
முயற்சிகள் தீவிரம் பெற்றன.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் முழு உறுப்பு நாடாகவும் இல்லாமல் எதிர்காலத்தில் உறுப்புரிமை
வழங்கப்படக் கூடிய நிலையே ”இணைப்புரிமை “ணீssஷீநீவீணீtவீஷீஸீ” எனப்படும்.
ஐரோப்பிய
ஒன்றியத்தில் இணைவதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து உக்ரைன் ஆட்சி
யாளர்களிடையேயும் அரசி யல் கட்சிகளிடையேயும் எதிரும் புதிரு மான கருத்துகள்
அண்மைக் கால மாக தீவிரமாக விவாதிக்கப் பட்டு வருகின்றன.
உக்ரைன்
குடியரசுத்தலைவர் விக்டர் யான்கோவிச் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு
இணைப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முடிவு செய்து அறிவித்தார்.
ஆனால் கடந்த 2013 நவம்பர் 21 அன்று தமது முடிவை மாற்றிக் கொண்டு ஐரோப்பிய
ஒன் றியத்தில் இணைவது என்ற முடிவி லிருந்து தமது அரசு பின் வாங்குவ தாக
அறிவித்தார்.
இது எதிர்க்கட்சிகளிடையேயும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகளிடையேயும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின.
அடுத்த
நாளிலேயே உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெறத் தொடங்
கின. யான்கோவிச் ஆட்சியின் சர்வாதி கார அணுகுமுறை, அளவு கடந்த ஊழல்
ஆகியவை ஏற்கெனவே மக் களிடையே பெரும் எதிர்ப்பை ஏற் படுத்தி வந்தன. கோதுமை
ஏற்று மதியில் முதல் நிலை நாடாக விளங் கும் இயற்கை வளம் மிக்க அமைதி யான
உக்ரைனின் செல்வாதா ரங்கள் விக்டர் யான்கோவிச் குடும் பத்தினர் மற்றும்
அவருக்கு நெருக்க மான ஒரு ஆட்சிக் கும்பலால் ஊழல் வழிகளில் குவிக்கப் பட்டி
ருந்தது . யான்கோவிச்சுக்கு ஐரோப் பிய நாடுகள் எங்கும் பல்லாயிரம் ஏக்கர்
நிலங்களும் வேறு பல சொத் துகளும் இருந்தன. கணக்கில் வராத கருப்புப் பணத்தை
பல நாட்டு வங்கிகளில் இரகசியக் கணக்கு களில் அவர் பதுக்கி வைத்திருப்ப தாக
குற்றச் சாட்டுகள் உண்டு.
இவை அனைத்தும் சேர்ந்து யான்கோவிச் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெருந்திரளான மக்களை இணைத்தது.
யான்கோவிச் ஆட்சி கீவ் நகரில் திரண்ட மக்கள் மீது கொடும் அடக்கு முறையை ஏவியது.
இப்போராட்டங்களுக்கு
தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் பிரதமர் யூலியா தைனாசங்கோ
அம்மை யாரை யான் கோவிச் அரசு சிறையில் தள்ளியது. இந்த தைனோசங்கோவும் இலேசு
பட்ட வர் அல்லர். இவரும் பல்லா யிரம் கோடிக்கு அவர் ஆட்சியில் இருந்த போது
சொத்துகள் குவித்தவர்தான்.
நவம்பர்
22.2013 அன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற ஒரு சிறுவன் காவல்
துறை யால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டக் காட்சி முக நூல் களின்
வழியாக பரவியது. இது உக்ரைன் மக்களிடையே கடும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது. திசம்பர் 1 ஆம் நாள் கீவ் நகரில் நடைபெற்ற பேரணியில்
மூன்று இலட்சம் மக்கள் பங்கேற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கீவ்
நகரின் ”ஐரோப்பிய மை தானம் ” என்றத் திடலில் குழுமியி ருந்த மக்களிடையே
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் நிலை அதிகாரிகள் வெளிப்ப
டையாகவே தோன்றி அப் போராட்டத்தை தங்கள் நாடுகள் ஆதரிப்பதாக அறிவித்தனர்.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் சிறப் புப் பேராளர் பரோனஸ் ஆஸ்ட் டான் , அமெரிக்காவின்
முன்னாள் குடியரசுத்தலைவர் வேட்பாளர் மேக்கைன், யூரேசியா மற்றும் ஐரோப்
பாவிற்கான அமெரிக்கத் தலைமைச் செயலாளர் விக்டோ ரியா நுலாண்ட் உள்ளிட்ட
உயர் மட்ட அதிகாரிகள் பன்னாட்டு சட்டங்களைப் பற்றி சட்டை செய்யாமல்
பேரணியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.
ஒரு
உள் நாட்டுப் போராட்டம் வல்லரசுகளின் பந்தயப் பொருளாக மாறுவதை
குறிக்கும் தொடக்கக் காட்சியாக அது அமைந்தது. இவர்கள் மேற்குலக வல்லரசு
நாடு கள் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தவுடன் ஐரோப்பிய மைதானத்திலிருந்த
மக்கள் கூட் டம் கீவ் மாநகர மன்ற அரங்கில் நுழைந்து அதனை கைப்பற்றிக்
கொள்வதாக அறிவித்தது. அவ் வாறு நுழையும்போது காவல் துறையினரை எதிர்கொள்ள
இம் மக்களிடையே சில குழுவினரின் கைகளில் எறி ஏவு கணை உள் ளிட்ட ஆயுதங்கள்
வழங்கப் பட்டன.
சிரியாவிலும்,
லிபியாவிலும் என்ன நடந்ததோ அதையே உக்ரை னிலும் அரங்கேற்ற அமெரிக்க,
ஐரோப்பிய வல்லரசுகள் முனைந்து விட்டதை இது காட்டியது.
உக்ரைன்
நாட்டில் வலுவான ராணுவம் எதுவும் கிடையாது. ஆயினும் தமது அரசின் காவல்
துறையைக் கொண்டே இப் போராட்டத்தை அடக்கிவந்த யான் கோவிச் பின்வாங்கத் தொடங்
கினார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்
முன் முயற்சியில் போராடுகிற அமைப்புகளுக்கும் யான்கொ விச்சுக்கும்
பேச்சுவார்த்தை நடந்து 2013 பிப்ரவரி 16 அன்று ஓர் ஒப் பந்தமும்
ஏற்பட்டது.
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்
பட்டவர்தான் என்றாலும் யான் கோவிச் பதவி விலக முன் வந்தார். அதிகாரப்
பரவலாக்க அடிப் படையில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்ட இடைக் கால
தேசிய அரசு நிறுவிக் கொள் ளவும், 2014 நவம்பர் அல்லது திசம் பரில் தேர்தல்
நடத்தவும் ஒப்புக் கொண்டார்.
எதிர்க் கட்சியை சேர்ந்த 235 போராட்டக்காரர்களையும் விடு தலைசெய்ய ஒப்புக் கொண் டார்.
இந்த
ஒப்பந்தத்தை இரசியாவும் ஏற்றுக்கொண்டது. கீவ் நகர முற்று கையை விலக்கிக்
கொள்வதாக போராட்டக் குழுவினர் தெரிவித்த னர். அமைதி திரும்பும் என்ற
நம்பிக்கைப் பூத்தது.
ஆனால் அமெரிக்க
வல்லரசு இப்பிரச்சினை இத்தோடு முடி வடைவதை விரும்பவில்லை. அரசி யல்
நோக்கர்கள் யாரும் எதிர் பாராத வகையில் பிப்ரவரி 20 அன்று மிகப் பெரும்
போராட்டம் மீண்டும் வெடித்தது.
காவல்துறை
நடத்திய துப்பாக் கிச் சூட்டில் 20 பேர் இறந்தனர். இந்நிலையில் விடுதலை
செய்யப் பட்டு வெளியே வந்த முன்னாள் பிரதமர் யூலியா தைலோசெங்கோ மக்களிடையே
தோன்றி போராட் டத்தை தீவிரப்படுத்தும்படி அழைப்பு விடுத்தார். அதன் போர்
வையில் ஆயுதம் தாங்கிய குழு வினர் உக்ரைன் பாராளுமன்றத்தை கைப்பற்றிக்
கொண்டனர்.
யான்கோவிச் பதவி நீக்கம்
செய்யப்படுவதாகவும் அவருக்கு பதிலாக நாடாளுமன்ற அவைத் தலைவர் அலக்சாண்டர்
துர்கி னோவ் தற்காலிகக் குடியரசுத் தலை வராக நியமிக்கப்படுவதாகவும் அறி
வித்தனர்.
ஆட்சிக் கவிழ்ப்பில் பதவி இழந்த யான்கோவிச் தப்பித்து இரசியாவில் அடைக்கலம் அடைந்தார்.
மறுகணமே
இரசியா தனது படைகளை உக்ரைன் நோக்கி குவித் தது. உக்ரைனின் தன்னாட்சிப்
பகுதியாக விளங்கிய கிரீமியா இரசியாவுக்கு ஆதரவாக திரும் பியது. கிரீமியா
நாடாளுமன்றம் உக்ரைன் ஆட்சி மாற்றத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும் தாங்கள்
உக்ரைனிலிருந்து பிரிந்து இரசியக் கூட்டரசில் இணைந்து கொள்ளப்
போவதாகவும் தீர்மானம் நிறை வேற்றியது. இரசியாவில் இணை வதா அல்லது கூடுதல்
தன்னாட்சி யோடு உக்ரைன் நாட்டில் நீடிப் பதா என்பது குறித்து கிரீமியா
தேசத்து மக்களின் கருத்து அறிய 2014 மார்ச் 16 அன்று கிரீமியாவில் கருத்து
வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
வல்லரசுகளின் போட்டிக்களமாக இவ்வாறு உக்ரைன் மாறியது.
அமெரிக்க
மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான ஆட்சி உக்ரைனிலும், ரசியாவுக்கு
ஆதர வான நிலை கிரீமியாவிலும் என்று உக்ரைன் சிக்கல் ஓர் உயர் நிலையை
அடைந்தது.
கிரீமியாவில் கருத்து
வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் கிரீமியா இரசியாவில் இணைவது என்ற
முடிவுக்கு ஆதரவான வாக்கு களே அதிகம் கிடைக்கும் என்பது அனைவருக்கும்
தெரிந்த ஒன்று. ஏனெனில், கிரீமியாவில் வாழும் 15 இலட்சம் மக்களில் ஏறத்தாழ
60 விழுக்காட்டினர் இரசிய தேசிய இனத்தவர் ஆவர். அங்கு உக்ரைனியர்கள் 27
விழுக்காட்டினரே உள்ளனர்.
இதனால், உலக
வல்லரசுக ளிடையே பதட்டம் ஏற்பட்டுள் ளது. கிரீமியாவில் கருத்து வாக்
கெடுப்பு நடத்துவதை தாங்கள் ஏற்க வில்லை என்றும், கருத்து வாக் கெடுப்பு
நடந்து இரசியாவுடன் இணைவது என கிரிமிய மக்கள் முடிவு செய்தால் அதனை அங்கீ
கரிக்க மாட்டோம் என்றும் வல்லர சுகள் கொக்கரிக்கின்றன.
இதற்கிடையில்
மின்னல் வேகத் தில் படைகளை அனுப்பி கிரீமிய கருங்கடல் பரப்பை தனது
கட்டுப் பாட்டுக்குள் இரசிய அதிபர் புடின் கொண்டுவந்து விட்டார்.
இதற்கு
பதிலடியாக இரசியா வுக்கு எதிராக விசாக்கட்டுப் பாடு களையும் சில வணிகக்
கட்டுப்பாடு களையும் விதிப்பதாக அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா
அறிவித்திருக்கிறார். அவரை பின் பற்றி இரசியாவுக்கு எதிரான பொருளாதாரத்தடை
விதிக்க வேண்டும் என சில ஐரோப்பிய நாடுகள் சொல்லி வந்தாலும் ஐரோப்பிய
நாடுகளிடையே இதில் ஒத்த கருத்து இல்லை. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவளித் தேவைகளில் ஏறத்தாழ 35 விழுக் காட்டை
இரசியாவே நிறைவு செய்கிறது.
அதிலும்
எரிவளிக் குழாய்கள் உக்ரைன் வழியாகவே செர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு வருகின்
றன. இதை ஈடு செய்யுமளவுக்கு எண்ணெய் வழங்கும் நிலையில் அமெரிக்காவோ
அல்லது அதன் சார்பு நாடுகளோ இல்லை. மறு புறம் இரசிய அதிபர் புட்டினின்
நெருக்கமான முதலாளிகள் பலரும் அமெரிக்காவில் அல்லது அமெரிக்க
நிறுவனங்களில்கணிசமாக முதலீடு செய்துள்ளவர்கள் ஆவர் . ஒபாமா விதித்துள்ள
கட்டுப்பாடு அவர் களை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.
இன்னொருபுறம்
பதவி நீக்கம் செய்யப்பட்டு இரசியாவில் தஞ்ச மடைந்துள்ள உக்ரைனின் குடியர
சுத்தலைவர் விக்டர் யான் கோவிச் சுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றில்
ஏராளமான சொத்து களும் நிறுவனங்களும் உள்ளன.
உக்ரைனிய
ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்புவதற்கு அவர்களது தன்ன
லமே முதன்மைக் காரணமாக அமைகிறது. மற்றபடி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால்
உக்ரை னுக்கு பெரிய இலாபம் ஒன்றும் இல்லை. ஏனெனில் உக்ரைன் அடிப்படையில்
வேளாண்மை நாடு. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அதன் கோதுமை
ஏற்றுமதி கடும் பாதிப்பை சந்திக் கும். ஏனெனில் உக்ரைனின் கோதுமை
ஏற்றுமதியில் ஏறத்தாழ பாதியளவு இரசிய ஆதரவில் இயங்கும் சுதந்திர
அரசுகளின் பொது நலவாய அமைப்பு நாடு களுக்கே செல்கிறது. இதற்கு சுங்கவரி
விலக்கு உண்டு. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால் இந்த வாய்ப்பு
மிகப்பெரும் அள வுக்கு மறுக்கப்படும் இந்தக் கோது மையை முழுவதும்
ஐரோப்பிய சந்தையிலும் விற்க முடியாது.
மறுபுறம்
ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் உக்ரைன் சந்தையை ஆக்கிரமிக்கும். இவற்றின்
விளை வாக உக்ரைன் நாடு ஆண்டுக்கு 2000 கோடி யூரோ அளவுக்கு இழப்பைத்தான்
சந்திக்க வேண்டி வருமே தவிர பெரிதாக இலாபம் ஒன்றும் இல்லை . ஏற்கெனவே உக்
ரைன் கிட்டத்தட்ட ஓட்டாண்டி ஆகிவிட்டது. அந் நாடு 7500 கோடி டாலர் கடனில்
சிக்கியுள் ளது. அமெரிக்க மற்றும் ஐரோப் பிய வல்லரசுகளின் குறி உக்ரைன்
சந்தையல்ல. மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்து பலவீனமான உக்ரைனை
தங்களது சார்பு நாடாக மாற்றிக் கொண்டுவிட்டால் அதன் பிறகு உக்ரைனை தங்களது
படைத் தளமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக
வல்லரசுகள் கணக்குப் போடுகிறன.
தனது எல்லைப் புறத்தில் அமெரிக்க ஆயுத வலு அதிகரிப்பது பெரும் அச்சுறுத்தல் என்ற கணக் கிலேயே இரசியா களமிறங்குகிறது.
அதே
நேரம் உக்ரைன் சிக்க லைப் பயன்படுத்தி ஒரு போரில் ஈடுபடவும் இரண்டு
முகாம்களுமே அணியமாக இல்லை. கருத்து வாக் கெடுப்பில் கிரீமியா இரசியா
வுடன் இணைவது என்று முடிவெடுத்து விட்டால் அதைத் தடுப்பதற்கு
படையெடுக்கும் நிலையில் மேற் குலக வல்லரசுகள் இல்லை.
ஆனால்
உக்ரைன் நாடு இரசி யாவிற்கும் மேற்குலக நாடுகளுக் கும் இடையில் சிக்கிக்
கொண்டு நீண்ட காலம் அமைதியற்ற இழு பறியில் இருப்பதற்கான ஆபத்து உள்ளது.
ஏனெனில் இரண்டு தரப்புமே இரண்டு வெவ்வேறு சர்வதேச ஒப் பந்தங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் காட்டுகின்றன.
”கருங்கடல்
போர்க் கப்பல்கள் தொடர்பான இரு நாட்டு பங்கீட்டு ஒப்பந்தம் ” என்ற
ஒப்பந்தத்தை தன் தரப்புவாதமாக இரசியா முன் வைக்கிறது. உக்ரைனுக்கும்
இரசியாவுக்கும் இடையே 1997 இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந் தமே
மேற்சொல்லும் ஒப்பந்தமா கும். இதன்படி கருங்கடலில் உள்ள
போர்க்கப்பல்களில் 80 விழுக்காடு இரசிய ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும்
என்பதை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. மேலும் இரசிய நலன்களுக்கு அச்
சுறுத்தல் எதுவும் ஏற்பட்டால் படை நகர்வு உள்ளிட்ட அனைத் து வகை
முயற்சிகளுக்கும் இரசியா வுக்கு இவ்வொப்பந்தம் உரிமை வழங்குகிறது. இந்த
ஒப்பந்தம் ஐ.நா -வால் அங்கீகரிக்கப்பட்ட ஒப் பந்தம் ஆகும்.
தனது படை நகர்வுகளுக்கு இந்த ஒப்பந்தத்தையே இரசியா வாதமாக முன்வைக்கிறது.
மேற்குலக
நாடுகளோ 1994 ல் உக்ரைன், இரசியா அமெரிக்கா பிரிட்டன் ஆகிய
நாடுகளிடையே கையெழுத்தான “புடாபெஸ்ட் பாதுகாப்பு வாக்குறுதி ஒப்பந்தம் “
என்ற ஒப்பந்தத்தைக் காட்டு கின்றன. இந்த ஒப்பந்தம் உக்ரைன் அணு ஆயுதம்
தயாரிக்கக் கூடாது எனக் கூறியது. அதுமட்டுமின்றி உக்ரைனின் தற்போதைய
எல்லை வரையறுப்பை மதிப்பதாக உறுதிக் கூறியது. மேலும், தங்கள் பாது
காப்புக்கு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஒழிய உக்ரைன் நாட்டின் பிரதேச
ஒருமைப் பாட்டிற்கோ அரசியல் சுதந்திரத் திற்கோ எதிரான ஆயுத நட வடிக்கை
எதுவும் மேற்கொள்ளுவ தில்லை என உறுதிக் கூறியது.
இந்த
ஒப்பந்தத்தையே தங்கள் தரப்பு வாதமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக
வல்லரசுகள் முன் வைக்கின்றன. இந்த ஒப்பந் தத்தை இரசியா மீறிவிட்டதாக
குற்றம் சாட்டுகின்றன.
எனவே உக்ரைன் இழுபறி இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதற்கான வழிமுறைகளையே இரண்டு தரப்பினரும் மேற் கொண்டு வருகிறனர்.
இந் நிலையில் உக்ரைனின் இப் போதைய சிக்கல் தீருவதற்கு கீழ் வருவன முதன்மையானவை என நாம் கருதுகிறோம் .
1)
முதலில் அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் இரசியா ஆகி யவை உக்ரைனில்
தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இரு தரப்பும் தங்களது படை வகை
மற்றும் மறைமுக தலை யீடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள
வேண்டும். உக்ரைன் மக்கள் அவர்களது சிக்கலை அவர்களே தீர்த்துக்
கொள்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
2)
மேற்குலக ஆதரவு ஆயுதக் குழுக்களின் பின்னணியில் நடந் துள்ள ஆட்சி
மாற்றத்தை ஆட்சிக் கவிழ்ப்பு என உலக நாடுகள் உணர வேண்டும். 2014 பிப்ரவரி
16 அன்று உக்ரைனிய குடியரசுத் தலைவர் விட்டர் யான்கோவிச்-க் கும்
எதிர்க் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அனைத்து தரப்பினரும்
இணைந்த இடைக்கால தேசிய அரசு அமைத்துக் கொள்வதற்கும் அவ் வொப் பந்தத்தில்
அறிவிக்கப் பட்டபடி இருதரப்பாரும் ஏற்றுக் கொள் ளக்கூடிய நாளில் தேர்தல்
நடத்த வும் ஐ.நா மேற்பார்வையில் உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
3)
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா அல்லது வேறு வகை முடிவு மேற்கொள்ளுவதா
என்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும் இறையாண்மை அதிகாரம்
உக்ரைனியர்களுக்கே உண்டு என்பதை ஐயத்திற்கு இட மின்றி உலக நாடுகள் ஏற்க
வேண்டும்.
4) உருவாகும் புதிய ஆட்சி
எந்த முடிவையும் மேற்கொள்ள உரிமை படைத்தது. மறைமுக அழுத்தங்கள் உள்ளிட்ட
எந்த வகை வெளித்தலை யீடும் அதில் இருக்கக் கூடாது.
5)
கிரீமியாவிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் மேற்கொண் டுள்ள அனைத்து வகை
படை நகர் வுகளையும் இரசியா திருப்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6) சுதந்திரமான, அமைதியான சூழ் நிலையில் கிரீமியா மக்கள் ஐ.நா மேற் பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்.
7) அக் கருத்து வாக்கெடுப்பின் முடிவை உலக நாடுகள் ஏற்றுச் செயல் படுத்த வேண்டும்
0 கருத்துகள்:
Post a Comment