கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!"----தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


நா.த.க. தலைவர் சீமான், திருமுருகன் காந்தி

உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள்
முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================


நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நா.த.க. முதன்மை நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்திக், சுனந்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் சுட்டுரை (ட்விட்டர்) கணக்குகள், நேற்றிரவு திடீரென முடக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசின் முடிவுக்கு இணங்க இம்முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் மேற் கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத ஆரியத்துவ பா.ச.க., தனது இந்திய ஆட்சி அதிகாரத்தின் வழியே தொடர்ந்து எதிர்கருத்தாளர்களை வேட்டையாடி வருவது நாம் அறிந்ததே. கர்நாடகத்தின் கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரை நேரடியாகக் கொன்றதில் தொடங்கி, எதிர்கருத்தாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது வரை இச்செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களின் சுட்டுரைக் கணக்குகளை முடக்கி, தான் தமிழினத்தின் எதிரி என பா.ச.க. மீண்டுமொருமுறை தம்மை பறைசாற்றிக் கொண்டுள்ளது.

கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாகக் கைவிட்டு, இக்கணக்குகளை மீண்டும் இயக்கிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் அனுமதிக்க வேண்டும். கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிக்கும் இந்திய அரசின் செயலுக்கு இணங்கிப் போகக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
==================================

0 கருத்துகள்: