நெடுஞ்சாலை ஓட்டுநர்கள் சிறைச்சாலையில்!
அதிகாரம் அனைத்தும் இந்திய அரசின் கையில்!
போக்குவரத்துத் துறை முழுதும் பெருங்குழுமங்கள் கையில்!
இந்திய அரசு கொண்டுவந்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட வரைவு 2014இன் நோக்கம் இவைதான்.
நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்காக மோடி அரசு முன்வைத்துள்ள வரைவுச் சட்டங்களில் இதுவும் ஒன்று.
‘பயணிகள்
மற்றும் சரக்குப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாகவும் விரைவானதாகவும்
செலவுக் குறைவானதாகவும் மாற்றுவதே இச்சட்டத்தின் நோக்கம்’ என்று
கூறப்பட்டாலும் இச்சட்டத்தின் உண்மையான நோக்கம் சாலைப் போக்குவரத்துத்
தொடர்பான மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிப் பதும், சாலைப் போக்குவரத்தை
முற்றிலும் பெருங் குழும தனியார் மயமாக்குவதும்தான்.
நடப்பில்
உள்ள 1988 தானியங்கி ஊர்திச் சட் டத்தை (மோட்டார் வாகனச் சட்டத்தை) நீக்கி
விட்டு அதற்கு மாற்றாக இச்சட்டம் கொண்டு வரப்படு கின்றது.
நடப்பில்
உள்ள சட்டத்தின்படி சாலைப் போக்குவரத்து அதிகாரம் பெரிதும் மாநில அரசின்
கைகளில் உள்ளது. தானியங்கி ஊர்தித் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில்
உள்ளது. இச்சட்டம் மாநில அரசின் இந்த அதிகாரத்தை முற்றிலும் பறிக்கிறது.
தானியங்கி வாகனத் துறை அலுவலகங்களை இந்திய அரசின் முகவாண்மை நிறுவனமாக
மாற்றுகிறது.
ஏற்கெனவே தேசிய
நெடுஞ்சாலை என்ற பெயரால் சாலைப் போக்குவரத்தின் ஒரு பகுதி இந்திய அரசின்
கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்திய அரசின் விருப்பப்படி நெடுஞ்சாலை
பெரிதும் தனியார் சாலையாகிவிட்டது. கட்டணக் கொள்ளை நடக்கிறது.
இப்போது
இந்தச் சட்டத் தின்படி “தேசியப் போக்குவரத்து ஆணையம்” (National Transport
Authority) என்ற அமைப்பு நிறுவப் பட்டு, இந்தியாவின் ஒட்டு மொத்த வாகனப்
போக்குவரத்து தொடர் பான அதி காரமும் அதனிடம் ஒப் படைக்கபடவுள்ளது. இந்த ஆணை
யம் தனித்த வாரியமாக செயல்படும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கானக் கிளை
ஆணைய அமைப்பு கள் இருக்கும் என்று இந்த வரைவுச் சட்டம் கூறுகிறது.
சாலை
வரி, வாகன வரி உள் ளிட்ட அனைத்து வரி விதித்து அதில் கிடைக்கும்
வருமானத்தைக் கையாளும் அதிகாரம் முழுவதும் இந்த ஆணையத்திடம் ஒப்படைக்
கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள தானியங்கி வாகனத் துறை வரி விதிப்பு, கட்டண
விதிப்பு அதிகா ரத்தை இழக்கிறது.
மாநில
அரசுக்கு சாலை வரி விதிப்பு, ஊர்தி வரி விதிப்பின் மூலம் கிடைக்கின்ற
வருவாய் முதன்மை யான ஒன்றாகும். இந்த வருவாய் முழுவதும் அதற்குரிய
அதிகாரமும் இவ்வாறு நடுவண் அரசின் கைக்கு மாற்றித் தரப்படுகிறது. ஆணையம்
பார்த்து அந்த வருவாயில் ஒரு பகுதியை மாநிலத்திற்குத் தருமாம்.
சாலை
விபத்துகள் அனைத் துமே ஓட்டுநர்களால் நிகழ்பவை என்ற பார்வையிலிருந்தே இந்த
சட்டத்தின் விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. பேருந்துப் பயணிகள் கூட சீட்
பெல்ட் அணிய வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
சாலையில் ஓடும் வாகனங்களில் 72 விழுக்காடு இருசக்கர வாகனம் என்பதை கணக்கில் கொள்ளா மலே இச்சட்டவிதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.
சாலை
விபத்துகளுக்கு முதன் மைக் காரணம் சாலை மற்றும் நகர வடிவமைப்புதான் என்பதே
அறிவி யல் வழிப்பட்ட உண்மை. ஆனால் இச்சட்டம் அந்த உண்மையை கணக்கில்
கொள்ளவேயில்லை.
பொதுப்
போக்குவரத்திற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதும் மிதிவண்டி மற்றும் நடைப்
பயணி கள் ஆகியோருக்கு தனிப் பாதை ஏற்படுத்தித் தருவதும் முதன்மைத் தேவை
என்பதை விபத்துகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மீண் டும் மீண்டும் எடுத்துக்
கூறுகின்றன. ஆனால் இந்தச் சட்டம் அவற்றை முற்றிலும் புறக்கணித்து நேர்மா
றான முடிவுகளுக்கு வருகின்றது.
நடைப்பயணிகள்
குறுக்கே செல்வதற்கு சாலைகளில் எந்த இடத்திலும் வழி ஏற்படுத்தாமல்
எல்லோருக்கும் நடைபாதை மேம்பாலம் என்பதையே வழியாக சொல்கிறது. நடைபாதை மேம்
பாலம் கூடுமானவரை தவிர்க்கப் படவேண்டும். ஏனெனில் அவசர மாக செல்லும்
அனைத்து வயது நடைப்பயணிகள் குறிப்பாக குழந்தை, முதியோர், உடல் நலிந் தோர்
ஆகியோரை கருத்தில் கொள்ளாமலே மேம்பால நடை பாதை வலியுறுத்தப்படுகிறது.
ஏற்கெனவே
நடப்பில் உள்ள சாலைக் கட்டுமானமுறை ஒரே சாலையில் மிதிவண்டி முதல்
சுமையுந்து வரை அனைத்தும் செல்லுமாறு வடிவமைக்கப்படுள்
ளது.நடைப்பயணிகளுக்கு சாலையை ஒட்டிய மேடான ஒற்றையடிப்பாதைக்கூட எல்லா
சாலைகளிலும் இல்லை. நடை பாதைப் பயணிகளுக்கு இடமே வழங்காத மேம்பாலக் கட்டுமா
னங்களே அதிகம்.
இவ்வாறான சாலை, பால
வடிவமைப்புகளே சாலை விபத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான முதன்மைக்
காரணியாகும். சிக்னல் கள், நடைப்பயணிகள் கடப்பதற் கான வழிகள் ஆகியவற்றைக்
குறைக்கவே இச்சட்டம் கூறுகிறது. கிராமப்புற மக்களை சாலைப் பயன்
பாட்டிலிருந்து அப்புறப் படுத்தும் முறை இது.
அடுத்து
மது போதையில் வாகனம் ஓட்டுபவருடைய நிலை விபத்திற்குக் காரணியாக அமை கிறது.
இந்தியாவெங்கும் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மது விற்பனையை
தாராளமாக அதிகரித்துவிட்டு சாலைப் பாது காப்புப் பற்றி பேசுவது கேலிக்கூத்
தானது.
பாதுகாப்பானப் பயணத்திற்கு
உறுதியான நடவடிக்கை எடுப்ப தாகக் காட்டிக் கொள்வதற்காக தலைக்கவசம்
(ஹெல்மெட்) அணி யாவிட்டால் 2,500 ரூபாய் தண்டம், பெல்ட் அணியா விட்டால்
5,000 ரூபாய் அபராதம், இறப்பு நேரு மாறு விபத்து நிகழ்ந்தால் ஓட்டு நருக்கு
ஒரு இலட்சம் வரை அபராதம், 7 ஆண்டுகள் சிறை, உரிமம் பறிப்பு என்று அடுக்
கடுக்காகச் சொல்லப்படுகின்றது.
ஏற்கெனவே
இருக்கின்ற நடை முறையிலிருந்து பட்டறிவு பெற் றால் இந்த விதிமுறைகள்
எல்லாம் அதிகாரிகளின் காட்டு தர்பாருக்கு வழிவகுக்குமே அல்லாது விபத்து களை
குறைக்க உதவாது என்பது புரியும். பொதுப் போக்குவரத்து வசதிகளை
அதிகப்படுத்துவதும், தானியங்கி இரு சக்கர வாகனம், மிதிவண்டி, நடைப்
பயணிகளுக்கு தனித்தனித் தடம் ஏற்படுத்துவதும் விபத்தைக் குறைக்கும்.
சாலைப்
போக்குவரத்தை தேசிய நெடுஞ்சாலைப் போக்கு வரத்து, மாநிலச் சாலைப் போக்கு
வரத்து, உள்ளாட்சி சாலைப் போக்குவரத்து என்று பலவாறாகப் பிரித்து அவற்றில்
செல்லும் வாக னங்களுக்கான உரிமத்தை பொது ஏலத்தில் விடுவது என்று இந்தச்
சட்டம் கூறுகிறது. அனைத்திந்திய பெரும் நிறுவன குழுமங்கள் இலா பகரமான
அனைத்து போக்கு வரத்துத் தடங்களையும் கைப்பற்றிக் கொள்வதற்கே இது வழி
ஏற்படுத் தித் தரும்.
இலாபம் குறைவான மக்கள் நலன் சார்ந்த போக்குவரத்து வழித் தடங்கள் முற்றிலும் புறக்கணிக் கப்படும்.
125
கிலோ மீட்டருக்கு கீழே உள்ள தொலைவுக்கு 6 இருக்கை வாகனங்களுக்கும் 125க்கு
மேல் 250 கிலோ மீட்டர் வரை 12 இருக்கை வாகனங்களுக்கும் மட்டுமே முன்
னுரிமை வழங்கி மேற்கண்ட பொது ஏலம் நடக்கும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
கிட்டத்தட்ட தானிக்களே (ஆட்டோ) இல்லாத நிலை ஏற்படும். ஏற்கெனவே கால்
டாக்சி என்பது ஒரு சில நிறுவனங் களின் கைக்கு மாறிவருவதைப் பார்க்கிறோம்.
இந்நிறுவனங்களி டம் வாடகைக்கு வாகனம் ஓட்டு பவர்களாக பல சொந்த மகிழுந்து
வைத்துள்ள ஓட்டுநர்கள் மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்போக்கு
விரைவுப்பட்டு ஒரு சில புள்ளிகளிடம் மட்டுமே வாடகை மகிழுந்து போக்குவரத்து
சிக்கிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.
பொதுப்போக்குவரத்தில்
அரசுத் துறை மேலோங்கியி ருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விரைவான
எதிர்காலத் தில் அவை மொத்தமும் தனியார் பெருங்குழுமங்களின் கைக்கு செல்
வதற்கே இந்த ஏற்பாடு துணை செய்யும்.
எப்படிப்
பார்த்தாலும் இந்திய அரசு முன்வைத்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும்
பாதுகாப்புச் சட்ட வரைவு 2014 ஏற்கத்தக்கதல்ல. இப்போதுள்ள நிலையை மேம்
படுத்தும் வகையில் மாநில அரசுக ளோடு கலந்து ஒரு சாலைப் போக் குவரத்துக்
கொள்கையை வரைய றுத்து அதனடிப்படையில் மாநிலங் கள் சட்டமியற்றிக் கொள்ள வழி
ஏற்படுத்துவதே தீர்வாகும்.
எனவே சாலைப் போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு வரைவுச் சட்டத்தை இந்திய அரசு நிறை வேற்றக் கூடாது.
0 கருத்துகள்:
Post a Comment